அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

காஞ்சி பரமாச்சார்யாள்

“கனிந்த கனி” என்று சித்த புருஷர்களால் பூஜிக்கப் பெற்ற காஞ்சி காமகோடி பீட பரமாச்சார்யாள் 68வது பீடம் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் நித்ய சூரியன் ஜோதித் தத்துவத்தில் உலகறியப் பரிணமித்த தினமே, திதியே ஸ்ரீமுக வருடம் மார்கழி மாதம் 24ஆம் நாள் (8-1-1994) – சனிக்கிழமை, அனுஷ நக்ஷத்திரம், துவாதசி என்பது சித்தர்களின் அரிய விளக்கமாகும்..
ஸ்ரீஅகஸ்திய சித்தம்மா மகரிஷி தனது பவசாகர கிரந்தத்தில் ஸ்ரீஆசார்ய சுவாமிகளின் இம்மானுட சரீர தெய்வீக வாழ்க்கை ரகசியங்களை நாடிகளாகப் புனைந்துள்ளார் .இவற்றில் ஒரு சிலவற்றை நம் நல்வாழ்விற்காக எடுத்தருள்பவர் நம்குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள்.
பவசாகர கிரந்தத்தின்படி ஸ்ரீஆசார்ய சுவாமிகள் நாம ஸ்வரூப குரு குஹ சித்தர் என்று சித்த புருஷர்களால் விளிக்கப்படிகிறார். இம்மானுட சரீரத்தை உகுத்தபின் ஸ்ரீஆசார்ய சுவாமிகளின் ஆத்ம ஜோதி சிறுவாச்சூர் ஸ்ரீமதுர காளியம்மனின் பாதாரவிந்தங்களில் ஐக்கியமாகித் தற்போது ஒளிவீசுகிறது.. ஸ்ரீகாஞ்சி காமாக்ஷி அம்மனின் திரேதாயுக பராசக்தி அம்சமே ஸ்ரீமதுர காளி அம்பாள். சிவபெருமான் ஆலகால விடமுண்டு ஜீவன்களை உய்வித்த பொழுது அந்த ஆகர்ஷண சக்தியில் ஸ்ரீசதாசிவனின் திருக்கண்டத்தில் (கழுத்து) உருவானவளே ஸ்ரீமதுரகாளியம்மன்.
 ஸ்ரீ சரபேசுவர மூர்த்தி, இந்த பராசக்தியின் ஆகர்ஷண சக்தியைச் சாந்தமுறச் செய்து செய்து ஸ்ரீமதுரகாளியம்மனை ஸ்ரீஆதிமூல காமாக்ஷியாக அவதாரமெடுக்க அருள்பாலித்தார்.
ஸ்ரீமதுரகாளியின் சாந்தஸ்வரூபமான ஸ்ரீஆதிமூல காமாக்ஷி சென்னை அருகே திருவாலங்காடு எல்லையில் உள்ள மணவூர் கிராமத்தில் வயல் வெளியிடையே ஒரு சிறு மண்டபத்தில் தரிசனமளிக்கின்றாள். இதுவரை எவருமறியா ஆன்மீக ரகசியமிது. திரேதாயுக ஸ்ரீஆதிமூல காமாக்ஷி தேவியே கலியுக மக்களுக்காகக் காஞ்சியில் ஸ்ரீகாமாக்ஷியாக அருள்பாலிக்கின்றாள். திருச்சி அருகே உள்ள சிறுவாச்சூர் மதுர காளியம்மனைத் தரிசித்து, மணவூர் ஸ்ரீஆதிகாமாக்ஷியைப் பூஜித்து, ஸ்ரீகாஞ்சி காமாக்ஷிதேவியைத் தரிசனம் செய்வதே சம்பூர்ண தரிசனமாகும்.
மூன்று தலங்களிலும் தானங்களுடன் காமாக்ஷியின் வெவ்வேறு பராசக்தி அம்சங்களை மேற்கண்ட வரிசையில் தரிசிப்பதால் நல்ல பிரார்த்தனைகள் எளிதில் கைகூடும். இம்முறையில் ஸ்ரீகாஞ்சி காமாக்ஷி தேவியைத் தரிசித்தலே ஸ்ரீஅம்பாளின் பரிபூரண கடாக்ஷத்தைத் தரும்.
ஸ்ரீமதுர காளியம்மனின் பாதாரவிந்தங்களில் ஜோதியாய் ஒளிரும் ஸ்ரீஆசார்ய சுவாமிகளின் பரிபூரண அனுக்ரஹத்தைப் பெற

 1. தன் குழந்தை தன்னிடம் ஐக்கியமானதில் பேரானந்தப் பெருக்கில் திளைக்கும் ஸ்ரீமதுரகாளியம்மனை 8-1-1994 லிருந்து ஒரு பக்ஷத்திற்குள் (15 நாட்கள்) தரிசித்துத் தீபங்களை ஏற்றி வழிபடுதல் ஸ்ரீபரமாச்சார்யாளின் ஆத்மஜோதி அருளைப் பரிபூரணமாகப் பெற்றுத் தரும். இதனால் ஸ்ரீமதுரகாளியும் ஆனந்தத்துடன் அருள்பாலிக்கின்றாள்..
 2. ஸ்ரீஆசார்யாளின் மானுட சரீரத்திற்குரிய உள்ளுறை தெய்வமான ஸ்ரீமதுர காளியம்மன் 8-1-1994லிருந்து ஒரு பக்ஷத்திற்குப் பிறகு அவர்தம் ஆன்ம ஜோதியைச் சந்திர மௌளீஸ்வரனாகிய தன்னில் ஒருபாதியாம் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர ஸ்வாமியிடம் திருக்கைலாயத்தில் ஐக்கியமடையச் செய்கின்றாள்.. இவ்வரிய காட்சியை முப்பத்து முக்கோடித் தேவர்களும். ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாளும் ஏனைய தெய்வ மூர்த்திகளும் ஒருங்கிணைந்து போற்றி ஆசீர்வதிக்கின்றனர். எனவே இக்கோயிலில் இத்தகைய வழிபாடு அனைத்து தெய்வ மூர்த்திகள்,, மஹரிஷிகள்,, சித்த புருஷர்களின் அருளைப் பெற்றுத் தரும்..
 3. ஒளியாய் ஸ்ரீமதுரகாளியுடன் ஒளிரும் ஸ்ரீபரமாச்சாரியாளின் அனுக்ரஹத்தை ஒளி மூலமாகவே ஸ்ரீஅம்பாள் அருள்வதால் இக்கோயிலில் ஒருபக்ஷத்திற்குள் ஏற்றப்படும் தீபங்கள் (பசு நெய் தீபம் மிகவும் விசேஷமானதாகும்) மூலமாகவே இத்திருவருளைக் குருவருளாகப் பெறுவோமாக!

காஞ்சியில் ஸ்ரீபரமாச்சாரியாளின் ஜீவசமாதியை ஸ்ரீஅகஸ்தியர் “தினகர பவசாகர பீடம்” எனக் குறிப்பிடுகின்றார். இத்தகைய பெறற்கரிய ஆன்மீக ரகசியங்களை அருளி நம்மைச் சித்தர்களின் இறை நெறியில் வழி நடத்துபவர் நம்குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள்.
சென்னை – திருச்சி சாலையில் (பெரம்பலூர் அருகே) அமைந்துள்ள சிறுவாச்சூர் ஸ்ரீமதுர காளியம்மன் திருக்கோயில் திங்கள், வெள்ளி மட்டுமே தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டிருக்கும்.

ஸ்ரீகிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனம்

அர்ஜுனன், அக்ரூரர், பீஷ்மர், குந்திதேவி, யசோதை, அகஸ்தியர், லோபாமுத்ரா தேவி ஆகியோருக்குத் தனது விஸ்வரூப தரிசனத்தைக் காட்டி மகிழ்வித்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அனைவருக்கும் தனது உண்மையான அகண்டகார விஸ்வரூபக் காட்சியை அளித்தாரா?
அற்புதமான இந்த ஆன்மீக வினா மேலுலகங்களில் மஹரிஷிகள், யோகிகள், ஞானியர் ஆகியோரிடையே ஓர் உன்னதமான உரையாடலுக்குக் காரணமாக அமைந்தது. அனைவரும் சித்த புருஷர்களின் மஹரிஷியான அகஸ்தியரை நாடி விளக்கம் கேட்க அவரும் “எமக்கும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தன் தரிசனத்தை அளித்தமையால் சாக்ஷாத் சிவபெருமானே இதற்கான விளக்கத்தைத் தர வல்லவர்” என்று பணிவுடன் கூறிவிட்டார். “தங்களுக்கும் அந்த பாக்கியம் கிட்டியதா ?” என்று ஞானியரும், யோகியரும் மஹரிஷிகளும் வியந்து கூவினர். அதுவரையில்  ஸ்ரீஅகஸ்திய மஹரிஷிக்கும் ஸ்ரீலோபாமுத்ரா தேவிக்கும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தம் விஸ்வரூபம் காட்டி அருளியதை எவரும் அறிந்திலர். பணிவன்புடன் கூடிய பக்தியின் காரணமாக ஸ்ரீஅகஸ்திய தம்பதியரும் எதையும் வெளிக்காட்டவில்லை.

ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி, ஸ்ரீநீளா தேவி என்ற மூன்று தேவிகளின் ஒருமித்த அவதாரமே ஸ்ரீரங்க நாயகி.. மஹா விஷ்ணுவின் இச்சா சக்தி, க்ரியா சக்தி, ஞான சக்தி அம்சங்களாக இம்மூன்று தேவியரும் வெவ்வேறு கல்பங்களில் வெவ்வேறு நாமங்களுடன் அவதரித்தனர்.
ஸ்ரீதேவியின் அவதாரங்கள் : ஸ்ரீபத்மாவதித் தாயார். ஸ்ரீ ருக்மணி
ஸ்ரீபூதேவியின் அவதாரங்கள் : ஸ்ரீஅலமேலு மங்கைத் தாயார், ஸ்ரீசத்யபாமா
ஸ்ரீ நீளா தேவியின் அவதாரங்கள் : ஸ்ரீ  நீலாதேவி, ராதை.
ஸ்ரீபூமாதேவி சூடிக் கொடுத்த நாச்சியாளாகவும் (ஸ்ரீஆண்டாள்) அவதரித்து அருள் புரிந்தாள்.

திருக்கயிலாயத்தில் சிவபெருமான் அனைவரையும் வரவேற்று உபசரித்து “ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே அருளியபடி தங்கள் மானுட சரீரக் கண்களால் ஸ்ரீகிருஷ்ண பரமாத்வாவின் விஸ்வரூப தரிசனத்தைக் காணும் பேறும் பாக்கியமும் பெற்ற ஸ்ரீஅகஸ்திய மகரிஷி தம்பதியினரே அவர்தம் அகண்டகார விஸ்வரூபத்தை உண்மையாகவே தரிசனம் செய்தவர்களாவர். ஏனையோர்க்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே தம் விஸ்வரூபத்தைக் காணக்கூடிய தெய்வீக சக்தியையும் கூடவே அளித்தார். இந்த விசேஷமான நேத்ர பூரண திருஷ்டிதனைத் தம் தவத்தாலும் ஞானத்தாலும் இயற்கையிலேயே கைவரப் பெற்றவர்களாதலின், ஸ்ரீ அகஸ்திய மஹரிஷித் தம்பதியினரை அணுகித் தக்க விளக்கம் பெறுவீர்களாக” எனக் கூறினார்.
பொதியமலையில் வழக்கம்போல எளிமையுடன் ஸ்ரீஅகஸ்தியரும், லோபாமுத்ரா தேவியும் சிவபூஜைகளை முடித்து ஸ்ரீராம தியானத்துடன் தம் சிஷ்யர்களுடன் அமர்ந்திருக்க, முப்பது முக்கோடித் தேவர்களும் அனைத்து யோகியர், ஞானியர், முமூக்ஷூக்கள் போன்றோர் புடைசூழ ஆங்கே சென்றனர்.
திருக்கயிலாயத்தில் நடந்தவற்றைப் பணிவுடன் கேட்டு ஆனந்தித்த ஸ்ரீஅகஸ்தியர்,  தனக்கு ஸ்ரீகிருஷண பரமாத்மா விஸ்வரூப தரிசனம் அளித்த காட்சியை விவரிக்கலானார்.
........................... ஸ்ரீ லோபாமுத்ரா தேவி ஸ்ரீஅகஸ்தியரை மணப்பதற்கு ஒரே ஒரு அன்பான நிபந்தனையை விதித்தாள். அனைத்துப் பெண்களும் திருமணங்களில் ஆபரணங்களையே நாட ஸ்ரீலோபாமுத்ரா தேவியோ, “சர்வாலங்கார பூஷணனாக அனைத்து ஆபரணங்களுடன் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தோன்றுகின்ற காட்சியைத் தனக்குப் பெற்றுத் தர வேண்டும்” என்பதே அவள்தம் அன்பான வேண்டுகோள்.
ஸ்ரீஅகஸ்தியர் திகைத்து நின்றார் “இறைவனின் திருவிளையாடலா இது” இறைவனே விரும்பி அளிக்கின்ற காட்சி அல்லவா பூர்ணாவதாரத் தோற்றம், கேட்டுப் பெறுவதல்லவே அது!”
தீர்க்க யோகத்தில் ஆழ்ந்தவாறே ஸ்ரீஅகஸ்தியர் பொதியமலையில் அற்புதமான மூலிகை வனங்களிடையே அமர்ந்திட, அருகில் ஸ்ரீலோபாமுத்ரா தேவி அவருக்கு வேண்டிய பணிவிடை செய்வாராயினர்.
அப்போது வயோதிகர் ஒருவர் அங்கே பிரஸன்னமானார். “அப்பனே அகஸ்தியா! உன் புண்ணிய மூட்டையை வைத்தாலன்றோ ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா காட்சி தருவார்” என்று அவர் கூறிட ஸ்ரீஅகஸ்தியரும், லோபாமுத்ரா தேவியும் தங்கள் புண்ணிய சக்தியை அரிய மூலிகாபந்தன முறைகளால் ஒன்று திரட்டி ஒரு சிறு மூட்டையை அவ்வயோதிகரிடம் அளித்தனர்.
அச்சிறு மூட்டையின் பாரம் தாங்காது அந்தக் கிழவர் தள்ளாடிச் சாய்ந்து நடப்பதைக் கண்டு பதைத்திட்ட ஸ்ரீஅகஸ்தியரும், லோபமுத்ரா தேவியும் தவத்தைப் பொருட்படுத்தாது ஓடிச் சென்று அந்த வயோதிகரைத் தாங்கிப் பிடித்தனர்.
அவர்தம் உடலைப் பற்றிய க்ஷண நேரத்தில்...................
வயோதிகர் வானளாவ பிரபஞ்சமெங்கும் விரிந்த விஸ்வரூபனாய் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவாய்க் காட்சியளித்தார்.
ஸ்ரீஅகஸ்தியரும், ஸ்ரீலோபாமுத்ரா தேவியும் மெய்சிலிர்த்து வணங்கி நின்றனர்.
“அப்பனே அகஸ்தியாஅ, உன் புண்ணிய சக்தியைச் சிவபெருமான் படைத்த இந்த பரமாத்ம ஸ்வரூபத்தாலேயே தாங்க இயலவில்லை அதற்கு ஈடாக எதைச் சொல்ல முடியும்! அதோடு ஸ்ரீலோபாமுத்ரா தேவியின் தவசக்தியும் சேர்ந்ததென்றால் இந்தக் கிழவனாலோ, இந்தப் பிரபஞ்சத்தாலோ தாள இயலுமா? இந்தா, இப்புண்ணிய மூட்டையை நீயே வைத்துக்கொள். இதைத் தாங்குவதற்கு சர்வ லோகத்திலும் எவருக்கும் சக்தியுமில்லை, வைப்பதற்கு இடமுமில்லை”
ஸ்ரீகிருஷ்ணா பரமாத்மா பிரபஞ்ச லோகங்கள் அனைத்திலுமுள்ள நவரத்னங்களை மிஞ்சிய அரிய கற்களாலான அனைத்து ஆபரணங்களையும் அணிந்து சர்வாலங்கார பூஷணனாய் ஸ்ரீவிஸ்வரூபக் காட்சியளித்தார்.
விஸ்வரூப தேகத்தில் மிளிர்ந்த ஆபரணங்களின் ஒளிக்கற்றைகள் ஸ்ரீலோபாமுத்ரா தேவியின் திருவதனத்தில் ஆபரணங்களாய் மாறின. அங்கே பார்வதி சஹிதம் பரமேஸ்வரர் பிரஸன்னமாயினர். சிவபெருமான், “அகஸ்தீசா, மானுட சரீரத்தில் எவருக்கும் கிட்டாத அற்புதமான விஸ்வரூப  தரிசனமிது.. இதுவே உண்மையான விஸ்வரூப தரிசனமாகும்.”
இப்புராணத்தைப் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் விஸ்வரூப தரிசனப் பலன்கள் கிட்டும். மேலும் திருமணத் தம்பதியர், தங்கள் திருமணத்தின்போது இக்காட்சியைத் தியானிக்க வேண்டும். அவ்வாறு தியானித்தால் தம் திருமண வாழ்வில் ஆபரணங்கள் அளிக்கும் மனத்திருப்தியையும் ஐஸ்வர்யத்தையும் பெறுவர்.

ஆத்ம விசார வினா விடை

அடியார்: சூட்சும சரீரங்கள் எடுத்த பிறவிகளுக்கேற்ப பல்லாயிரக் கணக்கிலிருப்பினும் எளிதில் புரியும் பொருட்டு ஒரே சரீரமாக குறிக்கின்றோமல்லவா? இவை ஒரே ஸ்தூல தேகத்தில் எவ்வாறு இயங்குகின்றன?
குரு: ஒரு மனிதனுடய பூர்வ ஜன்ம கர்மவினைகளுக்கேற்பவே மனைவி, மக்கள் உற்றம், சுற்றம் அமைகின்றனர். தற்போது மனைவியாக வாய்த்திருப்பவள் முன்னொரு பிறவியில் எவ்வகையிலோ உறவு கொண்டிருக்கலாம். எனவே அம்மனிதன் இப்பிறவியில் தன் மனைவியுடன் பழகும் அவனுடைய பழைய பிறவிக்குறித்தான சூட்சும சரீரம் இயங்குகிறது. இவ்வாறாகவே தன் குழந்தைகள், உற்றம்.., சுற்றம் ஆகியோருடன் பழகும் போது அவரவர் பின்னணிக்குரித்தான பிறவியைச் சார்ந்த சூட்சும சரீரம் இயங்குகிறது.. இதனைச் சாதாரண முறையில் புரிந்து கொள்ள முடியாது
அடியார்: அப்படியானால் ஒரு மனிதனுடைய சரீரத்தில் அடிக்கடி சூட்சும சரீரங்களின் இயக்கங்கள் மாறிக்கொண்டே இருக்குமல்லவா ?
குரு: எவனொருவன் தன் ஸ்தூல தேகத்தில் உறையும் சூட்சும சரீரத்தின் தன்மையை உணர்கின்றானோ, அவனே தன்னை அறிந்தவன். ஆயிரமாயிரம் சூட்சும சரீரங்கள் இயங்கும் ஒரு மனித இயந்திரமே ஸ்தூல சரீரம் என்பதை அனுபவபூர்வமாக உணர வேண்டும். இதற்கான நிலைகளே தியானம், யோகம் போன்றவையாகும்.
அடியார் : ஆன்மாவும் சூட்சும சரீரமும் ஒன்றா?
குரு: ஆன்மா உறையும் ஆலயமே சூட்சும சரீரம். இறைவனால் படைக்கப்பட்ட ஆதிகாரண சூட்சும சரீரம் பரிசுத்தமானது. பரப்பிரம்மத்தின் ஓரணுவான ஆன்மா சிருஷ்டியின் போது ஆதிகாரண சூட்சும சரீரத்தில் பதிக்கப்படுகிறது. காலப்போக்கில் இந்த சூட்சும சரீரம் தனக்குரித்தான கர்மபரிபாலனங்களில் ஈடுபட்டு பல சூட்சும சரீரங்களாகப் பெருகின்றது. இக்கர்மவினைகளிலிருந்து நிவாரணம் பெற்று மீண்டும் ஆதிகாரண சூட்சும நிலையடைய இடையில் உருவான அனைத்து சூட்சும சரீரங்களும் பாடுபடுகின்றன.
அடியார்: அதாவது ஆன்மாவை மீண்டும் பரப்பிரம்மத்துடன் இணைப்பதற்கு இவ்வித கர்மபந்தங்களே மாயையாக அமைந்து மறைகின்றன. அப்படித்தானே, குருதேவா!”
குரு: சரியாக புரிந்து கொண்டுள்ளாய்! ஒரு மனிதன் தான் பிறவி எடுத்ததே சூட்சும சரீரத்தின் மோட்ச நிலைக்கே – இதற்கான ஒரு கருவி மானுட சரீரம் என்பதைப் பரிபூரணமாக உணர்ந்து நல்லெண்ணங்களுடன் நற்காரியங்களைச் செய்து சற்குருவின் அருளுடன் வாழ வேண்டும்.
சூட்சும சரீரம், ஸ்தூலசரீரம் பற்றிய தெளிவான சிந்தனையை ஒருவன் பெறுவானாகில் அவனே சிருஷ்டியின் தத்துவத்தை உணர்ந்தவனாகிறான். இதைப் பற்றிய ஆத்ம விசாரம் ஓர் உன்னதமான நிலையைத் தரும்..

புண்ணிய சக்தி

சிவகுரு மங்களகந்தர்வா, நமது குருமங்களகந்தர்வாவிற்குப் புண்ணிய சக்தியின் பல ரூபங்களை, கண்ணுக்கெட்டாத அந்த அற்புத விந்தைகளைத் தம் உள்ளங்கையில் படம் பிடித்தது போல் (closed circuit tv)  பல முறை எடுத்துக் காட்டியுள்ளார். புண்ணிய பலமின்றி ஒரு விநாடி கூட எந்த ஜீவனும் இயங்க இயலாது.. அப்படியானால் பிறந்த குழந்தையின் நிலை என்ன? அது பூர்வ ஜன்ம பலத்துடன் வாழ்க்கையைத் தொடங்குகிறது..
 எனவே புண்ணியம் என்பது ஓர் ஆன்மீக சக்தியே! ஒரு ஜீவன் தனது வாழ்க்கையில் சந்திக்கும் துன்பங்களில் இருந்து அதனைக் காப்பது புண்ணிய சக்தியே! பூர்வ ஜன்ம புண்ணியங்களுடன் வாழ்க்கையைத் துவங்கும் ஒரு குழந்தை, பால பருவத்தில் பெற்றோர்களின் கர்மபலன்களை விகிதாச்சாரமாக பெற்று வாழ்கிறது. 14 வயதிலிருந்து ஒவ்வொரு ஜீவனின் கர்மபரிபாலனம் அமையத் தொடங்குகிறது. இது அனைத்துக் குழந்தைகளுக்கும் பொருந்தும்.
ஆகையால் பால பருவத்தில் குழந்தைகள், சிறுவர், சிறுமியர் சந்திக்கின்ற நோய் நொடிகள் ஏனை துன்ப, இன்ப நிலைகளும் அவர்களின் முன்வினைப்படி மட்டுமல்லாது, பெற்றோர்களின் கர்ம் நிலைகளைப் பொருத்தும் அமைகின்றன.
பெற்றோர்களின் கடமை :
இந்நிலையில் பெற்றோர்களின் தலையாய கடமை என்னவெனில், தங்கள் குழந்தைகள் எப்போதும் இறை உணர்வோடு வாழ்வதற்கான அழுத்தமான அஸ்திவார வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டும். ஸ்தோத்திரங்கள், கோயில் வழிபாடு, பஜனை, எளிதான தர்மங்கள், நன்னெறிக் கதைகள், ராமாயண, மஹாபாரதம் போன்ற தெய்வ நம்பிக்கையை உணர்த்தி வளர்க்க வேண்டும்.
அடிப்படை தெய்வீக அறிவு :
இத்தகைய அடிப்படையான தெய்வீக வாழ்வு அமைந்தால் பதினான்கு வயதுக்கு மேல் தன் தனி வாழ்க்கை (கர்மபரிபாலனக்) கணக்கைத் துவங்குகின்ற பாலகன் எவ்விதத் தீய பழக்கமுமில்லாது இறை நம்பிக்கையுடன் வாழும் நல்வாழ்க்கையைப் பெறுவான்.
தற்காலத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறிப்பாகப் பெண்கள் மது அருந்துதல், போதைப் பொருட்களுக்கு அடிமையாதல் புகைப்பிடித்தல், கெட்ட சகவாசங்கள் இத்தகைய தீவினைகளுக்கு ஆட்பட்டு விடுவார்களே என்று அஞ்சியே வாழ்கின்றனர். தெய்வ நம்பிக்கை நிறைந்த குழந்தைப் பருவத்தை அமைத்துத் தந்தால் இவ்வச்சம் ஏற்படாது. இதைப் பெற்றோர்கள் நன்கு உணர்ந்து தெளிதல் வேண்டும். பெற்றோர் சற்குருவின் கீழ் நற்காரியங்களைச் செயல்படுத்தும் சத்சங்கங்களில் தங்களைப் பிணைத்துக் கொண்டால் வாழையடி வாழையாகக் குழந்தைகளுக்கும் குருபக்தி உருவாகும்.
குழந்தைகளுக்கான தெய்வீகப் பாடங்கள் :

 1.  காலையில் எழுந்தவுடன் தம் உள்ளங்கைகளைத் தரிசனம் செய்து, பெற்றோர்களைத் தியானித்து, குருவை நினைந்து வணங்க வேண்டும். சற்குரு கிட்டும் வரை தனக்கு ஈடுபாடு உள்ள மஹான்களையோ ஞானியரையோ குருவாக ஏற்று வழிபடலாம்.
 2. “பாஸ்கராய நம:” என 24 முறையாவது துதித்து சூரிய பகவானை வணங்க வேண்டும்.
 3.  நீராடி திருநீறு (த்ரிபுரண்ட்ரம்) தரித்து,, “கந்தர் சஷ்டி கவசம்”  , “புருஷ ஸூக்தம்” “தேவாரம் , திருவாசகம்” போன்றவற்றை ஓதி வழிபட வேண்டும்., இது இயலாவிடில் “ஓம் நமசிவாய” , “ஓம் நமோ நாராயணாய” போன்ற இறை நாமங்களை 108 முறையாவது காலையிலும், 1008 முறை மாலையிலும் ஓத வேண்டும்..
 4. “ஓம் ஹயக்ரீவாய நம:” “ஓம் சரஸ்வத்யை நம :” (ஓம் ஹயக்ரீவா போற்றி, ஓம் சரஸ்வதி போற்றி) என்று துதிப்பவர்களுக்கு நல்ல கல்வி ஞானம் கிட்டும்..
 5. “விநாயகர் அகவல்” , “கணேச கவசம்” , “தேவாரம்” , விஷ்ணு சகஸ்ரநாமம் ,”லக்ஷ்மி  நரஸிம்ஹ கராவலம்பந ஸ்தோத்ரம்”, “கந்தர் அனுபூதி” , “அபிராமி அந்தாதி” “திருப்புகழ்“ போன்றவற்றை இளம் வயதிலேயே மனனம் செய்தல் நலம் பயக்கும்...

தினந்தோறும் பெண்கள் அறிந்தோ, அறியாமலோ செய்கின்ற அதர்ம காரியங்களால் பல துன்பங்களுக்கு ஆளாகின்றனர்.
நெற்றியில் இயற்கை குங்குமம் அல்லாமல் ஒட்டுப் பொட்டு (ஸ்டிக்கர்) வைத்தல் – இது பல சாபங்களுக்கு வழிவகுக்கும்.
புருவங்களைத் திருத்துதல், சிரைத்தல் –இது கொடிய பாவங்களைத் தருவதுடன் கணவனின் ஆயுளையும் குறைக்கும்.
இவ்விரண்டு கொடிய தவறுகளினால் இல்லங்களில் சண்டைகளும், சச்சரவுகளும் துன்பங்களும் பெருகும்..
இதனை அறிந்த பிறகாவது பெண்கள் தங்களைத் திருத்திக் கொண்டு இயற்கைச் சந்தனம், மஞ்ச்ள்,, குங்குமம், சாந்து ஆகியவற்றை உபயோகிக்க வேண்டும். இதுவரை செய்த தவறுகளுக்குப் பரிகாரமாக

 1.  அறியாமையினால் இத்தவறுகளைச் செய்யும் பெண்களை அறிவுறுத்தித் திருத்த வேண்டும்.
 2. இயற்கை முறையில் இறை நாமம் ஓதிய குங்குமம் தயாரித்து கோயில்களில் அர்ச்சனைக்கு அளித்தல் சிறந்தது.

இயற்கையாக குங்குமம் தயாரிக்க இயலாவிடில் நன்முறையில் செய்யப்பட்ட குங்குமத்தைக் கொண்டு பலபெண்கள் ஒன்று சேர்ந்து கூட்டாக “லலிதா ஸ்கஸ்ரநாமம்” “அபிராமி அந்தாதி” “சௌந்தர்ய லஹரி” , “மாங்கல்யஸ்தவம்” “துர்க்கா துதி” போன்ற தமிழ், வடமொழி ஸ்லோகங்களைப் பாராயணம் செய்து அக்குங்குமத்தைக் கோயில்களில் சுமங்கலிகளுக்கு தானம் செய்ய  வேண்டும்.

சாம்பிராணி தூபம்

சாம்பிராணி எவ்வாறு பிறந்தது ? பிரதோஷம் பங்குனி உத்திரம், திருவாதிரை போன்ற விசேஷ தினங்களில் சிவபெருமான் வெவ்வேறு விதமான நாட்டியங்களை ஆடுகின்றார். சிவபெருமானுடைய அத்தனை நர்த்தனங்களையும் காணும் பேறு பெற்றவர் ஸ்ரீஅகஸ்தியரே.
அத்தகைய நடனங்களில் “தந்துமேக” நடனம் என்பது ஒருவகையாம். கால் நகங்களில் உடலைத் தாங்கி ஆடுகின்ற ஆனந்தமயமான நாட்டியம் இது. கால்கள் தரையில் பாவாமல் எவ்வித நகக் கீறலுமின்றி ஆடுகின்ற நாட்டியம்.
இந்த நாட்டியத்தைக் காணும் பேறு பெற்ற சில மகரிஷிகள் “சிவபெருமானின் இத்தகைய அதிசூட்சும நடனத்தில் ஒரு சிறு நகக் கீறல் தரையில் பட்டால்..... “ என ஆத்ம விசாரம் செய்யத் துவங்கினர்.
அடியவரின் விருப்பத்தை நிறைவேற்றுவது தானே ஆடல் வல்லானின் விருப்பம்! சிவபெருமான் தன் கால் நகத்தால் கீறிட....
ஆங்கே, வெண்பனியென நறுமண மேகச் சூழல்கள் உருவாகின. அவை சுழன்று சுழன்று பல லோகங்களுக்கும் விரிந்தன.
விண்ணுலகெங்கும் எவரும் நுகர்ந்திரா இனிய நறுமணம்! எழில்மிகு கற்பக விருட்சத்திலும் கிட்டிடாத நறுமண மேகங்கள்! முப்பத்து முக்கோடித் தேவர்களும். ஏனைய விண்ணுலக வாசிகளும் அங்கே குழுமினர்.

சில சமயங்களில் தவிர்க்க முடியாத சூழ் நிலைகள் காரணமாக வீடு மாற்ற வேண்டிய கட்டாயம் நேரிடலாம.. நாள், கோள் ஒத்துவராத இத்தகைய எதிர்பாராத சந்தர்பங்களில் வீடுமாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், அந்த வீட்டில் பலர் ஒன்று சேர்ந்து கோமயம் (பசுவின் மூத்திர நீர்) கலந்த மஞ்சள் நீர் நிறைந்த குடம், செம்பைச் சுற்றி அமர்ந்து குறைந்தது 10000 முறையாவது காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும். இவ்வாறு ஜபிக்கப்பட்ட மஞ்சள் நீரை எத்தகைய தீய ஆவிகளையும், எண்ணங்களையும் அகற்றி இல்லத்தைத் தூய்மைப்படுத்தும் மகத்துவம் வாய்ந்ததாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்தது காய்த்ரி மந்திரமாகும்.

தேனை நாடும் வண்டுபோல் அனைவரும் நறுமண மேகச் சூழல்களைத் தொடர்ந்து சென்றனர், அம்மேகங்களோ அவர்கள் கைக்கெட்டா வண்ணம் விரைந்தன.. பல விண்ணுலகங்களைக் கடந்து சென்ற தேவர்கள் ஒரிடத்தில் நின்று விட்டனர். அதற்கு மேல் அவர்களால் அந்த தந்துமேகங்களைத் தொடர இயலவில்லை..., அந்த இடத்திற்குத் “தவ ஸ்தானம்” என்று பெயர். அந்த இடத்தில் மேகங்களிலிருந்து வெளிப்பட்ட “தூப விருட்சம்” தோன்றியது. இம்மரத்திலிருந்தே தேவர்கள் இன்றும் தேவலோக சாம்பிராணியைப் பெறுகின்றனர். இவ்வாறு உருவானதே சாம்பிராணித் திரவியம் ஆகும்.
தேவர்களை அடுத்து மகரிஷிகள் தந்து மேகங்களைத் தொடர்ந்து ஓரிடத்தில் லயித்து நின்றனர். “நில ஸ்தானம்” என்ற இடத்தில் மகரிஷிகளுக்குரித்தான தூபவிருட்சம் தோன்றியது. மகரிஷிகள் இவ்விருட்சத்திலிருந்து தான் தமக்குரிய சாம்பிராணியைப் பெறுகின்றனர்.
இப்போது பிரம்ம ஞானிகள் பிரார்த்தனைக்கேற்ப தந்து மேகங்கள் பூலோக வாசிகளுக்குரித்தான சாம்பிராணியாகிய நறுமணப் பிசினைத் தரும் பல விருட்சங்களைப் பெற்றனர்.
பள்ளியில் கல்லூரியில் படிக்கும் தன் மகன் புகைபிடிக்கும் கெட்ட பழக்கத்திற்கு ஆளாகக் கூடாது என்று பெற்றோர் அஞ்ச்சி அஞ்சியே வாழ்கின்றனர். இக்கவலைக்கு ஓர் ஆன்மீக மருந்துண்டு. கோயில்களில் அடர்த்தியாகப் புகை எழும் வண்ணம் நறுமண தூபத்தைத் தொடர்ந்து இட்டு வந்தால் இதுவே அவர்தம் பிள்ளைகளுக்கு நல்வழி காட்டும். நறுமணங் கலந்த சந்தனத்துடன் சாம்பிராணி தூபத்தை கோயில்களில் இடும்பொழுது சாம்பிராணிக்குரிய ஆன்மீக சக்தியினால் கோயில்கள் வளாகங்கள் மேலும் புனிதம் பெறுகின்றன இதயத்தைத் தூய்மையாக்கும் இந்தத் தூபப் புகையிடும் நற்காரியத்தால் இதயத்தை சுடும் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு ஒரு தீர்வு காணலாம். எனவே பெற்றோர்கள் கௌரவம் பாராது கோயில்களில் தொடர்ந்து தூபமிடும் கைங்கரியத்தை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய பிரார்த்தனையே கெட்ட பழக்கங்களிலிருந்து அவர்தம் பிள்ளைகளைக் காப்பாற்றும்.

 1. இவ்வாறாக ஒவ்வொரு லோகத்திற்கும் வெவ்வேறு விதமான நறுமண தூப வகைகள் உண்டு.
 2. பூலோகத்தில் தான் தூபத்திற்கு அக்னி சேர்க்கப்படுகிறது.. தேவர்கள் தங்கள் கைகளில் தவ ஸ்தான தூப திரவியத்தை ஏந்திப் பிரார்த்தித்தாலே தூபப் புகையைத் தரவல்லதாம்.
 3. பூலோக வாசிகள் விறகுக்கரி, கற்பூரம், சிராய்த்தூள் கொண்டு மட்டுமே தூபப் புகைக்கான அக்னியை எழுப்ப வேண்டும். மண்ணெண்ணெய் உபயோகித்தல் சாபத்தைத் தரும்.

தூபப் புகையை அடர்த்தியாக வெண்பனி மூட்டம் போல் கோயில்களில் இறை மூர்த்திகளைச் சுற்றி எழுப்புதல் விசேஷமாகும் “மூர்த்திகள் கண்ணுக்குப் புலனாகவில்லையே” என்று கருதக் கூடாது கல் பஞ்ச லோக விக்ரகங்கள் தூபப் புகையை உள்ளிழுப்பதால் அவற்றின் மந்திர ஆகர்ஷண சக்திகள் பல்கிப் பெருகும்.

புனுகு மகிமை

புனுகுப் பூனை, சிவப்பனிச்சார மூலிகையின் இலைகளை பார்ப்பதோடன்றி சலபத்ர விருட்சம் என்ற மூலிகையின் புஷ்பங்களை ஆவலோடு உண்ணும். இந்த புஷ்பத்தின் விசேஷ சக்தியால் புனுகுப் பூனையின் விந்து கெட்டிப்பட்டு நறுமணமடைகின்றது.
இப்புனுகின் மகிமையை உலகிற்கு உணர்த்தியவர் பசலமாமுனிவர். இவர் இறைவனை வித்தியாசமான விதத்தில் வழிபட எண்ணி அற்புதமான தவத்தை மேற்கொண்டார்.
பலகோடி ஆண்டின் தவத்திற்குப்பின் பசலமாமுனிவர் கண்விழிக்க, அவர் எதிரே நெடுவண் (புனுகு) பூனை அமர்ந்திருந்தது. அந்தப் பூனை அமர்ந்திருந்த சலபத்ர விருட்சத்தில் நெடுவண் பூனையின் புனுகு திரண்டிருந்தது. தேவலோகம் வரை அப்புனுகின் நறுமணம் விரவியிருந்தது. அதிமணம் நிறைந்த புனுகினைக் கண்டுற்ற பசலமாமுனிவர் புனுகுத் திரவியத்தை இறைவனுக்குச் சார்த்தத் திருவுளம் கொண்டார். அதை எடுத்துக் கொண்டு கொல்லிமலையிலிருக்கும் முருகன் கோயிலிற்குச் சென்றார். அவர் சென்ற நேரத்தில் கோயில் நடைசார்த்தியிருந்தமையால் மூலவருக்குப் புனுகைச் சார்த்த இயலவில்லை. ஸ்ரீகாலபைரவரின் திருச்சன்னதியே திறந்திருந்தமையால் ஸ்ரீ பசலமாமுனிவர் புனுகுத் திரவியத்தை ஸ்ரீபைரவருக்குச் சார்த்திட உலகின் முதல் புனுகுச் சட்ட வழிபாடு இங்கேயே துவங்கியது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
இவ்வாறாக பசலமாமுனிவரின் தபோ வைராக்கியமும் இறையருளால் வித்யாசமான முறையில் நிறைவேறியது. சென்னைத் திருவொற்றியூரிலுள்ள படம்பக்கநாதர். திருச்சி திருஎறும்பூரிலுள்ள திருஎறும்பீசுவரர், சங்கர நயினார் கோயிலுள்ள சிவபெருமான் போன்ற புற்று மண்ணினாலான தெய்வ மூர்த்திகளுக்கு ஸ்ரீபசலமாமுனிவரைத் தியானித்துப் புனுகுச் சட்டம் சார்த்துதல் விசேஷமானதாகும்.

திருக்கழுக்குன்றம்

பூஷா, விதாதா என்ற இரு மகரிஷிகள் தேவ கழுகு பக்ஷிகளாக இன்றைக்கும் திருக்கழுகுன்றத் திருமலையில் அன்னம் பெறும் காட்சியைக் காணலாம். சில சமயங்களில் இத்தேவ பக்ஷிகள் அன்னம் பெற  வருவதில்லை. இதை அபசகுனம் என்று கருதிப் பலர் மனவருத்தத்துடன் திரும்புகின்றனர் எடுக்க வேண்டிய முயற்சிகளையும் தடை என்று கருதி நிறுத்தி விடுகின்றனர். தேவ பக்ஷிகள் வராதிருப்பதற்குப் பல காரணங்களை அளித்துச் சித்தர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.
இந்தத் தேவ கழுகு பக்ஷிகள் பல நாட்களில் விரதங்களை மேற்கொள்கின்றனர்.
சில அபூர்வமான மூலிகைகளை இந்தப் பக்ஷிகள் உண்ணும் நாட்களில் வேறு உணவேற்பது கிடையாது.
குறிப்பிட்ட சிலர் வருகை தந்திருந்தால்தான் இப்பக்ஷிகள் காட்சி தரும். வரவேண்டியவர்கள் வரவில்லையெனில் அன்றைக்குத் தேவ பக்ஷிகள் வருவது கிடையாது.
பூலோகம் மட்டுமின்றி இமயமலை, பொதியமலை உள்ளிட்ட பல யோக ஸ்தலங்களுக்கும், பல்வேறு லோகங்களுக்கும் பக்ஷிகள் செல்கின்றன. ஆங்காங்கே உள்ள சித்த புருஷர்கள், தெய்வ மூர்த்திகளின் அபிலாஷைகளுக்கேற்ப இவை அவ்விடங்களில் தங்குவதுண்டு.
நம் கண்களுக்கு இவை தேவபக்ஷிகளே தவிர, பல லோகங்களில் இவை கல்பகாலத்தை நிர்ணயித்துக் காட்டும் கால பக்ஷிகளாக வழிபடப்படுகின்றன. பிற லோகங்களில் கல்பகாலத் தொடக்கமோ, முடிவோ அமையுங்கால் அன்றைய தினம் இவர்கள் பூலோகத்திற்கு வருவது கிடையாது.
28வது கலியுகத்தில் வைவஸ்வத மனு காலத்தில் கலியுகம் நிறைவு பெற, அன்றிலிருந்து இத்தேவ பக்ஷிகளின் உருவம் பரிபூரணமடையும்.
மேற்கண்ட காரணங்களால் திருக்கழுக்குன்றத்திற்கு இத்தேவ பக்ஷிகள் தினமும் வருவது கிடையாது. எனவே அன்பர்கள் பக்ஷிகளின் வரவைக் கொண்டு சகுனத்தை ஆரூடத்தை நிர்ணயிக்காமல் “நமக்கு எது ப்ராப்தமோ அதுவே கிட்டியது” என்று மன நிறைவு கொண்டு வேதபுரீஸ்வரரை கிரிவலம் வந்து வணங்க வேண்டும். ஏனெனில் அன்றைய தினங்களில் தேவ பக்ஷிகள் கழுகுகளாக அன்றி எறும்புகளாகவோ, சக மனிதர்களாகவோ அன்றி வேறு ரூபத்திலோ தரிசனம் தந்திருக்க கூடும்.
தான தர்மங்கள் என்றால் பணம், பொருள், இடம் அதிகம் வேண்டுமே என்று அஞ்சுகின்றனர். அறிந்தோர்க்கு அளிப்பது தர்மம், அறியாதோர்க்கு அளிப்பது தானம், எளிய முறையில் தினமும் தான தர்மங்கள் செய்ய வழிகள் உண்டு.

 1. காக்கைக்கு அன்னமிடுதல்
 2. பசு, காளை மாடுகளுக்குக் கீரை உணவளித்தல்
 3. எறும்பிற்கு சர்க்கரை, ரவை இடுதல்
 4. பழை ஆடைகளை, முடிந்தால் புது ஆடைகளையும் ஏழைகளுக்கு அளித்தல்.
 5. திருக்கோயில் குளங்களின் மீன்களுக்குப் பொரி இடுதல்
 6. குருடர்களுக்கு உதவுதல்

இத்தகைய எளிய தான தரும முறைகள் பல உள்ளன. ஏதேனும் ஒன்றினையாவது செய்து ஒவ்வொரு நாளும் கழிப்பதே உண்மையாக வாழ்ந்த நாளாகும்.

கர்ம வினை இல்லா ஜீவன்கள்

கர்மவினைகள் அற்ற ஜீவன்கள் உலகில் உண்டா? உண்டு என்கிறது சித்தர்களின் மெய்ஞானம், மஹான்கள், யோகியர் போன்றோர் கூடத் தங்களுக்கெனக் கர்மங்களை வகுத்துக் கொண்டு மானுடர்களாக வாழ்கின்றனர். பிரம்மாவின் கர்மநெறிப்பாடு ஆன்மீக ஜோதிகளுக்கே இவ்வாறு அமைய, கர்மவினைகளில்லா ஜீவன்கள் அமைவதுண்டா?
கோயில்களிலுள்ள ஸ்தல் விருட்சங்கள், அரசு, ஆல், வேம்பு, வில்வம், துளசி, சமித்து, மரங்கள் போன்ற ஹோம சமித்திற்குரிய மரங்கள் எவ்விதக் கர்மமுமின்றிப் படைக்கப்பட்டுள்ளன, பெறுதற்கரிய பிறவி மானுடப் பிறவி என்பது உண்மையே. ஆனால் மனிதனை விட உன்னத ஆன்மீக நிலையில் வாழும் ஏனைய ஜீவன்களும் உண்டு.பசுவின் தேகத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும், கோடானுகோடித் தேவர்கள், மஹரிஷிகள், சித்த புருஷ்ர்களோடு உறைகின்றனர். ஸ்ரீகுருவாயூரப்பன், ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீவெங்கடாசலபதி போன்ற கலியுகத்தின் கண்கண்ட தெய்வ மூர்த்திகளுக்கான அபிஷேகத் திருமஞ்சன நீரைக் கொணரும் பாக்கியம் யானைகளுக்கே கிட்டியுள்ளன.
அரசு, ஆல் போன்ற அற்புதமான விருட்சங்கள் ஒரு கர்மமின்றியும் கூடப் பிறப்பெடுக்கக் காரணமென்ன? மஹான்கள் பரிசுத்தமான மனதை உடையவர்களாதலின் அதைப் பேணுவதற்காக ஆசார அனுஷ்டானங்களால் தெய்வீக மணம் நிறையப்பெற்ற இடங்களில் வாழ்கின்றனர். இது கருதியே அக்காலத்தில் முனிவர்களுக்கான பர்ணசாலைகளை மன்னர்கள் அமைத்துத் தந்து பெரும் புண்ணியத்தைப் பெற்றனர். விண்ணுலகங்களிலிருந்து கலியுக மக்களுக்கு அருள்புரியும் பொருட்டுப் பூலோகம் ஏகும் தேவபுருஷர்கள், மஹரிஷிகள் போன்றோர் தங்கும் இடங்களாக மேற்கண்ட விருட்சங்கள் அமைகின்றன.. விண்ணுலக அருட்பெருஞ்ஜோதிகள் மாசில்லா ஜோதிகளாதலின் அவர்கள் ஸ்தல விருட்சங்கள், கோயில் கோபுரங்கள், விமானங்கள், பசுமடம், கோசாலை, சமித்து விருட்சங்கள் போன்ற புனிதமான இடங்களையே தேர்ந்தெடுப்பர்.
நம் குருமங்கள கந்தர்வா ஒருமுறை சிவகுருமங்கள கந்தர்வாவுடன் சென்னை அருகே திருவாலங்காட்டிற்குச் செல்லும் வழியில் ஓர் ஆலமரத்தின் கீழ் தங்கினர். “சுற்றிலும் வயல்வெளிகள் சூழ இங்குத் தனித்து ஓர் ஆலமரம் இருபதனால் என்ன பயன் என்று ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தார் பாலகனாயிருந்த குருமங்கள கந்தர்வா. உடனே பெரியவர் மேலே ஆலமரத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கே........ பலவண்ணங்களில் ஒளி வட்டங்கள் ஜொலித்தன.. விதவிதமான நிறங்களில் மனிதர்களை விட மிக அழகான உருவங்கள்  ஆழ்ந்த யோகத்தில்  நிலை கொண்டிருந்தன., தேஜோமயமான அவர்களின் ரூபங்கள் கண்ணைப் பறிப்பதாய் அமைந்திருந்தன.. ரம்மியமான சூழ்நிலையில் வேத கோஷங்களும்,, மங்கள வாத்தியங்களும் செவிக்கு விருந்தாய் அமைந்தன.....
தனை மறந்து லியித்து நின்ற சிறுவனைத் தட்டியெழுப்பி  ..”ஒரு சின்ன விஷியத்துக்கே அசந்துட்டியே, இது மாதிரி கோடி கோடியாய் விஷ்யங்களிருக்கே, என்னிக்குத் தெரிஞ்சுக்கப் போறே! அதுக்கெல்லாம் குருஅருள் வேணும், எல்லாத்தையும் புரிஞ்சுக்கணும்னு நெனச்சா,,,,” பெரியவர் அடுக்கிக் கொண்டே சென்றார்.
“இவங்கள்ளாம் திருவாலங்காடு சிவன் கோயில் பிரதோஷத்துக்காக வந்த விண்ணுலக வாசிகள், தேவர்கள், பித்ருக்கள், ரிஷிகள்,, இவ்வுளவு விசேஷமான பிரதோஷத்தை மனுஷங்க புரிஞ்சுக்கறது கிடையாது. நீயாவது பிரதோஷத்தைப் பத்தி  மக்களுக்கு எடுத்துச் சொல்லு ..”
இவ்வாறாக அரசு, ஆல், வேம்பு போன்ற விருட்சங்கள் எவ்விதக் கர்மபந்தங்களின்றி இப்பூவுலகில் உதித்திருக்கின்றன. இவற்றில் எப்போதும் தேவர்கள், பித்ருக்கள், அற்புதமான தெய்வ புருஷர்கள் வாசம் புரிவதால், இவற்றைப் பிரதக்ஷிணம் செய்வதால் அவர்களின் ஆசீர்வாதத்தை எளிதில் பெறலாம். அனைத்து அறிவும் உடையதாகக் கருதப்படும் தெய்வீக விருட்சங்கள் முக்தியளிக்கும் ஆன்மீக சக்தி உடையன என்பது வியப்புற்குரியதல்லவா!

குந்தி தேவி மகிமை

பாண்டவர்களின் தாயான ஸ்ரீகுந்திதேவி ஈடில்லா யோக சக்தி உடையவள். சாதாரணப் பெண்ணாக இருந்து தன்னுடைய ஏகாந்த மோன சக்தி மூலம் தெய்வ மூர்த்திகளின் ஸ்பர்ஸ ரூப ஐக்கிய சந்தான பாக்ய சக்தியை பெற்றவள்.. எவரும் உணர இயலாத தேஜோமயமான ஸ்ரீசூரிய பகவானின் யோக சக்தியுடன் இணையும் பாங்கிற்கு ஆன்மீக சக்தியைப் பெற்றவள். ஸ்ரீதுர்வாச முனிவருக்கு மிகச் சிறந்த முறையில் பனிவிடைகள் புரிந்து பல அரிய சக்திவாய்ந்த மூலமந்திரங்களை உபதேமாகப் பெற்றவள். இவ்வரிய மந்திரங்களை யாகங்களாலும் வேள்விகளாலும் போஷித்து உரிய தான தருமங்களுடன் அவற்றை நிறைவேற்றி வந்தனள். இதனால் பெறற்கரிய லலிதா பரமேஸ்வரி சிந்தாமணிப் பீடத்தை வலம் வரும் பேற்றைப் பெற்றாள்.
இத்தகைய அனைத்து லோகங்களும் போற்றும் சர்வ யோகினியாக வாழ்ந்த ஸ்ரீகுந்தி தேவியின் மகாபாரத வாழ்க்கையில் “ஸ்ரீகிருஷ்ணா, எனக்கு எப்போதும் துன்பங்களைத் தந்து கொண்டிருப்பாயாக ! அப்போது தான் உன் நினைவோடு நான் வாழ முடியும்” என்று வித்யாசமான முறையில் இறைவனிடம் வேண்டக் காரணம் என்ன?

குந்திதேவி நல்லூர் திருத்தலம்

கலியுகத்தில் பலபெண்கள் சொல்லற்கரிய துன்பச் சூழ்நலைகளில் வாழ நேரிடும். விபரீதமான ஆசைகளாலும், காமக் குரோதங்களாலும் பல இக்கட்டான சூழ் நிலைகளில் பெண்கள் சிக்கித் தவிப்பர். வெளிப்படையாகச் சொல்ல இயலாத துயரங்கள் பெருகி, சமுதாயத்தை விட்டு ஒதுங்கி வாழ நேரிடும்.

 1. திருமணத்திற்கு முன் குழந்தைகளைப் பெற்றோர்
 2. பிதாவை அறில இயலாத குழந்தைகள்
 3. பிதாவைச் சூழ் நிலைகள் காரணமாக அறிவிக்க இயலாத பெண்கள்
 4. அசந்தர்ப்பங்களினால் சிசுவதை, சிசுக்களின் அகால மரணம், துர்மரணம், அபலைகளான சிசுக்கள் ஆகியவற்றிக்குக் காரணமானோர்.
 5. சமுதாயக் கொந்தளிப்புகளினால் தங்கள் பிள்ளைகளுடன் இணைய இயலாதோர்
 6. சமுதாயக் கட்டுப்பாடுகளினால் தங்கள் பிள்ளைகளை அறிவிக்க இயலாதோர்

மேற்கண்ட விவரிக்க இயலாத வேதனைகளுடன் ஆயிரக்கணக்கான பெண்கள் தினசரி வாழ்க்கையை நொந்த உள்ளத்துடன் கழித்து வருகின்றனர்.
ஒருமுறை நம்குருமங்கள கந்தர்வா சிவகுருமங்கள கந்தர்வாவிடம் “ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடம் துன்பங்களைத் தந்தருளுமாறு வேண்டிய ஸ்ரீகுந்தி தேவிக்குத் தற்போது எந்நிலை கிட்டியுள்ளது? ஸ்ரீகிருஷ்ணன் தன் பக்தையின் வேண்டுகோளை எவ்வாறு நிறைவேற்றினார்?” எனக் கேட்டார். இதற்குச் சிவகுரு மங்களகந்தர்வா அளித்த விளக்கமே இங்கு நாம் காண்பதாகும்.
“விவரிக்க இயலாத மேற்கண்ட வகையான பெண்களின் துன்பங்களைத் தீர்ப்பதற்காக இன்றைக்கும் ஸ்ரீகுந்தி தேவி ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவைப் பூஜித்து வருகிறாள். எத்தனையோ அற்புதமான சிஷ்யர்களைப் பெற்றிருந்தாலும்  ஸ்ரீதுர்வாச மஹரிஷி, ஸ்ரீகுந்தி தேவிக்கே பல அரிய மந்திரங்களை உபதேசித்தார். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் நினைவுடன் எந்த லோகத்திலும் வாழும் பெரும் பேற்றைப் பெற்ற ஸ்ரீகுந்தி தேவி தான் பெற்ற மந்திர உபதேசங்களின் தபோபலனை கலியுகப் பெண்களின் நல்வாழ்விற்காக அர்ப்பணித்து வருகின்றாள்.”
“இத்தகைய பெண்கள் தங்கள் தவறுகளுக்கு மனமார வருந்தினால் கூட அதனைச் சமுதாயம் ஏற்காது. எனவே இத்தகையோர் எந்நேரமும் ஸ்ரீகுந்தி தேவியைத் தியானித்தல் வேண்டும். ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஸ்ரீகுந்தி தேவியைப் பிரார்த்திப்போருக்கு ஸ்ரீகுந்தி தேவியின் பூஜாபலன்களால் நல்வாழ்க்கை அமையும்.”
எனவே மேலே குறித்தவாறு ஏனைய சொல்லொணாத் துயரங்களினால் வாடும் பெண்கள் ஸ்ரீகுந்தி தேவியை இஷ்ட தெய்வமாகப் போற்றி வழிபட வேண்டும். இதனால் ஸ்ரீகுந்தி தேவியின் பூஜா பலன்களால் அவர்கள் சமூகத்தில் தக்க அங்கீகாரம் பெற்று உளமாரத் திருந்தி வாழும் நல்வாய்ப்பைப் பெறுவார்கள் என்பது உறுதி.
தியாகத் திருமூர்த்தியாய்ப் பெண்களின் நல்வாழ்விற்காகத் தன்னையும் தன் தவத்தையும் அர்ப்பணம் செய்து ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் திருவடிகளில் உய்யும் ஸ்ரீகுந்தி தேவியின் அற்புதச் சரிதத்தை உலகிற்குத் தெளிவுற அளித்தவர்கள் சித்த புருஷர்களே.!

காணும் பொங்கல்

போகிப் பண்டிகை, சங்கராந்திப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல, ஆகிய நான்கு பொங்கல் பண்டிகைகளும் மகர தேவதைக்கு உரித்தானவையாகும். ஸ்ரீசூர்ய நாராயணசுவாமியாகிய ஸ்ரீமஹா விஷ்ணுவே அனைத்து ஜீவன்களுக்கும் சூர்யயோதயத்திலிருந்து நாள் முழுதும் நித்ய ஜீவன சக்தியளிக்கின்றார். மச்சாவதாரத்தில் சிருஷ்டிக்கப்பட்ட மகர தேவதைக்குரிய மூர்த்தியாக ஸ்ரீசூர்யபகவான் விளங்குகின்றார். தைப்பொங்கலன்று மகர லக்னத்தில் ஸ்ரீசூர்ய பகவான் பிரவேசிக்கின்ற போது தொடங்குகின்ற இப்பூஜையானது காணும் பொங்கலன்று நிறைவு பெறுகின்றது. காணும் பொங்கலன்று குறிப்பிட்ட லக்னத்தில் மகர தேவதை ஸ்ரீசூர்ய நாராயணசுவாமியைத் தரிசிக்கிறாள். இந்த லக்ன நேரங்களைச் சற்குருமார்களிடம் கேட்டுப் பயன் பெறுதல் வேண்டும்.
மகர தேவதை உலகத்திலுள்ள சுமங்கலிகளின் நல்வாழ்வுக்காக நடத்துகின்ற பிரத்யேக பூஜை இது. இதுவே மாங்கல்ய பாக்கியம் கொடுக்கின்ற நன்னாளாகக் கொண்டாடப்படுகின்றது. மகர தேவதை இப்பூஜையை நிறைவு செய்கின்றபோது சக்ருதி என்ற தேவதையாகக் காணும் பொங்கலன்று பொங்கல் பானையில் ஆவாஹனம் ஆகின்றாள். காணும் பொங்கல் கொண்டாடப்படும் இல்லங்களிலிலுள்ள சுமங்கலிகள் மீது இந்தச் சக்ருதி தேவதை ஆவாஹனம் ஆவதால் அன்றைக்குச் சுமங்கலிகள் கையால் நெற்றியில் மஞ்சள் கீறிடுதல் விசேஷமாகும். இது பூரணமான மாங்கல்ய பாக்கியத்தை அளிக்கும். சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் இவற்றைக் கரும்புக் கணுவுடன் அளித்தல் விசேஷமானதாகும்.
ஒரே கரும்புக்கணு பல்லாயிரம் கரும்புகளுக்கு வித்திடுவதுபோல காணும் பொங்கலன்று அளிக்கப்படும் கரும்புக் கணு தானம் சந்தான விருத்தி மற்றும் மாங்கல்ய பாக்கியத்திற்கு அருள்பாலிக்கின்றது.
சூர்ய மண்டலத்தில் “ஸ்ரீ சாவித்திரி” என்னும் திருநாமத்துடன் ஸ்ரீகாயத்ரி வசிப்பதால் குறைந்தது 32 முறையாவது காய்த்ரி மந்திரத்தை ஜபித்து கரும்புக் கணுவினை இறைவனுக்குப் படைத்துச் சுமங்கலிகளுக்குத் தானம் அளித்து யானைகளுக்கும் அளிக்க வேண்டும்.
ஆயிரக்கணக்கான தேவதைகள், தெய்வ மூர்த்திகள், சித்த புருஷர்கள், மஹரிஷிகள் வசிக்கின்ற பசுவின் தேகத்தில் இந்த  நான்கு பொங்கல் பண்டிகைகளன்று மட்டுமே சக்ருதி தேவதை பசுவின் உடலில் வசிக்கின்றாள். ஏணைய நாட்களில் மகர லோகத்திற்குச் சென்று சூர்யனை வழிபடுகின்றாள். எனவே இந்த நான்கு நாட்களிலும் பசுவை வலம் வந்து உணவளித்தல் சக்ருதியாகிய மகரதேவதையின் அருளைப் பெற்றுத் தரும்..
காணும் பொங்கல் அன்று நிறைவேற்ற வேண்டிய வேறு சில நற்பணிகளும் உண்டு. பதஞ்சலி் முனிவருடைய “சம்பு நடன அஷ்டகம்” என்ற அற்புதமான ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்து அதற்குரிய தான தருமங்களைச் செய்து சற்குருவைக் காணுதலே காணும் பொங்கலின் உண்மையான தாத்பரியம் ஆகும்.
காணும் பொங்கலும் ஸ்ரீசம்பு நடன் அஷ்டகமும்
சிவபெருமானின் விதவிதமான நடனங்களில் சம்பு நடனமும் ஒன்றாகும். இந்த சம்பு நடனத்தில் தான் ஜீவன்கள் சிருஷ்டிக்கப்படுகின்றன. சம்பு நடனத்திற்கான சந்தத்தைப் பதஞ்சலி முனிவர் சம்பு நடன அஷ்டகமாகப் படைத்தார். ஒவ்வொரு மகரிஷியும் ஒவ்வொரு அஷ்டகத்தைப் பலகோடி ஆண்டுகள் தியானித்து, காணும் பொங்கலன்று செய்ய வேண்டிய எட்டுவகைத்     தானங்களாகப் பூவுலகிற்கு அளித்துள்ளனர். உத்தராயணத் தைமாதப் பிறப்பன்று தொடங்கி இத்தான தர்மங்களைச் செய்து, சம்பு நடன அஷ்டகத்தைப் பாராயணம் செய்து, காணும் பொங்கலன்று சற்குருவைத் தரிசித்தல் அவருடைய பரிபூரண அருளைப் பெற்றுத் தரும் இதனால் “நாரதீய பக்தி” என்ற விசேஷமான ஆத்மானுபவம் கிட்டும்.
இவ்வாறு செய்ய இயலாதோர் தை மாதத்திற்குள் இவற்றைச் செவ்வனே முடித்து, சம்பு நடன அஷ்டக பாராயணம் செய்து. பின் சற்குருவைத் தியானித்து, தரிசித்து நாரதீய பக்திமுறையை (பலர் ஒன்று கூடி சத்சங்கமாக) உய்த்துணரலாம்.

அஷ்டகத்தை உய்த்துணர்ந்த மஹரிஷிகள்

அவர்கள் உணர்த்திய தான தர்மங்கள்

வசிஷ்டர்

கர்ப்பிணி சேவை – கர்ப்பிணிகளுக்கான தேவைகள் பூர்த்தி செய்தல் (includng tonics, medicines,  etc…..)

வாமதேவர்

முதியோர் சேவை – வயதானவர், முதியோர் தேவைகளை நிறைவேற்றுதல்

ஜாபாலி

ஊனமுற்றோர் சேவை – கண், கை, கால், மற்றும் உறுப்புகள் ஊனமுற்றோர்க்கு உதவி

காஸ்யபர்

விதவைகள் சேவை – விதவைகளின் விருப்பத்தை இயன்ற அளவு செய்தல்

காத்யாயனர்

பெற்றோர் சேவை – உடன்பிறப்பு, பெற்றோர் தேவைகளை நிறைவேற்றுதல்

சுயக்ஞர்

நண்பர்கள் சேவை – நண்பர்களுக்குச் செய்த துரோகங்கள் தீர ஆலயத்தில் ஏழை எளியோருக்கு  வஸ்திர தானம்

கௌதமர்

சுமங்கலி தானம் – தாலி ,மஞ்சள் சரடு தானம், மனைவி மக்கள் அதிகாரிகளைச் சந்தித்தல்.,

விஜயர்

தீப தானம் – தீபம் ஏற்றப்படாத ஆலயங்களில் தீபம் ஏற்றும் திருப்பணி, விளக்குகள் தானம்

ஸ்ரீசம்பு நடன அஷ்டகம்
ஸ்ரீகாந்தோ மாதுலோ யஸ்ய ஜனனீ ஸ்ர்வமங்களா |
ஜனக : ஸங்கரோ தேவ : தம் வந்தே குஞ்ஜரானனம்||

ஸதஞ்சித முதஞ்சித  நிகுஞ்சித பதம்
ஜலஜ்ஜலஞ் சலித மஞ்ஜு கடகம்
பதஞ்சலி த்ருகஞ்ஜந மநஞ்ஜன
மசஞ்சலபதம் ஜனன பஞ்ஜந கரம் |
கதம்ப ருசி மம்பரவசம் பரம
மம்புத கதம்பக விடம்பக கலம்
சிதம்புதமணிம் புதஹ்ருதம்புஜ ரவிம்
பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ ||

ஹரம் த்ரிபுர பஞ்சஜந மநந்த க்ருத கங்கண
மகண்டதய மந்த ரஹிதம்
விரிஞ்சிஸுர ஸம்ஹதி புரந்தர விசிந்தித பதம்
தருண சந்த்ர மகுடம் |
பரம் பத விகண்டித யமம் பஸித
மண்டிததனும் மதந வஞ்சந பரம்
சிரந்தந மமும் ப்ரணத ஸ்ஞ்சித நிதிம்
பர சிதம்பர நடம் ஹ்ருதி பஜ ||

அவந்தமகிலம் ஜகதபங்க குண
துங்க மமதம் த்ருதவிதும் ஸுரஸரித்
த்ரங்க நிகுரும்ப த்ருதி லம்பட ஜடம்
சமந டம்பரஹரம் பவஹரம் |
ஸிவம் தஸ திகந்தர விஜ்ரும்பித கரம்
கர லஸந் ம்ருக ஸிஸும் பஸுபதிம்
ஹரம் ஸஸி தநஞ்சய பதங்கநயனம்
பர சிதம்பர நடம் ஹ்ருதி பஜ ||

அநந்த நவரத்ன விலஸத் கடக
கிங்கிணி ஜலஞ்ஜலஜலம் ஜலரவம்
முகுந்த விதி ஹஸ்தகத மத்தல லய
த்வநி திமித்திமித நர்தன பதம் |
ஸகுந்தரத பர்ஹிரத நந்தி முக
தந்தி முக ப்ருங்கிரிடி ஸங்க நிகடம்
ஸநந்த ஸநக ப்ரமுக வந்தித பதம்
பரம் சிதம்பர நடம் ஹ்ருதி பஜ ||

அநந்த மஹிமம் த்ரிதஸ வந்த்ய சரணம்
முனி ஹ்ருதந்தர வஸந்த மமலம்
கபந்த வியதிந்த்வவநி கந்தவஹ
வந்ஹி மகபந்துரவி மஞ்ஜு வபுஷம் |
அனந்தவிபவம் த்ரிஜக தந்தர மணிம்
த்ரிநயனம் த்ரிபுர கண்டந பரம்
ஸனந்த முனி வந்தித பதம் ஸகருணம்
பர சிதம்பர நடம் ஹ்ருதி பஜ ||

அசிந்த்ய மலிப்ருந்த ருசி பந்துர
கல ஸ்புரித குந்த நிகுரும்ப தவளம்
முகுந்த ஸுரப்ருந்த பலஹந்த்ரு க்ருத
வந்தன லஸந்த மஹி குண்டல தரம் |
அகம்ப மனு கம்பித ரதிம்ஸுஜந
மங்கள நிதிம் கஜஹரம் பஸுபதிம்
தனஞ்ஜய நுதம் ப்ரணத ரஞ்ஜந பரம்
பர சிதம்பர நடம் ஹ்ருதி பஜ ||

பரம் ஸுரவரம் புரஹரம் பஸுபதிம்
ஜநித தந்திமுக ஷ்ண்முக மமும்
ம்ருடம் கனகபிங்கள ஜடம் ஸநக
பங்கஜ ரவிம் ஸுமனஸம் ஹிமருசிம் |
அஸங்க மனஸம் ஜலதி ஜந்ம கரலம்
கபலயந்த மதுலம் குணநிதிம்
ஸநந்த வரதம் ஸமிதமிந்து வதநம்
பர சிதம்பர நடம் ஹ்ருதி பஜ ||

அஜம் க்ஷிதிரதம் புஜக புங்கவ குணம்
கனகச்ருங்கி தநுஷம் கர லஸத்
குரங்க ப்ருது டங்க பரஸும்
ருசிர குங்கும ருசிம் டமருகம் சதததம் |
முகுந்தவிசிக நமத வந்த்ய பலதம்
நிகம ப்ருந்த துரகம் நிருபமம்
ஸசண்டிக மமும் ஜடிதி ஸம்ஹ்ருத புரம்
பர சிதம்பர நடம் ஹ்ருதி பஜ ||

அநங்க பரிபந்திந மஜம் க்ஷிதி துரந்தரம்
அமலம் கருணயந்த மகிலம்
ஜ்வலந்த மனலம் ததத மந்தக ரிபும்
ஸததமிந்த்ர ஸுரவந்தித பதம் |
உதஞ்ச தரவிந்த குலபந்து சத பிம்ப
ருசி ஸம்ஹதி ஸுகந்தி வபுஷம்
பதஞ்சலி  நுதம் ப்ரணவ பஞ்ஜரசுகம்
பர சிதம்பர நடம் ஹ்ருதி பஜ ||

இதி ஸ்தவ மமும் புஜக பங்க வக்ருதம்
ப்ரதி தினம் படதி ய : க்ருதமுக
ஸத : ப்ரபு பத த்விதய தர்ஸன பதம்
ஸுலலிதம் சரண ச்ருங்க ரஹிதம் |
ஸுர : ப்ரபவ ஸம்பவ ஹரித் பதி ஹரி
ப்ரமுக திவ்ய நுத சங்கர பதம்
ஸ கச்சதி பரம் ந து ஜநுர்ஜலதிம்
பரம து : கஜநகம் துரிததம் ||

 

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam