அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

பித்ருக்களுக்கான ராக சாந்தி

17.1.1996 அன்று காணும் பொங்கலன்று, புத்தாண்டு அருளுரையின் தொடர்ச்சியாக, நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீவெங்கடராமன் சுவாமிகள் அருளியதின் தொகுப்பாவது : “...... காணும் பொங்கலென்பது நற்காரியங்களான கோயில், மூர்த்தி, தீர்த்தம், தல தரிசனங்கள், அபிஷேக ஆராதனைகள்,  ஹோமம், தானதர்மங்கள் போன்றவற்றை நிறைவேற்றிய பிறகு மஹான், யோகி, ஞானி சற்குரு போன்ற பெரியோரைக் காணுதலாம். .... நீங்களனைவரும் இன்று எவ்வித தகுதியும் இல்லாத இந்நாய்ப் பிறவியைக் காண வந்துள்ளீர்கள்..... நற்காரியங்கள் செய்வதற்கு அடியேனுக்குச் சக்தியைத் தரும்படி நீங்களனைவரும் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்.

மாப்பிள்ளை வீட்டினர் பெண் பார்க்க வரும்போது …
முந்தின நாட்களில் கல்யாணப் பெண் கணேச பஞ்ச ரத்தினம் ஜெபிக்க வேண்டும். ஒவ்வொரு பாரா முடிந்தவுடன் 9 தோப்புக்கரணம் போட வேண்டும். ( 5 x 9 = 45 ).
பெண் பார்க்க வரும் தினத்தன்று, பெண்ணின் சார்பில் சகோதரி அல்லது வேறு யாராவது உறவினர் கோயிலில் இதை நிறைவேற்றலாம்.

1996 ஆண்டு யுவ, தாது வருடங்களின் சங்கமமாகும். எண்ணற்ற பித்ரு லோகங்கள் உள்ளன. அவற்றில் பூலோகத்துடன் தொடர்புடைய பித்ரு லோகங்களில் முக்கியமானவற்றுள் மூன்று உண்டு. அவை வசு, ருத்ர, ஆதித்ய பித்ரு லோகங்களாகும். தந்தை, தாய் வழியில் மூன்று வம்சங்களாக, ஆக மொத்தம் நான்கு வம்சாவளியினருக்காக, 12 பேருக்குத் தர்ப்பணங்கள் அளிக்கின்றோம். நான்கு வகைகளில் ஒவ்வொன்றிலும் வசு, ருத்ர, ஆதித்ய பித்ருக்கள் உண்டு.தற்காலத்தில் ஒவ்வொரு ஆண்டையும் பெண்கள் ஆண்டு, இளைஞர் ஆண்டு என்று கொண்டாடுவது போல, யுவ, தாது சங்கமத்தை இராக சங்கம ஆண்டாகப் பித்ருக்கள் லோகத்தில் ஆனந்தமாகக் கொண்டாடுகின்றனர். நாம சங்கீர்த்தனம் போல, இவ்வாண்டு “இராக பாவ கீர்த்தனமே” பித்ருக்களுக்குப் ப்ரீதி அளிக்கும்.
இராகத்திற்கும் காலத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. இசையில் லயித்து என்னை மறந்தேன், எவ்வளவு நேரம் அப்படி இருந்தேனோ தெரியாது என்று சொல்வது அதனால் தான். ஏழே ஸ்வரங்கள் தான் நாம் அறிந்தது. ஆனால் வசுப் பித்ரு லோகத்தில் 21 ஸ்வரங்கள் உண்டு. ஏழு வர்ணங்களையே நாம் அறிவோம். ருத்ரப் பித்ரு லோகத்தில் 21 அடிப்படை நிறங்கள் உண்டு. இவையெல்லாம் மனித மனதிற்கு எட்டாத ஆன்மீக விந்தைகளாகும். நம் பூலோகத்திற்குரித்தான ஏழு ஸ்வரங்களில் ராகங்கள், உபராகங்களைக் கணக்கெடுத்தால் எழுபதினாயிரம் ராகங்களுக்கு மேல் உள்ளன. கேட்பதற்கே மலைப்பாயிருக்கும்! அப்படியானால் ருத்ரபித்ரு லோகத்தில் 21 ஸ்வரங்களில் இலட்சக் கணக்கான ராகங்கள் இருக்கும் அல்லவா!!

ஸ்ரீசக்கரம்
அம்மன் சன்னதி திருவில்லிபுத்தூர்

இவ்வருடத்தில், ஒவ்வொரு மனிதனும் குறைந்தது மூன்று இறைப் பாடல்களையேனும் சாதகம் செய்து நன்கு பாடி வரவேண்டும். இதுவே பித்ருக்களுக்கு இவ்வாண்டு மிகவும் ப்ரீதி அளிக்கக்கூடியதாகும். தர்ப்பணங்களும் தான தர்மங்களுமே பித்ருக்களுக்குப் ப்ரீதி அளிப்பதாக இருக்க, வெறும் பாடல்களால் எவ்வாறு சாந்தி அளிக்க இயலும்  என்ற எண்ணமேற்படும்.
ராகத்தின் சக்திகள் :- ராக, பாவங்களை நன்கு உணர்ந்தோரால் தான் இசையின் தெய்வீக ஆற்றலை உணரவோ வெளிக்காட்டவோ இயலும். ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு ருசி, நிறம், அதி தேவதை, பிரத்யதி தேவதை மற்றும் ஏனைய குணங்களும் உண்டு. இசைக்குப் பல ஆன்மீக, லௌகீக அம்சங்களும் உண்டு. நோய் நிவாரணம், மனசாந்தி அளித்தல், சினம் தணித்தல், விஷம் நீக்குதல், பசியைப் போக்குதல், மழை பெய்வித்தல், வெள்ளத்தை அடக்குதல், புயலைச் சாந்தப்படுத்துதல் போன்ற குணங்களை இசை பெற்றிருக்கின்றது. ....நம் கர்ம வினைகளை கழிக்கும் வகைகளில் ....
1. அன்னதானம், வஸ்திர தானம் போன்ற தான தர்மங்கள், கோயில் உழவாரத் திருப்பணிகள்
2. ஹோம, தீப பூஜைகள்
3. பித்ரு, சாந்தி தர்ப்பணங்கள்
4. நாம சங்கீர்த்தனம், காவடி, மாவிளக்கு இடுதல்
5. மூர்த்தி தீர்த்த, தல தரிசன ஸ்நானங்கள்
மட்டுமல்லாது திருஅருணாசல கிரிவலமுமே பெருபங்கு வகிக்கிறது என்பது சொல்லாமலேயே விளங்கும். இஃதோடு மட்டுமின்றி இசை பரப்புதல், வித்யா தானம், ஏழைகளுக்கு மருத்துவ உதவி போன்ற அறவழி முறைகளும் உண்டு. நெப்டியூன் கிரஹப் பெயர்ச்சியினால் 1996ல் பல துன்பங்கள் ஏற்படும். நெப்டியூன், புளூட்டோ கிரஹங்களுக்கும் இசைக்கும் தொடர்புண்டு. நடப்பாண்டில் நெப்டியூன், புளூட்டோ கிரஹ சஞ்சார மாறுதல்களின் பலன்களினால் இசையைக் கொண்டே கர்ம வினைகளைத் தீர்ப்பதற்கு முக்யத்வம் தரப்படுகின்றது. இவ்விரு கிரஹ சஞ்சாரங்களினால் விளையும் துன்பங்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளவே இசை மூலம் சித்தபுருஷர்கள் நல்ல பரிஹாரம் ஒன்றை அருளியுள்ளனர். இவ்வெளிய பரிஹாரமாகக் குறைந்தது மூன்று ராகங்களில் இறைப் பண்களைப் பயின்று பாடி வந்தாலே போதும், இதுவே சிறந்த பித்ரு ப்ரீதியாக அமைந்து பல கர்ம வினைகளைக் கழிப்பதோடன்றி பல அரிய அனுக்ரஹங்களையும் பெற்றுத் தரும்.
பித்ரு – ராக சாந்திப் பரிஹாரம்
 சித்த புருஷர்கள் அருள்கின்ற பித்ரு-சாந்திப் பரிஹார ராக முறையாவது :-  இவ்வாண்டில் நிதமும் காலையில் ஸ்ரீரஞ்சணி ராகப் பாடலையும் (ஆதிதாளம்), மதியத்தில் தோடி ராகப் பாடலையும் (ஆதிதாளம்), மாலையில் கௌள ராகப் பாடலையும் (மிச்ர சாபதாளம்) பாடி வருதல் வேண்டும். இறைவனைப் பற்றிய பாடலை மட்டுமே பாடவேண்டும்.
ஸ்ரீகுமரகுருபரர், ஸ்ரீஅப்பர், ஸ்ரீசம்பந்தர், ஸ்ரீசுந்தரர், ஸ்ரீமாணிக்கவாசகர், ஸ்ரீவள்ளலார், ஸ்ரீஅருணகிரிநாதர், ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீகிருஷ்ண சைதன்யர், ஸ்ரீபுரந்தர தாஸர், ஸ்ரீமீராபாய், ஸ்ரீதியாகராஜர், ஸ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதர், ஸ்ரீசியாமா சாஸ்திரிகள் ஆகிய மும்மூர்த்திகளின்  கீர்த்தனைகள், ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர், மருதாநல்லூர் ஸ்ரீசத்குரு ஸ்வாமிகள், ஸ்ரீபோதேந்திர சுவாமிகள், ஸ்ரீதர அய்யாவாள், ஸ்ரீஸமர்த்த ராமதாஸர், ஸ்ரீஜெயதேவர். ஸ்ரீஅன்னமாச்சார்யார், ஸ்ரீகோபால கிருஷ்ணபாரதி, ஸ்ரீஅருணாசலக் கவிராயர், ஸ்ரீபாபநாசம் சிவன், ஸ்ரீஸ்வாதித்திருநாள் மஹாராஜா
– போன்ற மஹான்களின் இசை ஞானிகளின் கீர்த்தனங்களைப் பயின்று வருதல் சிறப்பானதாகும். இன்னமும் எத்தனையோ சித்தர்களும், மஹான்களும், யோகியரும், ஞானியரும், இறைப் பண்களைத் தொகுத்துள்ளனர். இறைநெறியில் துய்த்த இவர்களுடைய பாடல்களில் தெய்வீகம் ததும்பி நிற்கும்., அவர்களுடைய புண்ய சக்தியும் நிறைந்திருக்கும். இத்தகைய இசைஞானிகள், இசையின் மூலம் இறை ஞானம் பெற்று இன்றும்  சங்கீத லோகங்களில் பெரும் பேறு பெற்று நமக்கு அருள்பாலித்து வருகின்றார்கள்.

ஸ்ரீரங்க பஞ்சமி

பஞ்சபூத சக்திகளும், ஒரு முறை சர்வேஸ்வரனை ஒன்றாகச் சேவிக்க விரும்பினர். ஆனால் சிருஷ்டி  காலத்திலிருந்தே ஓய்வே இல்லாது, பஞ்சபூதங்களும் செயல்பட வேண்டியதிருக்க ஐம்பெரும் சக்திகளும் ஒன்று சேரவே வாய்ப்பில்லாது போயிற்று! ஐம்பூதங்களுள் ஒன்று ஸ்தம்பித்தாலே போதும் பிரபஞ்சக் கார்யங்கள் அனைத்தும் நின்று போய்விடுமே, என் செய்வது? “இறைவன் தான் எம் பிரார்த்தனைக்குச் செவி சாய்க்கவில்லை! அடியாருக்கு அடியாராக இருப்பதில்தான் இறைவன் மகிழ்கின்றான். எனவே நாம் இறையடியார்களிடையே விண்ணப்பித்துப் பார்ப்போம்!” – எனப் பஞ்சபூதங்கள் எண்ணிட, அதனால் பஞ்சபூதங்களும் தனித்தனியாகத் தங்கள் விருப்பத்தை மஹரிஷிகளிடம், ஞானிகளிடம், யோகியரிடமும் தெரிவித்தனர்.

நீர் வற்றிய கிணற்றை சாந்தி செய்ய…,
1. ஓம் வருணாய நமஹ
2. ஓம் புத்ர சகாய நமஹ
3. ஓம் பவித்ராய நமஹ
4. ஓம் பஞ்ச பாணேஸ்வராய நமஹ
5. ஓம் காலாய நமஹ
6. ஓம் வர்ஷாய நமஹ
7. ஓம் அக்னி மூல சாந்த மூர்த்தயே நமஹ
8. ஓம் தர்ம ரட்சகாய நமஹ
9. ஓம் அமிர்த வர்ஷண்யை நமஹ
10. ஓம் அமிர்த தீர்த்த பாலின்யை நமஹ
11. ஓம் தீர்த்த சூன்ய நிவர்த்திகராயை நமஹ
ஓம் தத் புருஷாய வித்மஹே
வருண தேவாய தீமஹி
தந்நோ தீர்த்த ப்ரசோதயாத் என ஓதியபடி 11 முறை கிணற்றை வலம் வர வேண்டும். பின்னர் rubbish இட்டு நிரப்பலாம். இந்த பூஜையை தேய்பிறை நாட்களில் செய்ய வேண்டும்.

ஆனால் அந்த உத்தம இறையடியார்களோ ஐம்பூதங்களுக்கும் கர்மயோகத்தைப் புகட்டி அவரவர்க்கு இறைவன் அளித்த கர்மத்தைச் செவ்வனே நிறைவேற்றினால் அதிலேயே இறைவனைக் கண்டு ஆனந்தித்திடலாம்! என்று அறிவுறுத்தினர். இதனால் நன்கு தெளிவு பெற்ற பஞ்சபூதங்களும், தாங்கள் ஐவரும் சேர்ந்து தங்கள் பணிக்குத் தடையூறின்றி இறைவனைத் தரிசிப்பதை பேரவாவாகக் கொண்டனர்.
இப்போது என் செய்வது?  பஞ்சபூதங்களுக்குக் கர்மயோகத்தைப் போதித்த போதிலும் அதோடு நில்லாது மஹரிஷிகளும் யோகியரும் சதாசிவனிடன் பஞ்சபூதங்களின் கோரிக்கையைச் சமர்ப்பித்து அருள்புரிய வேண்டினர். சர்வேஸ்வரனும், பஞ்சபூதங்களின் (பல சதுர்யுகங்களாகக் காத்துக்கிடக்கும்) கோரிக்கையை நிறைவேற்றத் திருவுளம் பூண்டான். ஆனால் அதற்கு ஒரு பெரிய திருவிளையாடலை அல்லவோ புனைய வேண்டும்!
நாரதரை அழைத்து ‘நாரதா! நீ பஞ்சபூதங்களிடம் சென்று அம்பாள் அனுக்ரஹமின்றி எதுவும் நிறைவேறாது எனத் தெளிவுபடுத்துவாயாக! ‘ என்று இறைவன் அருளாணையிட, நாரதர் வழக்கம்போல் தன் லீலைகளையும் சேர்த்துக் கொண்டார்! நாரதர் கலகமே (பிரபஞ்ச) நன்மைக்குத் தானே! நாரதர், ப்ருத்வி, அக்னி, வாயு, அப்பு, ஆகாச பூத மூர்த்திகளைத் தனித்தனியே சந்தித்து ஒவ்வொருவரிடமும் மற்ற பஞ்சபூத தேவதைகள் சிறப்பாக அம்பாள் உபாசனையைச் செய்து வருவதாகக் கூறிடவே பஞ்ச மூர்த்திகளும் மிகுந்த உத்வேகத்துடன் தத்தம் பூஜை, தவமுறைகளைப் பெருக்கினர். நாரதர் பின்னர் நேரே வைகுண்டம் சென்றார். அங்கே ஸ்ரீமன்நாராயணன் ஸ்ரீரங்கநாதர் கோலத்தில் தரிசனம் தந்தார்..ஸ்ரீரங்கலீலை நிகழ்ந்த யுகமது! “ நாரதா! என்னை இந்த உருவத்தில், அர்ச்சாவதார ரூபத்தில் வழிபடத் தேவர்களும் மானிடர்களும் துடிக்கின்றனர் நான் யாரிடத்தில் செல்வது!”
“தாங்கள் எப்போதும் மானிடர்கள் பக்கம் தானே சாய்வீர்கள், மஹாபிரபோ!”

வாழி அரங்கமாநகருளானே

“என்ன செய்வது நாரதா! புனிதமான பக்தியைப் பூலோகத்தில் தானே பார்க்க முடிகிறது!”
“தாங்கள் வைகுண்டத்தின் ஒரு பகுதியோடு சென்று ஸ்ரீரங்கம் தலத்தை ஸ்தாபிக்கப் போகிறீர்கள், அப்படித் தானே ஸ்வாமி!”
“நீயறியாததா, நாரதா?”
“அப்படியானால் வைகுண்டத்தில் எந்தப் பகுதி பூலோகத்திற்குச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து விட்டீர்களா, மஹா பிரபோ?”  ஸ்ரீமன்நாராயணன் திகைத்து நிற்பது போல் பாவனை செய்தார். இனி வரவிருப்பது அவருடைய திருவிளையாடல் தானே!
“நாரதா! பூலோகம் என்றாலே பஞ்சபூத சக்திகள் நிறைந்திருக்க வேண்டுமல்லவா, எனவே வைகுண்டத்தின் எந்தப் பகுதியில் பஞ்சபூத சக்தி வியாபித்துள்ளதோ அதுவே ஸ்ரீரங்கமாக மாறும்” . நாரதர் வியந்து உளம் பூரித்தார். “அப்பப்பா என்னே இறைவனின் லீலா வினோதங்கள்! ஒரு திருவிளையாடலைப் புனைவதற்கான பாத்திரங்களும், காட்சிகளும் எங்கெங்கோ சரியாகச் சொல்லி வைத்தாற்போல் நிகழ்கின்றதே!”
நாரதர் மீண்டும் கைலாயம் சென்றார், “சர்வேஸ்வரா! தங்களின் ஆணைப்படி பஞ்சபூத சக்திகள் சாக்த உபாசனையில் தீவிரமாக இறங்கி விட்டார்கள்!”
“அப்படியா, கேட்பதற்கே ஆனந்தமாக இருக்கிறதே நாரதா!” ... பஞ்சபூதங்களோ ஒருசேரத் தங்களைத் தரிசிக்க ஏங்குகின்றன! தாங்களோ அவர்களை அம்பிகையைப் பூஜிக்கச் சொல்லி விட்டீர்கள். ஸ்ரீமன்நாராயண மூர்த்தியோ, பஞ்சபூத சக்திகளுடன் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாத மூர்த்தியாக, வைகுண்டத்தின் ஒரு பகுதியையே பெயர்த்தெடுத்துச் செல்லப் போகிறாராம்! எனக்கு ஒன்றுமே புரியவில்லையே, மஹாப் பிரபோ!” 
“நாரதா வைகுண்டத்திற்கும் கைலாயத்திற்கும் முடிச்சுப் போடுவதில் தான் உனக்குப் பரமானந்தம்! தொழிலாகிவிட்டது! பஞ்சபூதங்கள் என்னைத் தரிசித்தால் என் , ஸ்ரீரங்கநாதரைத் தரிசித்தால் என்ன! இரண்டும் ஒன்றுதானே...” என்று கூறிட நாரதருக்கு மின்னல் கீற்றுப்போல் பளிச்செனப் பொறி தட்டியது!
உடனே பூலோகத்திற்கு விரைந்த நாரதர் பஞ்சபூதங்களைக் கண்டு அவர்களிடம் “நீங்களனைவரும் ஒன்று சேர்ந்து ஸ்ரீரங்கநாதரைத் தரிசித்தாலே போதும், அவரே சர்வேஸ்வரனாகக் காட்சி தருவார்” என்று கூறிட அவர்கள் ஆனந்த வெள்ளத்தில் மிதந்தனர். “ஆஹா! என்ன பரம பாக்யம்! ஸ்ரீரங்கநாதரே சர்வேஸ்வரனாகத் காட்சி தருவாரென்றால் அந்த சிவ, விஷ்ணு ஐக்ய ஸ்வரூப காட்சியைப் பெற நாம் என்ன தவம் செய்தோமோ? ஸ்ரீஅம்பிகையை வணங்கியதாலன்றோ மிக எளிமையாக இவ்வாறான இறை தரிசனத்தைப் பெற ஏதுவாகிறது!” பஞ்சபூதங்கள் பேரானந்தத்தில் திளைத்தனர்!

நாரதருக்கு ஒன்றும் புரியவில்லை! நாம் ஏதோ நடக்கும் என்று எதிர்பார்த்தால் ஏதேதோ நடக்கின்றதே! பஞ்சபூதங்கள் சேர்ந்தால் பிரபஞ்சமல்லவோ ஸ்தம்பித்துவிடும்! மஹாப் பிரளயத்தின் போதும் சிருஷ்டித் துவக்கத்தின் போதும் தானே பிரபஞ்சமே சூன்ய நிலையைப் பெறும். இந்நிலையில் தானே பஞ்சபூதங்கள் ஒன்று சேரமுடியும்! ஏதேது ஒரே குழப்பமாக இருக்கிறதே! சர்வேஸ்வரன் எப்படித் தான் இவர்களுடைய அபிலாஷைகளை நிறைவேற்றப் போகிறாரோ! இடையில் ஸ்ரீஅம்பிகையும் ஸ்ரீரங்கநாதரும்! இவர்கள் இதில் எப்படி சம்பந்தப்படுவார்களோ.! எல்லாம் குழப்பமயமாயிருக்கிறதே!”
நாரதர் கவலையடைந்தவராய் அப்போது தட்சிணப் பகுதியில் சங்கடஹர சதுர்த்தி விரதம் பூண்டிருந்த ஸ்ரீஅகஸ்தியரைக் கண்டு வணங்கி நின்றார். ஸ்ரீஅகஸ்தியர் புன்னகையுடன் “நாரதரே! இந்தாருங்கள், சங்கடஹர சதுர்த்தி பூஜைப் பிரசாதம்! இன்று பஞ்சமி திதியல்லவா! சதுர்த்திப் பிரசாதத்தைப் பஞ்சமியில் பெறுவோர்க்கு குழப்பங்கள் நீங்கி அரிய தரிசனங்கள் கிட்டும் என்பது இறை நியதி!”
வியப்படைந்த நாரதர் தலை வணங்கிப் பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டார் . “அதோ பாருங்கள், தெய்வாவதார லீலைகளை!”
அங்கே..... திருக்கயிலாயத்தில் சிவபெருமானும் அன்னை உமையவளும் சொக்கட்டான் ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு முறையும் சிவபெருமானே வென்றிட, அருகிலிருந்த பிரமனும் சிவனே வென்றதாகக் கூறிட, அன்னை பார்வதியும் பொய்க் கோபத்துடன் விளையாட்டாகச் சிவபெருமானின் கண்களைப் பொத்திட.... அவ்வளவுதான், சர்வலோகங்களும் இருளில் மூழ்கின! பிரபஞ்சமே ஸ்தம்பித்து விட்டது, ஏதோ பிரளயமே வந்தாற்போல! அவ்விமைக்கும் நேரத்தில்.. தட்சிண பாரதத்தில்..... பஞ்சபூத சக்திகளுக்கும் ஸ்ரீரங்கநாதரே ஜோதி ஸ்வரூபத்தில் சர்வேஸ்வரனானகக் காட்சி தந்தார்.. பஞ்சபூதங்களும் ஒருசேர நின்று ஸ்ரீரங்கநாதரை தரிசித்தனர். அவனே ஆண்டு அருட்கொண்ட கோலம்! இறைவனே நேரில் வந்து தானே அளித்த திவ்ய தரிசனம் பார்த்தீர்களா! சக்தி உபாசனையின் மஹிமையாக! பஞ்சபூத சக்திகளும் ஸ்ரீஅம்பிகையைப் புனிதமான ஊக்கத்துடன் வழிபட்டமையால் சர்வேஸ்வரனே ஸ்ரீரங்கநாதனாய்க் காட்சி தந்து அருள்பாலித்தார்.
இறைதரிசனம் நாமாகப் பெறுவதன்று, அவனே மனமுவந்தளிப்பது! அந்நாளே ஸ்ரீரங்கபஞ்சமி!

ஸ்ரீரெங்க பஞ்சமி அன்று
நகர் திருத்தலத்தில் ஒலித்த
பாஞ்சசன்ய சங்கு நாதம்!

கைலாயத்தில்..... நாரதர்.. “அன்னையே! தாங்கள் ஆதி சிவனின் திருக்கண்களை விளையாட்டாகப் பொத்தியதால் விபரீதம் விளைந்து பிரபஞ்சமே ஸ்தம்பித்து விட்டதென்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்! ஆனால் சர்வேஸ்வரனோ அதே நேரத்தில் அவ்வினாடிப் பொழுதில் பஞ்சபூதங்களுக்கு ஸ்ரீரங்கனாகக் காட்சியளித்து அவர்களுக்குப் பரமானந்தத்தை அளித்து விட்டார்! தாங்கள் இவ்வாறு செய்யாவிடில் பஞ்சபூதங்களின் பிரார்த்தனை எவ்வாறு நிறைவேறும்?” நாரதர் விளக்கிக் கொண்டிருந்தார்.....
இப்பூமியில் மட்டுமல்லாது ஒவ்வொரு லோகத்திலும் ஒவ்வொரு விநாடியிலும் நிகழ்கின்ற கோடிக்கணக்கான அசைவுகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு காரணம் உண்டு! இதை உணர்ந்தால் தான் இறைவனையே புரிந்து கொள்ள முடியும்! ஆனால் சாதாரண மனித மூளைக்கு இதையெல்லாம் தெரிந்து அறியக் கூடிய திட நம்பிக்கையோ, பொறுமையோ, சக்தியோ இருப்பதில்லை! அறிவு ஜீவிகளாகக் கருதப்படுவோர் (intelligents, geniuses, scientists) இதனை  ஏற்க மறுப்பர், காரணம் தக்க சற்குருவைத் தேடிப் பெறாதது தான். அனைத்தையும் அறிந்து அறியாதவர்போல் உலவும் சற்குருவே உண்மையான அறிவு ஜீவி! சற்குருவே உண்மையான, ஆக்கப்பூர்வமான, அறிவுபூர்வமான வழிகாட்டி! எதைப் பெற்றால் இவ்வுலகில் வேறு எதையும் நீ பெறத் தேவையில்லையோ அதுவே சற்குரு அருளும் ஞானம்.
ஸ்ரீரங்க பஞ்சமியன்று
1. ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் நீர்க்கோலமிடுதல் பச்சரிசி, அரைத்த மாவால் கோலமிடுதல்..... – ப்ருதிவி ப்ரீதி
2. அபிஷேகம் – அப்பு ப்ரீதி
3. முக்கூட்டு எண்ணெய்த் தீபமேற்றுதல், கற்பூர ஆரத்தி.... அக்னி ப்ரீதி (நல்லெண்ணெய் + தேங்காயெண்ணெய் + பசு நெய்)
4. வெண்சாமரம் வீசுதல் சாம்பிராணித் தூபமிடுதல் – வாயு ப்ரீதி
5. விண்நோக்கி வணங்கி ஸ்ரீரங்கநாமாவளி, துதி, அஷ்டோத்திரம் முதலியன ஓதுதல் – ஆகாச ப்ரீதி
ஆகிய ஐந்து வித பூஜைகளை நிறைவேற்றிடில் பஞ்ச பூதங்களால் ஏற்படும் துன்பங்கள் தணியும், பஞ்சபூத சாபங்களுக்கு நிவர்த்தியும் கிட்டும். ஸ்ரீரங்கம் செல்ல இயலாதோர் ஸ்ரீபெருமாள் சயனக்கோலம் பூண்டுள்ள தலங்களில் இவற்றைக் கடைபிடித்திட பஞ்சபூத தோஷங்கள் நிவர்த்தியாகி உடல் ஆரோக்யம் பெற்று பாலாரிஷ்ட தோஷங்கள் கழிந்து, பித்ரு சாபங்களிலிருந்தும் விடுபட்டு சந்தான பாக்யமும் வியாபார இழப்புகள் தணிந்து ஐஸ்வர்ய விருத்தியும் கிட்டும்.
பஞ்சபூத சக்திகள்
அடியார் : குருதேவா! பஞ்சதபூத சக்திகளால் தானே பூலோக ஜீவன்களே ஜீவிக்கின்றனர். பின் பஞ்சபூதங்களால் துன்பங்கள் எவ்வாறு உண்டாகும்!
சற்குரு : குலதெய்வ, இஷ்ட தெய்வ வழிபாடு, நித்ய கர்மாக்களான சூர்ய நமஸ்காரம், சந்தியா வந்தனம், காயத்ரீ மந்திர ஜபம், ஹோமம், பெற்றோர்களுக்கு நமஸ்காரம் போன்றவற்றை எவரும் முறையாகக் கடைப்பிடிக்காததால் தான் நோய், பொருளிழப்பு, பணக் கஷ்டம், வாழ்க்கைப் பிரச்னைகள் உண்டாகின்றன. மேலும் பஞ்சமியில் பஞ்சபூத வழிபாடு, அஷ்டதிக் தேவதை பூஜை, பஞ்ச(அங்க)- கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம், - வழிபாடு போன்றவையும் உண்டு. இவற்றை ஒரு மனிதன் முறையாகச் செய்தாலே போதும் எந்தத் துன்பமும் அவனை அண்டாது. பஞ்சபூத சக்திகளின் ஆசியின்றி எவரும் ஒரு விநாடி கூட இவ்வுலகில் வாழமுடியாது! ஆனால் அந்த பஞ்சபூதங்களையும் வழிபடாது அவற்றிற்கே துன்பங்களை விளைவித்தால் அவையே பஞ்சபூத சாபங்கள், தோஷங்களாக நம்மைத் தாக்குகின்றன. எனவே நம் துன்பங்களுக்கு நாம் தானே பொறுப்பு.

விளையாட்டு உரித்தான தெய்வம்
தலையில் Goal போட ஸ்ரீகபாலீஸ்வரர்
வாலி பால் ஸ்ரீத்ரிவிக்ரம ஸ்வாமி
கபடி ஸ்ரீபலராமர்
கால்பந்து ஸ்ரீகாளங்கி நாதர்
நீச்சல் ஸ்ரீமீனேஸ்வரர்
பாட்மிண்டன் புறா வைத்துள்ள தெய்வம்
விளையாட்டில் அடிபடாமல் இருக்க திருஅண்ணாமலையைக் குறைந்தது 60 முறை வலம் வரவும்.

பஞ்சபூதங்களுக்கு நாம் இழைக்கும் துன்பங்கள்
பிருத்வி : கண்ட இடங்களில் சிறுநீர், மல ஜலங்கழித்தல், எச்சில் துப்புதல், மதுபான வகைகளை அருந்தி வாந்தி எடுத்தல், நன்னீரை வீணாக்குதல், பொய் கூறுதல், திருடுதல் போன்ற அனைத்தையும் பூமாதேவி பொறுத்தருள்கின்றாள். தற்காலத்தில் கோயிலினுள்ளும், கோயில் மதில் சுவரை ஒட்டியும் கழிப்பிடங்கள் அமைந்திருப்பது மிகவும் வேதனைக்குரியதாகும். இதனால் தான் பூமாதேவியின் வேதனைமிகுந்து தண்ணீர்ப் பஞ்சம் உண்டாகிறது.
மேற்கண்ட முறையிலான தவறுகளே ப்ருத்வி சாபங்களாக மாறி கால்வலி, ஆணி, முழங்கை, முழங்கைகால் வலி (arthritis etc…) கால் நோய்கள், சரும நோய்களாக மாறுகின்றன. கட்டிட விரிசல்கள், பூகம்பம், மரம் விழுதல் போன்றவையும் ப்ருத்வி சாபங்களாம். இதற்கு நிவர்த்தியாக பூச்செடிகள், நல்மரங்களை வளர்த்தல், கஜ பூஜை, துளசிச் செடி வைத்தல், நந்தவனம் வைக்க உதவுதல், கோயில்களில் அபிஷேகங்கள், பச்சரிசி மாவுக் கோலம், மற்றும் நீர்க் கோலம், ஏழைகளுக்குப் பாய், படுக்கைகள் தானம் போன்றவை விதிக்கப்பட்டுள்ளன.
அப்பு : நன்னீரை வீணாக்குதல், மது அருந்துதல், ஆலய நீர் வளங்களைப் பாழாக்குதல், பலருடைய கண்ணீருக்குக் காரணமாதல் போன்றவை ஜல தேவதையின் சாபங்களைப் பெற்றுத் தரும். இதனால் கிணற்றில் உப்பு நீர், கடினநீர் உண்டாதல், குடலில் நீர் சம்பந்தமான நோய்கள், பணம் விரயமாதல், தண்ணீர்ல் கண்டங்கள் ஏற்படுதல் போன்ற துன்பங்கள் உண்டாகும். இவற்றிற்குப் பரிகாரமாக ஆலயங்களில் கங்கை, காவிரி போன்ற புண்ய தீர்த்த அபிஷேகங்கள், கோயில் குளங்களைச் சீரமைத்தல், நீர்மோர் மற்றும், பானக தானங்கள், ஆலயங்களில் உழவாரத் திருப்பணி செய்து நீரால் கழுவி விடுதல் போன்றவை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

கம்ப்யூட்டர் சம்பந்தமானவர்களுக்கு திருஎறும்பீஸ்வரர் மற்றும் ஸ்ரீசுசரித சரஸ்வதி வழிபாடு உகந்தது.
திருநீறு இடும் முறை
காலை, மதியம், மாலை ஒவ்வொரு முறையும் 16 இடம் என்று மொத்தம் 48 தடவை நீறு இட வேண்டும். அதற்குமேல் எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்பத் திரும்ப இடலாம்.
சந்தனம் இடும் முறை
சந்திர குலம் – சந்தனம் மட்டும்
சூரிய குலம் – சூரணம் சேர்த்து சந்தனம்
உத்திரபிரதேசம், மதுரா வாசிகள் அரைப் பிறைச் சந்திர வடிவில் அணிவர். பண்டரிபுர வாசிகள் U வடிவிலும், குருவாயூர் பக்தர்கள் ஒற்றை கோடு மட்டும் அணிவர்.
தென்னிந்தியாவில் வடகலை நாமம், தென்கலை நாமம் என இரு வகை உண்டு.

அக்னி : புகை பிடித்தல், தீயிடுதல் மின்சாரத்தைத் திருடுதல், பொதுச் சொத்துக்களை நாசஞ் செய்தல், வீடுகளில் தினந்தோறும் மூன்று வேளைகளிலும் முறையாக, தீபம் ஏற்றாமை, நெருப்பை விரயமாக்குதல் போன்றவற்றால் அக்னி தேவதையின் சாபங்கள் வந்து சேரும். இவற்றால் ஆஸ்த்மா, மூச்சுக் கோளாறுகள், வயிற்றுப் புண், அமில வியாதிகள், தீ விபத்துக்கள், அடுப்பு வெடித்தல் போன்றவை ஏற்படும். இவற்றிற்குப் பரிகாரமாக ஆலயங்களில் பஞ்ச எண்ணெய் மற்றும் முக்கூட்டு எண்ணெய் தீபங்களை ஏற்றுதல், விறகு அடுப்பு கொண்டு அன்னதானம், விளக்கில்லாத சந்நதிகளில் தீபமேற்றுதல், தீப பூஜைகள், விளக்கு தானம், ஊதுபத்திகளை ஏற்றுதல் போன்றவை அளிக்கப்பட்டுள்ளன.
வாயு : பிறரைப் பற்றிக் கோள்மூட்டித் துன்பங்களை உண்டாக்குதல், புகை பிடித்தல், மது அருந்துதல், விஷப் புகைகளை உண்டாக்குதல், தொழிற்சாலைகளில் விஷப் புகையால் சுற்றுப்புறத்தை மாசுபடுத்துல், கண்ட இடங்களில் சிறு நீர், மலஜலங்கழித்தல் போன்றவற்றால் வாயு தேவதையின் சாபங்கள் ஏற்படும். இவற்றால் சுவாசம் கோளாறுகள், வாயுப் பிடிப்பு, எலும்பு வியாதிகள் , காச நோய் மற்றும் இதர T.B நோய்கள், தீ விபத்து, புயல், சூறாவளி, கண்ணாடி, ஜன்னல் மற்றும் பல பொருட்கள் சேதமடைதலும் ஏற்படும். இவற்றிற்குப் பரிகாரமாகக் கோயில்களில் சாம்பிராணி தூபமிடுதல், கிழங்கு வகை உணவுகளைத் தானமளித்தல், அன்னதானம், ஆடைகள் தானம் போன்ற நற்காரியங்களை மேற்கொள்ள வேண்டும்.
ஆகாசம் : முறையற்ற காம எண்ணங்கள் (பார்வைகள்) செயல்கள், புகைபிடித்தல், பிற பொருளின் மீது ஆசை கொண்டு அபகரித்தல், அலுவலகப் பொருட்களை எடுத்துக் கொள்ளுதல், சதித்திட்டங்களால் பிறரை ஏமாற்றுதல், வஞ்சித்தல், திருடுதல், தீயவற்றைப் பேசுதல் போன்ற குற்றங்கள் / தவறுகளால் பரவெளியின் புனிதத்தன்மையே மாசுபடுகிறது. இவற்றிற்குப் பிராயச்சித்தமாக தோள்களுக்கு மேல் கரங்களை உயர்த்தி வணங்கிடுதல், நாமாவளி, நாமசங்கீர்த்தனம், அஷ்டோத்திரம், சஹஸ்ர நாமம் துதித்தல், கோயில்களில் அனைத்து சந்நதிகளிலும் அடர்த்தியாக, வெண்பனி போல் (சாம்பிராணி) தூபக் காப்பிடுதல், ஹோமாக்னி எழுப்புதல், அக்னி சந்தனப் புகை கூட்டுதல், சமிதாதானம், ஹோமங்கள் போன்றவை விதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறாக நாம் பஞ்சபூதங்களை முறையாக வழிபடாதது மட்டுமின்றி பஞ்சபூதங்களின் சாபங்களுக்கு ஆளாகும் வகையிலும் காரியங்களைச் செய்வதால் தான் வாழ்க்கையில் துன்பங்கள் ஏற்படுகின்றன. இவற்றிலிருந்து நாம் விடுபட அவனருளாலே அவன் தாள் வணங்குவது போல அவனே ஈண்டு இங்கு வந்து அரவணைக்கும் பாவனையில், பஞ்சபூதங்களே ஒரு சேர இணைந்த இப்பஞ்சமித் திதியன்று ஸ்ரீரங்கநாதனை விஸ்வரூபத்தில் ஸ்ரீசர்வேஸ்வரனாக வழிபட்டு அதன் புண்ய சக்தியை இந்நாளில் ஸ்ரீரங்கநாதரை மேற்கண்ட ஐந்து விதபூஜை முறைகளுடன் வழிபடுவோர்க்குப் பகிர்ந்தளித்துப் பலவிதமான வாழ்க்கைத் துன்பங்களுக்கும் சாந்தி அளிக்கின்றனர். ஸ்ரீரங்க பஞ்சமியன்று ஐந்துவித ஆராதனைகளுடன் குறைந்தது ஐந்து குழந்தைகளைப் பெற்ற ஐந்து சுமங்கலிகளுக்குப் (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) பாத பூஜை செய்து ஏழைகளுக்குப் பஞ்சாமிர்த விநியோகம் செய்திடக் கணவனின் கெட்ட வழக்கங்களுக்கு நிவர்த்தி காணலாம். கணவனை நல்வழிப்படுத்தும் பூஜைகளில் ஸ்ரீரங்கபஞ்சமி மிகவும் முக்கியமானதாகும்.
ஸ்ரீலக்ஷ்மி பஞ்சமி
ஸ்ரீமஹா லக்ஷ்மி, ஸ்ரீரங்க நாச்சியாராக ஸ்ரீரங்கநாதருடன் சேர்ந்து தரிசனம் அளித்த திருநாளே ஸ்ரீலக்ஷ்மி பஞ்சமியாகும். ஸ்ரீரங்கநாதரும் ஸ்ரீரங்கநாச்சியாரும் கலியுகத்தில் பிரத்யட்ச மூர்த்திகளாவர். மஹாப் பிரளயத்திற்குப் பின் மீண்டும் சிருஷ்டியைத் துவங்கிடுகையில் ஸ்ரீகிராத (சிவ) மூர்த்திக்கு உதவி புரிந்தவளே ஸ்ரீமஹாலக்ஷ்மி. எனவே தான் சிருஷ்டியின் போது உதித்த தலங்களான : திருவிடைமருதூர், தாரசுரம், திருநாகேஸ்வரம், சுவாமிமலை, திருப்பாடல் வனம் (கருப்பூர்)  ஆகிய சிவத் தலங்களில் ஸ்ரீமஹாலக்ஷ்மியாய் எழுந்தருளி தேவி அருள்பாலிக்கின்றாள். ஆதி மூலத் தலங்களாக இருப்பதால் ஸ்ரீலக்ஷ்மியை ஸ்ரீலக்ஷ்மி பஞ்சமியன்று இவ்வைந்து தலங்களில் அபிஷேக ஆராதனைகளுடன் வழிபடுவது சிறப்புடையதாகும். ஸ்ரீஸுக்தம் போன்ற ஸ்ரீலக்ஷ்மி துதிகளால் இவ்வைந்து தலங்களிலும் ஸ்ரீலக்ஷ்மியை வழிபட்டு ஏழைச் சுமங்கலிகளுக்கு வஸ்திர, மாங்கல்யச் சரடு, குங்குமம், மஞ்சள், பெரிய கண்ணாடி, சீப்பு போன்ற மங்கலப் பொருட்களைக் குறைந்தது ஐந்தையேனும் அளித்து மகிழ்ந்திட தரித்திர நிலை நீங்கும் நல்வழியைப் பெறலாம். முறையற்ற செலவுகளும் வாழ்க்கையில் குறையும்.   இவ்வைந்து தலங்களுக்குச் செல்ல இயலாதோர் பஞ்சபூத லிங்கங்களுடன் ஸ்ரீமஹாலக்ஷ்மி எழுந்தருளியுள்ள தலங்களிலோ அல்லது ஸ்ரீமஹாலக்ஷ்மி  எழுந்தருளியுள்ள சிவத் தலங்களிலோ மேற்கண்ட முறையில் பூஜை, தான தர்மங்களை மேற்கொள்ள வேண்டும். கணவனுடைய தவறான செலவு முறைகளைத் தவிர்க்க ஸ்ரீலக்ஷ்மி பஞ்சமி பூஜை பெரிதும் உதவுகிறது. ஸ்ரீமஹாலக்ஷ்மி பஞ்ச பூத லிங்கங்களைத் தொழுது ஸ்ரீரங்கநாதருடன் ஸ்ரீரங்க நாச்சியாராக எழுந்தருள வேண்டி அருள் பெற்ற நாளே ஸ்ரீலக்ஷ்மி பஞ்சமி.

கூடா நாட்கள்

பிரபலாரிஷ்ட யோகம் – கூடா(த) நாட்கள்
காலத்தின் பஞ்ச அங்கங்களுள் கிழமை திதி நட்சத்திரம் தவிர 27 வகையான யோகமும், 11 வகையான கரணமும் உண்டு. இது மட்டுமன்றி நாள் – நட்சத்திர சேர்க்கையினால் ஏற்படும் சித்த யோகம், அமிர்த யோகம், மரண யோகம் தவிர பிரபலாரிஷ்ட யோகம் என்ற ஒரு வகையும் உண்டு. இதனைத் “கூடா(த)நாள்” என்றும் சொல்வர். பல பஞ்சாங்கங்களில் “பிரபலாரிஷ்ட யோகம்” என்ற பெயரில் இது காணப்படும். குறித்த நாளும் நட்சத்திரமும் சேர்ந்து வந்தால் அது கூடா நாளாகும் இந்நாளில் எத்தகைய நற்காரியத்தையும் மேற்கொள்ளக் கூடாது. இக்கூடா நாட்களில் மிகவும் கவனமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும். நற்காரிய்யங்களைத் தவிர்ப்பது மட்டுமன்றி இந்நாளில் மருத்துவ சிகிச்சை, வங்கிக்குச் செல்லுதல், கொள்முதல் போன்று அனைத்துக் காரியங்களையும் தவிர்க்க வேண்டும். விஷ்ணு சகஸ்ரநாமம், ஆழ்வார் பாசுரங்களை கூடாநாட்களில் தொடர்ந்து ஓதிடில் கூடா நாளின் கடுமை சற்று தணியும்.
பிரபலாரிஷ்ட – கூடா(த) நாட்கள்

நாள்

நட்சத்திரம்

ஞாயிறு

பரணி

திங்கள்

சித்திரை

செவ்வாய்

உத்திராடம்

புதன்

அவிட்டம்

வியாழன்

கேட்டை

வெள்ளி

பூராடம்

சனி

 ரேவதி

மேற்கண்ட கிழமை, நட்சத்திரம், கூடும் நாட்களே பிரபலாரிஷ்ட யோகம் உள்ள நாட்கள் அல்லது கூடா(த) நாட்கள் ஆகும். இந்நாட்களில் எக்காரணம் கொண்டும் சுபகாரியங்களை மேற்கொள்ளலாகாது.
குறிப்பு : கூடா(த) நாட்கள் பற்றிய விளக்கங்களை நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அருளியுள்ள “நாளும் கிழமையும் செய்வதை....” என்ற நூலில் காணலாம்.
தினந்தோறும் காலையில் அன்றைய கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணத்தின் பெயர் சொல்லி இத்தேவதைகளைத் துதித்து வணங்கி வந்தால் கால தேவதைகளின் பரிபூரண ஆசி கிட்டும்.

மகாமகம்

மாசி/மஹாமகம்
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிம்ம ராசியில் குரு பிரசன்னமாகையில் மக நட்சத்திரமும் பௌர்ணமியும் மாசி மாதத்தில் கூடுகையில் அது மஹாமகமாகக் கொண்டாடப்படுகிறது. சர்வகோடி நதி தேவதைகளும் இந்நாளில் கும்பகோணம் மஹாமகத் திருக்குளத்தில் நீராடி, ஸ்ரீஆதி கும்பேஸ்வரரைத் தொழுது மஹாமகக் குளத்திற்குப் புனிதம் கூட்டுகின்றனர்.

பிராரப்தம் – இன்று செய்வதற்கு இப்போதே தண்டனை.

சிருஷ்டியின் துவக்கம்
வருடந்தோறும் மாசி மகத்தில் பௌர்ணமியும் மக நட்சத்திரமும் கூடுகின்ற நாளே மாசி மகமாகக் கொண்டாடப்படுகிறது..  மஹாப் பிரளய முடிவிற்குப் பின் சிருஷ்டிப் பரிபாலனம் மீண்டும் தொடங்குகையில் ஸ்ரீபிரம்மா பிரபஞ்சத்தின் ஸர்வ ஜீவ அணுக்களையும் அமிர்தம் நிறைந்த கலசத்தில் வைத்து பிரளயத்தில் விட்டுவிட அது பாரதநாட்டில், தமிழகத்தில், கும்பகோணத் திருத்தலத்தில் தேங்கி நின்றிட, ஸ்ரீஆதிசிவன் ஜீவ சிருஷ்டி வில் கொண்டு அம்பெய்திட, கும்பம் சிதறுகிறது. அமிர்தம் திரண்டோடிக் குளமாக மாறுகிறது. அதுவே மகாமகத் திருக்குளம்! அமிர்தத் திவலைகள் பொற்றாமரைக் குளத்திலும் நிறைகின்றன. பலகோடி ஜீவன்களின் பாவங்களைத் தம்முள் ஏற்று அவர்களைப் புனிதப்படுத்தும் கங்கை, காவிரி, கிருஷ்ணா, தாமிரவருணி, கோதாவரி, நர்மதை, சிந்து, யமுனை, சரஸ்வதி போன்ற புண்ய நதி தேவதைகள் ஆதிசிருஷ்டி புருஷரான ஸ்ரீகிராத மூர்த்தியை வணங்கி “கோடிக்கணக்கான ஜீவன்களின் பாவங்களை ஏற்று வாடும் எங்களைக் கரையேற்றுவீர்களாக!” என்று வேண்டிட அவர் ஸ்ரீஆதிகும்பேஸ்வரராக அருள் பாலித்து, “பிரளயத்தை விஞ்சி நிற்கும் அமிர்தம் நிறைந்த மஹாமகத் திருக்குள புனித நீராடலே உங்களைப் புனிதப் படுத்த வல்லது” என்று அருள்பாலித்திட, அவ்வாறே கோடிக்கணக்கான நதிதேவதைகளும் அதில் நீராடிப் புனிதம் பெற்றனர். இத்திருநாளே மாசி மாதத்தில் மக நட்சத்திரம் கூடும் திருநாளாகும். எனவே மாசி மகத்தில் குளத்தில் நீராடிட நாம் அறிந்த அறியாத, கோடிக்கணக்கான நதி தேவதைகள் ஸ்பரிசிக்கும் புனிதமான நீரானது நம் தேகத்தில் பட்டிட என்னே பாக்யம் செய்திருக்க வேண்டும்!

Hit and Run Accident – முதியோரைத் தத்து எடுத்தல் ஓரளவு பரிகாரம் தரும்.

மஹாமக அமிர்த நேரம் என்ற ஒன்றுண்டு! சித்த புருஷர்கள் அளிக்கின்ற அற்புதமான நேரமிது! இறைவனுக்காகத் தங்களை தியாகம் செய்து அரிய சேவைகளைச் செய்து வரும் உத்தம இறையடியார்களுக்கு மட்டும் சித்தபுருஷர்களால் அருளப் பெறும். அந்த அமிர்த நேரத்தில் தான் கோடிக்கணக்கான நதிதேவதைகளும் முப்பத்துமுக்கோடி தேவர்களும் மஹரிஷிகளும் யோகிகளும், ஞானியரும், சித்தபுருஷர்களும் மஹாமகத் திருக்குளத்தில் புனித நீராடுகின்றனர். அதே நேரத்தில் அதில் நீராடும் பாக்யம் பெற்றவர்களே உத்தம இறைநிலைகளைப் பெறுவர், சற்குருவின் திருவருளால். எனவே மாசிமகத்தன்று கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் புனிதநீராடி, சத்சங்கமாகப் பெருமளவில் அன்னதானம் செய்திடல் வேண்டும். தனித்துச் செய்வதை விடப் பலர் ஒன்று கூடி நற்காரியம் செய்தால்தான் பயன்களும், பலன்களும் பல்கிப் பெருகும்.
ஸ்ரீஅகஸ்தியர் மஹாமகத் திருக்குளத்தின் மேன்மையைப் பற்றிக் கூறுகையில்
எண்ணியதை எட்டிப் பிடிக்கும் வழி
எண்ணாததை எட்டிப் பார்க்கும் வழி
கண்ணார் அமுதன் காட்சியைக்
கண்டு அமிர்தம் கலியுகத்திற்கும்
கிடைத்த ஒரு வரப்பிரசாதமாம
என்று அருள்கின்றார். மாசிமக தான தர்மங்களின் பலன்கள் கோடி மடங்காய்ப் பெருகும் அருள் பெற்றவை. காரணம் மாசி மகத்தன்று 66 கோடிப் புண்ய நதி தேவதைகளும், கோடிக் கணக்கான தேவர்களும், பித்ரு தேவர்களும் மஹாமகத் திருக்குளத்தில் நீராடி ஏதேனும் ரூபத்தில் தான தர்மங்களைப் பெற்று நம்மை ஆசிர்வதித்துச் செல்கின்றனர். எனவே மாசி மகத்தன்று,
1. மஹாமகத் திருக்குளத்தில் நீராடுதல்
2. அன்னதானம், வஸ்திரதானம் போன்ற தானதர்மங்களைச் செய்தல்
3. மஹாமகத் திருக்குள நீராடலுக்குப் பின் அரசலாற்றில் நீராடி அன்னதானத்திற்கு முன்னரோ பின்னரோ திருவிடைமருதூர், தாராசுரம், திருநாகேஸ்வரம், சுவாமிமலை, கருப்பூர்  -ஆகிய ஐந்து தலங்களிலும் (விளக்கம் ஸ்ரீலட்சுமி பஞ்சமியில் காண்க) தரிசித்து அன்னதானம் செய்து வழிபட்டிட அற்புதமான பலன்களைப் பெற்றிடலாம். பெறற்கரிய வாய்ப்பு! நழுவவிடாது நன்கு பயன்படுத்திக் கொள்வீர்களாக!
மஹாமகம் பற்றிய சித்தபுருஷர்களின் விளக்கங்களை ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் மஹாமக மஹிமை என்னும் நூலில் காணலாம். தற்போதைய யுவ வருட மாசிமக நீராடுதலால் நீதிபதிகள் சிறப்படைவர். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நீதி பிறழ வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டோருக்கு மாசிமக ஸ்நானமும் தானதர்மங்களுமே சிறந்த பரிகாரமாகும். மேலும் வாழ்க்கையில் பலருக்கு வழிகாட்டியாக விளங்க விரும்புவோருக்கு யுவ வருட மாசிமகமே ஏற்றதாகும்.

கும்பகோணம் – மஹாமகத் திருக்குள விளக்கங்கள்
தீர்த்தங்கள் வரிசை எண்ணால் குறிப்பிடப்பட்டுள்ளன. (மஹாமகத் திருக்குள வரைபடத்தைப் பாருங்கள்). மஹாமக குளத்தினுள் இவை சிறு கிணறுகளாகவோ, ஊற்றுக்களாகவோ தென்படும். தீர்த்தங்களில் இதே வரிசையில் (1, 2, 3 etc) நீராடுதல் சிறப்பானது. இவ்விருபது தீர்த்தங்களும் பலகோடி லோகங்களுடன் தொடர்புடையவை. 66 கோடி புண்ய நதி தேவதைகளும் சித்தபுருஷர்களும் யோகியரும் ஏனைய உத்தம இறையடியாரும் இவ்விருபது தீர்த்தங்களின்கண் தோன்றி மஹாமக நாளில் அருள்பாலிக்கின்றனர். மஹாமகத்தன்று பல தவிர்க்க முடியாத காரணங்களினால் கும்பகோண மஹாமகத் திருக்குளத்தில் நீராட இயலாமற் போகக் கூடும். ஆனால் விடுமுறை கிட்டவில்லை, நண்பர்கள் வந்துவிட்டார்கள், கையில் பணமில்லை என்று இல்லாமல் அவரவர் மனசாட்சிக்கேற்பக் காரணங்கள் உண்மையானவைதானா என்று தன்னைத் தானே கேட்டு உணர்ந்திடுக! எவரேனும் கடன் தருகின்றார் என்றால் உடல் நலம், பெட்ரோல் போக்குவரத்துச் செலவு, அலுவலக வேலை, விடுமுறையின்மை என்று எதையும் பார்க்காமல் ஓடுகின்றோமல்லவா, அத்தகைய நிலைகளையெல்லாம் கருத்தில் கொண்டு தெய்வ சத்யத்திற்குக் கட்டுப்பட்டு ஆன்மீக ரீதியான, உண்மையான காரணங்கள் இருக்குமாயின்
1. மாசிமகத்திற்கு முன்னும் பின்னும் பத்து நாட்களில் மஹாமகக் குளத்தில் நீராடிடலாம.
2. வடஇந்தியாவில் உள்ளவர்கள் பொதுவாக மஹாமகத்தன்று இயலாவிடில் திருஅண்ணாமலையில் கிரிவலப் பகுதியில் மஹாமக தரிசனத்தைக் கண்டு அன்னதானம்  செய்திடல் வேண்டும்.
திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் தெற்கு கோபுரம் வழியே வெளிவந்து ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயத்தைத் தாண்டியவுடன் முக்கூட்டு சாலை அருகே (செங்கம் சாலையை அடையுமிடம்) மலையில் ஒரு கும்பம் (குடம்) போன்று காணப்படும். இதுவே மஹாமக தரிசனம். மாசிமகத்தில் பல ஆன்மீக ரீதியான உண்மையான காரணங்களுக்காக நீராட இயலாதோர், மாசி மாத மக நட்சத்திரத்தில் திருஅண்ணாமலையில் மஹாமக தரிசனத்தைப் பெற்றுத் தானதர்மங்களைச் செய்து அரிய பலன்களைப் பெற்றிடலாம். ஏனைய மாதங்களில் வரும் மக நட்சத்திரத்தன்றும் இத்தரிசனம் விசேஷமானதே!.
கும்பகோணம் மஹாமகத் திருக்குள வரைபட விளக்கம் (ஸ்ரீஅகஸ்தியர் அருளியது) வரைபடத்தை காண்க. திருக்குளத்தைச் சுற்றி எழுந்தருளியுள்ள லிங்க மூர்த்திகள்.!

லிங்கங்கள்

பலன்கள்

1. ஆத்ம லிங்கம்

மனோதிடம்

2. போத லிங்கம்

தெளிந்த அறிவு

3. நிருத்தி லிங்கம்

பூர்ண ஆயுள்

4. ஜப லிங்கம்

அனுஷ்டான பலன்கள்

5. அட்சர லிங்கம்

பஞ்சபூதங்களின் ஆசி

6. ஸ்திர லிங்கம்

பிறருக்குச் சேவை செய்ய, ஸ்திர வாழ்வு பெற

7. குணபாட லிங்கம்

எண்வித சிவ குணங்கள் பெற

8. வைத்திய லிங்கம்

ஸ்ரீவைத்தீஸ்வரனின் அருள் பெற, கொடிய நோய்கள் தீர

9. பித்ருவாச லிங்கம்

பித்ரு சாபம் தீர, பித்ரு ஆசிகள் பெற

10. பாஞ்சஜன்ய லிங்கம்

ஓம்கார அறிவு பெற

11. தபோ லிங்கம்

தவ பலன்கள் பெற

12. போஜன லிங்கம்

நன்கு உணவு உண்ண

13. மான லிங்கம்

மானம் காத்திட

14. சாந்த லிங்கம்

சகிப்புத் தன்மை பெற

15. கற்பு லிங்கம்

கற்பு காத்திட

16. க்ஷேத்ராடன லிங்கம்

தல தரிசன பலன்கள் பெற

குறிப்பு : குருபாரம்பரியங்களுக்கு ஏற்ப லிங்க, தீர்த்தத்தின் பெயர்கள் மாறுபடினும் உட்பொருள் ஒன்றே, குருவழி ஒன்றே திருவழி காட்டும்.
திருக்குளத் தீர்த்தங்கள்

தீர்த்தங்கள்

கிட்டும் பலன்கள்

1.சரஸ்வதி தீர்த்தம்

சிறந்த கல்வி, தெளிந்த ஞானம் பெற

2. கிழக்கு தீர்த்தம்

தீர்கமான கண்பார்வை, வேத ஞானம் பெற, ஸ்ரீசூரிய பகவான் கடாக்ஷம் நிறைந்தது.

3. பிரம்ம தீர்த்தம்

பிரம்ம ஞானம் பெற, சுபகாரியங்கள் நடைபெற,    தேவ, ரிஷி, கடன்கள் தீர

4. கங்கை தீர்த்தம்

ஜன்ம சாபல்யம் தீர, பெற்றோர்களுக்கு உத்தம பாத பூஜை, செய்தவர்களின் ஆசி நிறைந்தது.

5. தேவ தீர்த்தம்

தேவ ப்ரீதிகள் கிட்டும்.

6. காவிரி தீர்த்தம்

ஸ்ரீஅகஸ்தியர் தீர்த்தம், ஸ்ரீஅகஸ்தியர் அருள் பெற்றது தீவினைகளை அகற்றும்.

7. கன்யா தீர்த்தம்

திருமணம் நன்கு நடைபெற, திருமண வாழ்வு சாந்தம் பெற

8. அக்னி தீர்த்தம்

புகைபிடித்தல், அக்னியை மிதித்தல் போன்ற அக்னி சாபங்கள் தீர

9. யமுனை தீர்த்தம்

எண்ணுவது ( நல்லதாயின்) நிறைவேற

10. வாயு தீர்த்தம்

பிரசவம் நன்கு நடைபெற, பாலபருவ ஏக்கங்கள் தீர – ஸ்ரீமுருகனை சரவணப் பொய்கையில் இட்ட விசேஷ தீர்த்தம்

11. குபேர தீர்த்தம்

இழந்த பொருட்களைப் பெற

12. கோதாவரி தீர்த்தம்

வசிய சக்திகள் பெற

13. நர்மதை தீர்த்தம்

உத்தம பக்தர்களின் ஆசி பெற

14. குமரி தீர்த்தம்

பெண் குழந்தை பெற, கன்னிப் பெண்களின் சாபம் தீர, பெண்களினால் உண்டாகும் துன்பங்கள் தீர

15. நாக தீர்த்தம்

நாக தோஷம், விஷக்கடி, விஷ நோய்கள் தீர – நாகலோக பௌரிஷ்ட தீர்த்த பலன்களைத் தரும்.

16. நிருதி தீர்த்தம்

உடல் குற்றங்களைப் போக்கும்.

17. பாலாறு தீர்த்தம்

அதி அற்புத ஞானம் பெற- ஸ்ரீசரஸ்வதி ஆவாஹனமாகும் தீர்த்தம்.

18. வருண தீர்த்தம்

நீர்ப் பஞ்சம் அகல, பஞ்சம் அகல, நல்ல விளைச்சலைப் பெற

19. சரயு தீர்த்தம்

ஸ்ரீராமனின் அருள் பெற – ஸ்ரீராமன் நீராடிய தீர்த்தம்

20. இந்திர தீர்த்தம்

எல்லா இன்பங்களையும் (தார்மீக ரீதியில்) அடைய

அமுத தாரைகள்
1. எலுமிச்சை மாலை கட்டும் முறை
சிவக்கனி எனப்படும் (புள்ளிகள் அற்ற) எலுமிச்சைக் கனிகளை மாலையாகக் கட்டி துர்கையம்மனுக்கு இடுதல் ஒரு சிறந்த பிரார்த்தனை. அவ்வாறு எலுமிச்சைக் கனிகளை மாலையாகக் கோர்க்கும் போது பயன்படும் நார், திரி, சணல், நூல் – இதைப் பொறுத்துப் பலன்களும் மாறுபடுகின்றன. பஞ்சுத் திரி – பாக்ய சித்த , நார் – லக்ஷ்மி கடாட்சம , சணல் – அழற்சி நோய்கள் தீரும். இவ்வாறு கட்டுகையில் ஊசியினை உபயோகித்து கனிகளைத் துளையிட்டுக் கோர்க்கக் கூடாது. எலுமிச்சைக் கனிகளைச் சேதப்படுத்தி மாலைகட்டுவதால் வீண் சாபங்களே மிஞ்சும், பழங்களைச் சேதப்படுத்தாமல் எலுமிச்சை மாலை கட்டி அணிவித்தால் ஐஸ்வர்ய லக்ஷ்மியின் அருட்கடாட்சம் கிட்டும். நூல், நார், திரியனைத் துளைகளிட்ட வட்ட வடிவ அட்டைகளினூடே செலுத்தி (ஒவ்வொரு கனியின் இரு பக்கங்களிலும் வட்டவடிவ அட்டைகள் – இதனால் கனிகள் அசங்காது ) கனிகளைத் துளையிடமால் மாலையைக் கட்ட வேண்டும் (புள்ளியுள்ள பழங்களுக்கு தோஷம் உண்டு).

சோமவார விரதம்
கணவன் மனைவியரிடையே கருத்து வேற்றுமை வராது. நோய்நொடிகள் தீரும். தெளிந்த மனம் கிட்டும். ஸ்ரீசந்திர பகவான் மற்றும் ஸ்ரீசிவபெருமான் அருள் கிட்டும். வாக்கு தூய்மை, வாக்கு சித்தி கிட்டும்.

2. குழலூதும் கிருஷ்ணனின் படத்தை வீடுகளில் வைத்து வழிபடலாமா?
தாராளமாக வழிபடலாம். வீடுகளில் குழலூதும் கிருஷ்ணனின் படத்தையோ, விக்கிரகத்தையோ வைத்து வழிபடுவதில் எந்தவிதத் தவறும் இல்லை. பாலினன் என்ற சித்ரகுப்த தேவருக்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா குழலூதும் கிருஷ்ணனாகத்தான் காட்சியாளித்தார். அப்போது அவர் “மனிதர்களின் நித்திய கர்ம வினைகளை நீ தொகுப்பதால் உன்னை எண்ணி வழிபடுவோர்க்குத் தம் குறைகளைத் தாமே அறிந்து நிவர்த்தி செய்யும் மனப்பக்குவம் கிட்டும். நான் யார்? என்ற ஆத்ம விசாரமும் வளரும்” என வரம் அருளினார். எனவே குழலூதும் கிருஷ்ணனை வழிபடுவோர்க்கு ஸ்ரீசித்ரகுப்தரின் அருளும் கூடுகிறது. இதனால் கடுமையான தியான முறைகள் ஏதும் கடைப்பிடிக்காமலே எளிதில் ஆத்ம விசாரம் கைகூடுகிறது. ஸ்ரீசித்ரகுப்த தேவர் வெறும் கர்மக் கணக்கு எழுதுபவர் என எண்ணுகின்றனர். அது தவறு, மனிதனின் ஆத்ம விசாரத்துக்கு வித்திடுபவர் அவரே.
3.  எந்த காரியத்தைச் செய்யு முன்பும் கிழக்கு நோக்கி நின்று “ஸ்ரீபாஸ்கராய நம: (ஸ்ரீசூர்யா போற்றி)” என்று பதினெட்டு முறை துதித்துச் செய்தல் மூலம் எதிர்வரும் பல துன்பங்களை வெல்லலாம். ஆதவனுக்குரிய கிழக்கு திசையில் தான் அனைத்து ஆபரணங்களையும், மஞ்சள், குங்குமம், தாலிச் சரடு, வளையல், கண்ணாடி பேனா போன்ற மங்கலப் பொருட்களை வைக்க வேண்டும்.
4. தினந்தோறும் ஏதேனும் ஒரு நற்காரியத்தையாவது செய்வது என்ற நல்ல பழக்கத்தை ஒவ்வொருவரும் இளமையிலிருந்தே கைக்கொள்ள வேண்டும். கலியுலகில் தானங்களுள் சிறப்பாகப் போற்றப்படுவது அன்னதானமே! பெரிய அளவில் இல்லாவிட்டாலும், தினந்தோறும் ஒரு உணவுப் பொட்டலத்தையாவது பிறருக்கு, குறிப்பாகக் கோயில்களில் உள்ள ஏழை, எளியோருக்குத் தானம் செய்வதே மானுடப் பிறவி எடுத்த நம் ஒவ்வொருவரின் கடமை.

ஞாயிறு

திங்கள்

செவ்வாய்

புதன்

வியாழன்

வெள்ளி

சனி

சிவன் கோயில்

அம்மன் கோயில்

முருகன் கோயில்

பெருமாள் கோயில்

விநாயகர் கோயில்

எல்லையம்மன் கோயில்

இராமர் கோயில்

உறவினர்களுடன், குறிப்பாக மாமனார், மாமியருடன் தீராத பகை ஏற்பட்டு மனம் வருந்துவோர் மேற்கண்ட முறையில் தினசரி  அன்னதானம் செய்துவரப் பகைமை நீங்கி, நல்லுறவு மலர்ந்து, அவர்கள் மனம் மகிழ்வர். நாமளிக்கும் தானத்தைப் பெறுபவர்க்கும் நமக்கும் பூர்வஜன்மத் தொடர்புண்டு. அன்னதானம் மூலமாகப் பூர்வஜன்ம கர்மவினைகள் தீர்கின்றன என்பதை இவ்வாறு நடைமுறையில் தான் உணரமுடியும்.
5. குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல் / காது குத்துதல்
குழந்தைகளுக்குக் கர்ப்பத்திலிருந்து வளர்ந்த முடி தேவ முடியாக விளங்குகிறது. முடி மூலமாகவே இறைவன் தனது இறை சக்தியை குழந்தைகளின் உடலினுள் செலுத்தி, முறையான மூளை வளர்ச்சிக்கு அனுக்ரஹம் செய்கிறார். எனவே முதல் முடியான தேவமுடியை இறைவனுக்குக் காணிக்கையாகச் சமர்ப்பிப்பது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். குழந்தைகளுக்குச் சித்திரை நட்சத்திரத்தில் தான் முடி எடுத்துக் காது குத்த வேண்டும். அவ்வாறு செய்வதால் அக்குழந்தைகளின் புத்தி கூர்மையடைகிறது.

Will Power அதிகரிக்க ஸ்ரீசரபேஸ்வரர் பூஜை செய்யவும்.

6. பில்லி, சூனியம், ஏவல்களால் துன்பமடைந்தோர்க்கு        
பாண்டிச்சேரி – மயிலம் நெடுஞ்சாலையில் பெரும்பாக்கம் என்னும் சிற்றூரிலிருந்து சுமார் 7 கி.மி தொலைவில் உள்ள திருவக்கரையில் ஸ்ரீவக்ரகாளியம்மன் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில் ஸ்ரீவக்ரகாளி திருச்சன்னதியில் ஜீவசமாதி கொண்டுள்ள ஸ்ரீகுண்டலினி மஹரிஷியே இத்தகைய தீய சக்திகளை தன்னுள் ஈர்த்து, அடக்கி அவற்றை ஆளும் வல்லமை பெற்றவர். பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, மந்திரங்களால் துன்பமடைந்தோர்க்கு ஸ்ரீகுண்டலினி மஹரிஷியின் ஜீவசமாதி தரிசனம். ஸ்ரீகாளியின் அருள் ஒரு அரிய வரப்பிரசாதமாகும். ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும், ஏழை எளியோர்க்குத் தானம் செய்து ஸ்ரீகுண்டலினி மஹரிஷியை, ஸ்ரீகாளியை வணங்கி வந்தால் பைத்தியம், பில்லி, சூனியம், ஏவல் போன்ற துர் சக்திகளின் விளைவுகள் அறவே நீங்கும்.
7. நவராத்திரி தான தர்மச் சிறப்பு

பணம் இருந்தால்தான் தானம் செய்ய முடியுமா?
நிச்சயமாக இல்லை. ‘தானம் செய்ய வேண்டும்’ என்ற எண்ணம் இருந்தாலே போதும். உதாரணமாக, நாம் செல்லும் வழியில் உள்ள அருகம்புல்லைப் பறித்து பசுவிற்குக் கொடுக்கலாம். மலர்களைப் பறித்து சுவாமிக்குக் கொடுக்கலாம். இதுபோன்று வசதி இல்லாத ஏழைகளும் தானம் செய்யவே, அக்காலத்தில் பொது இடங்களில் பூங்காக்களை அமைத்தனர்.

புரட்டாசி மாதம் முழுவதும் மாலை சூரிய அஸ்தமனத்திலிருந்து ஆறு நாழிகை (ஏறக்குறைய 2¼ மணி நேரம்) வரை கோமதி அம்மனின் அருளாணைப்படி வாயு தேவர்கள் நேரிடையாக பூலோகம் வந்து பூ, பழம், வஸ்திரம், வளையல், தாலிச் சரடு, மஞ்சள், குங்குமம், சீப்பு, கண்ணாடி, பிரசாதம் போன்ற பொருட்களில் வியாபித்து ஆசீர்வதிக்கின்றனர். அந்தப் புண்ணிய நேரத்தில் மேற்கண்ட பொருட்களைத் தானம் செய்தல் கோடி மடங்கு பலனைப் பெற்றுத் தரும். எனவே புரட்டாசி மாத பூஜை, விரதங்கள், குறிப்பாக நவராத்திரி தான தர்மங்கள் பெண்களுக்கு ஓர் அரிய வரப்பிரசாதம். அனைவரும் இதனைத் தவறாது கடைப்பிடித்தல் அளப்பரிய பலன்களைத் தரும்.
8. ஸ்ரீதுர்க்கையின் விசேஷ நாமங்கள்
ஒவ்வொரு கோயிலிலும் அருள் பாலிக்கும் ஸ்ரீதுர்க்கை அம்பாளுக்குரிய விசேஷ நாமத்துடன் பூஜித்தால் பரிபூரணமாக பலன்கள் கிட்டும்.
சென்னை, கோயம்பேடு ஸ்ரீகுறுங்காலீஸ்வரர் ஆலயம் – ஸ்ரீகுறுக்கத்தீஸ்வரி துர்க்கை
சென்னை, திருவட்டீஸ்வரர் கோயில் – ஸ்ரீப்ரசன்ன வனமாலினீ துர்க்கை
சென்னை , ஸ்ரீகபாலி கோயில் – ஸ்ரீபஸ்பத்ரயாக்னி துர்க்கை
சென்னை, பூந்தமல்லி ஸ்ரீவைத்தீஸ்வரான் கோயில் – ஸ்ரீதுர்பவி துர்க்கை
சென்னை திருமுல்லை வாயில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் கோயில் – ஸ்ரீபத்ரகாசினி துர்க்கை
9. கூடாத நாட்களில் பிறந்தோறும் பூப்பு அடைந்தோரும் சுயம்பு மூர்த்திகள் அமையப் பெற்ற கோயில்களில் திருப்பணி செய்வதாலும் ஏகச் சிந்தனையாக விடாது விஷ்ணு சகஸ்ரநாமம், சக்தி துதிகளைப் பாராயணம் செய்வதாலும் கூடாத நாள் விளைவுகளைத் தவிர்க்கலாம். தக்க சற்குருவை நாடி அறவழி காணவேண்டும்.
10. ஆலயம் தொழுவது சாலவும் நன்று
தற்காலத்தில் பேருந்துகளிலும், ஜனநெரிசல் நிறைந்த இடங்களிலும் நாம் ஒருவர் மேல் ஒருவர் இடித்துக்கொண்டும், உராய்ந்து கொண்டும் நிற்கும் சந்தர்ப்பங்கள் அதிகம். அந்த சந்தர்ப்பங்களில் அவர்கள் எந்த எண்ணத்தில் இருக்கிறார்களோ, அந்த எண்ணத்தின் பிரதிபலிப்பு பிறரைப் பாதிக்கும். எல்லோரும் எப்போதுமே நல்ல எண்ணங்களையே கொண்டிருப்பர்கள் என்று உறுதியாகக் கூற முடியுமா? மற்றவர்களின் தீய எண்ணங்கள் நம்மை பாதிப்பதை எவ்வாறு தவிர்ப்பது? இத்தகைய சமயங்களில் இறை நாமத்தை/மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

சென்னையில் உள்ள பல்வேறு இடங்களின் பெயர்ச் சிறப்பு...
பிருங்கி மலை என்பதே தற்காலத்தில் பரங்கி மலை எனப்படுகிறது.
த்ரிசூலினி தேவி என்ற தேவியின் இருப்பிடமே த்ரிசூலம் மற்றும் குரோம்பேட்டை.
தமிழ் மறைகள் ஓதிய இடமே மறைமலை நகர் என்றாயிற்று.
பல்லவர்கள் தானமாக அளித்த இடமே பல்லாவரம் என்றழைக்கப்படுகின்றது.
அதுபோல் திருச்சியில்...
வயலூர் – அன்பு அதிகமாக உள்ள இடம்.
கிருஷ்ணராயபுரம் – கிருஷ்ண தேவராயர் தானம் அளித்த இடம். தானம் செய்வோர் அதிகமாக உள்ள ஊர்.

வெளியில் சென்று இல்லம் திரும்பியவுடன், கால்கள் கழுவி (முடிந்தால் நீராடி) நெற்றிக்கு இட்டு இறைவழிபாடு செய்வதாலும் கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசிப்பதாலும் அங்கு எந்நேரமும் நம் கண்ணுக்குத் தெரியாமல் வலம் வந்து கொண்டிருக்கும் மஹான்களின் சூட்சும தேகங்களில் பட்ட காற்று நம் மேல் படுவதால் மற்றவர்களின் தீய எண்ண பாதிப்பு முழுமையாக நீங்குகிறது.
மேலும் நம் தீய எண்ணங்களால் பிறரும் பாதிக்கப்பட்டால் அதனால் நமக்குச் சாபங்கள் வந்து சேருமன்றோ! இதை நிவர்த்தி செய்யவே அன்றாடம் ஒரு முறையாவது கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று பெரியோர்கள் கூறியுள்ளனர். ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பதன் உண்மைப் பொருள் இதுவே. ஆனால் ஜாதி, இன, குல பேதமின்றி அனைவரும் ஒன்று கூடி சத்சங்கமாக இறைவனைப் பிரார்த்திட இத்தகைய கூட்டுப் பிரார்த்தனைக்கு அற்புத ஆன்மீக சக்தி உண்டு.
10. குழந்தைகளின் ஞாபக சக்தி வளர
பொதுவாகவே படிக்கும் குழந்தைகளிடம் உள்ள குறை தாங்கள் படித்த பாடங்களை தேர்வு சமயத்தில் மீண்டும் நினைவுகூர இயலாததுதான். இச்சிறு குறையினால் நன்றாகப் படிக்கும் மாணவ, மாணவியர் கூட தேர்வில் நல்மதிப்பெண்கள் பெற வாங்க இயலாமல் போய்விடுகிறது. ஒவ்வொரு புனர்பூச நட்சத்திரத்தன்றும் தூதுவளைப் பொடி பிசைந்த அன்னத்தை – குறைந்தது 3 உருண்டைகளாவது குழந்தைகளுக்கு அளித்து வந்தால் படிப்பில் மறதியே வராது. படித்தவற்றை மீண்டும் நினைவிற்குக் கொண்டுவரும் சக்தியைப் பெருக்கும் எளிமையான வழி இது.
அதேபோன்று ஒவ்வொரு அஸ்வினி நட்சத்திரத்தன்றும் குழந்தைகளுக்கு வல்லாரைப் பொடி, தூதுவளைப் பொடி, கருவேப்பிலைப் பொடி மூன்றும் கலந்த உணவினை அளித்து வந்தால் அவர்களது ஞாபகசக்தி வளரும். சித்தபுருஷர்கள் அருளிய மேற்கண்ட முறைகளால் அற்புதப் பலன்களை அடையலாம்! குழந்தைகளின் வயது, விருப்பத்தைப் பொறுத்து சித்த வைத்தியர்கள், பாட்டிமார்கள் ஆலோசித்துத் தேவையான அளவு கொடுக்கவும்.
11. ஆண்களுக்கான செவ்வாய் தோஷப் பரிகார முறைகள்
செவ்வாய் தோஷம் காரணமாகப் பல ஆண்களுக்கு எளிதில் திருமணம் கூடாமல் தள்ளிக்கொண்டே போவதுண்டு. அத்தகையோர் ஸ்ரீக்ஷிப்ர கணபதியை முறையாக அபிஷேக ஆராதனைகளுடன் வழிபட்டு வந்தால் எல்லாவித தோஷங்களு நிவர்த்தியாகி, திருமணம் கைகூடும். பாண்டிச்சேரி மணக்குள விநாயகரும், திருஅண்ணாமலையில் ஆனிறை கொண்ட கணபதியும் சிலாரூபத்தில் அமைந்த ஸ்ரீஷிப்ர கணபதி மூர்த்திகள் ஆவர். வேறுபல பொதுவான காரணங்களால் திருமணம் தாமதமாகிடில் ஆண்கள், திண்டுக்கல் அருகே சின்னாளம்பட்டியில் நான்கு முகங்களுடன் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானை முறையோடு வணங்குத் தகுந்த தான தருமங்களைச் செய்வது நல்ல பரிகாரமாகய் அமையும்.

ப்ளாட்களில் வசிப்பது என்றுமே ஏற்புடையது அல்ல.
வீடுகளில் வடகிழக்கு திக்கில்தான் பூஜை அறை இருக்க வேண்டும். பணத்தையும் இந்தத் திக்கில் வைப்பது சிறப்பானது. தென்கிழக்கு திசையில் சமையல் அறை இருப்பது நல்லது.

12. அஷ்டலக்ஷ்மிகளுக்கும் கலியுகத்திற்குரித்தான நாமங்களில் துதித்து வழிபட்டிட விசேஷமான அனுக்ரங்கள் கிட்டும்.
கஜலக்ஷ்மி – ஹாலினி மாதா லக்ஷ்மி
தனலக்ஷ்மி – ஸ்யமந்தக லக்ஷ்மி
ஆதி லக்ஷ்மி – பூர்வம்பாள்
தான்ய லக்ஷ்மி – வைசாலி லக்ஷ்மி
வித்யா லக்ஷ்மி – ஜலஜாம்பாள்
தைர்ய லக்ஷ்மி – கபாடியா லக்ஷ்மி
விஜய லக்ஷ்மி – சாருசம்ஹாரினி
சந்தான லக்ஷ்மி – ஹைமலக்ஷ்மி
மஹா லக்ஷ்மி – மேகஷ்யாமளி.
13. கண் பாதுகாப்பிற்கென சித்தர்கள் அருளியது           
தூய்மையான முறையில், முறையாகத் தயாரிக்கப்பட்ட இளநீர்க் குழம்பு என்னும் சித்த வைத்திய மருந்தை வாங்கி இரவில் படுப்பதற்கு முன்னால் இரண்டு / மூன்று சொட்டுகள் கண்ணில் விட்டுச் சிறிது நேரம் கண்களை அசைக்காமல் மூடி வைத்திருக்க வேண்டும். கண்களில் மருந்து இட்ட சில விநாடிகளுக்குக் கண் எரியும், கவலை வேண்டாம். கண்களில் உள்ள தூசி, அழுக்குகளை மருந்து கரைப்பதால் ஏற்படும் உணர்வே இது. இளநீர்க் குழம்பு கண்பாதுகாப்பிற்கு ஓர் ஒப்பற்ற மருந்தாகும். இதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் கண் புற்று நோய், திரைப் படலம் போன்ற கண் நோய்கள் வராமல் ஆரம்பத்திலேயே தடுத்து விடலாம்.

பெரிய நகரங்களில் வசிக்க நிறைய புண்ணிய சக்தி தேவை.
யாராலும் திருட முடியாத பொருள் அறிவு மட்டுமே.

14. இராகு கால துர்க்கா பூஜை
செவ்வாய்க்கிழமை மட்டுமல்லாது வாரத்தின் ஏழு நாட்களிலும் அந்தந்த ராகுகால நேரங்களில் துர்க்கையை பூஜை செய்ய வேண்டும். அவ்வாறு வழிபடுகையில் ஒவ்வொரு நாளும் விதவிதமான பூக்களைக் கொண்டு துர்க்கை அன்னையை வழிபடுதல் சிறப்பானது.
திங்கள் – வெள்ளை அரளிப் பூ
செவ்வாய் – செவ்வரளி, செந்தாமரை, செம்பருத்தி, செங்கழுநீர்ப்பூ, பிச்சிப்பூ (ராமபாணம்)
புதன் – துளசி
வியாழன் – சாமந்திப் பூ முக்கியமானது , மற்ற பூக்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
வெள்ளி – வெள்ளை அரளி
சனி – நீலோத்பவம் (சங்கு புஷ்பம்)
ஞாயிறு – பாரிஜாதம், வில்வமாலை
ஸ்ரீதர்மராஜ தசமி
ஸ்ரீஎமதர்மராஜா எழுந்தருளியுள்ள தலங்களில் (திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி) குறைந்தது 108 தீபங்கள் (நல்லெண்ணெய், பசுநெய்) ஏற்றி, எருமை மாடுகளுக்கு அகத்திக்கீரையுடன் (திங்கட்கிழமைக்குரிய) முளைக்கீரை சேர்த்து அளிக்க வேண்டும். இதனால் கடுமையான நோய்களின் தன்மை தணியும். ஸ்ரீஎமதர்மராஜா அனுக்ரஹம் பெற்ற தலங்களில் (சென்னை ஸ்ரீதண்டீஸ்வரர், திருக்கடையூர்) எருமை மாடுகளுக்கு மேற்கண்டவாறு உணவளித்து ஸ்ரீகாலபைரவர் அஷ்டகம், அஷ்டோத்திரங்களைத் துதித்து, தேன் கலந்த பசும் பாலைக் குழந்தைகளுக்குத் தானமாக அளித்திட, கடுமையான அபாய நிலையில் உள்ளோரும் நன்னிலை அடைவர்.

கபால சம்பந்தமான நோய்கள் குணமாக ஸ்ரீகபாலீஸ்வரர், ஸ்ரீசூரிய நாராயண மூர்த்தி மற்றும் ஸ்ரீசந்திர மௌலீஸ்வரர் போன்ற தெய்வங்களை வழிபட வேண்டும்.
சூரிய பகவான் பெயர் கொண்ட தலங்களில் வழிபடுவதால்
(1) ஸ்திர புத்தி (Steady Mind) வந்தமையும்.
(2) சித்த பிரமை அகலும்
(3) நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் (Neuro problems) தீரும்.

காரடையான் நோன்பு
காரடையான் நோன்பு பற்றிய விளக்கங்களை ஸ்ரீஅகஸ்திய விஜயம் March 1995 இதழில் காணலாம். இந்நோன்பு குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே என்ற கருத்து நிலவுகிறது. இது தவறாகும். கணவன் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் பெற்றுச் சிறந்து விளங்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணமுடைய ஒவ்வொரு இல்லறப் பெண்ணும் காரடையான் நோன்பினை மேற்கொண்டே ஆக வேண்டும்.
மனைவியின் கடமை
இல்லறம் சிறக்க வேண்டுமெனில் கணவன் மனைவியரிடையே சாந்தமும் அமைதியும் நிலவிட வேண்டும். இதற்கு செய்கின்ற பூஜைகளே பெரிதும் உதவிடுகின்றன. ஒவ்வொரு மனைவியும் :-
1. எப்போதும் நெற்றித் திலகத்துடன்தான் இருக்க வேண்டும்.
2. மாங்கல்யத்தை மாங்கல்யச்சரடில் தான் (மாங்கல்ய நூல்கயிறு) கோர்த்து அணிய வேண்டும் . எக்காரணம் கொண்டும் திருமாங்கல்யத்தைத் தங்கசங்கிலியில் கோர்த்து அணியக் கூடாது.
3. பருத்தி நூலால் ஆன மங்கலச் சரடே பஞ்சபூத சக்திகளைத் தாங்கி நிற்கின்றன. நாம் துதிக்கும் வடமொழி, தமிழ் மறைகளை, ஸ்தோத்திரங்களை, இறை நாமங்களை, கடவுள் பாசுரங்களை மாங்கல்யச் சரடே கிரகித்து சுமங்கலித்துவத்தையும் கணவனுக்கு தீர்க்கமான ஆயுளையும் தருகின்றன.
4. எப்போதும் காலில் மெட்டி, கைகளில் வளையல்கள், தோடுகள், (வெற்று மூக்கில்லாமல்) மூக்குத்தி ஆகியவற்றை அணிந்திருக்க வேண்டும்.
5.குங்குமத்தை முன் வகிடு, நெற்றி, கழுத்து ஆகிய மூன்று இடங்களிலும் இடுதல் வேண்டும்.
6. தலை வகிடு நேராக இருக்க வேண்டும். கோணலாக வகிடு எடுத்தல் கூடாது. தலை ஜடை காதுகளை மூடி இருக்காமல் கால்களை விடுத்து வழித்து வாருதல் வேண்டும். தலை வகிடின்றி வாருதல் கூடாது. முன்புற முடியினை அழகிற்காக வெட்டுதல் கூடாது. இது கணவனுடைய ஆயுளைக் குறைத்து விடும். ஸ்டிக்கர் (sticker) பொட்டு வேண்டாம்.

வைத்தியர்கள் தங்களிடம் வருகின்ற நோயாளிகளை குணப்படுத்துகையில் அவர்களின் கர்மங்களில் ஒரு பகுதியை ஏற்கின்றனர். வைத்தியத்தை சேவையாக, இலவசமாகச் செய்வதே சரியானது. தேவைப்பட்டால், தங்களுடைய வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவைகளுக்கு மட்டும், அதாவது உயிர் வாழ மட்டும் பணம் பெறலாம்.
வைத்தியத் தொழில் செய்ய விழைவோர் கேரள மாநிலம் குருவாயூர் அருகே உள்ள நெல்லுவாய்புரம் ஸ்ரீதன்வந்த்ரீ ஆலயத்தில் பூஜை செய்ய வேண்டும். 48 நாட்கள் தொடர்ந்து ஸ்ரீதன்வந்த்ரீ மந்திரத்தை விடாமல் ஜெபிக்க வேண்டும்.
காலை உணவு – பிரதாப்சிங் சூரணம்
மதிய உணவு – பால் பாயசம்
மாலை – பிரதாப்சிங் சூரணம்
இரவு – தயிர் சாதம்

7. எக்காரணம் கொண்டும் ஒட்டுப் பொட்டு (sticker) வைத்தல் கூடாது. தற்காலத்தில் நெற்றி புண்ணாகிறது என்ற சாக்கில் பெரும்பாலான அலுவலகப் பெண்கள் குங்குமம் இடாது Sticker பொட்டினையே அணிகின்றனர். இது பல சாபங்களையும், தோஷங்களையும் பெற்றுத் தந்து கணவனுக்கு சுவாசக் கோளாறுகள், உயர்ந்த இரத்த அழுத்தம் (High B.P)  மூச்சிரைப்பு, வீக்க நோய்கள், கண் கோளாறு போன்றவற்றை உருவாக்குகின்றன. பொதுவாக மனைவியின் நெற்றிக் குங்குமப் பொட்டிலிருந்துதான் கணவக்குப் புண்ய சக்திகள் சேருகின்றன. மனைவி செய்கின்ற பூஜைகள், கோவில் தரிசனங்கள் போன்றவற்றின் பலன்களை நெற்றிக் குங்குமமே கணவனுக்கு அளிக்கின்றது. தினமும் கணவன் மனைவியினுடைய மாங்கல்யத்திற்கு குங்குமப் பொட்டு இட்டு வருதல் வேண்டும். ஒட்டு பொட்டு (sticker) இட்டால் கணவனுக்கு எரிச்சலும், கோபமும், கெட்ட பழக்கங்களுமே தலை தூக்கும். தீய சக்திகள் ஒட்டுபொட்டில் எளிதில் ஆக்கிரமிக்கின்றன. காரணம் அதில் எவ்வித ஆன்மீகச் சக்தியும் இல்லாதது தான்.
8. வாரம் ஒரு முறையேனும் அவரவர் குடும்ப வழக்கப்படி மடிசார் அல்லது கச்சம் கட்டும் முறையில் (தமிழர் முறை/ஆந்திர மற்றும் வங்காள முறை etc..) புடவை அணிந்து கோவிலுக்குச் செல்லுதல் வேண்டும். இதனால் சுவாசம் முறைப்பட்டு நல்லெண்ணங்களே மேலோங்கி மனக்குழப்பங்களைத் தவிர்க்கும்.
ஆடையின் ஆன்மீக சக்தி
9. அந்தந்த நாளுக்குரிய நிறத்தில் ஆடைகளை அணிந்திட நற்காரியங்கள் தடங்கலின்றி நடைபெறும் இதனால் கணவனுடைய அலுவலக, வியாபாரப் பிரச்சினைகளைத் தடுத்து விடலாம்.

ஞாயிறு

திங்கள்

செவ்வாய்

புதன்

வியாழன்

வெள்ளி

சனி

ஆரஞ்சு

வெள்ளை கலந்த சிவப்பு

சிகப்பு

பச்சை

மஞ்சள் (எலுமிச்சை)

நீலம் கலந்த வெள்ளை

கறுப்பு/ கருநீலம்

வண்ண ஆடைகளாயின் மேற்கண்ட குறித்த நிறம் பெருமளவு இருக்குமாறு ஆடைகளை அணிந்து எடுத்த நற்காரியங்கள் நன்கு நிறைவேறும்.
10. தினந்தோறும் கணவனின் பாதங்களைத் தொட்டு வணங்குதல் வேண்டும்.
மேற்கண்ட எளிய நல்வழி முறைகள் மேற்கண்டாலே போதும், பெண்கள் இல்லறத்தில் ஏற்படும் பல சாதாரணப் பிரச்சினைகளை வராமலேயே தடுத்து விடலாம். அறிந்தோ அறியாமலோ மேற்கண்ட தவறுகளைச் செய்திருப்பின் அதற்குப ்பிராயச் சித்தமாக காரடையான் நோன்பு., ஸ்ரீகேதார கௌரி விரதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
வருடம் முழுவதும் கணவனுடன் சண்டையிட்டுக் கொண்டு ஒரே ஒரு நாள் மட்டும் காரடையான் நோன்பினை ஏற்பதால் எவ்விதப் பலனும் ஏற்படாது.
1. கணவனுடைய நற்காரியங்களுக்கு தடையாயிருத்தல்
2. கணவனுக்கு சினம் வரும்படி பேசுதல், நடந்து கொள்தல்
3. தன்னுடைய சினம், கௌரவம், அகங்காரம் காரணமாக கணவனுக்குச் செய்ய வேண்டிய பணிகளைச் செய்யாதிருத்தல்
4. கணவன் மேல் பிழையாயினும் அதை பெருந்தன்மையாக விட்டுவிடாது, பெரிதாக வளர்த்து விடுதல்
5. கணவனை எதிர்த்துப் பேசுதல், வெளிப்படையாகவோ, மனதினுள்ளோ வசைபாடுதல்
6. தன் சுற்றத்தாரை மதியாத காரணத்திற்காக கணவனையும் கணவனின் சுற்றத்தாரையும் பாதிக்கும்படி நடந்து கொள்ளுதல்
7. கணவனுடைய சுற்றத்தையே கணவன் ஆதரித்திடினும் அதனை இல்லற தர்மமாக, பெருந்தன்மையாக விட்டு விடாது பெரிது படுத்திப் பழி வாங்குதல்
8. கணவனுடைய சிறு குற்றங்களைக் குத்திக் காட்டி, மடக்கித் தனக்கு சாதகமாகத் தன் காரியங்களை, நிறைவேற்றிப் பயன்படுத்தி கொள்ளுதல்
9. கணவனுடைய சத்சங்கக் காரியங்களுக்கு முட்டுக்கட்டையாயிருத்தல்

கருக்கலைப்பு (Abortion)
கூடவே கூடாது. பரம்பரைக்கே சாபங்கள் வந்து சேரும். நாம் மீண்டும் குழந்தையாகப் பிறந்து, அதேபோலவே கொல்லப்படுவோம். மேலும், பிசாசாக அலைய வேண்டி வரும்.

10. கணவனுடன் ஏற்பட்ட சண்டை சச்சரவுகளை நினைவு கூர்ந்து தன் பிழைகளை உணராதிருத்தல்
11. தன் சுயநலத்திற்காகப் பணத்தை விரயமாக்குதல்
12. அடிக்கடி குடும்பப் பிரச்சினைகளைப் பூதாகாரமாக எடுத்துரைத்து அவன் மன அமைதியைக் குலைத்தல்
13. கணவனை சீர்திருத்துவதற்குப் பூஜைகள், மூர்த்தி, தீர்த்த, தல தரிசனங்களை, தான தருமங்களை மேற்கொள்ளாது அவனுடைய தீய குணங்களைப் பற்றிப் பேசியே கணவனுடைய மனோநிலையைப் பாழ்படுத்துதல் ஆகிய செயல்களை எப்போதுந் தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு இல்லறப் பெண்ணும் யுவ வருட காரடையான் நோன்பினை ஏற்குமுன் மேற்கண்டவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து தனக்குரிய தவறுகளுக்காக மனம் வருந்தி அதற்குப் பிராயச்சித்தமாக இந்நோன்பினை ஏற்று நிறைவு செய்ய வேண்டும். பிரயச்சித்தமென்றாலே தவறுகளை மீண்டும் செய்யாதிருப்பது தான். ஒரு நாள் நோன்பினை முடித்தபின் மீண்டும் அதே தவறைச் செய்தால் சாபங்கள் பன்மடங்காகப் பெருகும்.
கணவனின் கடமை
மேற்குறித்தவற்றை நோக்கிடில் ஆண்கள் சார்பாக, ஒருதலைப் பட்சமாக விளக்கப்பட்டிருப்பது போல் தோன்றும். ஆனால் இறை நியதிப்படி உடல், மன வலிமைகளில் பெண்கள் ஆண்களை விட 7 மடங்கு அருந்திறனைப் பெற்றவர்கள். எனவே குடும்பத்தைப் பாங்குடன் நடத்துவதற்கு இல்லறப் பெண்களின் பங்கு இன்றியமையாதது என்பதை வலியுறுத்துவதற்காகவே இத்தகைய பூஜை முறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதைக் கணவன்மார்கள் நன்கு புரிந்து கொண்டுத் தன்னைவிட ஆன்மீக சக்திமிக்க இல்லற லட்சுமியாம் மனைவியின் சிறப்புகளை உணர்ந்து நல்விதிமுறைகளைக் கடைபிடித்து உத்தமக் கணவனாக நற்பழக்கங்களுடன் சிறப்புடன் வாழ்தல் வேண்டும்.

ஸ்ரீராமநவமி மகிமை

சென்ற வருட ஸ்ரீஅகஸ்திய விஜயம் April,1995  இதழில் ஸ்ரீராமநவமிக்குரிய பகலிகைப் பூஜையைப் பற்றி நம் குங்குமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம ஸ்வாமிகள் விளக்கியிருந்தார்கள். கடந்த பவ வருட ஸ்ரீராம நவமியிலிருந்து ஒவ்வொரு நவமி திதியிலும், புனர்பூச நட்சத்திரத்திலுமே செய்ய வேண்டிய திதிப் பகலிகை, நட்சத்திரப் பகலிகை பூஜை முறைகளைப் பற்றியும் ஸ்ரீலஸ்ரீ ஸ்வாமிகள் நன்கு எடுத்துரைத்துள்ளார்கள். இவை அனைத்தும் எளிமையான பூஜை முறைகளே! ஆழ்ந்த குருநம்பிக்கை உள்ளவர்கள் இதனைக் கடைபிடித்து நன்னிலைகளைப் பெற்று உய்வர் என்பது திண்ணம்.
இப்பகலிகைப் பூஜைகளின் ப்ரசாதமான சந்தனப் பொட்டுகளைச் சேகரித்து பலருக்கும் விநியோகித்திடில் கிட்டும் பாக்கியங்களை ஏற்கனவே விவரித்துள்ளோம். ஒவ்வொரு வருட ஸ்ரீராம நவமியையும் மகரிஷிகளும், யோகிகளும் ஒவ்வொரு சிறப்புத் தலத்தில் கொண்டாடி நமக்கு நல்வழிக் காட்டியுள்ளனர் இதன்படி யுவ வருட ஸ்ரீராமநவமியைக் கொண்டாட வேண்டிய சிறப்புத் தலமாக சித்தபுருஷர்கள் அளித்துள்ள திருத்தலமே திருமோகூர் ஆகும். மதுரையிலிருந்து 7 மைல் தொலைவில் திருமோகூர் அமைந்துள்ளது.

இறை யந்திரங்கள் / சக்கரங்கள்... ஒரு யந்திரம் / சக்கரம் செய்வதற்கு 20 வருட அவகாசம் தேவை. தினமும் தொடர்ந்து 16 மணி நேரம் பூஜை செய்ய வேண்டும். அதன் பின்னர் அடுத்த 20 வருடங்களுக்குப் பயிற்சி செய்து அதை Energize செய்ய வேண்டும்.

யுவவருட ஸ்ரீராமநவமி மஹிமை
அம்பரீஷ மஹாராஜா ஏகாதசி விரதத்தை ஏற்ற புனிதமான புராணக் கதையை நாம் அறிவோம். ..... அதோ அம்பரீஷ மஹாராஜா முறையான நிர்ஜல (நீர்கூட அருந்தாத) ஏகாதசி விரதம் பூண்டு ஸ்ரீமஹாவிஷ்ணுவின் சந்நதியில் அமர்ந்து பூஜை செய்து வருகின்றான்.
......இதோ ஏகாதசித் திதி முடிந்து விட்டது. துவாதசி பாரணையாகத் துளசி தீர்த்தம் பருகும் நேரமும் நெருங்குகிறது. இதோ நீராடிவிட்டு வருகின்றேன். நாம், இருவரும் துவாதசிப் பாரணையை ஏற்றிடலாம். என்று கூறி சென்ற ஸ்ரீதுர்வாச முனிவர் இன்னமும் திரும்பவில்லை. ஸ்ரீதுர்வாசருக்கோ 10,000த்திற்கும் மேற்பட்ட சிஷ்யர்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாக நீராடிவிட்டு வருவதென்றால்.....
ஆனால் மஹரிஷியின் திருவாக்காயிற்றே, மீறலாகுமா? ஆனால் காலமும் கரைந்து துவாதசிப் பாரணை நேரமும் நெருங்கிவிட்டதே! துவாதசிப் பாரணைத் தவறினால் யுகம் யுகமாக ஏற்று வந்த ஏகாதசி விரதத்திற்குப் பங்கம் வந்துவிடுமே! – அம்பரீஷன் துடித்தான்.. ஆனால் அதற்குள் புனிதமான துவாதசியின் அமிர்த நேரமும் நெருங்கிடவே ஸ்ரீமஹாவிஷ்ணுவைப் பிராத்தித்துக் கொண்டு மூன்று முறை துளசி ஜலம் அருந்தி துவாதசிப் பாரணையை நிறைவு செய்தான். உடனே சொல்லி வைத்தாற்போல் ஸ்ரீதுர்வாசர் வந்து நின்றார். நடந்ததை அறிந்தும் அறியாதவராய் ஸ்ரீதுர்வாசர் தனக்குரிய பங்கைச் செவ்வனே நடத்தினார்., அவர்பெற்ற திருவரம் யாதெனில் சினம் கொண்டு அச்சினத்தில் தான் அவருடைய தபோபலன்கள் பலகோடி மடங்காய்ப் பெருகும். என்னே அரிய வரம்! சினத்தில் சிவக்கும் சிவநெறிச் செல்வரான ஸ்ரீதுர்வாசர் பொங்கி எழுந்தார்..., “யாம் இல்லாமல் துவாதசிப் பாரணையை முடித்துவிட்டாயோ! என் சொல்லை மதிக்காமல் மிதித்து விட்டாயே, பிடி சாபம்” என்று சபித்திட, அம்பரீஷன் ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம் பிரார்த்தித்தான்..... “மஹாபிரபோ! தற்போது நான் தங்களிடம் என்ன வேண்டுவதென்பதே தெரியவில்லை. எதிரில் இருப்பவரோ தங்கள் உத்தம அடியாரான ஸ்ரீதுர்வாசர். என்னைக் காப்பாற்றுங்கள் என்று வேண்டினால் அது சுயநலத்தின் பாற்படும். எனவே எனக்கு எது நன்மையோ அதனையே தாங்கள் செய்வீர்கள் என்பதை அறிவேன். இந்தப் பிரார்த்தனையைக் கூட அடியேன் எழுப்பியிருக்கக் கூடாது. ஆனால் அந்த அளவிற்கு அடியேனின் உள்ளம் பக்குவப்படவில்லையே” என்று ஸ்ரீமஹாவிஷ்ணுவின் திருவடிகளில் வீழ்ந்து கதறினான்.

தர்ப்பையின் பெற்றோர் ஸ்ரீஆருண்டேஸ்வரர் மற்றும் ஆர்த்தி அம்பாள் மகனின் பெயர் சவிதாகா.

அதுவரை ஸ்ரீதுர்வாசரைத் துரத்திச் சென்ற சக்ராயுதம் அம்பரீஷனின் முன் சென்று நின்றிட மஹாராஜா சக்ராயுதத்தை வணங்கி, 18 முறை பூமியில் வீழ்ந்து நமஸ்கரித்திட சக்ராயுதம் ஸ்ரீதுர்வாசரைத் துரத்துவதைக் கைவிட்டது. என்னே அம்பரீஷனின் ஏகாதசி பூஜா பலன்! ஸ்ரீதுர்வாச மஹரிஷிக்கா இந்நிலை என்று எண்ணிடலாம். ஆனால் ஸ்ரீஏகாதசியின் மஹிமையை விளக்குவதற்காகவும், அம்பரீஷனின் ஏகாதசி விரத வைராக்கியத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்காகவும் ஸ்ரீதுர்வாச மஹரிஷியே இறை ஆணைப்படி தன்னை ஒரு பாத்திரமாக இப்புராணத்தில் படைத்துக் கொண்டார். பலகோடி தேவர்கள் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் ஸ்ரீசக்ர தரிசனத்தைப் பெற தவமிருந்தனர். ஸ்ரீசக்கரத்திற்கு அஞ்சியது போல் ஓடிச் சென்ற ஸ்ரீதுர்வாசரின் இத்தகைய செயலால் ஸ்ரீசக்ராயுதம் பல லோகங்களுக்கும் சென்று அங்கு அதன் தரிசனத்திற்க்காகப் பல யுகங்களாகக் காத்துக் கிடந்த பல்லாயிரக் கணக்கானோருக்குத் தரிசனம் தந்தது. இதுவரை நடந்தவற்றை நாம் அறிவோம். இதனைத் தொடர்ந்த புராணத்தை சித்தர்களின் இருடிகளின் புராணங்களிலேயே காண முடியும். ஸ்ரீமஹாவிஷ்ணு ஏவிய சக்ராயுதம் தன் காரணத்தைப் பூர்த்தி செய்யாமல் நின்றுவிட்டது. இதனால் அதன் உக்ரஹம் பல்கிப் பெறுகியது. பூலோகமே தாங்க இயலா அளவிற்கு அதில் அக்னிப் பிரவாகம் பொங்கியது. என் செய்வது?

Chess போர் விளையாட்டு போன்றது. எனவே, பொதுவாக இந்த விளையாட்டை சித்தர்கள் ஏற்பதில்லை.
சைபீரியாவில் ஸ்ரீசிவபெருமான் தினமும் வந்து ஆசமனம் செய்கின்றார். அப்போது சக்திகள் அந்த இடத்தில் பரவும். எனவேதான் ரஷ்யர்கள் Chess விளையாட்டில் சிறந்து விளங்குகின்றனர்.

அம்பரீஷனோ சக்ராயுதத்தின் அக்னிப் பிரவாகத்தைக் கண்டு அஞ்சினான். அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவனுடைய புனிதமான பக்திக்குக் கட்டுப் பட்டு ஸ்ரீசக்ராயுதம் ஸ்ரீதுர்வாசரை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டது. ஸ்ரீதுர்வாசரோ ஸ்ரீசக்ராயுதத்தின்  அக்னிப் பிரவாகத்தைத் துன்னுள் தாங்க இயலாது என்று கூறிவிட்டார். ஆனால் அம்பரீஷனின் அன்பு என்னும் ஆயுதத்தால் சக்ராயுதமும் அவரைத் தாக்காது இரங்கி நின்றது. அப்போது, ஸ்ரீசக்கரமே மஹரிஷியிடம் தம் சாயுஜ்யம் பற்றிக் கேட்டிட ஸ்ரீதுர்வாசரே முன்வந்து திருவாய் மொழிந்தார்!
“தாங்கள் திருஅருணாசல க்ஷேத்திரத்திற்குச் சென்றிடில் அங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீபூதநாராயணப் பெருமாள் அருள் பாலித்திடுவார்!” ஸ்ரீசக்ராயுதமும் திருஅருணாசலத் தலத்திற்குச் சென்று அங்கு ஸ்ரீபூதநாராயணப் பெருமாள் சந்நதியில் தவம் பூண்டிட, ஸ்ரீபூத நாராயணப் பெருமாள் தரிசனம் தந்து “அக்னி க்ஷேத்திரமான இந்த திருஅருணாசலத்தின் மஹிமையால்தான் உன் அக்னி ப்ரவாகம் கட்டுப்பட்டு நிற்கின்றது. “ஸ்ரீசக்ரேஸ்வரா! நீ ஸ்தம்பித்து நிற்பதற்கும் காரணமுண்டு. ஹரிஅம்சம் பொருந்தியவனாதலின் உன்னுடைய அக்னி ப்ரவாகத்தை எவராலும் தாங்க இயலாது. மோஹினி அவதாரத்தின் போதுதான் நீ மோஹினியின் திருக்கரங்களில் ஸ்ரீசக்ரமாய் அமரும் பாக்யம் பெற்றாய். எனவே அந்த அவதாரத்தின் அமிர்த ஸ்நானமே உன்னுடைய அக்னிப்ரவாகத்தைத் தணித்திடும்”.  ஸ்ரீமஹா விஷ்ணு மோஹினி அவதாரம் பூண்டு அமிர்தக் குடத்துடன் நின்ற மோஹினியூர்ப் பகுதியில் பல்குனப்ரவீணா என்ற க்ஷீரஸாகர தீர்த்தம் ஒன்றுண்டு. அதில் நீராடினால் உன் அக்னி ப்ரவாகம் கட்டுப்பட்டு நீ மீண்டும் தெய்வக் கரங்களில் சரணடைவாய் – என்று அருள்மொழி கூறிட,
ஸ்ரீசக்ராயுதமும் மோஹினியூர்ப் (திருமோகூர்) புனிதத் தலத்திற்குச் சென்று, தாமரைகள் நிறைந்த பல்குனப்ரவீணா எனப்படும் க்ஷீரஸாகரத் திருக்குளத்தில் ஸ்நானம் செய்திட (க்ஷீராப்தி புஷ்கரிணி) அங்குள்ள புனிதமான அரமரத்தடியில் ஸ்ரீஆப்த்சகாயராகப் பெருமாள் காட்சி தந்து ஸ்ரீசக்ரத்தை ஏற்றுக் கொண்டார். இது நிகழ்ந்த தினமே அந்த யுக யுவ வருட பங்குனி மாத கிருஷ்ண பட்ச (ஸ்ரீராம) நவமியாகும். எனவே வரும் (யுவவருட) ஸ்ரீராம நவமியன்று திருமோகூர்த் திருத்தலத்தில் புனிதமான அரச மரத்தைப் புதிதாக மருதாணியிட்ட கால்களுடன், தேன் கலந்த பால் செம்பினைச் சுமந்து குறைந்தது 108 முறை அடிப் பிரதட்சிணம் செய்து தேன் கலந்த பாலைக் குழ்ந்தைகளுக்குத் தானமாக அளித்திட வேண்டும். (குறைந்தது 9 படிப் பசும் பால், தேனுடன்)
திருமோகூர்த் திருக்கோயிலில் ஸ்வாமி, தாயாருக்கு வஸ்திரங்கள் சார்த்தி, அபிஷேக ஆராதனைகளுடன் நாம சங்கீர்த்தனம், பால் தானம், பானக தானம், அன்ன தானத்துடன் ஸ்ரீராமநவமியைச் சிறப்பாகக் கொண்டாடிட,
1. செய்வினை, பில்லி, சூன்யம், ஏவல் போன்ற கடுந்தோஷங்கள் நிவர்த்தியாகும்.
2. பல்குனி ப்ரவீணா எனப்படும் க்ஷீர புஷ்கரிணியில் நீராடிடக் கடும் நோய்களின் கொடுமை தணியும்
3.  சிக்கலான கோர்ட் விவகாரங்கள் எளிதில் பைசலாகும்.
4. ஏகாதசியை முறையாக அனுஷ்டித்திடாத பாவங்கள் நீங்கும்.
5. பிறர்மேல் கொண்ட வெறுப்பு, பகையினால் அறிந்தோ அறியாமலோ செய்த குற்றங்களின் கர்மவினைகளின் கொடுமை குறையும்.
6. பல வருடங்களாக இருந்து வரும் குடும்பச் சண்டைகள் தீர்ந்து உறவு சமூகமாகும்.

சனி பிரதோஷம்

சனி பிரதோஷம்
ஒவ்வொரு வருடத்திலும் வருகின்ற மஹா ப்ரதோஷங்களை (சனி ப்ரதோஷம்) வைத்து அவ்வருடத்தின் பலாபலன்களைச் சொல்லுகின்ற ஜோதிடப் பிரிவிற்கு திரயோதச பாவ கணிதம் என்று பெயர். நடக்கும் யுவ வருடத்தில் 4 மஹா ப்ரதோஷங்கள் அமைந்திருப்பதால் இதற்குப் பிரம்ம சிரஸ் மஹா ப்ரதோஷ வருடம் என்று பெயர்.  அந்தந்த வருடத்தின் மஹா ப்ரதோஷத்தின் வகைக்கேற்ப அவ்வருடத்தின் ப்ரதோஷ வழிபாட்டு முறைகள் மாறுபடுகின்றன. இத்தகைய அபூர்வமான பிரதோஷம் பற்றிய ஆன்மீக விளக்கங்களை நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம ஸ்வாமிகள் “பிரதோஷ மகிமை” என்னும் நூலில் விளக்கியுள்ளர். பொதுவாக யுவ வருடப் ப்ரதோஷங்களுக்கு பிரம்மசிரஸ் ப்ரதோஷம் என்ற பெயருடன் விளங்குவதால் இவ்வருடப் பிரதோஷ தினங்களில் ஈசனை நீலகந்தப் புஷ்பத்துடன் வெண்தாமரை மலர்களைச் சேர்த்து அலங்கரித்து வழிபடுவதுடன் நான்கு முக லிங்கம், நான்கு பட்டை லிங்கம், பிரம்ம லிங்கம் (திருஅண்ணாமலை), நான்கு லிங்க மூர்த்திகள் எழுந்தருளியுள்ள சிவ ஸ்தலம் – போன்ற திருத்தலங்களில் பிரதோஷ வழிபாடு மிகவும் சிறப்புடையதாகிறது. இதனால் திருமணத் தடங்கல்கள் நீங்குவதோடு காணாமல் போனவர்களும் மீண்டும் வந்து சேருவர்.
யுவ வருடத் தை மாத பிரதோஷங்களில் தயிர் ஏட்டில் தேனைச் சேர்த்து ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்து தானம் செய்திட எத்தகைய கடுமையான கப நோய்களும் தணியும். யுவ வருட மாசிமாத ப்ரதோஷங்களில் நெய்யுடன் சர்க்கரை கலந்து ஈசனுக்கு நைவேத்தியம் செய்து தானமாக அளித்திட மாந்தம், வயிறு, உப்புசம், சிறுநீரகக் கோளாறு நீங்கும். குறிப்பாக சென்னை – பொழிச்சலூர் ஸ்ரீஅகஸ்தீஸ்வர ஆலயம் இதற்கு ஏற்றதாகும்.
யுவ வருட பங்குனி மாதப் பிரதோஷங்களில் தேங்காய் சாதம், தக்காளி சாதம் நைவேத்தியமும் தானமும் சிறந்ததாகும், இதனால் மன நோய்கள், பைத்தியம், பித்தம் தீர்ந்திடும். கோயம்பேடு ஸ்ரீகுறுங்காலீஸ்வரர் கோவிலில் ப்ரதோஷ வழிபாடு மிகவும் உத்தமமானது என்பதை பிரதோஷ மஹிமை நூலில் விளக்கியுள்ளோம். முதன் முதலில் பிரதோஷ வழிபாடு தோன்றிய இவ்விடத்தில் முறையாக ஒரு பிரதோஷ வழிபாடு நடத்தினால் 1000 ஸ்தலங்களில் ப்ரதோஷம் நடத்தியதற்கு ஈடாகின்றது.

அடிமை கண்ட ஆனந்தம்

அடிமை கண்ட ஆனந்தம்
(நம் குருமங்கள கந்தர்வாவின் பாலபருவ குருகுலவாச அனுபூதிகள் ., செஞ்சிப் புனித யாத்திரை அனுபவங்களின் தொடர்ச்சி)
புலி சென்று மறைந்தாலும் புலியைப் பற்றியே கிலியிலேயே பல மணி நேரங்களைக் கழித்தான் சிறுவன். ஆனால் உள்மனமோ படபடவென்று ‘நம உக்ராய வீராய....’ என்ற மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருந்தது! .... “வாத்யார் என்ன சொன்னார்? பொழுதை வெட்டிப் பொழுதாக்காமல் ஏதேனும் இறைநாமத்தைச் சொல்லிக் கொண்டே இருக்கணும் தெரிஞ்சுதா?” –
“புலியைப் பற்றிய பீதியிலேயே மனசு லயிச்சுதுடுதே, ஆனா உள்ளூர வாத்யார் சொல்லிக் கொடுத்த மந்திரம் ஓடிக்கிட்டே இருகே!” சிறுவன் பல எண்ணங்களினூடே குழம்பினான். ஆனால் மந்திரத்தை மட்டும் விடவில்லை.

(பலவித மன அலைகளுக்கான காரணத்தைப் பின்னர் பெரியவரிடம் கேட்டறிந்தான் சிறுவன். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒன்பது வித மனங்கள் உண்டு. இவற்றில் ஒன்றே ஒன்றுதான் ஆதிமூல காரண சரீர மனம். இது தெய்வத்தை எண்ணியே இருக்கும். ஆனால் கர்ம வினைகளின் சேர்க்கை, செயல்கள், எண்ணங்கள் போன்றவற்றில் ஏனைய மனங்கள் உழன்று மூலாதார மனதினை தெய்வீகத்தில் செயல்படவிடாது அழுத்தி விடுகின்றன. ஏனைய எட்டு மனங்களில் நல்லெண்ணங்கள் கூடியவையும் உண்டு, ஒரே சமயத்தில் இரண்டு மூன்று மனங்கள் இயங்குவதும் உண்டு. உள்ளூர ஏதேனும் மந்திரம் ஜபிக்கப்பட்டிட, ஏதோ எண்ணத்தில் மனம் லயித்திருக்க, உடல் ஏதேனும் வேலையைச் செய்து கொண்டிருக்கும். தியான நிலையில் செவ்வேறு மனங்களை வரிசைப்படுத்தும் கலை ஒன்றுண்டு! இவற்றுள் புனிதம் நிறைந்தவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளும் நிலையே ஆழ்நிலை தியானம்! இதனைத் தக்க சற்குருவிடம் பயில வேண்டும்).

செஞ்சிமலை

.... கர்..... ரென்று ஏதோ.... தன்னைச் சுரண்டுவது போல் தோன்றிட, “முருகா!’ என்று அலறி அடித்துக் கொண்டு எழுந்தான் சிறுவன்! அருகில்..... ஒரு சிறு குரங்குக் குட்டி..! சிறுவன் தன்னைப் பார்க்கிறான் என்று தெரிந்ததும் மிலிட்டரி பாணியில் மிடுக்கான ஒரு சல்யூட்.. நெடுநாள் கழித்துச் சிறுவனின் முகத்தில் ஒரு சிறு கீறலாய்ப் புன்னகை இழைந்தது! சிறுவன் வியந்து நின்றான். இனம் புரியாத திகைப்பின் ஊடே சற்று மகிழ்ச்சியான இழைகளும் பின்னின! இதுவே பெரிய குரங்காயிருந்தால் நடந்திருப்பதோ வேறு! விண்ணுக்கும் மண்ணுக்குமாய்ச் சிறுவன் கூத்தாடி ஒரு மஹா பிரளயத்தையே உருவாக்கியிருப்பான்!
ஆனால்....... அந்த ஆனந்தமய ஆலைகள் ஒரு நிமிடம் கூடத் தங்கவில்லை.... “இது குட்டிதானா.... வழக்கம் போல் மாயா ஜால உருவமா?” 
இந்த எண்ணம் வந்தது தான் தாமதம், சிறுவன் உடனே உஷாரானான். நெற்றியில் சந்தனக் கீற்று, குங்குமம், கழுத்தில் உத்ராட்சம், இடுப்பில் அரைஞாண் கயிறு.. அனைத்தும் இருக்கின்றனவா என்று சரிபார்த்துக் கொண்டான்! ஏனென்றால் அந்த அடர்ந்த காட்டில்.. மலைப் பகுதியில்.. இவையே சிறுவனைக் காக்கும் இரட்சைகள்! ஆழ்ந்த உள் மனதில் தெளிவான நீரோடை போல் மெல்லியதாக மந்திர ஓட்டம் நிகழ்வதை அவ்வப்போது சரிபார்த்துக் கொண்டான் சிறுவன். ஏனென்றால் இதுதானே அவனுடைய தற்காப்புக் கருவி! 
‘இதுவும் புலிபோலத் தீங்கு செய்யுமா?’ என்று சிறுவன் எண்ணியவுடனேயே அந்தக் குரங்குக் குட்டிக் கைகளை அசைத்து ‘இல்லையில்லை, நீ நினைப்பது போலில்லை’ என்ற பாவனையில் சைகை காண்பித்த தோடன்றி, தரையில் கைகளைத் தட்டிச் சத்யமும் செய்தது!
சிறுவன் அதிசயித்து நின்றான்! ... அவனுடைய அடுத்த டூட்டி..... பெரியவர் மேலிருந்த வஸ்திரத்தை நன்றாக அலசி அவர் திருஉடலைத் துடைத்து மீண்டும் அலசி அவர் திருமேனியில் சார்த்திட வேண்டும்.. ஆனால்.. இந்தக் குட்டிக் குரங்கை இங்கேயே விட்டு விடலாமா?
‘சூச்சூ... போ...போ....’ என்று பல முறை விரட்டியும் அது செல்வதாக இல்லை. ரொம்பவும் அதிர்ந்து பேசி விரட்டினாலோ அக்குரங்கு பெரியவரின் உடலைச் சுற்றி மூன்று முறை வலம் வந்து அவர் காலடியின் கீழ் மூன்று முறை குட்டிக் கரணம்  அடித்து ஒருவித அசட்டுச்சிரிப்புடன் அருகில் வந்து நிற்கும்!

கறவை நின்ற மாடுகளை ஒருபோதும் அடி மாட்டுக்கு விற்கவே கூடாது. பெற்ற தாயைப்போல பாவித்து, இறுதிவரை பாதுகாக்கவும். இறந்து விட்டால், வீட்டுத் தோட்டத்திலேயே புதைத்து, அதன்மேல் தென்னம்பிள்ளையை வைத்து வளர்க்க வேண்டும் அல்லது பசுக்களைப் பராமரிக்கும் பசுமடங்களில் சேர்த்து விட்டு, தொடர்ந்து பராமரிக்கத் தேவையான தட்சணையைக் கொடுத்துவர வேண்டும்.

“இதைப் பெரியவரின் அருகே விட்டுட்டு நாம் எப்படி அந்த சுனைக்குச் செல்வது?” – சிறுவன் எண்ணியவுடனேயே அது உடனடியாகச் சுனை செல்லும் திசை நோக்கிச் சில அடிகள் நடந்து திரும்பிப் பார்த்து வருமாறு சைகை காட்டியது. ‘கவலைப்படாதே! நான் ஒன்றும் செய்ய மாட்டேன்., உனக்குச் சந்தேகமாயிருந்தால் நானே உனக்கு முன்னால் நடந்து வந்து விடுகிறேனே’ – என்று அக்குரங்கே சொல்வது போலிருந்தது. சிறுவனுக்கு மிகுந்த ஆச்சரியமாகிவிட்டது.
“என்ன இது, நாம் எண்ணுமுன் அதனை இது புரிந்து கொண்டு விடுகின்றதே! இது போகவும் மாட்டேனெங்கிறது! இதை விரட்டியடிக்கவும் முடியவில்லை. மடியில் பிள்ளைப் பூச்சியை வைத்துக் கட்டிக் கொண்டது போலிருக்கிறதே! இதை வைத்துக் கொண்டு வேறு மாரடிக்க வேண்டுமா, இருக்கின்ற புலி பயம், பிசாசு பயம் எனக்குப் போறாதா? வருவது வரட்டும், இதையே பார்த்துக் கொண்டிருந்தால் நம் காரியங்கள் நடக்காது! இதன் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டே நாம்பாட்டுக்கு நம் வேலையை முடிக்க வேண்டியது தான்’ – என்று எண்ணி ஒரு தீர்கமான முடிவிற்கு வந்த சிறுவன், குரங்கு முன் சென்றிட துணியை எடுத்துக் கொண்டு சுனையை அடைந்தான். துணியை நன்றாகக் கசக்கி, அலசிப் பிழிந்து எடுத்துக் கொண்டு திரும்பிட, குரங்குக் குட்டியைக் காணோம்.
‘அடடா, நம் வாத்யாரின் உடலை ஏதேனும் செய்துவிட்டதா’ என்ற அச்சம் வந்தவுடன் சிறுவனின் கால்கள் தாமாக விரைந்தன. நல்லவேளை, சிறுவன் சிறிது தூரம் ஓடியவுடனேயே ‘கெக்கெக்கே!’ என்ற சிரிப்புடன் குரங்கு பின்னால் வாலாட்டி நின்றது. சிறுவன் நின்றுவிட்டான்! ‘தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்’ என்ற உணர்வில், அடி உதவுவது போல் அண்ணன், தம்பி உதவமாட்டான், சாம, தான, பேத, தண்டம் போல் அடியில் இறங்க வேண்டியது தான், இந்தக் குரங்கு என்னதான் சாதுவாக இருந்தாலும் என்ன செய்யுமோ, ஏது செய்யுமோ என்று பயந்து பயந்து எவ்வளவு நேரம்தான் இருப்பது’ –என்று நினைத்துக் குரங்கை அடித்து விரட்ட முடிவு செய்தவுடன் அவன் கண் முன்னரே, அது சிட்டாய்க் குதித்தோடி மறைந்தது! சிறுவனுக்கு ஒரே குதூகலம், ஆனால் அதுவும் சில நிமிடங்களுக்கே (வழக்கம் போல்) நீடித்தது, ஏனெனில் சிறுவனின் முன்னால் இப்போது ஒரு பெரிய கழியுடன் குதித்து நின்றது குரங்கு!  கழியைச் சிறுவனிடம் நீட்டித் தன் முதுகையும் காண்பித்தது.
“இக்கழியால் என்னை நாலு சாத்து சாத்திவிடு, உன் ஆசையும் நிறைவேறும்!”- குரங்கு சொல்லாமல் சொல்கின்றதோ! சிறுவன் விக்கித்து நின்றான்.
“சொல்வதனைத்தையும் புரிந்து கொள்ளும் அற்புதக் குரங்கு! இதன் நடவடிக்கைகளைப் பார்த்தால் சாதுவாகத்தானிருக்கிறது! பெரிதாக, ஏன் சிறியதாகக் கூட ஒரு பிரச்னையையும் உருவாக்கவில்லை. கடவுளாகப் பார்த்து நமக்குத் துணையாக அனுப்பியிருப்பாரோ...” சிறுவன் பல எண்ணங்களில் மிதந்தான். மீண்டும் ஒரு முடிவிற்கு வந்து அக்குரங்கினிடம் கழியைப் பிடுங்கி... ஓங்கி... குரங்கு நன்றாக முதுகை வளைத்துக் காட்டிக் குனிந்து நின்றிட... கழியை அதன் முதுகில லேசாக உரசி... கழியினை.. பலங்கொண்ட மட்டும்.. தூக்கி எறிந்தான்.!
கெக்கெக்கே.... குரங்கு கை தட்டிச் சிரித்தது! சிறுவனுக்கு சிரிப்பு முட்டிக் கொண்டு வந்தாலும் அதனை மிகவும் கஷ்டப்பட்டு ‘எரிச்சலாய்’ வெளிக்காட்டினான்! வேறு வழி! குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலாகுமா?
சிறுவன் பெரியவரின் உடலை நன்றாகத் துடைத்துவிட்டு மீண்டும் சுனைக்குச் சென்று, துணியைக் கசக்கி, அலசிப் பிழிந்திட..... குரங்குக் குட்டி, பிழிந்த நீரை உள்ளங்கையில் வாங்கித் தன் தலையில் தெளித்துக் கொண்டது. சிறுவன் அகல விரிந்த கண்களுடன் குரங்கைப் பார்த்து அமைதியாக இருந்தான்! குரங்கு அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை. இரண்டாம் முறையும் துணியில் பிழிந்த நீரை பவ்யமாகத் தன் கைகளில் வாங்கி....சிறுவன் முன்னாலேயே மூன்றடி மேலே குதித்து..... அவன் தலையில் அப்புனித நீரைத் தெளித்தது!
சிறுவன் வெட்கித்து நின்றான். அவனெதிரே இப்போது குரங்கு இரண்டு கைகளையும் தாடையில் வைத்துக் கொண்டு ‘ஏதேனும் அதிகப் பிரசங்கித்தனமாய்ச் செய்துவிட்டேனோ’ – என்ற பாவனையில் கல்யாணப் பெண்போல் குனிந்து நின்றது!
‘நிச்சயமாக இது சாதாரணக் குரங்கல்ல, நமக்குத் துணையாக அனுப்பப்பட்டது தான்!’- என்ற எண்ணம் அவ்வப்போது தலை தூக்கினாலும் சிறுவனுக்கு ஆழ்ந்த உள்ளத்தில் ஒரு பீதி இருந்து கொண்டே இருந்தது!
“இக்குரங்கும் ஓர் ஏவலாக இருந்து நம்மைக் காப்பதுபோல் ஏமாற்றி விடுமோ!” (இத்தகைய அனுபவங்கள் சிறுவனுக்கு ஏன் ஏற்பட்டன என்பதை அன்பர்கள் ஆத்ம விசாரம் செய்து தெளிவு பெற வேண்டும்.) சற்குரு அருகில்  இருக்கையில் சீடனுக்கு இத்தகைய உணர்வுகள் தேவைதானா?
குரு-சிஷ்ய உறவு என்பது குருவின் மேல் பரிபூரண நம்பிக்கை வைத்து இறுதியில் அனைத்தும் குரு நடத்தி வைப்பதே என்ற மனப்பான்மை வரும் வரையில் எந்த சற்குருவும் தன்னை அதுவரை ஆன்மீக வழிகாட்டி என்றே உணர்த்தி வருவார்! அவ்வப்போது ஏற்படும் சஞ்சலங்களைக் கொண்டு குருவின்மேல் பரிபூரண நம்பிக்கை இன்னமும் ஏற்படவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்! இதற்காக சற்குருவே பல கடினமான சோதனைகளைத் தருவதுண்டு. ஒவ்வொரு சோதனையின் முடிவிலும் குருவின்மேல் உள்ள ஆழ்ந்த நம்பிக்கை வலுப்பெறுகிறது! புனிதமான, உத்தமமான நம்பிக்கை இவ்வாறகவே ஏற்படும். அதுவரையில் இன்பமோ, துன்பமோ அவரே தந்தருள்வது என்ற தெய்வீக உணர்வு உருவாகும். இதுவே குரு-சிஷ்ய உறவின் உன்னத நிலை! இதிலும் பல உத்தம நிலைகளுண்டு! ஆனால் பரிபூர்ண நிலையிலும் பல சோதனைகள் தொடரும்...!

ஸ்ரீகாயத்ரீ தபஸ்

ஸ்ரீகாயத்ரீ தபஸ் - ஸ்ரீகாயத்ரீ முத்திரைகள்
ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் முழுப் பலன்களைப் பரிபூர்ணமாகப் பெறுவதற்கும் தியானத்தில் சிறந்த நிலைகளை அடைவதற்கும், இதுவரையில் ஆன்மீக ரகசியங்களாக விளங்கிய (சித்தபுருஷர்களின்) எளிய ஸ்ரீகாயத்ரீ முத்திரைகளை இத்தொடரின் மூலம் அனைவரும் பெற்றுப் பயனடைந்து நல்வாழ்வு பெறும் பொருட்டு, நம் குருமங்களகந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் எடுத்துரைக்கின்றார்கள்
தியானாக்ஷி ஸ்ரீகாயத்ரி முத்திரை

முதலில் பத்மாசனமிட்டு அமர்ந்து கொள்ளவும். மூச்சினை நிதானமாக உள்ளிழுத்து, நிறுத்தி மெதுவாக வெளிவிடவும். இவ்வாறு குறைந்தது பன்னிரண்டு முறை செய்திடில் தேகமும்  மனமும் வெளிப்புறச் சூழ்நிலைகள், அலுவலக, குடும்ப, இதர துன்பங்களின் சுழற்சியிலிருந்து சற்றே விடுதலை பெறும். பத்மாசனத்துடன் கூடிய இந்தப் பிரணாயாமத்திற்கு அத்தகைய அற்புதமான ஆன்மீக சக்தி உண்டு. இந்த பத்மாசன –லகு- பிராணாயாமப் பயிற்சியை ஒவ்வொரு முத்திரைக்கும் முதன்மையான ஆரம்பநிலைப் பாடமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறோம்.
பிராணயாமத்தின் போது, ஆண்களாயின் முதலில் வலது நாசியில் (பிங்கலை சுவாசம்) மூச்சை உள்ளிழுத்தும், பெண்களாயின் இடது நாசியில் முதலில் மூச்சை உள்ளிழுத்தும் பிராணாயாமத்தைத் தொடங்குதலே சிறப்பானது! இப்போது ஏழாவது முத்திரையான தியானாக்ஷியைக் காண்போமா! கைகள் இரண்டையும் ஒன்றுக்குள் ஒன்று செருகினாற்போல் கோர்த்துக் கொள்ளவும். இடது உள்ளங்கை உட்புறம் நம்மைப் பார்ப்பது போலவும் வலது உள்ளங்கை வெளிப்புறம் அமைந்தும் கைவிரல்களைப் பின்னிக் கோட்த்திடல் வேண்டும். இவ்வாறு உள்ளங்கைகளை மாற்றி விரல்களை ஒன்றுக்குள் ஒன்றாக நுழைத்து இறுத்திப் பிடித்திருக்கையில் வலது ஆள்காட்டி விரல், இடது சுண்டு விரலையும், இடது ஆள்காட்டி விரல், வலது சுண்டு விரலையும் தொட்டிருத்தல் வேண்டும். இந்நிலையில் கைகளைப் பிரிக்காமல் தலைக்கு மேல் நன்றாக உயர்த்திப் பிடிக்க வேண்டும். தலையை உயர்த்திக் கண்களின் பார்வையை ஸ்திரப்படுத்தி விரல்களின் மேல் படரவிட வேண்டும். மனதில் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இடது கை சுண்டு விரலில் பார்வையைத் தொடங்கி ஒவ்வொரு விரலின் ஓர விளிம்பின் வழியே ஏறி மறுவிளிம்பில் இறக்கி அடுத்த விரலில் தொடர வேண்டும்.

இடது கட்டை விரல்
வலது சுண்டு விரல்
இடது ஆள்காட்டி விரல்
வலது மோதிர விரல்
இடது நடு விரல்
வலது நடு விரல்
இடது மோதிர விரல்
வலது ஆள்காட்டி விரல்
இடது சுண்டு விரல்
வலது கட்டை விரல்

இட்து கட்டை விரலில் பார்வையைத் தொடங்கி மேற்கண்ட வரிசையில் வலது, இடது கைவிரல்களின் விளிம்புகள் வழியே பார்வையைச் செலுத்தி வலது கட்டை விரலில் முடிக்க வேண்டும்.
மீண்டும் வலது கட்டை விரலில் பார்வையைத் துவக்கி மேற்கண்டவாறு கீழிலிருந்து மேலான வரிசையில் வல, இடது கை விரல்களின் வழியே பார்வையைச் செலுத்தி இடது கை கட்டை விரலில் முடிக்க வேண்டும். இதுவே தியானாக்ஷி காயத்ரீ முத்திரையாகும்.
ஒரே விரலின் விளிம்புகளில் இரு முறை பார்வையை மீண்டும் ஓட்டுவதில் தவறில்லை. சங்கிலிபோல் வரிசையாக வல, இடது விரல்களில் மாறி மாறிப் பார்வை சென்று அனைத்து விரல்களிலும் ஸ்ரீகாயத்ரீ மந்திர உச்சாடனம் கலந்த பார்வை செலுத்தப் பெற்று அனைத்து விரல்கள் மட்டுமன்றி விரல்கள் மூலம் அனைத்து அவயங்களுக்கும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் சக்தி செலுத்தப்பட வேண்டும் என்பதே முக்யமானதாகும்.
எளிமையாகத் தோன்றிடினும் தோள்களில் வலி எடுக்கக் கூடும். வலியிருப்பின் சற்றே நிறுத்தித் தொடரவும். முக்கியமான விதிகள் :
1. தலையை அசைக்காமல், விழிகளை மட்டுமே அசைத்தல் வேண்டும்.
2. உதட்டசைவின்றி மனதினுள் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபித்திருத்தல்.
3. 20 நிமிடத் தொடர் பயிற்சி நல்ல பலன்களைத் தரும்.

பலன்கள்
தியானாட்சி என்றால் கண்களால் தியானம் என்று பொருள்படும். ஆனால் இவ்வரிய தியானத்தில் கண்கள் திறந்த நிலையிலிருக்கும்!
காமத்தை வெல்ல,. முறையற்ற காம எண்ணங்களை அறவே அகற்றிட இத்தியானம் பெருமளவில் உதவுகிறது. முறையான காமமின்றி எந்த ஜீவ வாழ்க்கையும் கிடையாது. காம எண்ணங்களை முறைப்படுத்தி, நல்வழியில் இருப்பதே உத்தமமான இல்வாழ்க்கையின் கருப்பொருள். காமத்தைக் கட்டுப்படுத்தினால் அது பீறிட்டுக் கிளம்பும். முறைப்படுத்தினாலோ அறநெறி மிகுந்த வாழ்க்கை மிளிரும். முறையற்ற காமத்தினால் மூச்சுக் காற்றின் அளவு குறைந்து, சுவாசங்கள் அதிகமாகி ஆரோக்யம் சீர்குலைந்து ஆயுளும் குறையும். இந்த ஆபத்திலிருந்து நம்மைக் காக்கும் அருமருந்தே தியானாக்ஷி தியானமாகும். எவ்வாறு?
பெரும்பாலும் கண்களே முறையற்ற காம எண்ணங்களுக்கு அடிகோலாகும். கெடுதலான இச்சையுடன் கூடிய தீய காரியங்களுக்குக் கைகளே மூலகாரணமாகின்றன. முறையற்ற காமம் என்றால் உடலாசை மட்டுமின்றி பொன், பொருள் போன்றவை மேலான அனைத்து விதமான தீய ஆசைகளும் அடங்கும். தியானாக்ஷி முத்திரையில் ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்தியை மனதில் ஜபித்திட, கண்களால் அதன் சக்தியினை விரல்களுக்கு ஊட்டுகின்றோம். இவ்வாறு ஒவ்வொரு அவயத்திலும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் சக்தி பதிந்திட ஆண்/பெண் இன வேற்றுமை பாராட்டும் மனப்பான்மை மறைந்து அனைத்தும் இறைவனின் ஜீவசக்தியே என்பதை உணரும் பக்குவம் கிட்டும்.
குறிப்பு : ஸ்ரீகாயத்ரீ முத்திரையைப் பற்றி விளக்கங்கள் வேண்டுவோர் ஸ்ரீஅகஸ்திய விஜயம் அலுவலகத்துடன் கடிதம் மூலம் தொடர்பு கொள்ளவும்.

மலைக்கோட்டை மகிமை

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குள மஹிமை
மூர்த்தி, தீர்த்தம், தலம் முறையாக திரிசிப்போர்க்கு முக்தி நிச்சயம். இவ்வகையில் உச்சிப் பிள்ளையார் தல வரலாற்றை அளித்து வரும் நம் குருமங்களகந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் உச்சிப்பிள்ளையார் கோயில் தெப்பக்குள தீர்த்த மஹிமையாக தம் சற்குரு நாதரிடமிருந்து பெற்றதை இனி காண்போம்.
சிவலீலை

திருச்சி தெப்பக்குளம்

எம்பெருமானாகிய சிவபெருமான், ஈஸ்வர பூஜையை முறையாகச் செய்து வழிபட வேண்டுமென்று தேவர்களிடமும், முனிவர்களிடமும் எடுத்துக் கூறிட, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு போன்ற தெய்வ மூர்த்திகளும் ஸ்ரீஅகஸ்தியர் முதலான ரிஷிகளும், முனிவர்களும் சிவ ஆகம பூஜைகளை விரிவாக எடுத்துரைக்குமாறு சிவபெருமானையே வேண்டினர். அவர்கள் வேண்டுகோளை ஏற்று எம்பெருமான் பூலோக மக்களுக்கு உகந்த ஆகம பூஜை முறைகளை அனைத்து ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் தன் திருவாய் மலர்ந்து விளக்கிக் கொண்டிருந்தார். பார்வதி, முருகப் பெருமான் உள்ளிட்ட பலரும் சிவபூஜை மஹிமைகளைக் கேட்டு ஆழ்ந்த பரவரசத்தில் இலயித்திருந்தனர். அச்சமயம் பார்வதி அம்மையார் தன் தலையைத் திருப்பி வேறுபுறம் சற்றே பார்த்திட, சற்றே கவனக் குறைவால் நேர்ந்த பார்வதி தேவியின் சாந்த நிலை பிறழ்ந்தமையைக் கண்டு கடிந்து கொண்ட சிவபெருமான் அன்னையைச் சபித்து விட்டார்.
தாயைச் சபித்ததைத் தாங்க முடியாமல் கந்தவேள் தன் தந்தையான சிவபெருமானிடம் அன்னையை சபித்தது தவறாகும் என்று வாதிட்டார். முருகன், பார்வதி தேவிக்கு பரிந்து பேசியதைப் பொறுக்காமல் சிவபெருமான் முருகப் பெருமானையும் அவர் பேச்சுத் திறமையை இழக்குமாறு சாபமிட்டார். பார்வதிக்கும் முருகப் பெருமானுக்குமே இத்தகைய சோதனைகள் என்றால் மானிடர்கள் சிவ ஆகம பூஜைகளில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்! இதை உணர்த்தவே தெய்வ மூர்த்திகளும் நமக்காக சாபத்தை ஏற்று நல்வழி காட்டி நம்மை நெறிப்படுத்தப் பெருந் துன்பச் சுமைகளை ஏற்கின்றனர். தேவர்களும், ரிஷிகளும், பிரம்மா, திருமால் அனைவரும் பார்வதி தேவியும், முருகப் பெருமானும் பெற்ற சாபத்தால் மனம் வருந்தி அவர்கள் தவறுகளைப் பொறுத்தருள இறைவனிடமே வேண்டினர். அவர்கள் முறையீடுகளைக் கேட்ட எம்பெருமானும் மனமிரங்கி அவர்களுக்கு பிராயச் சித்தம் அளிக்க முன் வந்தார். எத்தகைய பிராயசித்தமோ! “சிவ பூஜையில் தியானம் கலையாது அற்புத நிலையில் திகழ்ந்த ஸ்ரீகணபதி மூலமே தாயும், இளையவனும் பிராயசித்தம் அடைவர்” – என்பதே அது!

ஸ்ரீசெவ்வந்தி விநாயகர்
திருச்சி மலைக்கோட்டை

ஸ்ரீவினாயகர் விஸ்வரூபம் கொண்டார். ஜோதி சொரூபமாய் எம்பெருமான் தியானத்தில் லயித்திருந்த இடத்தில் ஓம்காரப் பீடமிட்டு அமர்ந்தார். தம் துதிக்கையை ஆதி சிவனின் சிரசின் மேல் குடையாகக் கவிழ்த்துப் பிடித்திட, சிவனின் ஜடாமுடியில் பொங்கும் கங்கை பிரவாகத்தால் துதிக்கையில் பட்டுக் குடை மழையாய்க் கீழ் வழிந்து சிவனையே அபிஷேகித்தது. அனைத்து தெய்வ மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், சித்தர்களும், மஹரிஷிகளும் இவ்வரிய காட்சியைக் கண்டு உளம்பூரித்தனர். அவ்வபிஷேக நீர் வழிந்தோடி திருச்சிராப்பள்ளியில் அமுதக் குளமாய் மலர்ந்தது.
சிவபெருமானும் “என் முத்தான கணபதியின் அபிஷேகத்தால் மனம் குளிர்ந்தேன். என் ஜடாமுடி கங்கையும் அரங்கனின் காவேரியும் ஊறி இணைந்து அது முத்தாழக் குளமாக திரிசிராப்பள்ளியில் அமைந்திடும். அதில் நீங்கள் இருவரும் முதலில் நீராடி ஸ்ரீகணபதியை அபிஷேகித்து அங்கு தாயுமானவராய் உறையும் எமக்கும் அபிஷேகம் செய்வீராக! எமக்கு மேல் தும்பிக்கையான் நின்று எம் உச்சியில் அபிஷேகித்தமையால் திரிசிர மலையின் மேல் உறையும் எம்முடைய தாயுமானவரூபம் விளங்கும் மலைமேல் உச்சிப் பிள்ளையாராய் அமருவான்” – என்று அருள்பாலித்தார். ஈசனின் கட்டளையை ஏற்று அன்னை பார்வதி தேவியும் கந்தவேளும் முத்தாழக் குளத்தை அகழ்ந்து எடுத்தனர். ஆழ மூழ்கினால் தான் முத்தைப் பெறலாம். அவ்வாறே சிவ ஆகம பூஜை முறைகளை நம்பிக்கையுடனும் சிரத்தையுடனும் இயற்றி சிவலோக பதவியாகி முத்தைப் பெறலாம் என்னும் தத்துவத்திற்கு எடுத்துக் காட்டாக முத்தாழக் குளத்தை நிறுவினர் உமையம்மையும் கந்த வேளும்.
தாயும் தமையனும் அற்புத பணியாற்றிக் கொண்டிருக்க அதைப் பார்த்து சும்மா இருப்பாரா உச்சிப் பெருமான். முத்தாழக் குளத்தின்று சீரான சரப்படிக்கட்டுகளை அமைத்துக் கொடுத்தார் உச்சிப் பிள்ளையார். இந்தத் திருப்பணிகள் அனைத்தையும் தனது செந்தாமரைக் கண்களால் தரிசித்து பெரு மகிழ்வடைந்தார் அரங்கநாதப் பெருமான். தான் அரவணையில் துயில் கொள்ள வழி செய்த உச்சிப் பிள்ளையாருக்கு உதவும் வகையில் புனித காவிரியின் நீரைத் தன் சங்கால் முத்தாழக் குளத்திற்கு வழி கூட்டினார்.
என்னே உச்சிப்பிள்ளையார் தெப்பக்குள தீர்த்தத்தின் மஹிமை!
அரங்கநாதன் சங்கால் கூட்டுவித்ததால் இக்குளம் அரங்கன் சங்கு தீர்த்தம் என்றும், முருகன் பேச்சளந்தான் தீர்த்தம் என்றும், தொப்பையப்பன் படி தீர்த்தம் என்றும், அழகம்மை ஆகம தீர்த்தம் என்றும் சித்தர்களால் அழைக்கப்படுகிறது.

உடலாசனப் பிரதட்சிணம்

திருஅண்ணாமலை கிரிவல மஹிமை. - உடலாசனப் பிரதட்சிணம் 
ஓரவஞ்சனை, பொறாமை குரோதம், முன்விரோதம் காரணமாக ஒருவருடைய பதவியைப் பறித்தல் அல்லது சதி/சூழ்ச்சி செய்து பதவிலியிருந்து ஒருவரை நீக்குதல்.
மேற்கண்ட துன்பங்களுக்குப் பிராயச்சித்தமாக திருஅண்ணாமலை கிரிவலமும் குறிப்பாக உடலாசனப் பிரதட்சிணமும் விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 90 அடி தூரமேனும் இம்முறையில் பிரதட்சிணம் செய்ய வேண்டும். உடலாசனப் பிரதட்சிணமாகக் கிரிவலம் முழுதும் வருவது சிறந்தது. குறிப்பாக இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், எம தீர்த்தம், சிங்கமுக தீர்த்தம், சிவராஜ சிங்க தீர்த்தம், நிருதி தீர்த்தம், வாயு தீர்த்தம், குபேர தீர்த்தம் போன்ற தீர்த்தப் பகுதிகளில் உடலாசனப் பிரதட்சிணமும் சிறந்ததாகும். இத்தகைய பிரதட்சிணத்திற்குப் பின் ஏழைகளுக்கு பாய், படுக்கை, தலையணைகள் தானமாக வழங்க வேண்டும். ஊனமுற்றோர்க்கு சக்கர வண்டிகளை அளித்தல் மிகச் சிறந்த பரிகாரமாகும்.
அடிதாண்டும் பிரதட்சிணம்
அடிப்பிரதட்சிணம் போல அடி தாண்டும் பிரதட்சிணத்தில் தாண்டித் தாண்டி நடந்து முன்காலின் பின்பகுதியிலிருந்து அடுத்த அடியைத் தாண்டி வைக்க வேண்டும். அதாவது நடையை எட்டி எட்டி வைத்து முதல் அடியின் பின் விளிம்பிலிருந்து அடுத்த அடியைத் தொடர்வது அடி தாண்டும் பிரதட்சிணமாகும். இத்தகைய பலவகைப் பிரதட்சிணங்கள் சமீப காலம் வரை இருந்தன. ஆனால் இவற்றின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்வாரின்றி மறைந்து வருகின்றன.
அடியை எட்டி எட்டி வைத்து, நடைப் பந்தயம் (walking race) போலான இந்த அடி தாண்டும் பிரதட்சிணம் ஏன், எதற்காக, எவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டது? அடி தாண்டும் பிரதட்சிணத்தில் சுவாசம் வேகமாக ஓடும். ஒரு சாதாரண முறையில் காலாற மெதுவாக கிரிவலத்தில் ஒருவர் ஏற்று – விடும் சுவாசங்களை விட இந்த அடி தாண்டும் பிரதட்சிணத்தில் பன்னிரண்டு மடங்கு அதிகமான சுவாசங்களை ஏற்று விட வேண்டும். கிரிவலத்தில் மஹான்கள்/சித்தர்கள் மேல் படும் காற்று, திருஅண்ணாமலையின் மலை மேலிருந்து வரும் அபூர்வமான அற்புத சக்தி வாய்ந்த மூலிகைக் காற்று போன்றவற்றை அடி தாண்டு பிரதட்சிணத்தில் பன்னிரண்டு மடங்கு அதிக அளவில் உட்சுவாசம் செய்கிறான். அத்தகைய அபரிமிதமான தெய்வீக சக்தியை உள்ளிழுப்பதால் உடல் நல் ஆரோக்கியத்தையும் ஆன்மீக சக்தியையும் பெறுகிறது. இந்த அடி தாண்டுப் பிரதட்சிணத்தைச் செய்வோர்க்கும், வாயு மண்டல தேவதைகளும், மஹரிஷிகளும் விசேஷமாக அருள்பாலிக்கின்றனர். சில வாயுப் பிரமாணங்கள் திடப் பொருள்போல் ஆங்காங்கே மண்டலங்களாக வானில் தங்கியிருக்கும். தரையிலிருந்து சுமார் 12 அடி வரை இந்த வாயு மண்டலங்கள் சூட்சுமமாக, கண்ணுக்குத் தெரியாமலிருக்கும். அடிதாண்டும் பிரதட்சிணத்தில் தேகமானது இவற்றில் வேகமாக உராய்வதால் அவற்றின் தெய்வீக சக்தி உடலில் உரசி நன்மை பயக்கும். காலால் செய்கின்ற பாவங்களுக்கு அடி தாண்டும் பிரதட்சிணம் சிறந்த பரிஹாரமாகும்.
1. காலால் பெரியோர்களை / குழந்தைகளை உதைத்தல்
2. அறிந்தோ, அறியாமலோ திருஷ்டிக் கழிவுகளை உப்பு, மிளகு, அரிசி, சாண விரட்டி, பூசணிக்காய் ஆகியவற்றை மிதித்தல்.
3. கார், ஸ்கூட்டர் போன்றவற்றில் பயணம் செய்யும்போது விக்ரஹங்கள், ஸ்வாமிப் படங்கள், சமித்து, மூலிகைகள் போன்றவற்றைக் காலடியில் வைத்துக்கொண்டு (மிதித்தவாறே) பிரயாணம் செய்தல்
4. பசு, மாடு, நாய் போன்ற பிராணிகளைக் காலால் உதைத்தல்
5. திருமணமான பெண்கள் கால்களில் மருதாணி, மெட்டிகளில்லாமல் இருத்தல், வெளிச் செல்லுதல்
6. பலவகை அக்னிகளைக் காலால் மிதித்து அணைத்தல்
7. அவசர கோலமாக சில பணிகளைச் செய்து அவதிப்படுதல் – குறிப்பாக அவசரமாக, நீதிபதிகள் தவறாகத் தீர்ப்பளித்தால் அது கடுமையான தீவினைகளைத் தரும்.
8. பிறரை அலட்சியமாகப் பேசுதல், அவமரியாதை செய்தல், தூக்கியெறிந்து பேசுதல், வேண்டுமென்றே அலுவலகப் பொருட்களை உடைத்தல் ஆகியவற்றால் சேரும் கர்மங்கள்
- போன்ற தீவினைகளுக்குப் பரிஹாரமாக திருஅண்ணாமலையில் “அடி தாண்டும்” பிரதட்சிணம் செய்தல் வேண்டும்!
நுனிகால் அடிதாண்டு பிரதட்சிணம் ; குதிகால் அடிதாண்டு பிரதட்சிணம்
இவ்விரண்டும் “அடி தாண்டும்” பிரதட்சிணத்தின் இருவகைகளாகும். அடி தாண்டும் பிரதட்சிணத்தில் முதல் அடியின் நுனிக் காலில் அடுத்த அடியை வைக்க வேண்டும். குதிகால் அடி தாண்டும் பிரதட்சிணத்தில் முதல் அடியின் குதிகால் நுனியில் அடுத்த அடியை வைக்க வேண்டும்.
1. காலால் நடந்து வருவதாகப் பிரார்த்தித்து விட்டு  அவ்வாறு செய்யாமலிருத்தல்.
2. திருஅண்ணாமலையைக் காலால் கிரிவலம் வராது, கார், சைக்கிள், ஸ்கூட்டர் போன்றவற்றில் அமர்ந்து கிரிவலம் வருதல் மிகவும் தவறு! இத்தகையவற்றினால் மனிதனுக்கு எவ்விதப் பிரயோஜனமும் கிடையாது. ஆனால் கிரிவலம் வந்த கார், சைக்கிள், ஸ்கூட்டர் ஆகியவற்றின் ஜீவ அணுக்கள் தாம் மேம்பாட்டை அடைகின்றன!
காலணிகள் அணிந்து கிரிவலம் வரக் கூடாது. சாட்சாத் சிவபெருமானே மலையாக இருப்பதால் கிரிவலப் பாதையே ஒரு கோயில் பிரதட்சிணமாக அமைகிறது. எனவே இறைவனை, மூலமூர்த்தியைக் காலில் பாதணிகளுடனா கிரிவலம் வருவது? இது அபச்சாரமல்லவா! பொதுவாக நுனிக்கால் அடி தாண்டும் பிரதட்சிணம், பெரியோர்களை உதைத்ததற்குப் பிரயாச்சித்தமாகவும் குதிகால் அடிதாண்டும் பிரதட்சிணமானது மனைவி , குழந்தைகள், பிராணிகளை (குறிப்பாகக் குடிபோதையில் உதைத்ததற்குப் பிராயச்சித்தமாகவும் அமைகின்றது.
கிரிவலத்தில் உடை முறைகள்
1. மேலாடையின்றி விபூதி, குங்குமம், சந்தனம், திரிபுண்ட்ரம், தரித்தவாறு ஆண்கள் கிரிவலம் வருதல் சிறப்பானது.
2. பெண்கள் மெட்டி, வளையல்கள், பூ, மருதாணி அணிந்து கிரிவலம் வரவேண்டும்.
3. ஆண்கள் ஒற்றை ஆடையுடன் இங்கு கிரிவலம் வரலாம். இதில் தவறில்லை.
4. ஆண்கள் பஞ்சகச்ச முறையிலும், ஆந்திர, வங்காள முறை கச்சம் அணிந்தும் கிரிவலம் வருதல் மிகச் சிறப்பானதாகும்.
5.பெண்கள் மடிசார் முறையிலோ அல்லது ஆந்திரக் கச்சை முறையிலோ சேலை அணிவது உத்தமமானது. புடவைத் தலைப்புகள் கீழே தொங்காது இடுப்பில் கூட வேண்டும்.
6. பெண்கள் ‘ஒட்டுப்பொடு’ (stickers) தரிக்கக் கூடாது. புருவம் சிரைத்தல் அறவே கூடாது. இது மிகுந்த சாபத்தைத் தருவதோடு சுமங்கலித்வத்தையும் பாதிக்கும்.
7. பெண்கள் பெரிய அளவில் குங்குமப் பொட்டு வைப்பதே சிறந்ததாகும்.
8. ஆண்கள் லங்கோடு (கோவணம்) அணிந்து கிரிவலம் வருதல் சிறப்பானதாகும். இதற்கு “பண்டாரப் பிரதட்சிணம்” என்று பெயர். பிறருடைய மான இழப்புக்குக் காரணமானவர்கள் அதற்குப் பரிஹாரமாக இதனைச் செய்ய வேண்டும்.
9. வாழைப்பட்டை, வேப்பிலை, மாவிலை போன்ற இலை ஆடைகளுடன் கிரிவலம் வருதலும் உண்டு. வாழைப்பட்டை – சந்ததி விருத்தி, வேப்பிலை ஆடை – கண்ணேறு, திருஷ்டி தீரும், மாவிலை ஆடை – சீதள நோய் தணிப்பு , அருகம்புல் – நாகதோஷம் நீங்கும்.
10. கழுத்து நிறைய ருத்ராட்ச, துளஸி மாலைகளை அணிந்து கிரிவலம் வருதலால் தியான நிலை கூடும்.
நுனிக்கால் பிரதட்சிணம்
நுனிக்கால் பிரதட்சிணம் வேறு, நுனிக்கால் அடி தாண்டும் பிரதட்சிணம் வேறு. நுனிக்கால் பிரதட்சிணத்தில் குதிகால்களை உயர்த்தி, குதிகால் தரையில்படாமல் நுனிகால் விரல்களைத் தரையில் அழுத்தியவாறே கிரிவலம் வருதல். தனக்குமுன் பிறந்தவர்களுக்குத் துரோகம் இழைத்தல், அலுவலகத்தில் தனக்கு முன்னர்ச் சேர்ந்திருப்பவர்களுக்கு இழைத்த துன்பங்களுக்கு நுனிக்கால் பிரதட்சிணம் சிறந்த பரிஹாரமாகும். குதிகால் பிரதட்சிணத்தில் விரல்களுடன் முன்கால்களை உயர்த்திக் குதிகாலை வைத்து பிரதட்சிணம் வருதல் வேண்டும். காரண காரியமின்றி பலரை இடமாற்றம் செய்துகொண்டே இருத்தல், நன்றாக அமர்ந்தவர்களை எழுப்பி வேதனைகள் தருதல் ஆகியவற்றிற்குக் குதிகால் பிரதட்சிணம் சிறந்த பரிஹாரமாகும்.
பொதுவாக கிரிவலம் முழுதும் நுனிக்கால், குதிகாலில் பிரதட்சிணம் வருவது அற்புத சக்திகளையளிக்கும் எனினும் இயலாதோர் தசமுக தரிசனத்திலிருந்து (அபய மண்டபம் அருகில்) குபேரலிங்க தரிசனம் வரை இவ்வாறு வருவது மிகவும் முக்கியமானதாகும். காரணம் இப்பகுதியில் தான் (முன் யுகங்களில்) நிறைய ஆஸ்ரமங்கள் நிறுவப்பெற்று தினந்தோறும் சித்தர்களுக்கும் மஹான்களுக்கும் நித்ய பாதபூஜைகள் நடைபெற்ற வண்ணமிருந்தன!
கார்ய சித்திக்கான கிரிவலம்
முறையான நியாயமான கார்யங்களில் தடங்கல்கள் ஏற்பட்டால், கார்ய சித்திக்கான கிரிவலத்தில் அந்தந்த நாட்களுக்குரிய நிறத்தில் ஆடைகளை அந்தந்த நிறத்தில் (புது) ஆடைகளை தானமளித்து கிரிவலம் வந்தால் கார்ய சித்தி கிட்டும்.

கிழமை

ஆடை நிறம்

அன்னதானம்

ஞாயிறு

ஆரஞ்சு

எலுமிச்சை சாதம்

திங்கள்

வெள்ளை

தேங்காய் சாதம்

செவ்வாய்

சிவப்பு

தக்காளி சாதம்

 புதன்

பச்சை

கீரை சாதம்

வியாழன்

மஞ்சள்

சர்க்கரை பொங்கல்

வெள்ளி

வெளிர் நீலம்

வெண் பொங்கல்

சனி

கருநீலம்/கறுப்பு

புளியோதரை

திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருகையில் மேற்கூறிய முறைகளில் பலவகைப் பிரதட்சிண முறைகளைக் கையாண்டு கிரிவலம் வருவது கிரிவலத்தின் பலன்களைப் பன்மடங்காகப் பெருக்கும்.
கிரிவலப் பயன்களைப் பன்மடங்காக்குதல்
1. தாய், தந்தை, மனைவி, மக்களோடு நாம் மட்டும் கிரிவலம் வருவதை விட முதியோர்கள், குருடர்கள், நோயாளிகள், ஊனமுற்றவர்கள் போன்றோரை அழைத்துச் சென்று அவர்களும் இப்பலனைப் பெறுமாறு செய்தல் சிறந்த இறைப் பணியாகும்.
பிற குடும்பங்களை வளர/வாழ விடாது தடுத்த கொடுமை, பிறர் சொத்தினை அபகரித்து அவர்களை நிராதரவாக்கிய பாவங்களுக்கு வாழைப் பட்டையை அணிந்து கிரிவலம் வந்து தன்னால் பாதிக்கப் பட்டவர்களுக்குத் தக்க நிவாரண மளித்தால் இத்தகைய கொடுந் தீவினைகள் தீரும்.
விசேஷ தினங்கள் – மார்ச் – 1996
2.3.1996 – சனிப் பிரதோஷம்
4.3.1996 – மாசி மகம்/ பௌர்ணமி பூஜை
5.3.1996 – வாஸ்து பூஜை
10.3.1996 – ஸ்ரீரங்க பஞ்சமி
14.3.1996 – காரடையான் நோன்பு
23.3.1996 – லக்ஷ்மி ஸ்ரீபஞ்சமி
28.3.1996 – ஸ்ரீராம நவமி
29.3.1996 – தர்மராஜர் தசமி

நித்ய கர்ம நிவாரணம்

நித்ய கர்ம – நிவாரண சாந்தி – தினமும் குறித்த நற்காரியம் செய்து அபரிமிதப் பலன்களைப் பெறுவீர்களாக! - நித்ய கர்ம – வினை வேரறுக்கும் வழி..!

நாள்

  தானமும் , பலனும்

1.3.1996

ஏழைக் குழந்தைகளுக்குப் பாலாடை (கிண்டி) தானம்

2.3.1996

முடவர்களுக்கு உதவிடுக

3.3.1996

கன்னிகளுக்கு மல்லிகைப் பூ தானம் – இல்லறச் சண்டைகள் தணியும்

4.3.1996

ஊமைகளுக்கு உதவுதல் – நல்ல வேலை கிட்டும்

5.3.1996

ஏழைகளின் குடிசையைச் சீரமைக்க உதவி – பின் பூமி பூஜை – பூமி வேலைகள் நல்லதாய் முடியும்

6.3.1996

அம்பாள் சந்நதியில் நமஸ்காரம், பிரதட்சிணம் – காணாமல் போனவர் திரும்புவர்.

7.3.1996

பிரார்த்தனையினால் மொட்டை அடித்தவர்களுக்கு உதவி – நெடுநாள் வியாதி தணியும்.

8.3.1996

ஒற்றைக் கொம்புடைய விநாயகர் கோயிலில் அன்னதானம்- நண்பர்களால் வரும் சங்கடங்கள் தீரும்.

9.3.1996

 எமதர்மர் சந்நதியில் தீபமேற்றி தீபதானம் – மரண பயம் அகலும்.

10.3.1996

பால சயன ரங்கநாதர் கோயிலில் தீபமேற்றி , இயன்ற தானங்கள் – கப நோய்கள் தணியும்.

11.3.1996

அதிகம் பேசாதோருக்கு ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமப் பாராயண துளஸி தீர்த்தம் அளித்தல் – வீட்டில் பீடைகள் ஒழியும்.

12.3.1996

 ஸ்ரீகிருஷ்ணன் கோயிலில் வெண்ணெய்+சர்க்கரை கலந்த அன்னதானம் – மூட்டு வலி தீரும்.

13.3.1996

பித்ரு தர்ப்பணம்/சிராத்தம் பிறகு தன்யவான்களின் (பரமசாது) தரிசனம் – மனக் கஷ்டம் தீரும்.

14.3.1996

அடை நைவேத்யம் , தானம் – கணவனின் தலையாய பிரச்னைகள் தீரும்.

15.3.1996

சந்தன நாமமிட்டோர்க்கு தானம் – வஸ்திரங்கள் வந்து சேரும்.

16.3.1996

குழந்தையில்லாதோருக்காக நல்/பால் விருட்சங்களில் தொட்டில் கட்டி வழிபடுக – நல் ஆசி கிட்டும்.

17.3.1996

பால சிவனை வழிபட்டு தானம் செய்க – குழந்தைகளை அடித்த துன்பம் தீரும்.

18.3.1996

போதாயன வம்சத்தினர், விவசாயிகள், டிரைவர்கள், சவரத் தொழிலாளர்கள் – தர்ப்பணமிட்டு தானம் செய்திடுக – தொழில் துன்பங்கள் வராது

19.3.1996

வீட்டின் நீள, அகலமறிந்து, குழந்தைக்கு எவ்வளவு ஜாண்கள் வருகிறதோ அத்துணை பேருக்கு அன்னதானம் செய்திடப் பல நாள் சண்டைகள் தீரும்.

20.3.1996

“சந்திரன்” என்ற பெயர் வகைகளை உடையோருக்குத் தான தர்மங்கள் – குழந்தையின் மந்த புத்தி அகலும்.

21.3.1996

குருவை நாடி அருள் பெற உத்தமமான நாள்

22.3.1996

ஜாதி பேதமின்றிப் பழுத்த சுமங்கலிகளுக்குத் தான தர்மங்கள் – வீட்டுப் பெண்களுக்கு நல்வாழ்வு கிட்டும்.

23.3.1996

ஸ்ரீலக்ஷ்மி ஹயவதன பூஜை – ஏழை மாணவர்களுக்கு உதவி – குழந்தைகளின் அறிவு விருத்தி

24.3.1996

முருகனுக்கு ஊஞ்சல் சேவை – பாயச தானம் – நெடுநாள் தடங்கலான காரியம் நிறைவேறும்.

25.3.1996

ரோஹிணி நட்சத்திரக்காரர்களுக்கு உதவி – தொலைதூர உறவினரால் நன்மை கிட்டும்.

26.3.1996

மூன்று வித ராகங்களில் இறைவனைப் பாடி தானங்கள் செய்க, தலைக்கு வந்த பேராபத்து தீரும்.

27.3.1996

சிவனுக்குப் புண்ய நதி நீரால் அபிஷேகம் , இயன்ற தானம் – அக்னியால் வரும் துன்பங்கள் தீரும்.

28.3.1996

 ஸ்ரீராம பூஜை – பானக தானம் – நற்செய்தி தேடி வரும்.

29.3.1996

திருச்சி – திருப்பைங்ஞீலி – எமதர்மராஜர் – ஸ்ரீசிவபெருமானுக்குப் பூஜை தானங்கள் கடுமையான நோய்கள் தணியும்.

30.3.1996

எட்டு விஷ்ணுத் தல தரிசனம், எட்டுவித தானங்கள் செய்திடுக – பெரிய துன்பங்கள் நிவர்த்தியாகும்.

31.3.1996

நைஷ்டிக பிரம்மச்சாரியாய் வாழ்ந்த ஞானிகளின் ஜீவசமாதி தரிசனம் இயன்ற தானம் – சஞ்சல, முறையற்ற காம எண்ணங்கள் தணியும்.

 

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam