அண்ணாமலையைச் சுற்றி வா, நீ கர்ப்பத்தில் சுற்ற மாட்டாய்.

21. மாணிக்க வாசக சுவாமிகள் அருளியது


வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவா றுந்தீ பற

ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீ பற
ஒன்றும் பெருமிகை உந்தீ பற

தச்சு விடுத்தலும் தாமடியிட்டலும்
அச்சு முறிந்ததென்று உந்தீ பற
அழிந்தன முப்புரம் உந்தீ பற

உய்யவல்லார் ஒருமூவரைக் காவல்கொண்டு
எய்ய வல்லானுக்கே உந்தீ பற
இளமுலை பங்கன் என்றுந்தீ பற

 

நெற்றியில் ஏற்படும் சுருக்கங்கள் உடலில் உள்ள ஆக்ஞா சக்கரம், மணிப்பூரகம் போன்ற யோகச் சக்கரங்களின் ஆரோக்கிய நிலையைக் குறிக்கின்றன. இந்தச் சக்கரங்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுபவையே நெற்றியில் நாம் அணியும் விபூதி, குங்குமம், சந்தனம், திருமண் போன்ற இறைச் சின்னங்கள் ஆகும்.

சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடியவா பாடி உந்தீ பற
உருத்திர நாதனுக் குந்தீ பற

ஆவா திருமால் அவிர்ப்பாகங் கொண்டன்று
சாவா திருந்தா னென்றுந்தீ பற
சதுர்முகன் தாதையென் றுந்தீ பற

வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய
கையைத் தறித்தா னென்று உந்தீ பற
கலங்கிற்று வேள்வி யென்று உந்தீ பற

 

பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பதென் னேயடி உந்தீ பற
பணைமுலை பாகனுக்குந்தீ பற

புரந்தரனார் ஒரு பூங்குயிலாகி
மரந்தனில் ஏறினார் உந்தீ பற
வானவர் கோனென்றே உந்தீ பற

வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சின வாபாடி உந்தீ பற
தொடர்ந்த பிறப்பற உந்தீ பற

உலகிலேயே மிகச் சிறந்த மணி எது தெரியுமா?
கோயில் என்று சிறப்புப் பெயர் பெற்ற சிதம்பரத்தில் உள்ள ஆலயமணியே உலகில் உள்ள மிகச் சிறந்த மணியாகும். சிகண்டி பூரணம் என்று சித்தர்களால் அழைக்கப்படும் இந்த மணியிலிருந்து எழும் தெய்வீக ஒலி எளிதில் நம்மை ஆழ்நிலை தியானத்தில் ஆழ்த்தி விடும் தன்மை உடையது. தியானத்தில் முன்னேற்றம் அடைய விரும்புபவர்கள் இந்த சிகண்டி பூரண மணி ஓசையைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருத்தல் நலம்

ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீ பற
கொங்கை குலுங்க நின்றுந்தீ பற

உண்ணப் புகுந்த பகனொளித் தோடாமே
கண்ணைப் பறித்த வாறுந்தீ பற
கருக்கெட நாமெலாம் உந்தீ பற

நாமகள் நாசி சிரம்பிர மன்படச்
சோமன் முகம் நெரித்துந்தீ பற
தொல்லை வினை கெட உந்தீ பற

நான்மறை யோனும் மகத்தியமான்படப்
போம்வழி தேடுமாறுந்தீ பற
புரந்தரன் வேள்வியில் உந்தீ பற

சூரியனார் தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்த வாறுந்தீ பற
மயங்கிற்று வேள்வி என்றுந்தீ பற

நாராயணன் என்ற இறை நாமத்திற்கு சித்தர்கள் அளிக்கும் எளிய விளக்கம் இதோ.
நா(நாக்கு), ரா(உள்ளிருந்து நல்ல சக்திகள் வெளியே செல்லாமல், வெளியே இருக்கும் தீய சக்திகள் உள்ளே செல்லாமல்), ய(யார்), அனன்(அனுபவிப்பவன்). சுருக்கமாகச் சொன்னால் நாக்கினால் நல்லதையே சொல்லி, நல்லதையே செய்பவன் நாராயணன்.

தக்கனார் அன்றே தலையிழந்தார் தக்கன்
மக்களைச் சூழநின்றுந்தீ பற
மடிந்தது வேள்வி என்றுந்தீ பற

பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே உந்தீ பற
குமரன்தன் தாதைக்கே உந்தீ பற

 

நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை
ஒல்லை அரிந்ததென்றுந்தீ பற
உகிரால் அரிந்ததென்றுந்தீ பற

தேரை நிறுத்தி மலைஎடுத்தான் சிரம்
ஈரைந்து மிற்றவாறுந்தீபற
இருபதும் இற்றதென்றுந்தீ பற

ஏகாச மிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசங் காவலென்றுந்தீ பற
அதற் கப்பாலுங் காவலென்றுந்தீ பற

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

22. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது

வட்டனை மதிசூடியை வானவர்
சிட்டனை திருஅண்ணாமலையனை
யிட்டனை யிகழ்ந்தார் புரமூன்றையும்
அட்டனை அடியேன் மறந்துய்வனோ

வானனை மதிசூடிய மைந்தனைத்
தேனனைத் திருஅண்ணாமலையனை
ஏனனை யிகழ்ந்தார் புரமூன்றெய்த
வானனை அடியேன் மறந்துய்வனோ

மத்தனை மதயானை யுரித்தவெஞ்
சித்தனைத் திருஅண்ணாமலையனை
முத்தனை முனிந்தார் புரமூன்றெய்த
வத்தனை யடியேன் மறந்துய்வனோ

உடலில் உள்ள இரும்புச் சத்தை சமன்படுத்தும் அற்புத ஆற்றல் படைத்ததே ராஜ்மா என்னும் தானியம் ஆகும். இரும்பு சத்து உடலில் அதிகரித்து விட்டால் ராஜ்மாவை சுண்டல் செய்து சாப்பிடவும்.
ஒரு வாரத்திற்குப் பின் இரண்டு வாரம் ராஜ்மாவை உணவில் சேர்க்கக் கூடாது. திரும்பவும் ஒரு வாரம் சுண்டலும், பின் இரண்டு வாரம் சுண்டல் சேர்க்காமலும் இருக்க வேண்டும்.

காற்றனைக் கலக்கும் வினை போயறத்
தேற்றனைத் திருஅண்ணாமலையனை
கூற்றனைக் கொடியார் புரமூன்றெய்த
வாற்றனை யடியேன் மறந்துய்வனோ

மின்னனை வினை தீர்த்தென்னை யாட்கொண்ட
தென்னனைத் திருஅண்ணாமலையனை
யென்னனை யிகழ்ந்தார் புரமூன்றெய்த
வன்னனை யடியேன் மறந்துய்வனோ

 

மன்றனை மதியாதவன் வேள்விமேற்
சென்றனைத் திருஅண்ணாமலையனை
வென்றனை வெகுண்டார் புரமூன்றையும்
கொன்றனை கொடியேன் மறந்துய்வனோ

உணவிற்குப் பின் சாதம், இட்லியுடன் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும். மோரை மட்டும் தனியாக அருந்தக் கூடாது.

வீரனை விடமுண்டனை விண்ணவர்
தீரனைத் திருஅண்ணாமலையனை
யூரனை யுணரார் புரமூன்றெய்த
வாரனை அடியேன் மறந்துய்வனோ

கருவினை கடல்வாய் விடமுண்ட எம் 
திருவினை திருஅண்ணாமலையனை 
உருவினை உணரார் புர மூன்றெய்த 
அருவினை அடியேன் மறந்துய்வனோ

அருத்தனை யரவைந்தலை நாகத்தைத்
திருத்தனை திருஅண்ணாமலையனை
கருத்தனைக் கடியார் புரமூன்றெய்த
வருத்தனை யடியேன் மறந்துய்வனோ

அரக்கனை யலற விரலூன்றிய
திருத்தனைத் திருஅண்ணாமலையனை
இரக்கமாயென் னுடலுறு நோய்களைத்
துரக்கனைத் தொண்டனேன் மறந்துய்வனோ.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

23. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது

பட்டியேறுகந்தேறிப் பலவில
விட்டமாக விரந்துண்டுழிதரும்
அட்டமூர்த்தி யண்ணாமலை கைதொழக்
கெட்டுப் போம் வினை கேடில்லை காண்மினே.

பெற்றமேறுவர் பெய்பலிக் கென்றவர்
சுற்றமாமிகு தொல் புகழாளொடு
மற்றந் தீர்க்கு மண்ணாமலை கைதொழ
நற்றவத் தொடு ஞாலத் திருப்பரே

பல்லிலோடுகை யேந்திப் பலவில
மொல்லைச் சென்று ணங்கல் கவர்வாரவ
ரல்லல் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ
நல்லவாயின நம்மை யடையுமே

பாடிச் சென்று பலிக்கென்று நின்றவ
ரோடிப் போயினர் செய்வதொன் றென்கொலோ
வாடிப்பாடி யண்ணாமலைகை தொழ
வோடிப் போகும் மேலை வினைகளே

 

பதிவிரதா தேவிகளில் ஒருவராக
சீதையைக் கூறுவதற்குக் காரணம் என்ன? 108 அங்க லட்சணங்களும் முழுமையாகப் பெற்ற தேவியே சீதாப் பிராட்டி ஆவாள். அந்த அங்க லட்சணங்களுள் ஏதேனும் ஒன்றைத் தியானித்து வந்தாலே போதும் எல்லா ஞானங்களையும் பெற்று விடலாம். தற்போது அந்த அங்க லட்சணங்களுள் ஒன்றைக் கூட யாரும் பெற முடியவில்லை என்பதே கலியுக நிலையாகும்.

தேடிச் சென்று திருந்தடி யேத்துமி
னாடி வந்தவர் நம்மையு மாட்கொள்வ
ராடிப்பாடி யண்ணாமலை கைதொழ
வோடிப்போ நமதுள்ள வினைகளே

கட்டியொக்குங் கரும்பினி டைத்துணி
வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனா
ரட்ட மூரத்தி யண்ணாமலை மேவிய
நட்ட மாடியை நண்ண நன்காகுமே

கோணிக் கொண்டையர் வேடமுன் கொண்டவர்
பாணி நட்டங்களாடும் பரமனா
ராணிப் பொன்னி னண்ணாமலைகைதொழப்
பேணி நின்ற பெருவினை போகுமே.

 

படித்த அறிவை விட்டு விட்டு கொஞ்ச நேரம் குழந்தையாக இருந்து பார். கடவுள் உன் கண்ணுக்குத் தெரிவார்.

கண்டந்தான் கறுத்தான் காலனாருயிர்
பண்டு கால் கொடு பாய்ந்த பரமனா
ரண்டத் தோங்கு மண்ணாமலை கைதொழ
விண்டு போகு நம்மேலை வினைகளே

முந்திச் சென்று முப்போதும் வணங்குமின்
அந்திவா யொளி யான்றன ண்ணாமலை
சிந்தியா வெழுவார் வினை தீர்த்திடுங்
கந்த மாமலர் சூடுங் கருத்தனே.

 

உலகில் மிகப் பெரிய அதிசயம் இரவில் தூங்கும் மனிதன் காலையில் எழுவதுதான். இந்த அதிசயத்தைப் புரிந்து கொள்பவன் முக்காலமும் உணர்ந்தவன் ஆகின்றான்.

மறையினானொடு மாலவன் காண்கிலா
நிறையு நீர்மையுள் நின்றருள்செய்தவ
னுறையு மார்பினா னண்ணாமலை கைதொழப்
பறையு நாஞ்செய்த பாவங்க ளானவே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

24. திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளியது

பண் : காந்தார பஞ்சமம்


இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உன்கழல் தொழு தெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே

தினமும் கங்கை நீரில் சிறிதளவாவது துவைக்கும் நீரில் கலந்து ஆடைகளைத் துவைக்க வேண்டும். இத்தகைய தூய்மையான ஆடைகளை அணிந்து வந்தால் உடலும், மனமும் புனிதமடையும்.

வாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உன்கழல் விடுவேன் அல்லேன்
தாழிளம் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

நனவினும் கனவினும் நம்பா உன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
புனல்விரி நறுங் கொன்றைப் போதணிந்த
கனலெரி அனல்புல்கு கையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடு துறை அரனே

தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
அம்மலர் அடியலால் அரற்றாதென் நா
கைம்மல்கு வரிசிலை கணை ஒன்றினால்
மும்மதில் எரிஎழ முனிந்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்றெமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே.

கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்
கொய்யணி நறுமலர் குலாய சென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

 

சந்திரனுக்கு ராக்கெட் அல்லது வேறு எந்தவித எந்திரம் மூலமும் போக முடியாது. பக்தி, தபஸ், பூஜைகள் மூலமாகத்தான் மற்ற கிரகங்களுக்குப் போக முடியும். பூஜா பலன் உள்ளவர்கள் இந்த மனித உடலோடு சந்திர மண்டலத்திற்குப் போகலாம். அப்படி உடலோடு போய் வந்தவர்களில் ஒருவரே பெரிய வாத்யார் என்று அன்புடன் அழைக்கப்படும் சிவகுருமங்கள கந்தர்வா ஆவார்.

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய் உன்னடியலால் ஏத்தாதென் நா
ஐந்தலை அரவு கொண்டு அரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால் அரற்றாதென் நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படிஅழல் எழ விழித்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடு துறை அரனே.

 

தலைவலிக்கு தற்காலிக நிவாரணம் தருவதற்காகத் தைலத்தைத் தடவுகிறோம். தலைவலிக்கு நிரந்தர நிவாரணத்தைத் தருவது எது? ராம நாமமும், சிவ நாமமுமே தலைவலிக்கு நிரந்தரமான மருந்து.

பேரிடர் பெருகியோர் பிணிவரினும்
சீருடைக் கழலலால் சிந்தை செய்யேன்
ஏருடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன் றெமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மலர் அடியலால் உரையாதென் நா
கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன் றெமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே.

ஆசை நிறைவேறாதபோது ஏக்கம் வரும். ஏக்கம் நிறைவேறாதபோது தூக்கம் போகும். தினம் ஒரு கைப்பிடி அரிசி எடுத்து ஒரு பானையில் வைத்திருந்து, அதை அன்னதானம் செய்து வரவும். ஆசை கட்டுக்கடங்காமல் வளர்ந்து துன்பத்தில் கொண்டு போய் விடும் நிலை ஏற்படாது.

பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தா உன்னடி யலால் அரற்றாதென் நா
புத்தரும் சமணரும் புறன் உரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன் றெமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே

அலைபுனல் ஆவடுதுறை அமர்ந்த
இலைநுனை வேற்படை எம்மிறையை
நலமிகு ஞான சம்பந்தன் சொன்ன
விலையுடை அருந் தமிழ் மாலைவல்லார்
வினையாயின நீங்கிப் போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாக முன்னேறுவர் நிலமிசை நிலையிலரே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

 

25. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது

சுண்ணவெண் சந்தனச் சாந்தும் சுடர்திங்கட் சூளாமணியும்
வண்ணவுரிவை யுடையும் வளரும் பவள நிறமும்
அண்ணலரண் முரணேறு மகலம் வளாய வரவும்
திண்ணன் கெடிலப் புனலுமுடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதியா தொன்றுமில்லை யஞ்ச வருவதுமில்லை

பூண்டதோர் கேழலெயிறும் பொன்றிகழாமை புரள
நீண்ட திண்டோன் வலஞ்சூழ்ந்து நிலாக் கதிர் போல வெண்ணூலும்
காண்டகு புள்ளின் சிறகுங் கலந்த கட்டங்கக் கொடியும்
ஈண்டுகெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர்நாம்
அஞ்சுவதியாதொன்று மில்லை அஞ்சவருவதுமில்லை

ஒத்தவடத்திள நாகமுருத்திர பட்ட மிரண்டும்
முத்துவடக் கண்டிகையு முளைத்தெழு மூவிலை வேலும்
சித்தவடமுமதிகைச் சேணுயர்வீரட்டஞ் சூழ்ந்து
தத்துங்கெடிலப்புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதியா தொன்றுமில்லை யஞ்ச வருவதுமில்லை.

மடமான் மறிபொற்கலையு மழுப்பாம் பொருகையில் வீணை
குடமால் வரைய திண்டோளுங்குனி சிலைக் கூத்தின் பயில்வும்
இடமாறழுவிய பாகமிரு நிலனேற்ற சுவடும்
தடமார் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதியா தொன்றுமில்லை யஞ்ச வருவதுமில்லை

மற்றவர்களைச் சிரிக்க வை.
நீ சிரிக்காதே.

பலபல காமத்தராகிப் பதைத்தெழுவார் மனத்துள்ளே
கலமலக்கிட்டுத் திரியுங் கணபதியென்னுங் களிறும்
வலமேந்திரண்டு சுடரும் வான் கயிலாய மலையும்
நலமார் கெடிலப் புனலுமுடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்றுமில்லை யஞ்ச வருவதுமில்லை.

கரந்தன கொள்ளி விளக்குங் கறங்கு துடியின் முழக்கும்
பரந்த பதினென் கணமும் பயின்றறியாதன பாட்டும்
அரங்கிடைநூ லறிவாளரறியப்படாததொர் கூத்தும்
நிரந்த கெடிலப் புனலுமு டையாரொருவர் தமர்நாம்
அஞ்சுவதியா தொன்றுமில்லை யஞ்ச வருவதுமில்லை.

கொலைவரி வேங்கையதளுங் குலவோடிலங்கு பொற்றோடும்
விலைபெறு சங்கக் குழையும் விலையில் கபாலக் கலனும்
மலைமகள் கைக்கொண்ட மார்பு மணியார்ந்திலங்கு மிடறும்
உலவு கெடிலப் புனலுமுடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்றுமில்லை யஞ்ச வருவதுமில்லை.

கம்பு, கேழ்வரகு, பாசிப் பயறு இவற்றை வேக வைத்தோ, பவுடராகவோ வாரம் ஒரு முறையாவது உண்டு வந்தால் உடலில் இரும்புச் சத்து சமமாக இருக்கும்.

ஆடல் புரிந்த நிலையுமரையி லசைத்த அரவும்
பாடல் பயின்ற பல்பூதம் பல்லாயிரங் கொள்கருவி
நாடற்கரியதொர் கூத்தும் நன்குயர்வீரட்டஞ் சூழ்ந்து
ஓடுங் கெடிலப் புனலுமுடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்றுமில்லை யஞ்ச வருவதுமில்லை.

சூழு மரவத் துகிலுந் துகில் கிழி கோவணக் கீளும்
யாழின்மொழிய வளஞ்ச வஞ்சா தருவரை போன்ற
வேழமுரித்த நிலையும் விரிபொழில் வீரட்டஞ் சூழ்ந்து
தாழும் கெடிலப் புனலுமு டையாரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்றுமில்லை யஞ்ச வருவதுமில்லை

நரம்பெழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை
உரங்க ளெல்லாங் கொண்டெடுத்தா னொன்பது மொன்றுமலற
வரங்கள் கொடுத்தருள் செய்வான் வளர்பொழில் வீரட்டஞ் சூழ்ந்து
நிரம்பு கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை யஞ்ச வருவதுமில்லை.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

26. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலு
மூசுவண்டறை பொய்கையும் போன்றதே
ஈசனெந்தை யிணையடி நீழலே

கடவுள் தன்னை நம்பியவர்களை நல்லோர்கள் மூலமாகக் காப்பாற்றிக் கொண்டே இருப்பார். கடலைப் பிளந்து சென்ற தீர்க்கதரிசி மோசஸை நம்பி வந்த நொண்டிக் கால் வாத்தையும் காப்பாற்றியவர்தானே எம் ஈசன்.

நமச்சிவாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நாநவின் றேத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே

ஆளா காராளானாரை அடைந்துய்யார்
மீளா வாட்செய்து மெய்மை யுணற்கிலார்
தோளாத சுரையோ தொழும்பர் செவி
வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே

 

ஒருவருடைய ஜாதகத்தில் பத்தாம் இடத்தில் மாந்தி, குளிகள் இருந்தால் புது கண்டு பிடிப்புகளுக்கு உதவுவார்கள். கம்யூட்டர் துறையில் முன்னேற்றம் ஏற்படும். இத்தகையோர் திருச்சி திருவெறும்பூர் ஈசனை வணங்கி கோதுமை ரவையுடன் சர்க்கரை கலந்து எறும்புகளுக்கு இடுவதால் நலம் அடைவர்.

நடலை வாழ்வு கொண்டென் செய்தீர் நாணிலீர்
சுடலை சேர்வதுசொற்பிரமாணமே
கடலினஞ்ச முதுண்டவர் கைவிட்டால்
உடலினார் கிடந்தூர் முனிபண்டமே.

பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்ட ரனாம நவிற்றிலார்
ஆக்கைக் கேயிரை தேடியலமந்து
காக்கைக் கேயிரையாகிக் கழிவரே

குறிகளு மடையாள முங்கோயிலும்
நெறிகளு மவர் நின்றதோர் நேர்மையும்
அறியவாயிர மாரண மோதிலும்
பொறியிலீர் மனமென்கொல் புகாததே

வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்த சென்னியுந் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேநெடுங்காலமே

எழுது பாவை நல்லார் திறம்விட்டு நான்
தொழுதுபோக நின்றேனையுஞ்சூழ்ந்து கொண்டு
உழுத சால்வழியே யுழுவான் பொருடடு்
இழுதை நெஞ்சமிதென் படுகின்றதே

மகான்களின் பிரார்த்தனைகளால்தான் அணுகுண்டு போன்ற கொடுமையான ஆயுதங்களிலிருந்து உலகம் தப்பித்துக் கொண்டிருக்கிறது. அணுகுண்டுகள் இருக்கும் வரை மக்களைக் காக்க மகான்கள் பூமிக்கு வந்து கொண்டிருப்பார்கள்.

நெக்குநெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன்
பொக்கமிக்கவர் பூவு நீறுங் கொண்டு
நக்கு நிற்பவரவர் தமை நாணியே

விறகிற் றீயினன்பாலிற்படு நெய்போல்
மறைய நின்றுளன் மாமணி சோதியான்
உறவு கோனட்டுணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக்கடைய முன்னிற்குமே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

27. திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளியது

நின்றுமலர் தூவியின்று முதுகுன்றை
நன்று மேத்துவீர்க்கென்று மின்பமே

எது விஞ்ஞான முன்னேற்றம்?
ஒரு அம்பு விட்டால், ஒரு குண்டு போட்டால் 10 மூட்டை நெல் விழ வேண்டும். அதுதான் உண்மையான விஞ்ஞான முன்னேற்றம். எந்த முட்டாளும் ஒரு கோழி முட்டையை உடைத்து விடுவான். ஆனால், எந்த அறிவாளியாலும் ஒரு முட்டையை உருவாக்க முடியாது.
அர்ச்சுனன் அம்பு எய்தான். பீஷ்மரின் தாகம் தீர்க்க கங்கை ஓடோடி வந்தாள். இதுதான் வல்லவனின் செயல்.

அத்தன் முதுகுன்றைப் பத்தியாகிநீர்
நித்த மேத்துவீர்க் குய்த்தல் செல்வமே

ஐயன் முதுகுன்றைப் பொய்கள் கெடநின்று
கைகள் கூப்புவீர் வையமுமதாமே

ஈசன்முது குன்றை நேசமாகி நீர்
வாசமலர் தூவப் பாசவினை போமே

மணியார் முதுகுன்றைப் பணிவாரவர் கண்டீர்
பிணியாயின கெட்டுத் தணிவாருலகிலே.

மொய்யார் முதுகுன்றி லையாவென வல்லார்
பொய்யா யிரவோர்க்குச் செய்யாளணியாளே

விடையான் முதுகுன்றை யிடையாதேத்துவார்
படையாயின சூடி வுடையாருலகமே

பத்துத் தலையானைக் கத்த விரலூன்று
மத்தன் முதுகொன்றை மொய்த்துப் பணிமினே

இருவரறியாத வொருவர் முதுகுன்றை
உருகி நினைவார்கள் பெருகிநிகழ்வோரே

தேரரமணரும் சேரும் வகையில்லா
நேரின்முதுகுன்றை நீர்நின்றுள்குமே

நின்று முதுகுன்றை நன்று சம்பந்த
னொன்றுமுரை வல்லா ரென்று முயர்வோரே

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

 

28. நக்கீரர் சுவாமிகள் அருளியது

சூலபாணியை சுடர்தரு வடிவினை
நீலகண்டனை நெற்றியோர் கண்ணனை
பாலவெண்ணீற்றனை பரம யோகியை
காலனைக் காய்ந்த கறை மிடற்றண்ணலை

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
உங்கள் மூதாதையருக்கு நீங்கள் செய்யும் பித்ரு பூஜைகளும், பிறர் நலத்திற்காக ஆற்றும் தான, தர்மங்களுமே உங்கள் தலையைக் காக்கும். துப்பாக்கி உங்களைக் காப்பாற்றாது. துப்பாக்கி எப்போதும் ஒரு எதிர்மறை சக்தி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நூலணி மார்பனை நுண்ணிய கேள்வியை
கோல மேனியை கொக்கரைப் பாடலை
வேலுடைக் கையனை விண்டோய் முடியனை
ஞாலத் தீயினை நாதனைக் காய்ந்தனை

தேவதேவனை திருமறு மார்பனை
காலமாகிய கடிகமழ் தாரனை
வேதகீதனை வெண்டலை யேந்தியை
பாவநாசனை பரமேச்சுவரனை

கீதம் பாடியை கிளர் பொறியரவனை
போதணி கொன்றை யெம்புண்ணிய ஒருவனை
ஆதிமூர்த்தியை அமரர்கள் தலைவனை
சாதிவானவர்தம் பெருமான்தனை
வேதவிச்சையை விடையுடை அண்ணலை
ஓதவண்ணனை உலகத் தொருவனை
நாதனாகிய நன்னெறிப் பொருளினை

எண்கள் எண்ணத்திற்குள் அடங்காது. எண்களைப் பற்றி முழுமையாக அறிந்தவர்களே சித்தர்கள்.
தக்க வழிகாட்டியின் உதவியுடன் 20 ஆண்டு காலம் பூஜைகள் செய்து வந்தால் ஒரு எண்ணைப் பற்றி புரிந்து கொள்ளலாம்.

மாலைதா னெரி மயானத் தாடியை
வேலை நஞ்சினை மிகஅமுதாக்கியை
வேத வேள்வியை விண்ணவர் தலைவனை
ஆதிமூர்த்தியை அருந்தவ முதல்வனை

ஆயிர நூறுக் கரிவரியானை
பேயுருவு தந்த பிறையணி சடையனை
மாசறு சோதியை மலைமகள் கொழுநனை
கூரிய மழுவனை கொலற் கருங்காலனை
சீரிய அடியால் செற்றருள் சிவனை
பூதிப் பையனை புண்ணிய மூர்த்தியை
பீடுடையாற்றைப் பிராணி தலைவனை
நீடிய நிமலனை நிறைமறைப் பொருளினை

இரகசியங்கள் மூன்று விதம்.
அவை மண் மறைத்த ரகசியங்கள், ஜோதி மறைத்த ரகசியங்கள், கோயில் மறைத்த ரகசியங்கள் ஆகும். ஜோதி மறைந்த ரகசியங்கள் தெரிய வேண்டுமனால் மூன்று கோடி பேருக்கு அன்னதானம் இட, ஒரு லட்சம் ஹோமங்கள் நடத்த வேண்டும், மூன்று இறை அடியார்களுக்கு இலவச திருமணங்கள் நிகழ்த்த வேண்டும்.

ஈசனை இறையனை ஈறில் பெருமையை
நேசனை நினைப்பவர் நெஞ்சத்துள்ளனை
தாதணி மலரனை தருமனை பிரமனை
காதணி குழையனை களிற்றினுரியனை
சூழ்சடைப் புனலனை சுந்தர விடங்கனை
தார்மலர்க் கொன்றை தயங்கு மார்பனை
வித்தக விதியனை

தீதமர் செய்கைத் திரிபுர மெரித்தனை
பிரமன் பெருந்தலை நிறையதாகக்
கருமன் செந்நீர் கபால நிறைத்தனை
நிறைத்த கபாலச் செந்நீர் நின்று
முறைத்த உருவாரையனைத் தோற்றினை
தேவரும் அசுரரும் திறம்படக் கடைந்த
ஆர்வமுண் நஞ்சம் அமுதமாக்கினை

குழந்தை பிறந்தவுடன் ஏன் அழுகிறது?
பிறந்த குழந்தைக்கு தான் இறக்கப்போகும் தேதி தெரிந்து விடும். இறப்பதற்குள் தான் இறைவனுக்கு ஆற்ற வேண்டிய சேவைகளும் தெரிந்து விடும். அச்சேவைகளை நிறைவேற்ற 80 ஆண்டு கால ஆயுள் கூட குறைவாகவே தெரியும். இப்படிக் குறைந்த காலத்தில் எவ்வாறு இறைவனுக்குச் சேவை செய்யப் போகிறோம் என்று நினைப்பதால் எழுவதே குழந்தையின் அழுகை.

ஈரமில் நெஞ்சத்து ராவணன் தன்னை
வீரமழித்து விறல்வாள் கொடுத்தனை
திக்கமர் தேவரும் திருந்தாச் செய்கைத்
தக்கன் வேள்வியைத் தளரச் சாடினை

வேதமும் நீயே வேள்வியும் நீயே
நீதியும் நீயே நிமலன் நீயே
புண்ணியன் நீயே புனிதன் நீயே
பண்ணியன் நீயே பழம்பொருள் நீயே

ஊழியும் நீயே உலகமும் நீயே
வாழியும் நீயே வரதனும் நீயே
தேவரும் நீயே தீர்த்தமும் நீயே
மூவரும் நீயே முன்னெறி நீயே

மால்வரை நீயே மறிகடல் நீயே
இன்பமும் நீயே துன்பமும் நீயே
தாயும் நீயே தந்தையும் நீயே
விண்முதற் பூதம் ஐந்தவை நீயே
பத்தியும் நீயே முத்தியும் நீயே

சொலற் கருந் தன்மைத் தொல்லோய் நீயே யதனாற்
கூடலாலவாய்க் குழகனாவது
அறியாது அருந்தமிழ் பழித்தனன் அடியேன்
ஈண்டிய சிறப்பின் இணையடிக் கீழ் நின்று
வேண்டுமது இனி வேண்டுவன் விரைந்தே.

வெண்பா
விரைந்தேன் மற்றெம் பெருமான் வேண்டியது வேண்டா
திகழ்ந்தேன் பிழைத்தேன் அடியேன் - விரைந்தென்மேல்
சீற்றத்தைத் தீர்த்தருளும் தேவாதி தேவனே
யாற்றவும் நீ செய்யும் அருள்

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

29. திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளியது

பண் : தக்கராகம்

செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்
துப்ப னென்னா தருளே துணையாக
ஒப்ப ரெப்பர் பெருமான் ஒளிவெண்ணீற்
றப்பர் சோற்றுத்துறை சென்றடைவோமே

திருமணங்களை இறைவனின் திருச்சன்னதியில் நிகழ்த்துவதே சிறப்பு. இதனால் எந்தவிதமான மந்திர, எண்ண, சங்கல்ப தோஷங்களும் மணமக்களை அண்டாது. இத்தகைய திருமண வைபவங்களில் மாங்கல்ய தாரணத்தின்போது மணமக்கள் வடக்கு நோக்கி அமர்தல் வேண்டும். நின்ற நிலையில் தாலி கட்டுவதாக இருந்தால் மணமக்கள் கிழக்கு நோக்கி நிற்கலாம். சுவாமியின் நேரடிப் பார்வையில் நின்றால் அப்போது கிட்டும் தெய்வீகச் சக்திகளை நம்மால் தாங்க இயலாது என்பதே உண்மை.

பாலும் நெய்யுந் தயிரும் பயின்றாடித்
தோலும் நூலுந் துதைந்த வரைமார்பர்
மாலுஞ் சோலை புடைசூழ் மட மஞ்ஞை
ஆலுஞ் சோற்றுத் துறை சென்றடைவோமே.

செய்யர் செய்ய சடையர் விடையூர்வர்
கைகொள்வேலர் கழலர் கரிகாடர்
தையலாளொர் பாக மாயஎம்
ஐயர் சோற்றுத்துறை சென்றடைவோமே

பிணிகொ ளாக்கை யொழிய பிறப்புளீர்
துணிகொள் போரார் துலங்கு மழுவாளர்
மணிகொள் கண்டர் மேயவார் பொழில்
அணிகொள் சோற்றுத்துறை சென்றடைவோமே

பிறையும் அரவும் புனலுஞ் சடைவைத்து
மறையும் ஓதி மயானம் இடமாக
உறையும் செல்வம் உடையார் காவிரி
அறையும் சோற்றுத்துறை சென்றைடைவோமே

சென்னை, பெங்களூர் போன்ற மாநகரங்களில் வசிப்போர் வாகனங்களிலிருந்து வெளியாகும் கார்பன்டைஆக்ஸைடு, கார்பன்மோனாக்சைடு போன்ற நச்சுக் காற்றைச் சுவாசிக்க வேண்டிய நிலையில் இருப்பதால் இவர்கள் பல விதமான மூச்சிறைப்பு நோய்களுக்கும், ஆஸ்துமா போன்ற அலர்ஜி நோய்களுக்கும் ஆளாகிறார்கள். அண்ணாமலையில் கார்பன் ஆக்சைடுகளைக் கிரகிக்கும் செடிகள் உண்டு. மூன்று நாட்களே ஆயுள் பெற்ற இந்த மூலிகைச் செடிகள் தங்கள் ஆயுள் முழுவதும் கார்பன் ஆக்சைடுகளை ஈர்த்து பஸ்மம் ஆக்குகின்றன. ஆயுள் முடிந்தவுடன் காய்ந்து சருகாகி மண்ணில் மறைந்துவிடுகின்றன. இத்தகைய அற்புதங்கள் மிகுந்த திருஅண்ணாமலையை மாதம் இருமுறையாவது கிரிவலம் வந்து மூச்சுக் காற்று நோய்களிலிருந்து நிவாரணம் பெற்றுக் கொள்ளுங்கள்.

துடிகளோடு முழவம் விம்மவே
பொடிகள் பூசிப் புறங் காடரங்காகப்
படிகொள் பாணி பாடல் பயின்றாடும்
அடிகள் சோற்றுத்துறை சென்றடைவோமே

சாடிக் காலன் மாளத் தலை மாலை
சூடி மிக்குச் சுவண்டாய் வருவார்தாம்
பாடியாடிப் பரவுவா ருள்ளத்
தாடி சோற்றுத்துறை சென்றடைவோமே

பெண்ணோர் பாகம் உடையார் பிறைச் சென்னி
கண்ணோர் பாகம் கலந்த நுதலினார்
எண்ணா தரக்கன் எடுக்க வூன்றிய
அண்ணல் சோற்றுத்துறை சென்றடைவோமே

தொழுவா ரிருவர் துயரம் நீங்கவே
அழலா யோங்கி அருள்கள் செய்தவன்
விழவார் மறுகில் விதியால் மிக்க எம்
எழிலார் சோற்றுத் துறை சென்றடைவோமே

கோது சாற்றித் திரிவார் அமண்குண்டர்
ஓதும் ஒத்தை யுணரா தெழுநெஞ்சே
நீதி நின்று நினைவார் வேடமாம்
ஆதி சோற்றுத் துறை சென்றடைவோமே

அந்தன் சோற்றுத்துறை எம்ஆதியைச்
சிந்தை செய்ம்மின் அடியீராயினீர்
சந்தம் பரவு ஞான சம்பந்தன்
வந்த வாறே புனைதல் வழிபாடே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

 

30. சுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளியது


ஆலந்தா னுகந்த முதுசெய்தானை யாதியை யமரர் தொழுதேத்துஞ்
சீலந்தான் பெரிதுமு டையானைச் சிந்திப்பாரவர் சிந்தையுளானை
யேலவார் குழலாளுமை நங்கை யென்று மேத்தி வழிபடப் பெற்ற
காலகாலனைக் கம்ப னெம்மானைக் காணக் கண்ணடியேன் பெற்றவாறே

உற்றவர்க்குதவும் பெருமானை யூர்வ தொன்றுடையானும் பர்கோனைப்
பற்றினார்க் கென்றும் பற்றவன்றன்னைப் பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை
யற்றமில் புகழாளுமை நங்கையா தரித்து வழிபடப் பெற்ற
கற்றைவார் சடைக் கம்பனெம்மானைக் காண கண்ணடியேன் பெற்றவாறே

திரியுமுப்புரந் தீப்பிழம்பாகச் செங்கண்மால்விடை மேற்றிகழ்வானைக்
கரியினீருரி போர்த்து கந்தானைக் காமனைக் கனலா விழித்தானை
வரிகொள்வெள் வளையாளுமை நங்கைமருவி யேத்தி வழிபடப் பெற்ற
பெரியகம்பனை யெங்கள் பிரானைக் காணக் கண்ணடியேன் பெற்றவாறே.

குப்பைமேனி, வேப்பிலை, மஞ்சள், கொள் என்ற நான்கு மூலிகைகளின் பவுடருடன் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து தலையில் தடவி வந்தால் தலை மருவு உதிரும்.

குண்டலந்திகழ்கா துடையானைக் கூற்றுதைத்த கொடுந் தொழிலானை
வண்டலம்பு மலர்க் கொன்றையினானை வாளராமதிசேர் சடையானைக்
கெண்டையந் தடங்கண்ணுமை நங்கை கெழுமியேத்தி வழிபடப் பெற்ற
கண்ட நஞ்சுடைக் கம்பனெம்மானைக் காணக் கண்ணடியேன் பெற்றவாறே

வெல்லும் வெண்மழுவொன்று டையானை வேலை நஞ்சுண்ட வித்தகன்றன்னை
யல்லல் தீர்த்தருள் செய்யவல்லானை யருமறைய வையங்கம் வல்லானை
யெல்லையில் புகழாளுமை நங்கையென்று மேத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை யெங்கள் பிரானைக் காண கண்ணடியேன் பெற்றவாறே.

திங்கடங்கிய சடையுடையானைத் தேவதேவனைச் செழுங்கடல் வளருஞ்
சங்க வெண் குழைக்கா துடையானைச் சாமவேதம்பெரிதுகப்பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு மருவியேத்தி வழிபடப் பெற்ற
கங்கையாளனைக் கம்பனெம்மானைக் காணக் கண்ணடியேன் பெற்றவாறே.

விண்ணவர் தொழுதேத்த நின்றானை வேதந்தான் விரித்தோத வல்லானை
நண்ணினார்க்கென்று நல்லவன்றன்னை நாளுநாமுகக்கின்ற பிரானை
யெண்ணிதொல் புகழாளுமை நங்கை யென்றுமேத்தி வழிபடப் பெற்ற
கண்ணு மூன்றுடைக் கம்பனெம்மானைக் காணக் கண்ணடியேன் பெற்றவாறே.

சிந்தித்தென்றும் நினைந்தெழுவார்கள் சிந்தையிற்றிகழுஞ் சிவன்றன்னைப்
பந்தித்த வினைப்பற்றறுப்பானைப் பாலொடானஞ்சு மாட்டுகந்தானை
யந்தமில் புகழாளுமை நங்கையா தரித்து வழிபடப் பெற்ற
கந்த வார்சடைக் கம்பனெம்மானைக் காணக் கண்ணடியேன் பெற்றவாறே

வரங்கள் பெற்றுழல் வாள ரக்கர்தம் வாலிய புரமூன்றெரித்தானை
நிரம்பிய தக்கன்தன் பெருவேள்வி நிரந்தரஞ் செய்த நிட்கண்டகனைப்
பரந்த தொல்புகழாளுமை நங்கை பரவி யேத்தி வழிபடப் பெற்ற
கரங்க ளெட்டுடைக் கம்பனெம்மானைக் காணக் கண்ணடியேன் பெற்றவாறே

எள்கலின்றி யிமையவர் கோனையீசனை வழிபாடு செய்வாள்போ
லுள்ளத்துள் கியுகந்துமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சிவெருவி யோடித் தழுவ வெளிப்பட்ட
கள்ள கம்பனை யெங்கள் பிரானைக் காணக் கண்ணடியேன் பெற்றவாறே.

பெற்றமேறு கந்தேற வல்லானைப் பெரிய வெம்பெருமானென்றப்போதுங்
கற்றவர் பரவப்படுவானைக் காணக் கண்ணடியேன் பெற்றதென்று
கொற்றவன் கம்பன் கூத்தனெம்மானைக் குளிர் பொழிற்றிரு நாவலாரூர
னற்றமிழிவை யீரைந்தும் வல்லார் நன்னெறியுல கெய்து வர்தாமே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

31. சுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளியது

பண் : செந்துருத்தி

மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி
ஆளா யிருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே

விற்றுக் கொள்வீர் ஒற்றி அல்லேன் விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றுஞ் செய்ததில்லை கொத்தை ஆக்கினீர்
எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்
மற்றைக் கண்தான் தாராதொழிந்தால் வாழ்ந்துபோதீரே

அன்றில்முட்டா தடையுஞ் சோலை ஆரூர் அகத்தீரே
கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி யவைபோல
என்று முட்டாப்பாடும் அடியார் தங்கண் காணாது
குன்றின் முட்டிக் குழியில் விழுந்தால் வாழ்ந்து போதீரே

துருத்தி யுறைவீர் பழனப் பதியாய்ச் சோற்றுத்துறை ஆள்வீர்
இருக்கை திருவாரூரே உடையீர் மனமே எனவேண்டா
அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வருத்தி வைத்து மறுமைப் பணித்தால் வாழ்ந்து போதீரே

செந்தண் பவளந் திகழுஞ் சோலை இதுவோ திருவாரூர்
எந்தம் அடிகேள் இதுவே ஆமா றுமக்காட் பட்டோர்க்குச்
சந்தம் பலவும் பாடும் அடியார் தங்கண் காணாது
வந்தெம் பெருமான் முறையோ என்றால் வாழ்ந்து போதீரே

தினைத்தாள் அன்ன செங்கால் நாரை சேருந் திருவாரூர்ப்
புனத்தார் கொன்றைப் பொன்போல் மாலைப் புரிபுன் சடையீரே
தனத்தாலின்றித் தாந்தாம் மெலிந்து தங்கண் காணாது
மனத்தால் வாடி அடியார் இருந்தால் வாழ்ந்து போதீரே

ஆயம்பேடை அடையுஞ் சோலை ஆரூர் அகத்தீரே
ஏயெம் பெருமான் இதுவோ ஆமா றுமக்காட் பட்டோர்க்கு
மாயங்காட்டி பிறவி காட்டி மறவா மனங்காட்டி
காயங் காட்டிக் கண்ணீர் கொண்டால் வாழ்ந்து போதீரே

கழியாக் கடலாய்க் கலனாய் நிலனாய்க் கலந்த சொல்லாகி
இழியாக் குலத்தில் பிறந்தோம் உம்மை இகழாதேத்துவோம்
பழிதான் ஆவதறியீர் அடிகேள் பாடும் பத்தரோம்
வழிதான் காணாது அலமந் திருந்தால் வாழ்ந்து போதீரே

பேயோ டேனும் பிறிவொன் றின்னா தென்பர் பிறரெல்லாம்
காய்தான் வேண்டிற் கனிதா னன்றே கருதிக் கொண்டக்கால்
நாய்தான் போல நடுவே திரிந்தும் உமக்காட் பட்டோர்க்கு
வாய்தான் திறவீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே

செருந்தி செம்பொன் மலருஞ் சோலை யிதுவோ திருவாரூர்
பொருந்தித் திருமூலட்டா னம்மே இடமாக் கொண்டீரே
இருந்தும் நின்றும் இடந்தும் உம்மை இகழா தேத்துவோம்
வருந்தி வந்தும்உமக்கொன்று ரைத்தால் வாழ்ந்து போதீரே

காரூர் கண்டத் தெண்தோள் முக்கண் கலைகள் பலவாகி
ஆரூர் திருமூலட்டானத்தே அடிப்பேர் ஆரூரன்
பாரூர் அறிய என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்
வாரூர் முலையாள் பாகங் கொண்டீர் வாழ்ந்து போதீரே

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

32. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது

கண்டுகொள் ளரியானைக் கனிவித்துப்
பண்டுநான் செய்த பாழிமை கேட்டிரேல்
கொண்டபாணி கொடுகொட்டி தாளங்கைக்
கொண்டதொண்டரைத் துன்னிலுஞ் சூழலே

தற்காலத்தில் விளை நிலங்களில் இயற்கை உரங்களை விடுத்து யூரியா, அம்மோனியா போன்ற ரசாயண உரங்களை இடும் வழக்கம் நிலவி வருவதால், நாம் உண்ணும் அரிசி, காய்கறிகள் போன்றவற்றில் யூரியாவின் அளவு அதிகமாக உள்ளது. இதனால் பலருக்கும் மூட்டு வலி, சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இத்தகைய துன்பங்களிலிருந்து மீள சுயம்பு லிங்க மூர்த்தி எழுந்தருளியுள்ள தலங்களில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து அந்த பிரசாத சாதத்தை புளியோதரை, எலுமிச்சை சாதமாகக் கலந்து அன்னதானம் செய்து வரவும்.

நடுக்கத்துள்ளு நகையுள்ளு நம்பர்க்குக்
கடுக்கக் கல்ல வடமிடுவார்கட்குக்
கொடுக்கக் கொள்க வெனவுரைப்பார்களை
இடுக்கண் செய்யப் பெறீரிங்கு நீங்குமே

கார்கொள் கொன்றைக் கடிமலர்க்கண்ணியான்
சீர்கொணாமஞ் சிவனென்றரற்றுவார்
ஆர்களாகினு மாகவவர்களை
நீர்கள் சாரப் பெறீரிங்கு நீங்குமே

சாற்றினேன் சடை நீண் முடிச் சங்கரன்
சீற்றங் காமன் கண் வைத்தவன் சேவடி
ஆற்றவுங் களிப்பட்ட மனத்தராய்
போற்றி யென்றுரைப்பார் புடைபோகலே

இறையென் சொன் மறவேனமன் றூதுவீர்
பிறையும் பாம்புமுடைப் பெருமான்றமர்
நறவ நாறிய நன்னறுஞ் சாந்திலும்
நிறைய நீறணிவா ரெதிர் செல்லலே

 

‘பில்லி, சூன்யம், ஏவல் போன்றவை உண்மையா, பொய்யா? அவை எப்படிச் செயல்படுகின்றன?’ என்று ஆராய்ச்சி செய்வதை விட அத்தகைய கொடுமையான விளைவுகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதே புத்திசாலித்தனம். சரபேஸ்வரர் வழிபாடு எல்லாவிதமான பில்லி, சூன்யத் துன்பங்களையும் தீர்க்கும்.

வாமதேவன் வளநகர் வைகலும்
காமமொன்றிலராய்க் கைவிளக்கொடு
தாமந்தூ பமுந் தண்ணறுஞ் சாந்தமும்
ஏமமும் புணைவாரெதிர் செல்லலே

படையும் பாசமும் பற்றிய கையினீர்
அடையன் மின்னமதீ சனடியரை
விடை கொளூர்தி யினானடியார்குழாம்
புடைபுகாது நீர்போற்றியே போமினே

விச்சையாவதும் வேட்கை மையாவதும்
நிச்ச னீறணிவாரை நினைப்பதே
அச்ச மெய்தியரு கணையாது நீர்
பிச்சை புக்கவனன்பரைப் பேணுமே

 

கடல் முழுவதும் உப்பு நீர். ஆனால், அதில் வாழும் மீனுக்கு உப்பு கிடையாது. இதை ஆத்ம விசாரம் செய்து பார்த்தால் கடவுளின் கருணையும், வல்லமையும் தெரிய வரும். மீன் பவித்ரமானது, தூய்மையானது. அதனால்தான் சிவபெருமான் மீனவராக வந்து திருவிளையாடல் புரிந்தார். அம்மையும் மீன் கண் உடையவளாய், மீனாட்சியாய் அருளாட்சி செய்து வருகிறாள்.

இன்னங் கேண்மி னிளம்பிறை சூடிய
மன்னன் பாதமனத்துட னேத்துவார்
மன்னுமஞ் செழுத்தாகிய மந்திரம்
தன்னி லொன்று வல்லாரையுஞ் சாரலே

மற்றுங் கேண்மின் மனப்பரிப் பொன்றின்றிச்
சுற்றும் பூசிய நீற்றொடுகோவணம்
ஒற்றையேறு டையானடியே யலால்
பற்றொன்றில்லிகண் மேற்படைபோகலே

அரக்கனீரைந் தலையு மோர்தாளினால்
நெருக்கி யூன்றிட்டான்றமர் நிற்கிலும்
சுருக்கெனாதங்குப்பேர்மின் கண்மற்றுநீர்
சுருக்கெனிற் சுடரான்கழல் சூடுமே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam