அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய பாலபருவ குருகுலவாச அனுபூதிகள். கலியுக மனிதன் தட்டுத் தடுமாறி வாழ்கின்ற போது சற்குருவின் மாமந்திரச் சொல்தான் உள்ளத்திற்கு ஆறுதலையும், சமாதானத்தையும் நல்ல மனத்தெளிவையும், ஆழ்ந்த இறை நம்பிக்கையையும் பெற்றுத் தருகின்றது சற்குருவின் அருளரவணைப்பின் கீழ் உத்தமச் சீடர் பெறுகின்ற குருகுலவாச அனுபூதிகள் யாவுமே ஒவ்வொன்றும் கோடி கோடியாய் நவரத்ன ஐஸ்வர்ய தேவ அறிவுச் சுரங்கமாக என்றும் வற்றாததாய் காலம் கடந்து விளங்குகின்றது. பள்ளிச் சிறுவனாய் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் பெற்ற குருகுலவாச அனுபூதிகள் யாவும் அவர்தம் சற்குருவாம் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகளுடைய சித்த தேவ லாவண்யத்தைப் பறைசாற்றுவதோடு “நம்மைக் கரையேற்ற நம் வாழ்வில் ஒரு சித்தர் வரமாட்டாரா”, என்ற தெய்வீக தாகத்தையும் அனைவருக்கும் ஏற்படுத்துகின்றது. இறைபக்தியை ஆழமாக்குங்கள்.. அற்புதக் குருவருட்சுனை தென்பட்டு அமிர்த நீர் பொங்கும், தாகந் தணியும்! ஆனால் இடைப்படும் சோதனைகளோ ஏராளம்! ஏராளம்!!
“நிச்சயமாக நம்மைச் சற்குரு அரவணைப் பார்”, என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன் இனியேனும் உங்கள் மனித வாழ்க்கையை உள்ளத் தெளிவுடன், உத்தம ஒழுக்கத்துடன், இறைபக்தியுடன் தொடருங்கள்!

கடும் வெயிலிலும்..... மழையிலும் .... காலில் செருப்பின்றி... பித்த வெடிப்புகளுடன்... சிறுவன் நடந்த (சூடான) சாலைகள்... மண் புழுதி நிறைந்த பாட்டைகள்.. பசி, பட்டினியுடன், விலாப் புடைக்க ஏறிய திருத்தலப் பாறைகள்.... மூலிகைக் குன்றுகள் ... மலைகள் தாம் (கொல்லி மலை, பச்சை மலை, கேதார்நாத் , சதுரகிரி , வெள்ளியங்கிரி etc… ) எத்தனை, எத்தனை?

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

“ஏன் வாத்யார் நம்மை இந்தப் பாடுபடுத்துகின்றார்”, என்று சிறுவன் எண்ணியதும் உண்டு, அவரை நேரடியாகக் கேட்டதும் உண்டு!
“இத பாருடா, இந்தக் கிழவன் ரொம்பப் படுத்தறான்னு தோணிச்சுன்னா இப்பவே சொல்லிடு! .... புஸ்க்குனு மேல எங்க லோகத்துக்கு அடுத்த செகண்டல திரும்பிப் போயிடறேன், அதுக்கப்புறம் குய்யோ முறையோனு கத்தினாக் கூட ஒண்ணும் ஆகாது!”
ஆத்ம விசாரம் செய்யத் தெரியாத பிஞ்சிளம் மாணவப் பிள்ளைப் பருவம்! ஆனால் பெரியவர் புகட்டியதோ உத்தம சித்தருக்கான “ஞான பத்ர பரிபாடம், ஞானக் களஞ்சியம்!”

“எப்படி வாத்யாரே இவ்வளவையும் ஞாபகம் வச்சுக்கறது, இவ்வளவையும் புரிஞ்சுக்கறது?”
“அதப் பத்தி உனக்கென்னடா கவலை, நானில்ல கவலைப்படணும்! நெறயக் கொட்டறேன், அள்ள முடிஞ்சதை அள்ளிக்கோ...” அவர் ஆக்ரோஷமாகக் கத்திய சமயத்தில் ஒரு சமயம் உள்ளூர அவரைத் திட்டத் தோணிடவே... ஆனால் புத்தி வந்து சிறுவன் டக்கென்று அவருடைய முழங்கால்களைப் பிடித்துக் கொண்டான். “வாத்யாரே, தெரியாம நெனச்சுட்டேன், சொல்லிட்டேன், திட்டிட்டேன், மன்னிச்சுடு வாத்யாரே!”

அன்னையின் அன்புக்கும் மேலாக வாரியணைத்து உச்சந் தலையில் முத்தமிட்டு, “ராஜா! ஒண்ண புரிஞ்சுக்கடா, ஆச்சு, இன்னும் நாப்பது, அம்பது வருஷம் ஆச்சுன்னா கலியுகம் எப்படி மாறுமோ தெரியாது! வேதம் மறஞ்சுகிட்டு வருது, ஏதோ பரமாச்சார்யார் வேதத்தை ஊதி ஊதி உயிர் கொடுத்துக்கிட்டு வராரு.... இந்த மாதிரி மகானுங்க எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா பூலோகத்தை விட்டுப் பிரிஞ்சுட்டா என்னடா பண்றது?”

“உன்ன ஏன் இப்படி படாதபாடு படுத்தறேன் சொல்லு பாக்கலாம்! தெய்வீகத்தைத் தழைக்க வைக்கத் தானேடா! தெய்வீகம்கறது ஜாலி இல்லடா, இதுலதான் நெறய சோதனைகள் வரும் ..உன்ன அக்னில போட்டு போட்டு ஸ்புடம் போட்ட தங்கமா தெய்வீகத்துல ஆக்கணும்டா.. அதுக்குத் தாண்டா உன்ன இலுப்பச் சட்டில போட்டு வதக்குற மாதிரி வதக்குறேன்!” ... பெரியவரால் பேச முடியவில்லை... கண்கள் பனித்தன... சிறுவனுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.!

ஹிருத்தாபநாசினி தீர்த்தமும்
விஜயகோடி விமானமும்
திருவள்ளூர்

“.... கவலப்படாத வாத்யாரே, இனிமே நீ என்ன சொன்னாலூம் எந்த வருத்தமும் இல்லாம செஞ்சிடுவேன்...!” சிறுவன் பெரியவரை ஆசுவாசப்படுத்தினான்..
பெரியவர் சிரித்தார்.... “கொஞ்சம் இருடா கண்ணு..! நாளக்கி நீ பெரியவனா ஆனவுடன் எத்தனையோ பேரு உன்னத் தேடி வருவாங்க... கஷ்டங்களை எல்லாம் சொல்லி அழுவாங்க.... நெறய லெட்டர் எழுதுவாங்க..... அவங்களுக்கெல்லாம் சற்குருவப் பத்தி அவரோட மகிமயப் பத்தி நீ விடாம எழுதிக்கிட்டே... சொல்லிக் கிட்டு வரணும்.... எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த கிழவன் (பெரியவர்) நம்பளக் கைவிடமாட்டான்னு ஒனக்கு நம்பிக்கை வந்துடிச்சு பாரு.., அந்த மாதிரி எந்தக் காலத்துலயும் தெய்வம் நம்பளக் கை விட்டுடாது., சற்குரு மூலமா நம்பளக் காப்பாத்துவார்னு ஒவ்வொருத்தர் உள்ளத்துலேயும் நீ போய்ப் பேசணும்டா..... .அதுதாண்டா ஒங்கிட்ட நான் எதிர்பார்க்கற குருதட்சிணை!  .... விருட்டென்று எழுந்த பெரியவர், “நாளக்கி அந்த மயானத்துக் கிட்ட சாயந்திரம் வந்திடு!” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டு விட்டார்.. சித்தன் போக்கு, சிவன் போக்குத்தானே!

அன்று மயானக் காண்டம் போலும்! இரவு முழுவதும் சிறுவனுடன் மயானத்திலேயே இருந்து அங்கு வந்து போன சவங்களைப் பற்றிய விளக்கங்களைத் தந்தார் பெரியவர். முதலில் சிறுவனுக்கு “அச்சம்” பற்றிக் கொண்டாலும் தேவாதி மூர்த்திகளுடன் அண்ட சராசர லோகங்களிலும் பேசவல்ல பெரியவர் அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் மரணத்தைப் பற்றிய ஏகப்பட்ட கேள்விக் கணைகளைத் தொடுத்துப் பல அரிய விளக்கங்களைப் பெற்றான் சிறுவன். அன்று மாதாந்திர சிவராத்திரி ஆகையால் அங்கே கூடிய மயான தேவதைகளுடன் பெரியவர் பேசுவதைப் பார்ப்பதற்கே வேடிக்கையாக இருந்தது. ஆங்கே பல அரிய ருத்ர கோடி மந்திரங்களையும் சிறுவனுக்குக் கற்றுக் கொடுத்து, “நீ பெரியவனாரப்போ கலியுகத்துல “பிண தோஷம்“ பெருத்துப் போகும், அதப் பத்தியெல்லாம் எல்லோருக்கும் எடுத்துச் சொல்லி நல்ல பரிகாரத்தையும் சொல்லிக் காட்டி, நெறயப் பேரக் காப்பாத்த வேண்டிய பொறுப்பு ஒன்னோடதுடா..”
இரவெல்லாம் சிறுவன் சாப்பிடவில்லை..... நல்ல பசி...... பெரியவரோ சிறுவனை ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூடக் குடிக்க விடவில்லை.... ஆனால் ஒன்றை மட்டும் சிறுவன் கவனித்தான்... மயானத்திற்கு நிறைய பேர்கள் வந்து போகின்ற இடத்தில் ஒரு வேப்ப மரத்தின் கீழ் இருவரும் நின்று கொண்டிருந்தாலும் ஒருவர் கூடத் தன்னைப் பார்க்கவில்லை, “சிறுவனாயிற்றே, ஏனிங்கு இருக்கிறான்”, என்று ஒருவர் கூடக் கேட்காதது சிறுவனுக்கே பெருத்த ஆச்சரியமாக இருந்தது.

“ஒருவேளை நாம் நிற்பதைப் பிறருக்குத் தெரியாமல் பெரியவர் மறைத்து விட்டாரா?”
அவ்வளவுதான் பெரியவர் ஒரு “பிடி, பிடித்து” விட்டார்.... “என்னடா ஆராய்ச்சி பண்ற.... ஒனக்குத் தெரிஞ்ச ஆட்களே, இங்க வந்தும் கூட உன்னைப் பாக்க முடியலை! அப்படீன்னா என்ன அர்த்தம்? ” பெரியவர் சிரித்தவாறே அந்த வேப்ப மரத்தை வலம் வந்து கீழே விழுந்து நமஸ்காரம் செய்தார்.. சிறுவனும் அப்படியே செய்தான்.  “.... இத ஏண்டா உன் பையில வைச்சுருக்க....” என்று சொல்லியவாறே, பெரியவர் சிறுவனுடைய சட்டைப்பையிலிருந்து ஏதோ குளிகை போன்ற ஒன்றை எடுத்தார்.... தன் கையிலிருந்ததையும் அதோடு சேர்த்து அந்த வேப்ப மரத்தின் அடியிலிருந்த நாகப் புற்றிற்குள் போட்டுவிட்டார்... சிறுவனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது!
அந்த “அபூர்வ வஸ்து” எப்படி அவனிடம் வந்தது. அதை ஏன் அவர் தூக்கிப் போட வேண்டும்?”

“ உனக்கு இதே வேலையாப் போச்சுடா.... இந்த கெழவன் ஏதாச்சும் செஞ்சா அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும்னு தெரியுமில்ல.. நாகலோகக் குளிகை., அது நாகலோகத்துக்கே போயிடுச்சு! அப்புறம் இந்தக் கேள்வி உனக்கெதுக்குடா? ரொம்ப ஸிம்பிளா பதிலைச் சொல்றேண்டா, அந்த குளிகை மட்டும் உன் சட்டைப் பையில் இருந்துச்சுன்னா நீ இருக்கறதே யாருக்கும் தெரியாமல் போயிடும்டா. எதையுமே சொல்லாமலே புரிஞ்சுக்கணும்.... நம்ம ரெண்டு பேரும் நின்னதோ இந்த வேப்ப மரத்துக்கு அடிலதான்... அத விட்டு நான் கொஞ்சம் கூட நகரல பாத்தியா, ஏன்? வேப்ப மரத்துக்கு “பிணதோஷம்” நீக்கற சக்தி உண்டுடா! மயான துர்தேவதை நம்பளை ஒண்ணும் பண்ணாது! இதெல்லாம் மயான தேவ பூஜை ரகசியம்!” என்றார் பெரியவர். அப்போதுதான் சிறுவன் இறப்பின் ரகசியங்களைப் பற்றிப் பெரியவர் சொல்லித் தெரிந்து கொண்டான்.  (நம் ஆஸ்ரம வெளியீடான “இறப்பின ரகசியம்” நூலில் சிறுவன் நம் சற்குருவாம் பெரியவரிடம் கற்ற குருகுலவாசப் பாடத்தின் ஒரு சில அமிர்தத் துளிகளாக மரணம் பற்றிய அரிய ஆன்ம விளக்கங்களைக் காணலாம்.. மரணபயம் நீக்கும் மாமருந்து இது!)

“சட்டை“ மாற்றும் சித்தர்கள்!
காலை மூன்று மணி இருக்கும்., திடீரென்று வானத்தைப் பார்த்த பெரியவர்., “டேய்..... மேலேந்து call வந்துடிச்சுடா..... ஓடியா.. ஓடியா.... நம்ப ஆள் பொறப்பட்டுட்டான்... ஓடிப் போய் காரியத்தை முடிச்சுடணும், ஓடியா.... ஓடியா.....” என்று திடீரென்று ஓட்டமும், நடையுமாய் அவர் மயான பூமியை விட்டு அகன்றிட..... சிறுவன் அவர் பின்னால் ஓடி... ஓடிக் களைத்து விட்டான்.. பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் தாண்டி.... .கிடுகிடு வென்று பெரியவர் ஓடிட.... பெரியவர் அவ்வாறு ஓடுவதை அப்போதுதான் சிறுவன் முதன் முதலாகப் பார்த்தான்.. எதற்கும் அசையாத சித்தர் அசைந்து ஆடி ஓடுகிறாரே! என்ன தெய்வீக விஷயமோ! இரவில் சாப்பிடாததால் அடிவயிறு வலிக்க வலிக்கச் சிறுவனும் கூடவே ஓடினான்..... கிட்டத்தட்ட செங்கல்பட்டு ரேஞ்சில்... பெரியவர் சற்று... நிதானித்தார்.. பொதுவாக அவர் எதையும் முன்னால் தெரிவிப்பதில்லை! .... அவரே இன்று சற்று மனம் மாறியவராய், “இத பாருடா அதோ தெரியுது பார் ஒரு கூட்டம்.. அங்க ஒரு சித்தர் திடீர்னு மேல பொறப்பட்டார்டா, சித்தரோட ஒடம்புன்னா.... தேவசொத்து ஆச்சே.... அவங்க யாருக்குமே அது சித்தர்னு தெரியாது.... ஏதோ வழிப் போக்கன் செத்துப் போயிட்டான்னு நெனச்சுக்கிட்டு இருக்காங்க..... நமக்கு சித்த லோகத்துலேந்து divine call வந்துடிச்சு..... வேகமாகப் போய் அவருக்குப் பண்ண வேண்டியதைப் பண்ணிடனும்...”
பெரியவர் அவ்விடத்திற்கு வந்ததும்...... “ஓவென்று கதறி அழுது ஏதேதோ சொந்தம் கொண்டாடி ஒரு வழியாய் அவர்களிடமிருந்து சித்தரின் திருவுடலைப் பெற்றார்... சித்தருடைய திருவுடலைச் சிறுவனுடன் சேர்ந்து “சுமந்து“ வந்து (என்னே பெரும் பாக்கியம்!) எல்லையைத் தாண்டி வனப்பகுதிக்கு வந்த பிறகு தான் சிறுவனுக்கு அந்த சித்தரின் மகிமையைப் பற்றிச் சொன்னார்.... “இவரு பெரிய சித்தருடா.... ஆனால் “பைத்தியம்“ மாதிரி சுத்திக்கிட்டு இருப்பாரு...! இப்ப அவருக்கு வேற தேவலோகத்துல வேற வேலை கொடுத்துட்டாங்க.. டக்குன்னு இந்த ஒடம்பை விட்டுக் கெளம்பிட்டாரு.... சித்தர்களுக்கெல்லாம் இந்த மனுஷ ஒடம்பெல்லாம் “சட்டை” மாதிரிடா.., இதக் கழட்டிட்டு வேற சட்டை (உடல்) தாங்கறது அவங்களுக்குப் பெரிய விஷயம் இல்லையடா!  [ஆந்திர மாநிலத்தில் புயல் நிவாரணத்தின் போது சமுதாய இறைப் பணியாகப் பெரியவருடன் சேர்ந்து சிறுவன் பல “அநாதைச் சவங்களுக்கான” இறுதிச் சடங்குகளை மகத்தான சமுதாய இறைப் பணியாகத் தக்க அனுமதியுடன் செய்திருக்கின்றான்]
“அநாதைப் பிணத்தை முறையா எரிக்கறதுக்கு உதவி செய்யறது ஒரு நல்ல இறை சேவைடா! அன்னதானத்தை விட ஒசந்ததுடா அது! ஆனா இது அனாதை இல்லைடா, தேவலோக சொத்து! சித்தரோட திருவுடல்னா அதுல ஜோதிதாண்டா நெறஞ்சிருக்கும்!” சிறுவன் அந்த சித்தரின் திருவுடலையே பார்த்துக் கொண்டிருந்தான்.. ஓடோடி  வந்தமையால் கொஞ்சம் உட்கார்ந்தால் போதும்” என்று நினைத்தானோ இல்லையோ, பெரியவர் சிறுவனின் கைகளைப் பற்றிக் கொண்டு, “ஏண்டா கண்ணு! நேத்திலேந்து தண்ணி, இல்லை, சாப்பாடு இல்லை, கொஞ்சம் கூட ரெஸ்ட் இல்லை,, கொஞ்ச நேரம் இங்க உக்காந்து ரெஸ்ட் எடுக்கறியா...” என்று பெரியவர் அபூர்வமாகப் பரிவுடன் பேசினார்!

பெரியவர் சிறுவனை உட்காரச் சொன்ன இடம் எது தெரியுமா?

அந்த சித்தரின் திருஉடல் மேல்தான்! “ஆமாண்டா, மயானபூமில ஜபம் பண்றது கோடி கோடியா பலன் தரும். நம்ப சேஷாத்ரி சுவாமிகள் மயான ருத்ர ஜபம் நெறயப் பண்ணினாரு. அதுவும் சவத்து மேல உக்காந்து ஜபம் பண்ற வாமன தந்த்ர முறை எல்லாம் இருக்குடா ... ஆனா குரு மூலமா அதெல்லாம் செய்யணும்.... தானா செஞ்சுப் பார்த்தா பைத்தியம் பிடிக்சிடும்!” ..... சற்குருவின் அருள் ஆணையுடன் சித்தரின் திருவுடல் மேலமர்ந்த சிறுவனுக்கு அன்று பொன்னான நாள்! ஆம் சிவஜோதியாய்த் திகழும் சித்தரின் திருச்சட்டைதனையே புனிதப் புலித் தோலாகக் கொண்டு ஆயிரமாயிரம் பீஜாட்சர மந்திரங்களைப் பெரியவர் ஓதிட, சிறுவன் அவற்றை ஜபித்தான், எத்தனை நாட்கள் அவன் அவ்வாறு அமர்ந்திருந்தானோ அவனுக்கே தெரியாது..... திடீரென்று, விழித்துப் பார்த்தான், தான் ஒரு புலித்தோலின் மேல் அமர்ந்திருக்கக் கண்டான்..! சித்தரின் திருவுடல் ஜோதியாய் விண்ணில் மறைந்து விட்டதோ(தே)! சற்குரு அருகில் இருந்தால் அவர்தானே அசாத்ய சாதகர்! ... தம் குருகுலவாசத்தில் ஒவ்வொரு நாளும் ஏன் ஒவ்வொரு விநாடியும் பெரியவர் அவனுக்கு ஏதேதோ (தெய்வீகப்) பாடங்களைப் புகட்டி வந்தார்.

ஒரு முறை.... இருவரும் திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்து கொண்டிருந்த போது திடீரென்று சாலையோரம் பெரியவர் அமர்ந்து விட்டார்... அப்போது மண் சாலைதான் இருந்தது. கும்மிருட்டு வேறு.... பறவைகளின் சப்தங்களைத் தவிர வேறு ஒன்றும் கேட்கவில்லை.... மலை தரிசனம் கூடத் தெரியவில்லை... ஒரு வழியாய்ப் பொறுமையை இழந்த சிறுவன் அவரைக் கேட்டே விட்டான்.. “ஏன் வாத்யாரே! இங்க டயத்தை வேஸ்ட் பண்ற, இந்த இருட்டுல ஒண்ணுமே தெரியலையே, மலை தரிசனம் கூடத் தெரியலை...!”

சிறுவன் முடிப்பதற்குள் பெரியவர் பாய்ந்தார்......

“......ஏண்டா ..திருஅண்ணாமலைக்கு வந்துட்டு அதுவும் கிரிவலத்துல.... இருட்டுல மலை தரிசனம் தெரியலைன்னு சொல்றியே! ஏண்டா எவ்வளவு பிரகாசமா அக்னிமலை பளிச்சுனு தெரியுது.. உனக்குத் தெரியலைன்னா.... நீ என்ன பூனையா? கண்ண மூடிகிட்டா உலகமே தெரியாம போறதுக்கு.... ரெண்டாவது நான் உனக்கு எத்தன வாட்டி சொல்லிருக்கேன். நான் செய்யறதெல்லாம் நல்லா “observe” பண்ணுன்னு, படபடக்னு குறுக்கே பேசாதேன்னு, நாங்க ஒண்ணும் டயத்த வேஸ்ட் பண்றதுக்கு இந்த ஒலகத்துக்கு வரலைடா.... ஒவ்வொரு நிமிஷமும் நாங்க மேல் லோகத்துலேந்து நெறய messageஐ ரிஸீவ் பண்ணிகிட்டே இருக்கோம்டா.... எங்க காரியம்னா பூலோக காரியம் மாதிரி கெடயாதுடா. இங்க ரொம்ப ஸிம்பிளா “sorry”ன்னுட்டுச் சொல்லிட்டுச் செய்யாமப் போயிடுவாங்க.... ஆனா நாங்க எங்க குருமங்கள கந்தர்வ லோகத்துல அப்படிச் சொல்ல முடியாதுடா.... செய்னா செய்யணும், வான்னா வரணும், போன்னா போகணும்... இங்க இவ்வளவு நேரம் சும்மா உக்காந்து டயத்தை வேஸ்ட் பண்றேன்னு சொல்றியேடா.... உன்னத் திட்டறதா இல்லாட்டி குருவோட கிட்டக்க இருந்தாக் கூட “மாங்கா மடயனாட்டம்” ஒண்ணும் புரியாதவனாட்டம் இருக்கியேன்னு சொல்லி பரிதாபப்படறதான்னு தெரியலையே.! பெரியவர் தலையில் அடித்துக் கொண்டார்..

“....... இந்த குருந்த மரத்து மேல இவ்வளவு நேரம் மேல ரெண்டு பறவைங்க பேசிச்சுங்க.. கேட்டீயா?..... கிட்டத்தட்ட ஒரு மணி நேரமா பேசறாங்கடா.... ஆச்சு வருஷப் பிறப்பு வருதே... என்ன வருஷம் வர்றது.. அதுல என்னென்ன நடக்கப் போகுது... எந்தெந்த ரிஷிங்க, சித்தருங்க அண்ணாமலைக்கு வரப் போறாங்க.... அப்படீன்னு எல்லாரோட கர்ம லிஸ்ட்டையும் படிப்பாங்கடா.... இதெல்லாம் உனக்கு எங்க தெரியப் போகுது....” 
... சிறுவனுக்கு ஒரே ஆச்சரியம்! “பறவைங்களுக்கு அவ்வளவு தெய்வீக சக்தி இருக்கா என்ன? அது சரி வாத்யாருக்குத்தான் எல்லாமே தீர்க்க தரிசனமாக முன்னாடியே தெரியுமே,, அவர் ஏன் பறவைங்க பேசறதை “ஒட்டுக் கேக்கணும்?” ... என்று சிறுவன் நினைத்த அடுத்த க்ஷணமே பெரியவருக்கு இதெல்லாம் தெரியாதா என்ன? டக்கென்று சிறுவனின் காதைத் திருகி. “பூலோக மனுஷங்களுக்குத்தான் ஒட்டுக் கேக்கற புத்தியுண்டு! நாங்க எதிர்காலத்தைப் பத்தித் தெரிஞ்சுக்கணும்னா நெறய வழிய இருக்கு.., அதுக்குன்னு ரொம்ப கஷ்டப்பட்டு சேர்த்த “நெறய” புண்ய சக்திய செலவழிக்கணும்.. நீ நெனக்கற மாதிரி அந்த ரெண்டும் வெறும் கிளி இல்லைடா.... ரெண்டு பேரும் மஹரிஷி தம்பதிங்க.... அண்ணாமலைல கிரிவலம் வந்துட்டு பூலோக ஜனங்களுக்காக. “புத்தாண்டு பஞ்சாங்கம்” படிச்சுட்டுப் போறாங்க... அந்த ரெண்டு பஞ்சாங்க மஹரிஷி கிளி தம்பதிங்க பேசறதை எல்லாம் கீழே யார் யார் தெரிஞ்சுக்கணும்னு அவங்களே முடிவு  பண்ணியிருப்பாங்க.. வேற யார் காதுலயும் விழாமச் செய்யற spiritual engineering அவங்களுக்குத் தாண்டா தெரியும்!”

“ஏன்னா, இந்த பஞ்சாங்க மஹரிஷிங்க கிளி ரூபத்துல இன்னிக்கு அண்ணாமலைக்கு வருவாங்க, பஞ்சாங்கம் படிப்பாங்கன்னு தீர்க்க தரிசனமா முன்னாடியே தெரிஞ்சுக்கிட்டு இந்த உலகம்  புல்லா எல்லா எடத்துலேந்தும் ஆயிரக் கணக்குல சற்குருங்க இங்க வந்து கேட்டுகிட்டுப் போய் அத வச்சு அவங்கவங்க அந்தந்த நாட்டுல தெய்வீகத்தைப் பரப்புவாங்க.. இதெல்லாம் நாங்க உனக்கு எடுத்துச் சொல்லணும்னு அவசியம் கெடயாது... ஆனா எதிர்காலத்துல இப்படியெல்லாம் நம்மால புரிஞ்சுக்க முடியாதபடியான தெய்வீக சாம்ராஜ்யம் திருஅண்ணாமலைல நடக்குதுன்னு எல்லாருக்கும் நீ தெரிய வக்கணும்னுதாண்டா.... இதயெல்லாம் இப்ப சொல்றேன்.. நாங்களா புது வருஷத்தப் பத்தி எங்க மண்டயக் கொடஞ்சு தெரிஞ்சுக்கறதுதாண்டா நல்லது! ஒரு urologist டாக்டர் பண்ண வேண்டிய ஆபரேஷனை ஒரு  orthopaedist டாக்டர் பண்ணலாமா! நீயே சொல்லு...!”
சிறுவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது,, தத்தக்கா... புத்தக்கா என்று பெரும்பாலும் ஓட்டை இங்கிலிஷில் புறண்டிடும் பெரியவர் அன்று அட்சர சுத்தமாய் சில ஆங்கில வார்த்தைகளைப் பிரயோகிப்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது...
கிளிகளின் மொழியையே தெரிந்து கொண்டவருக்கு இதெல்லாம்... ஒரு சாதாரண விஷயம் தானே” என்று 1500றாவது முறையாகச் சிறுவன் அதே “conclusion”க்கு வந்தான்! அன்றிலிருந்துதான் “கௌரீ பஞ்சாங்க” மஹரிஷிகளுக்குரித்தான வருடாந்திரப் பூஜை முறைகளைப் பெரியவரிடம் கற்றுத் தெளிந்தான்... அப்பப்பா, என்னே தெய்வீக குருகுலவாசம்! தெரிந்தும் தெரியாதவராய், புரிந்தும் புரியாதவராய், அறிந்தும் அறியாதவராய் இருப்பது சித்தர்களுடைய ஆயிரத்தெட்டு தெய்வீகக் கலைகளுள் ஒன்றாயிற்றே!

ஸ்ரீபிண்ணாக்கீசர்

ஸ்ரீபிண்ணாக்கீசர் – முன் அட்டைப்படவிளக்கம்

காரிய சித்திக்கான ககன மார்க்க அருள்வழி காட்டும் “ஸ்ரீ பின்நாக்கு ஈச சித்தர்” . ககன மார்க்க சூட்சுமப் பிரயாணத்திற்குக் கவினுற ஆசி வழங்கும் அதி அற்புத சித்தர்! “பின் நாக்கு” ஈசர் எனப் பெயர் கொண்டு உள்நாக்கு யோகத்தில் உத்தம நிலைகளைக் கண்டவர்.. Astral Travel யோக நிலைக்கு உதவுகின்ற உத்தம சித்தர்! பின்நாக்கு ஈசர் என்ற அற்புத சித்தரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதாவது நாக்கைப் பின்புறம் ஆத்ம நெஞ்சக் குழலை நோக்கி வளைத்துத் தொண்டையில் உள்ள இரு பிளவு நாக்குகளிடையே வைத்து லலாடங்க யோகத்தில் பலகோடி யுகங்களாகப் பயின்று குருவருளால் கிட்டுவதே ககன மார்க்க யோக சித்தியாகும். இவ்வாறு பின்நாக்கு கொண்டு புரிகின்ற யோகத்தில் பிரகாசித்து ஸ்ரீயோகீசராக விளங்குகின்ற யோக நாட்டிய ஸ்ரீநடராஜப் பெருமாளிடம் பெறுதற்கரிய சபாரஞ்சிதத் திருவருளைப் பெற்றவரே ஸ்ரீபின்நாக்கு சித்தர் ஆவார். இதுவே நடைமொழி வழக்கில் பிண்ணாக்கீசர் என ஆயிற்று. மேலும் அடிக்கடி பிண்ணாக்கு என்ற வார்த்தையை இவர் பயன்படுத்தியமையால் பிண்ணாக்கீசர் (புண்ணாக்கீசர்) என்பதே புரியும் வழிப் பெயராயிற்று. காற்றை விட எடை குறைந்து மனக்கூட்டில் பறக்கின்ற யோக சித்தி முறைகள் உண்டு. நற்காரிய சித்திக்காக பல யோகியர்களும் இந்த யோக சித்தியைப் பயன்படுத்துவார்கள். அதே போல கனவு உலகப் பிரயாணங்களும் ககன மார்க்க சூட்சுமப் பிரயாணங்களும் (Astral Travel)  இந்த ககன மார்க்க யோகத்தில் தான் சிறப்புடன் கைகூடுகின்றன. நாம் முன்பின் அறியாத பலகோடி அரிய தேவலோகங்களுக்குச் செல்வதற்கும் ஸ்ரீபின்நாக்கு ஈச சித்தர் இந்த ககனமார்க்க முறையைக் கைக்கொண்டார். சித்திகள் என்றால் நம்முடைய சுயநலத்திற்காக பணத்தை, பொருளை, சுகத்தைப் பெறுவதற்காகப் பயன்படுத்துவது அன்று, இவ்வாறு அதர்மமான முறைகளில் சித்திகளைப் பயன்படுத்தினால் புண்ணிய சக்திகளும், தெய்வீக ஆற்றல்களும் விரைவில் மங்குவதோடு அது சாபங்களாகத் திரு(ம்)ப்பி வந்து தாக்கி விடும்.

காரிய சித்திக்குப் பெரிதும் பயன்படுதாக உள்ள அஷ்டமா சித்திகளையும் தாண்டிய நிலையில் பல உத்தம நிலைகள் உண்டு. அவை அனைத்தும் நல்வரங்களாகக் கைவரப் பெற்றவரே ஸ்ரீபின் நாக்கு ஈச சித்தர் ஆவார். இவருடைய ஜீவ ஆலயசமாதியை இன்றைக்கும் ஈரோடு அருகில் சென்னி மலை திருத்தலத்தில் தரிசித்திடலாம்.. வாக்சக்தியைத் தரவல்ல புத பகவானுக்குரித்தான புதன்கிழமையன்று, புதன் ஹோரை நேரத்தில் (காலை 6-7, மதியம் 1-2, இரவு 8-9) ஸ்ரீபின் நாக்கு ஈச சித்தரின் ஜீவ ஆலய லிங்கத்திற்குப் பச்சை வண்ண நிற ஆடைகளைச் சார்த்தி பசுமையான உணவு வகைகளை (கீரை, கருவேப்பிலை, கொத்தமல்லி சாதம், வெண்டைக்காய், கோவைக்காய்) படைத்து ஸ்ரீபின் நாக்கு ஈச சித்தரிடம் பிரார்த்தனை செய்து ஏழைகளுக்கு ஆடைகளையும், உணவுகளையும் தானமாக அளித்து வந்தால் பல அரிய யோக நிலைகள் கிட்டுவதோடு நற்காரிய சித்திகளும் கைகூடும். குறிப்பாக தன்னுடைய அறியாமை கல்வி கற்காமை காரணமாகப் பலரால் ஏமாற்றப்பட்டு இருந்தால் அவ்வாறு தாம் இழந்த சொத்து நில புலன்களை மீண்டும் பெறுவதற்கு ஸ்ரீபின்நாக்கு ஈச சித்தருடைய ஜீவ ஆலய வழிபாடு பெரிதும் உதவும். மேலும் வெளிநோய்களைப் போல உள் தேக நோய்களால் அவதியுறுவோர் பலரும் உண்டு. வயிற்றுப் புண், வயிற்றுக் கட்டி, புற்றுநோய் போன்று ஆழ் உடலில் உள்ள கடுமையான நோய்களுக்கானத் தீர்வைப் பெறுவதற்கு பின்நாக்கு ஈசருடைய ஜீவசமாதி ஆலயத்தில் செவ்வாய்க்கிழ்மை தோறும் செவ்வாய் ஹோரை நேரத்தில் சந்தனக் காப்பிட்டுக் கருவேப்பிலை, கொத்துமல்லி, புதினா, பொன்னாங்கண்ணி கீரை, கரிசலாங்கண்ணி, பசலைக் கீரை போன்ற மூலிகை வகைகள் நிறைந்த உணவை ஏழைகளுக்கு தானமாக அளித்து வந்தால் ஆழ் உள்நோய்களின் கடுமை தணியும். ஆழ்ந்த நம்பிக்கையுடன் தொடர்ந்து வழிபட்டு வந்தால் தக்கத் தீர்வுகளும் குருவருளால் கிட்டும். ககனமார்க்க சூட்சுமப் பிராயணம் என்ற Astral Travel யோகப் பயணத்திற்கு ஸ்ரீபின் நாக்கு ஈசருடைய ஆசிகள் மிகவும் முக்கியமானதாகும்.

திருக்கடையூர் சிவத்தலம்

தென்காசி மகாத்மியம் – வெற்றிக்கு வடிவழகு தரும் தென்காசி தேவா போற்றி! போற்றி!!

திருக்கடவூர் :- எண்திசை தேவர் போற்றும் ஏற்றமிகு வெற்றி! தென்காசித் திருத்தலத்திற்கு முன் நாம் தரிசிக்க வேண்டிய முக்கியமான சித்தர்கள் அருளியுள்ளபடியான அருட்தவ தரிசனங்களைப் பற்றி நாம் இத்தொடரில் அளித்து வருகின்றோமல்லவா! வாழ்க்கையில் நாம் வெற்றியைப் பெற பல முக்கியமான நல்வரங்கள் தேவைப்படுகின்றன.. முதலாவதாக எட்டுத் திக்குகளிலிருந்து இப்பிரபஞ்சத்தைக் காக்கின்ற மிக அற்புதமான தேவமூர்த்திகளே அஷ்டதிக் பாலகர்கள் ஆவார்கள். திருஅண்ணாமலையில் கிரிவலம் வருகையில் அஷ்ட மூர்த்திகளை மலையின் எட்டுத் திக்குகளிலும் வணங்கி வழிபட்டிலாம்... எனவே வெற்றி என்பது எட்டுத் திக்குகளிலிருந்து கூடி வருகின்ற ஓர் இறை அம்சமாகும். ஆனால் என்றேனும் நாம் அஷ்டதிக் பாலகர்களை வழிபட்டுள்ளோமா அல்லது ஒரு விநாடி நேரமாவது நினைத்துள்ளோமா, நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்! இல்லைதானே! நாம் வாழ்க்கையில் பெறத் தவறிய அஷ்டதிக் பாலகர்களையுடைய அனுகிரகத்தைப் பெறுவதற்காகத்தான் தென்காசித் திருத்தல தரிசனத்திற்கு முன்னால் அஷ்டதிக் பாலகர்களுடைய தெய்வாம்சங்கள் நிறைந்த திருத்தலங்களையும் நாம் தரிசித்து வருகின்றோம்..

 அட்டமா சித்தி தட்டாமல் தரும் வெற்றி! இரண்டாவதாக அஷ்டமா சித்திகள் என்ற ஒரு தெய்வத் தொகையும் உண்டு. அணிமா, மஹிமா , லஹிமா என எட்டுவிதமான சித்திகள் நிறைந்ததாகும். இந்த எட்டு சித்திகளையும் நாம் தினந்தோறும் நம் வாழ்க்கையில் அறிந்தும் அறியாமலும் சந்தித்துத் தான் வருகின்றோம். உதாரணமாக , காற்றைவிட எடை குறைந்த அளவில் செய்யும் ககன மார்க்க விண்வெளிப் பயணமும் அஷ்டமா சித்திகளில் ஒன்றாகும். நாம் உறங்கும் போது சலனமற்ற இவ்வுடல் படுக்கையில் கிடந்திருக்க எத்தனையோ இடங்களுக்குச் சென்று வருகின்றோம் அல்லவா! இதுவும் அஷ்டமா சித்திகளுள் ஒன்றாகத் தான் விளங்குகின்றது. ஆனால் இறைவன் ஏன் இந்த எட்டு சித்திகளையும் நம் உடலில் மறைவாக வைத்துள்ளான். இவற்றுள் ஒன்று தெரிந்தால் கூட போதும் அதை நாம் தவறாகப் பயன்படுத்தி சொத்து, சுகம் ஆகியவற்றை சுயநலமாகப் பெறத் துடிப்போம். இறைவனை மறப்போம்! யோகியர்கள் மட்டுமே அஷ்டமா சித்திகளையும் இந்தப் பிரபஞ்சத்தின் நலனுக்காகப் பயன்படுத்துகின்ற உத்தம நிலைகளைக் கொண்டவர்கள் ஆவார்கள்.. எனவே அஷ்டமாசித்திகளை உய்த்து உணர்வதும், தென்காசித் திருத்தல தரிசனத்தின் ஒரு பகுதியாக விளங்குகின்றது.. நாம் அஷ்டமா சித்திகளை ஆன்ம பூர்வமாக உணரும் பொருட்டுத்தான் தென்காசித் திருத்தல தரிசன முறையும் அமைந்து இருக்கின்றது..

எட்டெழுத்து சுட்டும் எம்பெருமான் :
மூன்றாவதாக எட்டு எழுத்து மந்திர ஏற்புடைய திருப் பரம்பொருளாக விளங்குகின்றவனே இறைவன் ஆவான். எத்தனையோ  கோடி நாமங்களை இறைவன் தமக்குச்  சூடிக் கொண்டாலும், எட்டு எழுத்து மந்திரத்தில் தான் இறைமையைப் பரிபூர்ணமாகப் பதித்து வைத்துள்ளான். குரு உபதேசமாகவே இவ்வெட்டு எழுத்து மந்திரம் உபதேசிக்கப்பட வேண்டும். அந்த உபதேசத்தை பெறுவதற்கான தகுதிகளும் வெற்றிக்கு உரித்தானவை தானே விளங்குகின்றன.. அவற்றைப் பெறுவதற்கு முதலாக அமைந்திருப்பது தான் தென்காசித் திருத்தலத்திற்கு முன்பாக விளங்குவதும் அற்புத இறைத்தல தரிசனங்களாகும்... 
“எட்டில் எட்டும் எட்டா வெற்றி!”
நான்காவதாக எட்டு என்ற எண்ணுக்குரித்தவராய் விளங்குகின்ற ஸ்ரீசனீஸ்வர பகவானுடைய கருணைக் கடாட்சம் நிரம்பினால் தான் நாம் வெற்றியையும் அடைதல் முடியும்.. ஸ்ரீஅமிர்தகடேஸ்வரருடைய உபாசனையில் சிறந்து விளங்குபவர்தான் ஸ்ரீசனீஸ்வர பகவான் ஆவார். எனவே, திருக்கடவூரில் அருள்பாலிக்கின்ற ஸ்ரீஅமிர்தகடேஸ்வரரை தரிசித்து வெற்றிக்கு வழிவகுக்கின்ற அருட்பாதையைப் பற்றி உணர்ந்திடுங்கள்... இந்நான்கோடு மேலும் பல அறசக்திகளையும் தருவதாக தென்காசித் திருத்தல வரிசையில் அடுத்ததாக நாம் இங்கு காண்பது திருக்கடவூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலயம். இந்த அமிர்தத்தை வெற்றியாகப் பெறுவதற்குத் தானே தேவர்கள் அரும்பாடுபட்டார்கள். ஆனால் அவர்கள் பெற்ற அமிர்தமும் நிலையாக நின்றதா? அதைப் பிரித்துப் பகுக்க என்னே அறப்போர் நிகழந்தது? எனவே இறைவனுடைய திருஅருள் அமிர்தமே எப்பொழுதும் நிரந்தரம் என்பதை உணர வைப்பவர்தான் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆவார்.. அஷ்ட திக்குகளிலிருந்து பாற்கடலில் திரண்டு பிறந்தது தான் அமிர்தம்! அஷ்டமா சித்திகளும் கைவரப் பெற்றவர்களால் தான் தங்கு தடையின்றி அமிர்தத்தைப் பெற முடியும்! தேவர்கள் அஷ்டமா சித்திகளைப் பெற்றிருந்தாலும் அகங்கார, ஆணவத் தளைகள் அவர்களைப் பாதித்துவிட்டன.. மேலும் எட்டு எழுத்து மந்திரத்தை உணர்ந்தால் தான் நிரந்தரமான அமிர்தமான இறைவனுடைய திருவருளைப் பெறமுடியும்.. அக்காலத்தில் எட்டுவிதமான மண் சேர்ந்த கடத்தைக் கொண்டு தான் கடம் என்ற இசைக் கருவியை உருவாக்கி வாசிப்பார்கள்.. எட்டு வகைச் சிறந்த மண் வகைகளைக் கொண்ட பாலிகை பூஜை என்ற ஒன்றும் உண்டு. “எட்டும் கிட்டும் குடமே கடநாதன்”  என்பது சித்தர்களின் பரிபாஷை.. இந்த நான்கு வார்த்தைகளையும் வைத்துக் கொண்டு உங்கள் வாழ்க்கை முழுவதுமே ஆதம்விசாரம் செய்து விடலாம்.. அந்த அளவிற்கு எத்தனையோ கோடி பீஜாட்சர சக்திகளைக் கொண்டதாக இந்த சித்தர்களுடைய ஞானபத்ர வாக்கியம் விளங்குகின்றது. வெற்றியைத் தருகின்ற சித்த மாமந்திரமாகவும், மணி மந்திரமாகவும் உள்ள இதனை உச்சரித்தவாறே, துதித்தவாறே, தியானித்தவாறே உங்கள் வெற்றிக்கான அருட்பாதையைத் தேடிக் கொள்ளுங்கள். இந்த அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நீங்கள் செய்ய வேண்டிய திருப்பணி என்னவென்றால் ஏழைகளின் அமிர்தமான தேன் கலந்த சர்க்கரைப் பொங்கலை வைத்து அடிப்பிரதட்சிணம் செய்து எத்தனையோ தடங்கல்களால் நடைபெறாமல் இருக்கின்ற நற்காரியங்களுக்கு வெற்றிப் பாதையைத் தேடிக் கொள்ளுங்கள்.

நவாவர்ண ஊஞ்சல்

நவாவர்ண ஊஞ்சலின் மகிமை

ஆடுகின்ற மனம் ஆடாது நின்று அற்புத தியானம் புரிந்திட வேண்டுமா? ஆடி, ஓடி ஆர்ப்பரிக்கின்ற மனமும் உடலும் ஓரிடத்தில் நிலைநின்று அலைபாயாது சாந்தத்தில் ஒன்றிட வேண்டுமா? குழப்பங்களில் கொந்தளிக்கும் உள்ளத்திற்கு ஆத்மசுகம் அளித்திட வேண்டுமா? மனப் போராட்டங்களுக்கு மாமருந்தாய் விளங்கும் நவாவர்ண ஊஞ்சலின் மகிமை ஆடுவீர் நவாவர்ண ஊஞ்சலில்! நாடுவீர் நல்யோகம்! நவாவர்ண ஊஞ்சல் நம் ஆஸ்ரமத்திலும், சென்னை ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயாவிலும் கிடைக்கும்..

ஆம், நவாவர்ண ஊஞ்சல் என்பது வெறும் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு ஆடுவது மட்டுமல்ல! கண்ணை மூடி அமர்ந்தவாறு (தூங்காது!) சற்றே அதன் ஆடலில் அமைதியான தியானம் பயிலவும் தான்! ஏனென்றால், பல மூலிகைப் பூச்சுகளுடனும் நவகிரகங்களுக்கும் உரித்தான வர்ணங்களுடனும் விளங்குகின்ற இந்த நவாவர்ண ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவதினால் மனப் போராட்டங்கள் தணிகின்றன. இதற்காகத்தான் அக்காலத்தில் நம் மூதாதையர்கள், வீட்டில் ஒவ்வொரு கூடத்திற்கும் ஒரு ஊஞ்சலை அமைத்திருப்பார்கள்.. சிறிய வீடாக இருந்தாலும் கூட அதனுடைய அளவிற்கு ஏற்ப ஒரு சிறிய மரப்பலகையுடைய ஊஞ்சலாவது இருக்கும்.. காலை மற்றும் மாலையில் குறிப்பாக சந்தியா நேரங்களில் இதில் அமர்ந்து கொண்டு பெரியவர்கள் மௌனத்துடன் ஊஞ்சல் ஆடுவதை நீங்கள் கண்டிருப்பீர்கள்.. இதன் காரணம்  என்னவென்றால் வாயுச் சலன மற்றும் அசல தீப தேவதைகள் அருள் பொழிகின்ற நேரமாக விளங்குவதே இந்த காலை, மாலை சந்தியா வேளைகளாகும்.. இது மட்டுமல்லாது., ஊஞ்சல் ஆடுகின்ற இடத்திலிருந்து உங்கள் கண்களில் தென்படுகின்றாற் போல சில முக்கியமான தெய்வீகப் படங்களையும், காட்சிகளையும் பொருத்தியிருப்பார்கள்.. பொதுவாக, புல்லாங்குழல் ஊதுகின்ற, ஸ்ரீகிருஷ்ணன். ஸ்ரீராதையும், ஸ்ரீகிருஷ்ணனும் சேர்ந்து புல்லாங்குழல் ஊதுகின்ற காட்சி, சூரிய உதய மற்றும் அஸ்தமனத் தெய்வீகக் காட்சிகள், வாயுபகவானின் புத்திரனான ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி கையில் சஞ்சீவி மலையைத் தாங்கிக் கொண்டு விண்ணில் பறக்கின்ற அற்புதக் கோலம் இவ்வாறாகப் பல முக்கியமான காட்சிகளை ஊஞ்சல் ஆடுகின்ற இடத்தில் வைத்திருப்பார்கள்.
நம் மூதாதையர்கள் செய்கின்ற ஒவ்வொரு நற்செயலுக்கும் ஆயிரமாயிரம் இறையர்த்தங்கள் உண்டு என்பது இதன் மூலம் நன்கு விளங்கும்.. தற்காலத்தில் செலவுகள் பெருகி வருமானம் குறைந்து மன அமைதியும் குலைந்து Flat System போன்ற பல குறுகிய இல்ல அமைப்புகள் நடைமுறைக்கு வந்து விட்டமையால் ஊஞ்சல் என்பது பல இடங்களில் இல்லாமல், இயலாமல் போய்விட்டது. சாணி போட்டு வீட்டு வாயிலை மெழுகுதல், நிலை/தலை வாசல்படி பூஜை, தினமும் வீட்டு வாசலில் கோ (பசு) பூஜை, வாசலில் கோலமிடுதல் போன்ற அற்புத தெய்வ வழிபாட்டு வழக்கங்களும் Flat System அமைப்புகளினால் காணாமற் போய் விட்டன. இவற்றைக் கைவிட்ட காரணத்தினால்தான் தினந்தோறும் பலவிதமான துன்பங்களுக்கு நாம் ஆட்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.. அதிலும் நகரவாசிகளுக்குச் சுத்தமில்லாத காற்று, மரஞ் செடி, கொடிகள் இல்லாத, விஷக்காற்று நிறைந்த பரவெளி, கோயில் கலச கோபுர தரிசனங்கள் இல்லாது கோயில் கோபுரத்தையும் தாண்டி உயர்ந்து நிற்கின்ற அடுக்கு மாடிக் கட்டிடங்கள் இவ்வாறாக தெய்வத் தன்மையே மங்கியதாகத்தான் நகர வாழ்க்கை கலியுகத்தில் அவதியுற்று வருகின்றது. வசதிகளை நாடும் இத்தகைய அநாகரீகமான விஞ்ஞான விளைவுகளால் தான் பெரும்பாலான வெளிநாடுகளில் ஒழுக்கமின்மை மிகுந்து அவரவர் மனம் போன போக்கில் வாழுகின்ற அதர்மமான வாழ்க்கை முறை தலையெடுத்து விட்டது..
இதற்கு நம்முடைய புண்ணிய பாரத பூமியும் பலியாக வேண்டுமா? ஒவ்வொருவரும் ஆத்மவிசாரத்துடன் சற்றே சிந்தித்துச் செயல்படுங்கள்! வெறும் பொம்மையாக வாழ்ந்திடாது. இறைமையில் செம்மையுடன் வாழ்வதுதான் இறைவனுக்கு நாம் செய்யும் நிரந்தரத் தொண்டு. இதற்கு அன்னதானம் போன்ற சமுதாய இறைப்பணிதான் அடித்தளம்! நவாவர்ண ஊஞ்சலில் அமர்ந்து ஆடுதல் உடலுக்கும், உள்ளத்திற்கும் நல்ல தெய்வீக ஆகர்ஷணச் சக்தியைத் தருகின்ற, நாத, வேத, யோக சக்திகள் நிறைந்ததாக நவாவர்ண ஊஞ்சல் விளங்குகின்றது.. ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு நீங்கள் துதிக்க வேண்டிய, தியானிக்க வேண்டிய, பல வழிபாட்டு முறைகள் நிறைய உண்டு. இவையெல்லாம் மிக எளிமையானவையே! பெரிய ஊஞ்சல் பலகையை மாட்டி அதில் அமர்ந்து நாத, வேத யோக நிலையில் ஊஞ்சலில் ஆடுவது என்பது கலியுகத்தின் நம்முடைய சிறிய வீட்டு அமைப்பினால் இயலாமற் போய்விட்டதால் தான் நவாவர்ண ஊஞ்சல் என்ற சிறிய அளவிலான பிரம்பு, மூங்கில், தட்டைகள் போன்றவற்றால் ஆன பலவிதமான நவாவர்ண ஊஞ்சல் அமைப்புகள் நமக்கு அளிக்கப்பட்டுள்ளன.
ஒன்றுமறியாப் பாமரர்களான பெருமதிப்பிற்குரிய காட்டுவாசிகள் கூட ஊஞ்சலின் தெய்வீக மகத்துவத்தை உணர்ந்து மூலிகைக் கொடிகளால் ஊஞ்சல் கட்டி ஆடுவதை இன்றைக்கும் கொல்லிமலை, பொதியமலை, ஊட்டி, ஏலகிரி மலை போன்ற இடங்களில் கண்டிடலாம். இவ்வகையில் நம் ஆஸ்ரமத்தின் நவாவர்ண ஊஞ்சலானது பலவிதமான யோக வழிபாட்டு முறைகளுடன் பூஜிக்கப்பட்டு இதில் அமர்ந்து தியானப் பலாபலன்களை வர்ஷிக்கும் அளவிற்குப் பவித்ரமான பூஜா பலன்களுடன் நன்முறையில் அளிக்கப்படுகின்றது. ஒரு மண்டலத்திற்கும் மேலாகத் திருஅண்ணாமலையில் ஸ்ரீஅருணாசல மலையின் தீர்க்க கிரணங்கள் சிவசக்தி ஐக்ய ஸ்வரூப நேத்ர நோக்கில் படும்படி ஒவ்வொரு நவாவர்ண ஊஞ்சலும் நல் பீடத்துடன்  ஸ்தாபிக்கப் படுகின்றது.
நம்முடைய ஆசிரமத்தில் பதினெட்டு விதமான (மூலிகை யோக) கலசங்கள் நிறைந்த ராஜ கோபுரத்தைத் தரிசித்திருப்பீர்கள்.. இக்கோபுர கலச தரிசனங்களின் தீர்க்க நோக்கில் தான் இந்த நவாவர்ண ஊஞ்சல் பீடம் வைக்கப்பட்டு ஹோம அக்னி வழிபாடுகளுடன் பூஜிக்கப்படுகின்றன. பஞ்சாங்க தேவதைகளின் வழிபாடு மட்டுமல்லாது, ஜீவன், நேத்ரம், ருது, அயனம், ருது, யுகாதி தேவதைகள் போன்ற நூற்றுக்கணக்கான காலதேவதா மூர்த்திகளின் நாம தியானத்தோடு இந்த நவாவர்ண ஊஞ்சல் அமைக்கப்பட்டு இதில் அமர்ந்து மகத்தான தியானம் புரியும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கால்கள் தரையில் படாவண்ணம் பூமியின் ஆகர்ஷண சக்தியிலிருந்து சற்று உயர்ந்த நிலையில் செய்யப்பட வேண்டிய யோகங்கள் பல உண்டு. இவையெல்லாம் குக்குட பீதாம்பர யோக முறைகளாகும். குறிப்பாக மரக்கிளையில் (மரத்திற்கு எவ்வித பாதிப்புமின்றி) இத்தகைய நவாவர்ண ஊஞ்சல் அமைத்து நம் மூதாதையர்கள் பலவிதமான யோக தியான முறைகளைக் கைக்கொண்டனர்.

இந்த நவாவர்ண ஊஞ்சலில் சுபகரமான புத, குரு, சுக்ர, வளர்பிறை சந்திர ஹோரை நேரங்களில் அமர்ந்து கொண்டு சில குறிப்பிட்ட மந்திரத் துதிகளைத் தியானம் செய்து வருவீர்களேயானால் உங்களுடைய மனப் போராட்டங்களுக்கும், கொந்தளிப்புகளுக்கும், குழப்பங்களுக்கும் நல்ல தீர்வு கிட்டுவதோடு சாந்தமான முறையில் இறை நம்பிக்கையுடன் எந்தத் துன்பத்தையும், எதிர்பாராது வரும் பிரச்னைகளையும் எதிர்நோக்குகின்ற மன ஆற்றல் நிச்சயமாகக் கிட்டும்.. துன்பச் சுழல்களிலிருந்து மீண்டு மனத் தூய்மை பெற இந்த நவாவர்ண ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு ஊஞ்சலாடுகின்ற போது துதிக்க வேண்டிய மந்திரங்கள் பல உண்டு. அவற்றுள் ஒன்று..

“எண்திக்கில் ஏற்றமுடன் எழுகின்ற எண் சுடரீர்!
எண்பூத மலரடிகள் எம்முடலில் எழும் போது
எண்கூட்டின் யோக லயம் எம்முள்ளே எச்சமுற
எம்பெருமான் எழிலடிகள் ஏத்துகின்றேன் எம்பாவால்”

உங்கள் வீட்டு தெய்வப் படங்களையும் இதில் வைத்து ஊஞ்சலாராதனை செய்து மகிழுங்கள்.

லட்சுமி பஞ்சமி

ஸ்ரீலக்ஷ்மி பஞ்சமி விரதம்

ஆண்டவன் உங்களுக்கு மூன்று வேளையும் நிம்மதியான உணவைத் தந்திருக்கும் போது பணக் கஷ்டம் என்று புலம்புவது ஏனோ? இறைவிதிப்படி உங்களுக்குத் தேவையான பணம் எப்போது வேண்டுமோ அப்போது வரும். ஆனால் நீங்கள் நினைக்கின்ற அளவில்/நாளில், நேரத்தில் அல்ல.! முன்வினையில் செய்துள்ள தான தருமத்தின்படி உங்களுக்கு விதித்துள்ளபடி உள்ள அளவில்தான் வரும் பணம்! உங்களுக்குத் தார்மீகமாகவே உண்மையான பணக் கஷ்டம் இருக்குமானால் ஸ்ரீலக்ஷ்மி விரத பஞ்சமி பூஜாபலன்கள் தாம் அரிய புண்ணிய சக்திகளைத் தந்து நிலையான செல்வமாக மாற்றித் தரும். ஆமாம்! உண்மையான பணக் கஷ்டத்தைத் தீர்த்து வைப்பதே ஸ்ரீலக்ஷ்மி பஞ்சமி விரதம்! பணக்கஷ்டத்திற்கான வினைகளை உணர வைத்துத் தீர்ப்பதே ஸ்ரீலக்ஷ்மி பஞ்சமி ....! பணக் கஷ்டம் வராமல் அருள்புரியும் ஸ்ரீலக்ஷ்மி பஞ்சமி விரதம்.

பணக்கஷ்டம் எப்படி ஏற்படுகின்றது? உதாரணமாக நீங்கள் 3 லட்ச ரூபாய் செலவில் வீடு கட்டும் திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு, கையில் ஒரு லட்சத்தை மட்டும் வைத்திருந்து, மீதமுள்ள பணம் எப்படி வருமோ, ஏது வருமோ என்று திகைப்பதும் உண்டு. பல காரியங்களில் அகலக் கால் வைத்து விட்டுத் தேவையான போது பணம் வரவில்லையே என்று விழிப்பதும் உண்டு. முக்கியமான காரியங்களுக்காகப் பணத்தை வைத்திருந்து, திடீர்ச் செலவுகளாக, ஆபரேஷன், மருத்துவச் செலவு, விபத்துச் செலவுகள் என்பதான எதிர்பாராத செலவுகள், பல ஊடே புகுந்து நற்காரியத்தைத் தடை பெறச் செய்வதும் உண்டு. எனவே, பணக்கஷ்டம் என்பது எந்த வாழ்க்கைக் காரியத்தை நிறைவேற்ற முடியவில்லையோ அதனுடைய தன்மையைப் பொறுத்துத்தான் பணக் கஷ்டத்தின் விளக்கம் இருக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்..
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் வலதுகால் கட்டைவிரலாகத் திகழ்பவள்தான் ஸ்ரீலக்ஷ்மி தேவியாள்.. எனவே ஸ்ரீகிருஷ்ண பகவான் ஆலிலைக் கிருஷ்ணனாக கட்டை விரலை ஸ்பரிசிக்கின்ற யோக பாவனையில் திருமகளைத் திருக்குழந்தையாய் பாவிக்கின்றார்.. அன்பு முத்தம் என்பது தன்னுள் ஆயிரமாயிரம் தெய்வமய பிணைப்புகளைக் கொண்டுள்ளது. அன்புத் தாய் தன் ஆருயிர்க் குழந்தைக்கு அன்பு முத்தத்தை இடுகின்ற போது தன்னுடைய உண்மையான ஆன்ம அன்பை யோக நாளம் மூலமாகவும், நாடி நரம்புகள் வழியாகவும் ஸ்பரிச சக்தியால் ஊட்டுவிக்கின்றாள் என்பதே இதனுடைய ஆன்மீகத் தாத்பரியமாகும். ஸ்ரீலக்ஷ்மி தேவி ஸ்ரீமன்நாராயண மூர்த்தியைப் பலமுறை பிரிய வேண்டிய புராண சம்பவங்களை நீங்கள் நன்கு அறிவீர்கள்.. இவ்வாறின்றித்தான் எப்போதுமே திருமாலின் மார்பில் தாம் உறைதல் வேண்டும் என்பதற்காகத் திருமகள் கடுமையான தவம் புரிந்தாள்.. அப்போது, ஸ்ரீநாரத மாமுனி, “திருமகள் தாயே! தாங்கள் திருமாலுடைய ஸ்பரிச மோன யோக சக்தியைப் பெற்றால் தான் திருமாலுடைய மார்பிலே ஒளிர்கின்ற தெய்வீக மாவரத்தைப் பெறமுடியும். இதற்காகப் பல பெருமாள் அவதாரங்களில் தாங்கள் தெய்வத் துணைவியாய் நிலை நிற்பதற்கான பல அரிய வழிபாட்டு முறைகளை மேற்கொள்ள வேண்டும்“.

“எவ்வாறு ஒரு அன்புத்தாய் தன் ஆருயிர்க் குழந்தைக்குத் தெய்வீக முத்தத்தை இட்டு ஆன்ம சக்தியை அளிக்கின்றாளோ, அதே போல தாங்கள் தெய்வீக மானுடக் குழந்தையாய்ப் பிறப்பைக் கொண்டு அண்ணலாம் ஸ்ரீமன் நாராயண மூர்த்தியின் அன்னை, அரவணைப்புக்கு ஈடான குழந்தைப் பருவத்தையும், முத்தப் பருவத்தையும் திருவிளையாட்டுப் பருவத்தையும் ஒவ்வொன்றாகப் பெற்று இறுதியில் தான் அன்னையின் மார்பிலுறையும் அருட்செல்வத்தைப் போல் தாங்கள் திருமாலின் திருமார்பில் உறைகின்ற பாக்கியத்தைப் பெறுதல் வேண்டும்”, என்று கூறி விளக்கினார்.. மானுடக் குழந்தையாய்ப் பிறப்பெடுப்பது ஒன்றும் எளிதல்லவே! அதற்கு எத்தனையோ மஹரிஷிகளுடைய ஆசிகளைப் பெற்று அப்பிறவிகள் தோறும், இறைவனே மானுட ரூபத்தில் வந்து தன்னை அரவணைப்பதற்கான பல கோடி யுகக் கடுந்தவங்களையும் அல்லவா மேற்கொள்ள வேண்டும். அதுவரையில் ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயண மூர்த்தியைப் பிரிந்திருக்க வேண்டுமே என் செய்வது!

திருமகள் தந்திடும் அருட்பாடம்!

இவ்வரிய வரங்களைப் பெற்றிடத் திருமாலுக்குரிய நித்திய பாத சேவா முறைகளைக் கடைபிடிக்கத் தொடங்கினாள் இலக்குமி தேவி. உலக அன்னையாக விளங்குகின்ற திருமகள், இத்தகைய பூஜை முறைகளை மஹரிஷிகளிடமிருந்துதான் கற்றாக வேண்டுமா என்ற கேள்வி எழலாம். ஆனால் அனைத்தையும் தக்க சற்குருமார்களிடமே உபதேசமாகப் பெற்றே எந்த வழிபாட்டு முறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்ற இறை நியதிக்குத் தெய்வ மூர்த்திகளே தங்களை ஆட்படுத்திக் கொண்டு உலக ஜீவன்களுக்கு சற்குருவின் மகிமையைக் கற்பிப்பதற்காகத்தான் இத்தகைய இறை லீலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதை நன்கு புரிந்து கொள்ளுங்கள்.. இதன் பலனாக, இறைவனுடைய திருப்பாதங்களை வருடி, ஸ்பரிசித்து, வணங்கி இறைவனுடைய வலதுகாலில் உள்ள ஐஸ்வர்ய பூஜ்ய நரம்பில் ஐக்கியமானாள் திருமகள்.. இதற்காகத்தான் இன்றைக்கும் திருப்பதியில் ஸ்ரீவெங்கடேசப் பெருமாளை தரிசிக்கின்ற போது அவருடைய திருப்பாதங்களில் குறிப்பாக வலது பாதத்திலிருந்து தொடங்கி சிரசு வரை பாதாதி கேச தரிசனமாகத் தரிசிக்க வேண்டும் என்ற ஸ்ரீவெங்கடேச தரிசன முறையைச் சித்புருஷர்கள் நமக்கு அருளியுள்ளார்கள்., அதாவது திருப்பதியில் சந்நிதிக்கு வந்தவுடன், உடனடியாக ஸ்ரீவெங்கடேசப் பெருமாளைத் தரிசித்திடாது, அவரது திருப்பாதத்தில் குறிப்பாக வலது திருப்பாதத்தில் கட்டை விரலிருந்து படிப்படியாகத் தரிசனத்தைத் தொடங்கி இறுதியில் சிரசு தரிசனத்தைச் செய்து வரவேண்டும்.

ஆனால்.... இப்போது இருக்கின்ற கூட்ட நெரிசலில் இந்த தரிசன முறை இயலுமா? முயற்சி திருவினையாக்கும் அல்லவா! இறைவன் கூடத் தன் திருமேனி தரிசன முறைகளில் எத்தனையோ யோக, வியூக தரிசன முறைகளை அமைத்துத் தந்திருக்கின்றான்.. எத்தனையோ கோடி முறை இதற்காக நீங்கள் முயற்சிகள் எடுத்தால், ஒரு முறையாவது வெற்றி சித்திக்காதா என்ன! இறைதரிசனம் எளிதல்லவே! இதுதானே திருமகள் நமக்குப் புகட்டும் பாடம்!

அன்புக் குழந்தையாய் அரவணைத்து அன்பு முத்தம் தரவேண்டும் என்று வேண்டிய ஸ்ரீமஹாலக்ஷ்மியின் திருவுளத்தைப் புரிந்து கொண்ட இறைவன், அந்த நல்வரத்தை ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தில்தான் பெற்றுக் கொடுத்தான் எவ்வாறு? கிருஷ்ண பாலனாய் ஆலிலைக் கண்ணனாய்த் தவழ்ந்த போது தன்னுடைய கால் கட்டைவிரலை வாயில் வைத்துச் சுவைக்கின்ற ஆனந்தக் களிப்புக் காட்சியை நீங்கள் கண்டிருப்பீர்கள்! ஆம்,  இதுவே அன்புக் கிருஷ்ணக் குழந்தையாய், அன்புக் குழந்தையாம் ஸ்ரீலக்ஷ்மி தேவிக்கு இறைவன் இட்ட திருமுத்தம்!

விட்டதே விட்டலா!
தினந்தோறும் வைகுண்டத்தில் ஸ்ரீமன்நாராயணமூர்த்திக்கு விடியற்காலையில் திருவடிச் சேவையை நிகழ்த்துகின்ற பாக்கியத்தைப் பெற்ற ஸ்ரீமஹாலக்ஷ்மி தேவி ஒருநாள்..... திருவடிப்பாதச் சேவைக்காக்ச் சென்றிட, பெருமாள் மூர்த்தி தம்முடைய பாதங்களைச் சட்டென்று உள்ளிழுத்துக் கொண்டு வீராசன யோக நிலையில் அமர்ந்து விட்டார். யோகத்தில் ஆழ்ந்து விட்ட மூர்த்தியை எவ்வாறு எழுப்ப இயலும்! சற்று நேரம் சாந்தமாக பொறுத்திருந்த ஸ்ரீமஹாலக்ஷ்மி தேவி, தன்னுடைய ஏனைய காலை பூஜைகளுக்குத் தகுந்த நேரம் வந்திடவே, இதர பூஜைகளைத் தொடர்ந்தாள். அன்றைய நித்திய பாத சேவையானது சுவாமியின் வீராசன யோக நிலையில் கைகூடாமல் போயிற்று. அடுத்த நாளும் மஹாலக்ஷ்மி சென்ற போது, அது வரையில் கால்களை நீட்டி ஸ்ரீரெங்கநாதர் போல் சயனக் கோலம் கொண்டிருந்த பெருமாள், திருமகளைக் கண்டவுடன், சட்டென்று பாதங்களை உள்ளிழுத்துக் கொண்டு, தற்போது சுகாசன யோகத்தில் ஆழ்ந்தார்... இவ்வாறாக 3 தினங்கள் நித்திய பாத சேவை இன்றிச் சென்றிட்டன! மானசீக பாதபூஜையும், ஏனைய திருமால் அவதாரத் திருவடிப் பூஜைகளும் வழக்கம் போல் தொடர்ந்தாலும் ஸ்ரீலக்ஷ்மி தேவிக்கு வருத்தம் உண்டாயிற்று! “தாம் ஏதேனும் தவறுகள் செய்து விட்டோமோ, இறைவா ஏனிந்த சோதனை! பெருமாள் யோகத்தில் ஆழ்ந்திருப்பதால் இதற்குரிய விடைகளை அவரிடமிருந்து கேட்பதற்கே தயக்கமாய் இருக்கிறதே! என் செய்வது!”

பூலோகத்தில் ஸ்ரீதேவி!
இதற்கான இறை விளக்கங்களை அள்ளித் தரவே மஹரிஷிகளும், யோகியர்களும், சித்புருஷர்களும், சற்குருமார்களாய்க் காத்துக் கிடக்கின்றார்கள். ஸ்ரீபரத்வாஜ முனிவரை நாடித் திருமகள் விளக்கம் கேட்டிட, “பாதபூஜையில் சிறந்து விளங்குபவள் ஸ்ரீஅகத்தியருடைய பத்னியாகிய ஸ்ரீலோபாமாதா தேவியே! எனவே தாங்கள் மானுடப் பெண்ணாய் வடிவு பூண்டு ஸ்ரீலோபாமாதா தேவியின் இல்லத்தில் சற்று நேரம் தங்கியிருந்து, பாதபூஜையின் மஹிமையை உணர்ந்து வாருங்கள்”, என்று அறிவுரை கூறி அனுப்பிடவே, திருமகளும் மானுடப் பெண்ணாய்ப் பூலோகத்திற்கு வந்தாள். இதுவே சுக்லபட்ச பிரதமை தினமாகும்.. தன்னுடைய இல்லத்திற்குச் சாதாரணப் பெண்ணாய் வந்திருந்த திருமகளை வரவேற்ற ஸ்ரீலோபாமாதா தேவி, தம்முடைய லக்ஷ்மி பஞ்சமி விரத பூஜையில் பங்கு கொள்ளுமாறு வேண்டினாள்.. சாட்சாத் மஹாலக்ஷ்மி தேவியேத் தன்னை நாடி வந்திருக்கிறாள் என்பதை அறியாத ஸ்ரீலோபா மாதா தேவி, அறிந்தோ, அறியாமலோ ஸ்ரீலக்ஷ்மி பஞ்சமி விரத பூஜை முறைகளைத் தொடர்ந்தது பிரபஞ்சத்தின் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், மஹரிஷிகளுக்கும் மிகுந்த வியப்பையும், ஆனந்தத்தையும் அளித்தது. எத்தகைய பேற்றை ஸ்ரீலோபாமாதா பெற்றிருக்கின்றார்கள்..!

முதல் நாளாகிய பிரதமை திதியில் ஸ்ரீலோபாமாதா தேவியே ஸ்ரீஅகத்தியப் பெருமானுக்குத் திருநாமம் இட்டு, (சிவப்புநிற திருச்சூர்ணம் இருபுறமும் வெள்ளை நாமமும்) பாதபூஜை செய்து கருப்பு நிற திராட்சைகளால் ஒவ்வொன்றாக ஸ்ரீமஹாவிஷ்ணுவுக்கு ஆயிரத்தெட்டு போற்றி அர்ச்சனை செய்து, ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம், திருமால் தோத்திரத் துதி செய்து, பழங்களைத் தானமளித்துப் பூஜையை நிறைவேற்றினாள்...

இரண்டாம் நாளாகிய துவிதியை திதியன்று ஸ்ரீஅகத்தியப் பெருமானுடைய நெற்றியிலும் இரு தோள்களிலும் நாமம் இட்டுப் பாத பூஜை செய்து, ஸ்ரீமஹாவிஷ்ணுவுக்கு இரட்டைப் பழங்களால், அதாவது இரண்டு இரண்டு பன்னீர் திராட்சைப் பழங்களால் புஷ்ப அர்ச்சனை போல, பெருமாள் துதிகளை ஓதி அர்ச்சனை செய்து வழிபட்டுப் பழங்களை தானம் அளித்தனள்.

மூன்றாம் நாளாகிய திருதியைத் திதியன்று ஸ்ரீஅகத்தியப் பெருமானுடைய நெற்றி, இரு தோள்கள் மற்றும் மார்பிலும் திருச்சூர்ணம்/நாமம் இட்டுப் பாதபூஜை செய்து, ஸ்ரீமஹா விஷ்ணுவிற்கு மூன்று மூன்று துளசி தளங்களால் அர்ச்சனை செய்து வழிபட்டு வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து தானம் அளித்தனள்.

நான்காம் நாளாகிய சதுர்த்தி திதியன்று தம்முடைய உத்தம தெய்வமாம் ஸ்ரீஅகத்தியப் பெருமானுக்குப் பதினெட்டுத் திருநாமங்கள் இட்டனள். வேதப் பிராமணங்களாய் விளங்குகின்ற முழு முந்திரிகளை இரண்டாகப் பிரித்து, நான்கு நான்காகப் புஷ்ப அர்ச்சனை போல நால்வேத முந்திரியால் பெருமாள் மூர்த்திக்கு அர்ச்சனை செய்து விஷ்ணு துதிகளை ஓதி வழிபட்டு முந்திரிகளைத் தானமளித்தாள்.

ஐந்தாம் நாளாகிய ஸ்ரீலக்ஷ்மி பஞ்சமியன்று ஸ்ரீஅகத்தியப் பெருமானுக்குத் திருநாமம் இட்டு, சந்தன நாமமும் இட்டுப் பாதபூஜை செய்தனள். பெருமாளுக்கு கங்கை, காவிரி, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரவருணி, போன்ற ஐந்து விதமான புனிதத் தீர்த்தங்களைக் கொண்டு அபிஷேகம் செய்து, துளசி, தாமரை, மல்லிகை, புஷ்பம், ஜவ்வாது, ஆகிய ஐந்தாலும் அர்ச்சனை செய்து வழிபட்டாள்...

திருவடி பூஜையே பெண்களின் ஐஸ்வர்யம்!

இதன் பிறகு ஸ்ரீமஹாலக்ஷ்மி தேவி ஸ்ரீலோபாமாதா தேவியிடம், “அம்மணி, நீ வருடந்தோறும் இந்த லக்ஷ்மி பஞ்ச விரத பூஜையை மேற்கொள்ளக் காரணம் என்ன? உனக்கில்லாத செல்வமா, ஸ்ரீஅகத்திய மாமுனியைக் கணவராகப் பெற்றதே சகல ஐஸ்வர்யத்தையும் பெற்றாற் போலத்தானே, ஏனிந்த பூஜையை ஆண்டுதோறும் மேற்கொள்ள வேண்டும்”, என்று கேட்டிடவே., ஸ்ரீலோபாமாதா தேவியும், “தாயே, தாங்கள் அறியாதது ஒன்றுமல்ல, யார் ஒருவர் இந்த லக்ஷ்மி பஞ்ச விரதத்தை முறையாகச் செய்கின்றார்களோ, அவர்களுக்கு லட்சுமி பஞ்சமி திதியன்று ஸ்ரீலக்ஷ்மி தேவியின் தேஜோமயமான தரிசனம் கிடைக்கும் என்று ஸ்ரீஅகத்திய மாமுனியே எனக்கு உபதேசித்துள்ளார்.. அதனைத்தான் நான் இன்று தங்களைத் திருமகள் தரிசனமாக காண்கின்றேன். கடந்த நான்கு நாட்களாக தாங்கள் யாரென்று அறியாது உபசரித்து வந்த நான் இந்த லக்ஷ்மி பஞ்சமி விரதத்தின் மகிமையால் லக்ஷ்மி தரிசனத்தையே அருட்செல்வக் கடாட்சமாகப் பெற்று விட்டேன் அல்லவா! அதனால் ஆண்டு தோறும் இதனை அடியேன் முறையாகக் கையாண்டு வருவதன் காரணமே எனக்கு தினந்தோறும் என் தெய்வமாம் ஸ்ரீஅகத்திய மாமுனிக்கு திருப்பாத பூஜை செய்கின்ற பாக்கியத்தைத் தொடர்ந்து எந்நாளும் விடாது தந்தருள வேண்டும் என்பதற்காகத்தான்! தாங்கள் வைகுண்டத்தில் தினந்தோறும் ஸ்ரீமன்நாராயணனுக்குச் செய்வதைப் போல!

ஸ்ரீலோபாமாதா தேவியுடன் ஸ்ரீலக்ஷ்மி பஞ்சமி விரத பூஜையை முறையாகப் பரிபூரணமாகக் கடைப்பிடிக்கின்ற பாக்கியத்தைப் பெற்ற திருமகள் ஸ்ரீவைகுண்டத்திற்கு ஏகிய போது, அதுவரையில் கால்களை நீட்டிய கோலத்தில் சயனித்திருந்த பெருமாள் மூர்த்தி, திருமகளைக் கண்டவுடன் மீண்டும் சட்டென்ற கால்களை மடித்துக் கொண்டு வீராசனக் கோலத்தில் அமர்ந்து விட்டார். நல்லவேளை, அவர் எந்த யோக நிலைக்கும் அன்று ஆழ்ந்திடவில்லை! “ஸ்வாமி, கடந்த சில நாட்களாக எனக்கு திருவடிச் சேவை சாதிக்கின்ற பாக்கியத்தைத் தராமல் இருந்து விட்டீர்கள். என்னுடைய அகந்தை காரணமோ! அடியேனும் பூலோகத்திற்குச் சென்று, ஸ்ரீஅகத்திய மாமுனியின் பர்ணசாலையில் பல பூஜை விளக்கங்களையும் பெற்று வந்துள்ளேன். அப்படியும் தங்கள் திருவடிச் சேவை சாதிக்கின்ற பாக்கியம்தனை அடியேனுக்குத் தராதது ஏனோ?” என்று கேட்டிடவே, ஸ்ரீமன் நாராயண மூர்த்தியும் சிரித்துக் கொண்டே, “ஆமாம், லோபாமாதாவிடம் உபதேசமாக பூஜா விளக்கங்களை மந்திரங்களைப் பெற்றாய், அதற்கு குருதட்சிணையாக ஏதேனும் தந்தாயா? அதைச் செய்தால்தானே, உன்னுடைய பூஜாபலன்கள் பரிபூரணமாகும்”, என்று எடுத்துரைத்திடவே தான் தன்னுடைய தவற்றை உணர்ந்தவளாய், ஸ்ரீலக்ஷ்மி தேவி, “யான் என் செய்ய வேண்டும் பிரபோ!” என்று கேட்டிடவே, “எவ்வாறு நீ பார்வதி, சரஸ்வதியுடன் சேர்ந்து பூலோகத்திற்குச் சென்று அனுசூயாதேவியிடம் பல பூஜாமுறைகளைத் தெளிந்து கொண்டு, ஸ்ரீஅனுசூயாதேவிக்குப் பாதபூஜை செய்தீர்களோ, அதே போல ஸ்ரீலோபாமாதா தேவிக்கும் பாத பூஜை செய்தால் தான் பூஜாபலன்கள் குருதட்சிணையாகப் பரிபூரணமாகும்”, என்று உரைத்திட்டார்.

“ஸ்வாமி, இதில் ஒரு சிக்கல் இருக்கின்றது. இந்த லக்ஷ்மி பஞ்ச விரத மஹிமையினால் அடியேன் தான் மஹாலக்ஷ்மி என்று லோபாமாதாவிற்குத் தெரிந்து விட்டதால், அவளுக்குக் கூச்சமாக இருக்குமல்லவா? இந்தச் சிக்கலையும் தாங்கள்தான் தீர்க்க வேண்டும்”, என்று கேட்டிடவே, திருமாலும் “ஒன்றைப் புரிந்து கொள் மஹாலக்ஷ்மி, நீ எப்போதும் ஸ்ரீஐஸ்வர்யத்தைக் கடாட்சிப்பவளாக இருக்கும் போதுதான் ஸ்ரீமஹாலக்ஷ்மியாக பிரகாசிக்கின்றாய் என்றால் இதுதான் நான் இடுகின்ற புதிர்.. இதை வைத்துக் கொண்டு பூலோகம் சென்று, உன் பூஜாபலன்களைப் பரிபூரணமாகப் பெற்று வருவாயாக!” என்று கூறி விடை அனுப்பினார்.

மீண்டும் பூலோகத்தில்.... ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு திருமால் எதைச் சொல்லித் திருவிளையாடல் புரிகின்றார் என்று க்ஷண நேரத்தில் புரிந்து விட்டது. நேரே ஸ்ரீஅகத்தியருடைய பர்ணசாலைக்குச் சென்றாள், உள்ளத்தில் ஒரு வேண்டுகோளுடன்! லோபாமாதா திருமகளாகத் தன்னைக் கண்டால்தானே தான் மஹாலக்ஷ்மி என்ற ஜோதி தரிசனம் எதிரிலேயே அவளுக்குத் தெரிந்து விடுகின்றது. எனவே, ஸ்ரீலோபாமாதா இல்லத்திலிருந்து வெளிவருவதற்கு முன்னரேயே, “அம்மா, தாயே எனக்கு உன்னுடைய பஞ்சமி விரத பாத பூஜையின் பலாபலன்களை அளிப்பாயாக!” என்று குரல் கொடுத்து விட்டாள். ஸ்ரீலக்ஷ்மியே பூஜாபலன்களை யாசித்தமையால், லோபாமாதாவிற்கு வந்தது ஸ்ரீலக்ஷ்மிதேவி என்று புரிந்திடவில்லை. தானம் என்றால் ஸ்ரீஅகத்தியருடைய பர்ண சாலையில் பஞ்சமா என்ன! தன்னுடைய கோடானு கோடி யுக பாதபூஜையின் பலன்களை எல்லாம் அந்த இடத்திலேயே சட்டென்றுத் தாரையாக வார்த்துக் கொடுத்து விட்டாள் ஸ்ரீலோபாமாதா தேவி. இதனால் மகிழ்ச்சி கொண்ட ஸ்ரீலக்ஷ்மி தேவி, திருமாலுடைய அபிலாக்ஷையும் பூர்த்தி செய்தாகி விட்டது. அதேசமயம் லோபாமாதா தனக்களித்த பாத பூஜையின் பலன்களையெல்லாம் பன்மடங்காகப் பெருக்கி, அதனையே லக்ஷ்மி தீர்த்தமாக ஆக்கி, ஸ்ரீலோபாமாதாவின் இல்லம் எங்கும் மாவிலையால் தெளித்து குருதட்சிணையாக தந்து ஆசியை வழங்கிச் சென்று வைகுண்டத்திற்கு ஏகினாள். அங்கு ஸ்ரீமன் நாராயணமூர்த்தி புன்முறுவலுடன், தன் கால்களைச் சயனக்கோலத்தில் நீட்டிட மீண்டும் திருவடி சேவை செய்கின்ற பாக்கியம் ஸ்ரீமஹாலக்ஷ்மிக்குத் தொடர்ந்தது. இதுதான் ஸ்ரீலக்ஷ்மி பஞ்சமி விரதத்தின் மஹா மகிமையாகும்.

ஸ்ரீலக்ஷ்மி பஞ்சமி பூஜை முறைகள்! இந்த லக்ஷ்மி பஞ்சமி விரதத்தின் முக்கியமான அம்சம் என்னவென்றால்..

1. முதல் நாளான பிரதமைத் திதியில் கணவனுக்கு நெற்றியில் திருநாமம் இட்டு, பாதபூஜை செய்து இதன் பிறகு ஸ்ரீமஹாவிஷ்ணுக்கு கருநிற திராட்சைப் பழத்தால் அர்ச்சனை செய்து அஷ்டோத்திரமோ ஸஹஸ்ரநாமமோ ஓதி வழிபட வேண்டும். சஹஸ்ரநாமத் துதி அறியாத இல்லறப் பெண்மணிகள் தாம் அறிந்த துதிகளை ஓதி, பெருமாளை அர்ச்சித்து பழங்களை ஏழைகட்குத் தானமாக அளித்திட வேண்டும். பல இல்லறப் பெண்மணிகளும் சத்சங்கமாக ஒன்று கூடி இந்த பூஜையைச் செய்து, நூற்றுக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு வருமாறு திராட்சைப் பழங்களைத் தானமாக அளித்தல் மிகவும் விசேஷமானதாகும்.

2. இரண்டாம் நாளான துவிதியை திதியன்று தன் கணவனுக்கு நெற்றித் திருமண் இட்டு பாதபூஜை செய்து பெருமாளுக்கு இரண்டிரண்டு பன்னீர் திராட்சைகளால் அர்ச்சனை செய்து பழங்களைத் தானமாக அளித்திட வேண்டும்.. இரட்டைக்கனி அர்ச்சனை!

3. மூன்றாம் நாளான திரிதியை திதியன்று தன் கணவனுக்குத் திருநாமம் இட்டு, மூன்று துளசி தளங்களாக ஸ்ரீநாராயண மூர்த்திக்கு அர்ச்சனை செய்து, மூன்று விதமான பழங்களை நைவேத்யம் செய்து ஏழைகளுக்குத் தானம் அளித்திட வேண்டும்.

4. நான்காம் நாளாகிய சதுர்த்தி திதியன்று தன் கணவனுக்குத் திருநாமம் இட்டு, பாத பூஜை செய்து, துளசி, தாமரை, மல்லி, ஜவ்வாது ஆகிய நான்கினால் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து நான்கு விதமான பழங்களை ஏழைகளுக்குத் தானமாக அளிக்க வேண்டும்.

5. ஐந்தாம் நாளான ஸ்ரீலக்ஷ்மி பஞ்சமி திதியன்று தன் கணவனுக்குத் திருநாமம் இட்டு, பாதபூஜை செய்து பெருமாளுக்கு ஐந்துவிதமான பொருட்களான பஞ்சாமிர்தம், ஐந்து பூக்கள், ஐந்து பழங்கள் இவற்றால் அர்ச்சித்து, ஏழைகளுக்குப் பழங்களையும், உணவுப் பண்டங்களையும் தானமாக அளித்திட வேண்டும். இத்தகைய எளிமையான ஸ்ரீலக்ஷ்மி பஞ்சமி விரத பூஜையினால் எந்தப் பணக் கஷ்டத்தால், திருமணம், வீடு கட்டுதல், நகைகளை மீட்டல், வியாபாரத் தடங்கல்கள் போன்றவை நின்று போனதோ அவரவர்க்கு விதித்துள்ள நியதிப்படி அந்தத் துன்பங்கள் தீருவதற்காகப் பொருளுதவியானது தக்கச் சமயத்தில் வந்து சேரும். ஆனால் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, இந்த லக்ஷ்மி பஞ்சமி விரத பூஜையை மேற்கொள்வது சிறப்புடையதாகும்...

எவ்வாறு ஸ்ரீலோபாமாதா தேவி தன்னுடைய பாதபூஜை பலன்களையெல்லாம் ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு அர்ப்பணித்தாளோ, அதே போல நீங்கள் அனைவரும் உங்களுடைய இந்த ஸ்ரீலக்ஷ்மி பஞ்சமி விரத பூஜாபலன்களை எல்லாம் ஸ்ரீமஹாலக்ஷ்மி தேவியிடமே அர்ப்பணிப்பீர்களேயானால், உங்கள் இல்லத்தில் லக்ஷ்மி தீர்த்த பலன்களாக எப்போதும், லக்ஷ்மிகடாட்சம், நிரம்பிட திருமகள், அருள்புரிவாள் என்பது நிச்சயம்.!

திருநின்றியூர் திருச்செல்வ சிவபிரான்!

இந்த ஸ்ரீலக்ஷ்மி பஞ்சமி விரதத்தைக் கடைபிடிக்க, மிகச் சிறந்த தலமாக விளங்குவது தஞ்சாவூர் மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருநின்றியூர் ஸ்ரீலக்ஷ்மிபுரீஸ்வரர் ஆலயமாகும். ஆம் சிவபெருமானே ஸ்ரீமகாலக்ஷ்மி தேவிக்கு அருள்பாலித்தவராய் ஸ்ரீலக்ஷ்மிபுரீஸ்வரர் என்ற பெயரைப் பூண்டவராய் விளங்குகின்றார். சென்னை அருகிலும் திருநின்றவூர் உண்டு.. ஆனால் நாம் இங்கு குறிப்பிடுவது சீர்காழி அருகே உள்ள திருநின்றியூர் ஸ்ரீலக்ஷ்மிபுரீஸ்வரர் ஆலயம் ஆகும். ஸ்ரீலக்ஷ்மி தேவியே பூஜித்தமையால், சிவலிங்கமே இத்தலத்தில் ஸ்ரீலக்ஷ்மிபுரீஸ்வரர் என்ற அற்புதமான திருநாமத்தைக் கொண்டு விளங்குகின்றது. இந்த லக்ஷ்மி பஞ்சமி விரதத்தின் ஐந்து நாட்களிலும் இத் திருக்கோயிலில் லக்ஷ்மி தீர்த்தத்தில் நீராடி ஸ்வாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வருவீர்களேயானால் எத்தகைய பணக் கஷ்டத்திற்கும் நிவர்த்தியாக ஸ்ரீலக்ஷ்மி பஞ்சமி விரதம் பரிபூரணமான பலன்களைத் தரும்., வசதியுள்ளோர் இத்தலத்திலேயே ஐந்து நாட்களுக்கு உரித்தான தினசரி விரத முறைகளை மேற்கொள்தல் சிறப்புடையதாகும். இந்த லக்ஷ்மி பஞ்சமி விரதத்தின் போது இதற்குரித்தான ஸ்ரீஅஷ்டலக்ஷ்மிச் சக்கரத்தைச் பூஜையில் வைத்திருந்து இதற்குத் தினந்தோறும் திருநாமம் இட்டு பூஜித்திடுக! இந்த லக்ஷ்மிச் சக்கரம் எம்முடைய ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்திராலயத்தில் கிடைக்கும். ஹரியும், ஹரனும் ஒன்றுதானே! ஸ்ரீஅஷ்டலக்ஷ்மிச் சக்கரத்தைத் திருநின்றியூர் ஸ்ரீலக்ஷ்மிபுரீஸ்வர சிவபெருமானின் திருப்பாதங்களில் வைத்து, இந்த 5 நாட்களில் பூஜித்து, இல்லத்திற்கு எடுத்து சென்று முறையாக பூஜித்து வருவோர்க்கு, பணக்கஷ்டங்களுக்குத் தார்மீகமான வழியில் தீர்வுகள் ஏற்படும் என்பது நிச்சயம்.

புத்தாண்டு பூஜை

விக்ரம வருட தமிழ்ப் புத்தாண்டு பூஜை – பஞ்சாங்க படன பூஜை – பஞ்சாங்கம் படித்தல்.

புத்தாண்டு பூஜை முறைகளை அறிந்தவர்கள் தக்க பெரியோர்களின் துணையுடன் இதனை நிறைவேற்றிடலாம். அறியாதோர் விக்ரம ஆண்டு புத்தாண்டு பூஜையை ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் உள்ளபடியான விளக்கங்களை அப்படியே படித்துப் பஞ்சாங்க படன பூஜைகளை நன்முறையில் பரிபூரணமாக நிறைவு செய்து கொள்ளலாம்.. முதலில் விக்ரம ஆண்டுக்குரித்தான கிரக ஆட்சி தேவதா மூர்த்திகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

ஸ்ரீமகர சங்கராந்தி தேவி
விக்ரம ஆண்டுக்குரிய மகர சங்கராந்தி தேவதையே ஸ்ரீமகோதரி தேவியாவாள்.. வில்வ தீர்த்தத்தில் நீராடிப் பீதாம்பர ஆடைதரித்து, கோரோஜனம், ஆபரணங்கள், மல்லிகை அணிந்து, தண்டம் தாங்கி அப்ப நைவேத்யத்தைப் பெற்று, கழுதை வாகனம் கொண்டு, நீல நிறக் குடையும், சியாமளத்தையும் கொண்டவளாய் டிண்டிப வாத்தியத்துடன், கீழ்நோக்கு கதியில் தெற்கு திசை திருஷ்டியுடன், கிழக்கு திசை கூடிட, கிருஷ்ண பட்சத்தில் பஞ்சமி திதியில் உத்திர நட்சத்திரத்தில் சோபன யோகத்தில் ஞாயிற்றுக்கிழமை உஷத் காலத்தில், தனுர் லக்னத்தில் உத்பவிக்கின்றாள். பூரம், உத்திரம், ஹஸ்தம் நட்சத்திரத்தினர் பணக் கஷ்டத்தைப் பெற இருப்பதால் குபேர லிங்க தரிசனம் (திருஅண்ணாமலை) குபேர மூர்த்தி வழிபாடு (சிதம்பரம்) செய்து வருதல் வேண்டும். சித்திரை, ஸ்வாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம் ஆகிய நட்சத்திரங்களையுடையோர் ஸ்ரீமகோதரி தேவியைத் தினந்தோறும் (செல்வ) தன அம்சங்களை உடைய மல்லிகைப் பூக்களால் அர்ச்சித்து வருதலால் கஷ்டங்கள் தார்மீக முறையில் தீர்ந்து நன்முறையில் தனலாபம் ஏற்படும்.. ஆனால் பேராசை கூடாது.
பூராடம், உத்திராடம், திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்குத் தங்கள் இல்லம், தொழிற்சாலை, அலுவலகங்களில் பலவிதமான துன்பங்கள் ஏற்படக் கூடுமாதலின் தினந்தோறுமோ அல்லது வசதிக்கேற்பவோ ஸ்ரீமகோதரி தேவிக்குத் தேங்காய் கலசம் வைத்துப் பூஜை செய்து, தேங்காய் சாதத்தை அன்னதானம் அளித்து வந்திட இடம் பற்றிய துன்பங்களுக்குக் குறிப்பாக சொத்து/கோர்ட், உரிமை, வராத பணம்/ கடன் பற்றிய பிரச்னைகளுக்குத் தக்க பரிகாரம் கிட்டும். அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, அசுவினி ஆகிய ஆறு நட்சத்திரக்காரர்களுக்குத் தங்களுடைய பதவியில் முன்னேற்றம் பெற நல்வாய்ப்புகள் இவ்வாண்டில் கூடுவதால் ஸ்ரீமகோதரி தேவிக்குப் பட்டு ஆடைகளை அணிவித்துக் கண் தெரியாத ஏழைகளுக்குப் பட்டுத் துணிகளை தானமாக அளித்து, இயன்ற போதெல்லாம், திருஅண்ணாமலை, திருப்பரங்குன்றம், பழநி, திருச்சி உய்யக் கொண்டான் மலை, மலைக்கோட்டை, அய்யர்மலை, திருப்போரூர், பர்வத மலை போன்ற கிரிவலத் தலங்களில் தங்களுடைய நட்சத்திர நாட்களில் கிரிவலம் செய்து வருவதால், பதவியில் பலவித புண்ணிய சக்திகளைச் சேர்த்துக் கொண்டு நன்முறையில் முன்னேறிடலாம்..
பரணி, கிருத்திகை, ரோகிணி நட்சத்திரக்காரர்கள் சினத்தால் பலவிதத் துன்பங்களுக்கு ஆளாவாராதலின் இதற்குப் பரிகாரமாக அவர்கள் ஸ்ரீமகோதரி தேவிக்குச் சந்தனக் காப்பிட்டு ஏழைகளுக்கு நீர், பழரசம், மோர் தானங்களைச் செய்து வருதல் வேண்டும். மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு நன்முறையிலே மேலிடங்களிலிருந்து நல்ல ஆர்டர் வருவதற்கும் அரசு உதவிகளைப் பெறுவதற்கும் ஸ்ரீமகோதரி தேவிக்கு வெள்ளைத் தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து, இறைப் பாடல்கள் மட்டுமே நிறைந்த இன்னிசைக் கச்சேரிகளை அமைத்துத் தந்து ஏழைகளுக்கும் இறைநாமச் சக்தி சென்றடையும் வண்ணம் இறைப்பணி ஆற்றுதல் சிறப்புடையதாகும். (பூஜைக்கான ஸ்ரீமகோதரி தேவியின் திருஉருவத்தைப் பஞ்சாங்கங்களில் காணலாம்..)

கிரக ஆட்சி மூர்த்தி – திருக்கணித வர்க்கப்படி விக்ரம வருடத்திற்குரிய

ராஜா தேவதாமூர்த்தி ஸ்ரீபுத பகவான்
மந்திரி தேவதாமூர்த்தி ஸ்ரீகுரு பகவான்
சேனாதிபதி தேவதாமூர்த்தி ஸ்ரீபுத பகவான்
அர்க்காதிபதி தேவதாமூர்த்தி ஸ்ரீபுத பகவான்
ஸஸ்யாதிபதி தேவதாமூர்த்தி ஸ்ரீசூரிய பகவான்
ரஸாதிபதி தேவதாமூர்த்தி ஸ்ரீஅங்காரக பகவான்
தான்யாதிபதி தேவதாமூர்த்தி ஸ்ரீசுக்ர பகவான்
மேகாதிபதி தேவதாமூர்த்தி ஸ்ரீபுத பகவான்
நீரஸாதிபதி தேவதாமூர்த்தி ஸ்ரீசூரிய பகவான்

சூரியப் பிரவேசம் 13.4.2000 அன்று சித்திரை மாதம் முதல் தேதியில் ஸ்ரீசூரியபகவான் மேஷ ராசியில் மாலை 5.22க்குப் பிரவேசம் செய்கின்றார்.. இதுவே புத்தாண்டு பிறப்பு நேரம், எவ்வாறு ஒவ்வொரு ஜீவனுக்கும் உரித்தான பிறப்பு நேரத்தை ஒட்டிய ஜாதகக் கட்டங்கள் அமைந்துள்ளனவோ, அதே போல ஒவ்வொரு நாளுக்கும் உரித்தான காலதேவ ஜாதகக் கட்டமும் உண்டு... சில விசேஷமான பஞ்சாங்கங்களில் அந்தந்த நாளுக்குரித்தான கிரக சஞ்சார நிலைகளை 365 நாட்களுக்குமாக வெளியிட்டு இருப்பார்கள்.. நீங்கள் கூட சற்று முயற்சி செய்தால் சாதாரணமான பஞ்சாங்கத்தை வைத்துக் கொண்டு அந்தந்த நாளுக்குரித்தான, கால தேவதா மூர்த்தியின் ஜாதகக் கட்டத்தை நீங்களே வரைந்து மரப்பலகையில் கோலமாக இட்டுத் தினந்தோறும் வழிபட்டு வரலாம்.. அதாவது தினசரி கிரக அமைப்பினை சதுரக் கால கட்டமாக, ஜாதக ராசிக்கட்டம், போல் அமைத்திடலாம்.
எவ்வாறு நம்முடைய ஜாதகத்தின் ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு தேவ மூர்த்திகள் உறைந்து இறைநியதிப்படி நமக்கு அருள்பாலிக்கின்றார்களோ, இதற்கு ஒட்டியவாறுதான் கால தேவதா மூர்த்திகளும் அந்தந்த நாளுக்குரித்தான ஜாதகக் கட்டங்களில் அமர்ந்து நமக்கு அருள் கூட்டுகின்றார்கள்.. நம்முடைய பிறப்பு நேரத்தின் போது இருக்கின்ற கிரகநிலைகளிலும் அந்தந்த நாளுக்குரித்தான அந்தந்த கிரக சஞ்சார நிலைகளிலும் நிறைய மாற்றங்கள் இருக்குமல்லவா? எனவே இதற்கு ஏற்றபடி அந்தந்த கிரகதேவதா மூர்த்திகளின் அனுகிரகத்தைப் பெறுவதற்காக நாம் தினந்தோறும் அந்த நாளுக்குரித்தான ஜாதகக் காலக் கட்டத்தை வரைந்து எந்தெந்த இராசியில் எந்தெந்த கிரகமூர்த்தி உறைகின்றார் என்பதை அறிந்து வழிபட்டோமேயானால் காலதேவதா மூர்த்திகளும், கிரக மூர்த்திகளும் மிகவும் ப்ரீதியடைந்து நமக்கு அருட்கடாட்சத்தை அபரிமிதமாகப் பொழிகின்றார்கள்.
இத்தகைய விசேஷமான நவகிரக வழிபாட்டுடன் தினந்தோறும் நவகிரக மூர்த்திகளை வலம் வந்து வழிபடுதல் வேண்டும்... உதாரணமாக ஏப்ரல் 13, 2000 தேதியில் அதாவது விக்ரம புது வருட நாளன்று ஸ்ரீசூர்ய பகவானும், ஸ்ரீசனீஸ்வர பகவானும் மேஷ ராசியில் இருந்து கொண்டு அருளாட்சி புரிகின்றார்கள். எனவே இந்த நாளுக்குரித்தான ஜாதகக் காலக் கட்டத்தை வரைந்து மேஷ ராசி வீட்டில் இந்த நான்கு கிரக தேவமூர்த்திகளின் நாமங்களையோ அல்லது அவர்களுக்குரித்தான வடிவங்களையோ பொறித்து வழிபட்டு வருவீர்களேயானால் இது மிகச் சிறப்பான நவக்கிரக வழிபாடாக அமைகின்றது.. இதற்கு ஸ்தான விதான பூஜை எனப் பெயர். உங்களுக்கு நவக்கிரகங்களுக்கு உரித்தான  நவதானியங்கள், வஸ்திர நிறங்கள், புஷ்பங்கள் எவை என்று நன்றாகத் தெரியும் அல்லவா! (இது பற்றி எளிய பல விளக்கங்களைப் பஞ்சாங்கங்களில் காணலாம்..) எனவே அந்தந்த நவக்ரஹ மூர்த்தியின் பிம்பங்களையோ, நவதானிய புஷ்பங்களையோ எடுத்து வைத்துக் கொண்டு அந்தந்த நாளில், எந்த இராசியில் அவர்கள் நிலை கொண்டுள்ளார்களோ அந்த இராசியில் அவர்களுக்குரித்தான பிம்பங்களையோ, புஷ்பங்களையோ, நவரத்னக் கல்லையோ, தானியங்களையோ வைத்து வழிபட்டு வந்தால், அந்த கிரக மூர்த்திகள் இந்த மகத்தான தினசரி நவக்கிரக வழிபாட்டினால் மிகவும் ப்ரீதியடைந்து நம்முடைய துன்பங்களை நம்முடைய துன்பங்களை எளிதில் களைவதற்கான நல்அருளையும் புரிகின்றார்கள்..
எவ்வாறு தினசரி நவகிரக வழிபாட்டை ஜாதகக் காலக் கட்டத்தின் மூலம் நிகழ்த்துவது என்பதை நாம் இங்கு விக்கிரம வருடப் புத்தாண்டின் முதல் நாளுக்குரித்தான பூஜையாக இங்கு அளிக்கின்றோம். இதுவே சித்புருஷர்கள் அருள்கின்ற தினசரி நவகிரக வழிபாடாகும்.. இதே வகையில் நீங்கள் வருடம் முழுவதும் 365 நாட்களுமே இதைக் கடைபிடிப்பீர்களேயானால் இதுவே மிகமிகச் சிறந்த விசேஷமான நவகிரக வழிபாடாக அமைகின்றது என்பதில் ஐயமில்லை! உங்களுக்குப் புரிகின்றதோ, புரியவில்லையோ, படிக்கத் தெரியுமோ, தெரியாதோ முதலில் ஒரு நல்ல பஞ்சாங்கத்தை வாங்கி வைத்துக் கொள்ளவும். பஞ்சாங்கப் புத்தகத்தைத் தினமும் தரிசித்து இதற்கு மஞ்சள், குங்குமமிட்டு வணங்குவதே காலதேவதா மூர்த்திகளுக்குப் ப்ரீதி தருவதாகும்...

நவகிரக வழிபாடுகளில் முதலில் ஏழுகிரக வழிபாடாக இருந்ததானது, ஸ்ரீராகு, ஸ்ரீகேதுவுடன் ஒன்பது கிரஹ வழிபாடாக மலர்ந்து, தற்போது கலியுக நியதிகளுக்கு ஏற்ப ஸ்ரீபுளூட்டோ, ஸ்ரீயுரேனஸ், ஸ்ரீநெப்டியூன் மூர்த்திகளுடன் சேர்ந்து ஒரு அழகிய துவாதச கிரக வழிபாடாக நம் கலியுகத்திற்கு உரித்தானதாக அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்... யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ போன்றவையெல்லாம் ஆங்கிலப் பெயர்கள் போன்று நமக்குத் தோன்றினாலும் சித்தர்களுடைய ஞானப் பத்திர கிரந்தங்களிலே இந்த மூன்று கிரகங்களைப் பற்றிய விளக்கங்கள் மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் நடைமுறையில் வரவிருக்கின்ற இன்னும் பல  கிரக மூர்த்திகளைப் பற்றிய குறிப்புகளும் சிறப்பாகக் காணப்படுகின்றன. ராகு காலம் போன்று எதிர்காலத்தில் கேதுகாலமும் நடைமுறைக்கு வரும். ஆனால் இவற்றையெல்லாம் எடுத்துச் சொன்னால் இப்போதைய மனித மனமோ, விஞ்ஞான உலகமோ ஏற்காது. காலப்போக்கில் அவ்வப்போது எதுவும் கண்கூடாய்த் தோன்றும் போதுதான் மனித மனமும் விஞ்ஞான உலகமும் ஏற்கும்... ஆழ்ந்த இறை நம்பிக்கை, குரு நம்பிக்கை கொண்டோர் தக்க சற்குருவை நாடிச் சரணடைந்தால் இவற்றைப் பற்றி முன்னரேயே அறிந்து நன்முறையில் பூஜை செய்து பூஜாபலன்களை சுயநலமின்றிச் சமுதாய இறைப் பணிகளுக்காகப் பயன்படுத்தலாம் அன்றோ! இதுவே குருவருளைப் பெருக்கும்..!

விக்ரமப் புத்தாண்டு நாள் குறிப்பு

தேதி : ஆங்கிலம் – ஏப்ரல் 13  | தமிழ் – சித்திரை 1
வாரம் : வியாழக்கிழமை
யுகாதி : கலியுகம்
அயனம் : உத்தராயணம்
ருது : வசந்த ருது
திதி : தசமி திதி இரவு 2.44வரை பிறகு ஏகாதசி திதி தொடங்குகின்றது.
நட்சத்திரம் : ஆயில்யம் இரவு 2.04 நிமிடங்கள் வரை இதன்பிறகு மகம் நட்சத்திரம் தொடங்குகின்றது..
யோகம் : சூலம் இரவு 1.29வரை பிறகு கண்ட யோகம்
கரணம் : தைதுல கரணம் மதியம் 3.31வரை பிறகு கரசை கரணம்., இரவு 2.44வரை பிறகு வணிசை கரணம்..

இன்றைய யோகினி மூர்த்தியாய் இருப்பவர் பூமி யோகினி தேவதை.. நேத்ர தேவதை இரண்டாங் கூட்டிலும், ஜீவ தேவதை பூஜ்ய தொனியிலும் அமர்ந்திருக்கின்றார்கள்.  சித்த யோகம் இரவு 2.04 வரையிலும் அமிர்த யோகம் அதற்கு மேலும் அமைந்திருக்கின்றது.. லக்னம் கன்யா லக்னமாக அமைந்திருக்கின்றது.. இதைப் படிக்கின்றோர் உங்களையும் அறியாமலேயே இப்போது பதினைந்து கால தேவதா மூர்த்திகளைத் துதித்திருக்கின்றீர்கள் என்பதையும் உணர்ந்து ஆனந்தம் கொள்வீர்களாக!

விக்ரம வருடப் பிறப்பிற்கு முன்னரேயே பூஜைக்கான சாமான்களை வாங்கி வைத்திருந்து வரிசைப்படுத்தி வைத்துக் கொள்ளவும். வில்வம், மா, தேக்கு, பலா போன்ற மரப் பலகைகள்தாம் பூஜைக்கு மிகவும் ஏற்றவை. பூஜையின் போது மரப் பலகையில் அல்லது தர்ப்பைப் பாயில் அமர்தல் வேண்டும். பூஜா சக்திகள் வெளிச் செல்லாதிருக்க வேண்டுமல்லவா! இதனால் தான் பூஜையின் போது உடற்பகுதியோ, கைகளோ, கால்களோ தரையில் படுதல் கூடாது.. ஆண்டாண்டு காலமாக ஆகிவந்ததாக உள்ள நம் மூதாதையர்கள் பயன்படுத்தி வந்த மரப்பலகைகள், ஊஞ்சல் பலகைகள் மிகவும் சிறப்புடையதாகும்... பூஜை அறையை நன்றாகத் துடைத்து, சுத்தம் செய்து, பசுஞ்சாணியால் மெழுகி, சுவாமி படங்களைத் துடைத்து சுத்தம் செய்து வைக்க வேண்டும்... அரிசி மாவினால் மட்டுமே கோலம் போட வேண்டும்.. மொக்கு மாவு, கல் மாவுப் பொடியால் அல்ல! மேஷ ராசியில் சூரியன் மாலையில் தான் பிரவேசிப்பதால் விக்கிரம வருடப்பிறப்பு பூஜையை மாலையில் செய்வதுதான் சிறப்புடையதாகும்...  ஒரு பெரிய மரப்பலகையில் விக்ரம வருடப் புத்தாண்டுத் தினத்தன்று அந்தந்த கிரக மூர்த்திகள் அமைந்துள்ள வகையில் கீழ்க்கண்டவாறு ஜாதக தேவதா காலக் கட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்...

மேஷம் – சூரியன், செவ்வாய், குரு, சனி
கடகம் – ராகு, சந்திரன்
விருச்சிகம் – புளூட்டோ (வக்கிரம்)
மகரம் – கேது, யுரேனஸ், நெப்டியூன்
மீனம் – சுக்கிரன், புதம்
இராகு காலம் – பகல் 1.30 – 3.30 மணி வரை
பகல் குளிகை – 9 – 10.30 மணி வரை
இரவு குளிகை நேரம் – இரவு 1.30 – 3மணி வரை
பகல் எமகண்டம் – 6 – 7.30 மணிவரை
இரவு எமகண்டம் – இரவு 10.30 – 12 மணி வரை
அர்த்தப் பிரகண நேரம் – பகல் 3 - 4.30 மணி வரை
காலன் கால நேரம் – 10.30 – 12மணி வரை (காலை)
வார சூலை – தெற்கு

இவ்வாறு அனைத்து கால தேவதா நேரங்களையும் படித்து அறிந்து உணர்வதால் அந்தந்த கால தேவதா மூர்த்திகளின் நாம சக்தி தரும் அருளைப் பெற்றிடலாம்.

பூஜைக்கான சில குறிப்புகள்

வாசனையுள்ள பூக்களை மட்டுமே சுவாமிக்குச் சார்த்த வேண்டும் . தம் கரங்களாலேயே பூக்களைக் கோர்த்து மாலையாக்குதல் சிறப்புடையதாகும் (கடையில் வாங்கும் பூக்களில் பலவிதமான தோஷங்கள் நிறைந்திருக்கும்) கை கால்களில் மிதிபடுதல், பிணவாசனை, பிணக் காட்சி காணல், உடல் சுத்தம் இன்றிப் பூக்களைப் பறித்தல், சுபஹோரையில் பூக்களைப் பறிக்காமல், இராகு கால எமகண்ட நேரங்களில் பூக்களைப் பறித்தல் / தொடுத்தல் மங்களகரமான எண்ணங்களுடன் பூக்களைத் தொடுக்காது, இழிவு வகைச் சொற்களைக் கூறியவாறு பேராசை எண்ணங்களுடன் பூக்களைத் தொடுத்தல் இவ்வாறாக எந்தவிதமான தோஷங்களும் இல்லாதவாறு புனிதமான மனதுடன் தொடுக்கப்பட்டப் பூச்சரங்களைப் பெறுதல் என்பது மிகவும் கடினமானதாகும்.. இதற்காகத் தான் புதிய பூக்களை வாங்கி நாமாகவே தொடுத்தல் மிகவும் சிறப்புடையதாகும். ஆனால் நாமே பூக்களைத் தொடுக்கின்ற போது நம்மாலும் புனிதமான உள்ளத்துடன் தொடுக்க முடியுமா?  இவ்வாறு நாம் தொடுக்கின்ற பூக்களின் தோஷங்கள் ஓரளவேனும் நீங்கி பூச்சரங்களின் முழுமையான தெய்வீகப் பலன்களைப் பெற வேண்டுமானால்,

நான்கில் ஒரு பகுதியை இல்லற பூஜைகளுக்கும், இரண்டாவது பகுதியை ஆலயப் பூஜைகளுக்கும், மூன்றாவது பகுதியை ஜாதி, குல, இன, மத பேதமின்றி ஏழைச் சுமங்கலிகளுக்கும் புஷ்ப தானமாக அளித்துவிட்டு, நான்காவது பகுதியையே நாம் சூட வேண்டும்! இவ்வாறு செய்தால்தான் தோஷங்கள் நீங்கிப் புஷ்பங்களில் மங்களம் பெருகி எங்கும் தங்கிடும்... இனியேனும் பூக்களின் தாத்பர்யங்களை உணர்ந்திடுவீர்களாக! (பூக்கள் தரும் புனிதங்கள் என்ற எம் ஆஸ்ரம நூலில் ஏனைய விளக்கங்களைக் காணலாம்.) காட்டு மல்லிகை, கனகாம்பரம், டிசம்பர் பூ போன்ற வாசனையற்ற புஷ்பங்களை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. இவையிருக்கின்ற பூச்சரத்தையே முற்றிலுமாக ஒதுக்கி விட வேண்டும்... சந்தனத்தைப் பூஜைக்கு முன் தாமே அரைப்பது சிறப்புடையதாகும்... “சந்தன மகிமை” என்ற எங்களுடைய ஆஸ்ரம நூலில் சந்தனத்தின் தெய்வீக மகிமையைப் பற்றிய விளக்கங்களைக் காணலாம்.! சந்தனத்தை அரைத்தபின் முதலில் சுவாமிக்கு இட்டு விட்டுத்தான் நாம் அதை வேறு எதற்கும் பயன்படுத்த வேண்டும்..
சந்தனக் கல்லும், சந்தனக் கட்டையும் எப்போதும் பூஜையில் சேர்த்து வைக்கப்பட வேண்டிய புனிதமான பொருட்களாகும்... அமாவாசை, மாதப்பிறப்பு, விஷ்ணுபதி போன்ற புண்ணிய நாட்களில் பித்ருதேவ மூர்த்திகள் அமர்கின்ற தெய்வீக ஆசனமாகச் சந்தனக்கல்லும், சந்தனக் கட்டையும் விளங்குகின்றன என்ற தெய்வீக இரகசியத்தை இனியேனும் புரிந்து கொள்ளுங்கள். சந்தனக் கல்லையும், சந்தனக் கட்டையையும் ஒரு போதும் பிரித்தல் கூடாது. பிரித்து வைத்தால் தம்பதியருக்கிடையே சண்டைகளும், பிரச்னைகளும் ஏற்படும். அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கின்ற தம்பதிகள் சந்தனக் கல்லையும், சந்தனக் கட்டையையும், நன்முறையில் தினசரி பூஜை செய்கின்ற ஏழை, நடுத்தரக் குடும்பத்திற்கு தானமாக அளித்து வந்தால் தம்பதியருக்கிடையேயுள்ள பிணக்குகளுக்கு நல்ல தீர்வு கிட்டும்.. பம்பை, கங்கை, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, ராமேஸ்வரம் போன்ற புண்ய தீர்த்தங்கள் எப்போதும் எல்லோருடைய வீட்டிலும் இருக்க வேண்டும்.
சந்தனம் அரைக்கின்ற போதோ, சுவாமிக்கு அபிஷேகம் செய்கின்ற போதோ, அமாவாசை தர்ப்பணத்தின் போதோ இந்தப் புனித நீரைச் சேர்த்து பூஜையைச் செய்தால் அபரிமிதமான பூஜா பலன்களைப் பெற்றிடலாம். பஞ்சாங்கமானது எப்போதும் பூஜை அறையில் வைக்கப்பட வேண்டும். தினந்தோறும், இதற்குச் சந்தனம், குங்குமம், விபூதி, மஞ்சள் இட்டு, கரங்களினால் தொட்டு வணங்கி அந்தந்த நாளுக்குரிய திதி, கிழமை, நட்சத்திரம், யோக கரணங்களை மட்டுமாவது தினந்தோறும் படித்து வாருங்கள். இதுவும் கால தேவதா மூர்த்திகளுக்கும், நவகிரக தேவதா மூர்த்திகளுக்கும், நவகிரக தேவதா மூர்த்திகளுக்குமான ஓர் எளிய தினசரிப் பூஜை என்பதை மறந்து விடாதீர்கள்.. தினசரி நீங்கள் மட்டும் பஞ்சாங்கத்தைப் படிப்பது என்பது அல்லாமல், உங்கள் மனைவி, குழந்தைகளுக்கும் இந்த நல்ல பஞ்சாங்கப் படன வழக்கத்தைச் சொல்லிக் கொடுத்து வாருங்கள். தினந்தோறும் உங்கள் வீட்டில் பஞ்சாங்க பூஜை என்றால் ஏதோ பெரிதாக விரிவாகச் செய்வது என்று பயந்து விடாதீர்கள்.. தினந்தோறும், மஞ்சள், சந்தனம், குங்குமம்தனைப் பஞ்சாங்கத்திற்கு இட்டு இதில் அந்தந்த நாளுக்குரித்தான கிரக சஞ்சார காலக் கட்டங்களையும், ஐந்து (பஞ்ச) கால அம்சங்களையும் படித்து வந்தாலே போதும், உங்களுக்குக் கால தேவதா மூர்த்திகளின் அனுகிரகம் நன்முறையில் விருத்தி அடையத் தொடங்கும்....

ஜோதிடர்கள் தினந்தோறும் கிரக சஞ்சாரங்களுடன் கூடிய தினசரி ஜாதக கால தேவதாக் கட்டத்தைக் கோலமாகவோ, தினசரிச் சக்கரமாகவோ வரைந்து பூஜை செய்து வருதல் வேண்டும். இதனால் தீர்க்க தரிசனமும், வாக்கு பலிதமும் ஏற்படும். ஆனால் ஜோதிடத்தைக் கொண்டு பேராசையுடன் பெரும் பணம் சேர்க்கின்ற புத்தியை வளர்க்கக் கூடாது.. கலைவாணியின் அற்புதக் கலைக் கிரணங்களை கொண்டு விளங்குகின்ற ஜோதிடத்தை சமுதாய இறைப்பணியாகக் கருத்தில் கொண்டு அற்புத இறைச் சமுதாயப் பணிபுரிவது தான் தீர்க்க தரிசனத்தையும், வாக்கு பலிதத்தையும் விருத்தி செய்யும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.. காலதேவதா மூர்த்திகள் நம் இல்லத்திலேயே அமர்ந்து அருள்பாலிக்கின்ற விசேஷமான பூஜா பொருட்கள் பல உண்டு. நந்தி பதித்த மணி, தூபக் கால், சந்தனக் கட்டை, சந்தனக் கல், தர்ப்பைப் பாய், பழைய ஓலைச் சுவடிகள், எள், பொன், பச்சை நிற பூஜைக்குரித்தான பொருட்கள் .. (தவனம் மரிக்கொழுந்து) போன்றவற்றில் கால தேவதா மூர்த்திகள் ஆனந்தத்துடன்  அமர்ந்து நமக்கு அருளைப் பொழிகின்றார்கள்.

ஸ்ரீவிக்ரம புத்தாண்டு கிரக தேவதா காலக் கட்டம்
13.4.2000 வியாழக்கிழமை அன்று மாலை 5.22க்கு சூரிய பகவான் மேஷ ராசியில் நுழைகின்ற நேரம்தான் விக்ரம புத்தாண்டின் புனிதமான வருடப்பிறப்பு நேரமாகும் என்று அறிவோம் அல்லவா! பூஜை அறையை நன்கு சுத்தம் செய்து கொண்டு, சந்தனம், மஞ்சள் ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொண்டு பலகையிலோ அல்லது தர்ப்பை பாயிலோ அமர்ந்து பூஜையைத் தொடங்குதல் வேண்டும்.. அனைத்துத் தெய்வப் படங்களையும் சுத்தம் செய்து மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு, ஊதுபத்தி ஏற்றித் தெய்வீகச் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். புள்ளிக் கோலங்களோடு ஒரு பெரிய மரப்பலகையில் இன்றைய விக்ரம புத்தாண்டு தினத்திற்குரித்தான கிரக தேவதா மூர்த்திகளின் முழுப் பெயர்களை எழுதிக் கொள்ளுங்கள்... “சுக்”, “அங்“ என்றெல்லாம் கிரகங்களின் பெயரைச் சுருக்காமல், சுக்கிரன், அங்காரகன் என்று முழுமையாக எழுதுங்கள்... இறை வழிபாட்டில் சுருக்கம் ஏன்? பல ஜோதிடர்களும் செய்கின்ற அபச்சாரமிது! தங்களுக்கு ஜீவசக்தி அளிக்கின்ற நவகிரக, தேவதா மூர்த்திகளின் நாமங்களை “வெட்டி” எழுதலாமா? பகுத்தறிவுடன் சிந்தியுங்கள்!
வசதியுள்ளோர், அவரவர் வசதிக்கேற்ப அந்தந்த கிரகத்திற்குரித்தான பிம்பங்கள், ரத்தினங்கள், உலோகங்களையும், வண்ண ஆடைகளையும், ஆசன, கிரகச் சக்கரக் கோணங்களையும் வைத்திடலாம்.. உதாரணமாக, குரு பகவானுக்குரித்தான நவக்கிரக அம்சங்களைக் கண்டோமானால் கிரஹத்திற்கான நிறம் – மஞ்சள், திக்கு – வடக்கு , ரத்தினம் – புஷ்பராகம் , தானியம் – கடலாய், புஷ்பம் – முல்லை, சமித்து – அரசு, வாகனம் – யானை, உலோகம் – பொன், வஸ்திரம் – மஞ்சள் நிற ஆடைகள், கிரகாசனம் – நீண்ட சதுரம், இவ்வாறாக ஒவ்வொரு கிரகத்திற்கும் உரித்தான அம்சங்களை அந்தந்த கிரகம் இருக்கின்ற நிலையில் சேர்த்து விடலாம்.. இவையெல்லாம் பஞ்சாங்கம் தரும் பகுத்தறிவுப் பூக்கள்!

உதாரணமாக இன்றைய நாளில், சுக்கிர பகவானும், புத பகவானும் மீனராசியில்  வீற்றிருப்பதால், சுக்கிரனுக்கும், புதனுக்கும் உரிய பிம்பங்கள், தானிய, புஷ்பங்களை மீனராசியில் வைத்து பூஜை செய்திடலாம்.

பூஜை துவக்கம்
முதலில் உங்கள் குலதெய்வத்தை நினைத்து வழிபடுங்கள். அடுத்ததாக உங்களுக்கு உரித்தான இஷ்ட தெய்வமான முருகன், கிருஷ்ணன், பிள்ளையார் என எந்த தெய்வ மூர்த்தியையும் நினைத்து, துதித்து, ஓதி பிரார்த்தனை செய்திடுங்கள்! மூன்றாவதாக பெற்றோர்களையும் உங்களுக்குரித்தான சற்குருவின் நாமத்தையும் நினைத்து, தியானித்து வழிபடுங்கள். அவர்களுக்குப் பாத நமஸ்காரம் செய்வது சிறப்புடையது அல்லது குறைந்தபட்சம் அவருடைய பாதர விந்தங்களையேனும் சேவிப்பதாகப் பாவித்துக் கொள்ளுங்கள்.. சற்குருவைப் பெறாதோரும், சற்குரு யார் என்று அறியாதோரும் தங்களுக்குப் பிடித்தமான மகான்களை (ஸ்ரீபரமாச்சாரியார், ஸ்ரீவள்ளலார், ஸ்ரீபாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள், ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்சர்) என்று அவரவர் தாங்கள் அறிந்த சித்தரை, யோகியரை, மகானை தாம் தரிசித்துள்ள, ஜீவசமாதியைக் கொண்டுள்ள, மாமுனிகளை நினைத்து வழிபட்டிடலாம்.
இவ்வாறாக குலதெய்வம், இஷ்ட தெய்வம், பெற்றோர், சற்குரு தியானத்துடன் உங்களுடைய எந்த ஒரு பூஜையையும் தொடங்குதல் வேண்டும்.. உங்களுடைய ஊர், எல்லைக்குரித்தான காவல் தெய்வ மூர்த்திகள், எல்லை தேவதைகள், மயானக் காவல் தெய்வங்களையும் நினைத்து வழிபடுங்கள்.. ஐயனார், ஸ்ரீமுனீஸ்வரன் போன்ற மூர்த்திகளையும் தியானித்து வழிபடுதல் வேண்டும். அனைவருக்கும் ஆத்ம தெய்வம் என்று ஒன்று உண்டு. நம் இருதயத்தில் வீற்றிருப்பது ஆத்மலிங்கம்தான். திருவையாற்றில் இன்றைக்கும் அர்ச்சகர் வடிவில் வந்து சிவபெருமானே தன்னை தானே வழிபட்டுக் கொண்ட ஸ்படிக லிங்க வழிபாடு உற்சவம் ஒன்று உண்டு. இது நிகழ்கின்ற தினத்தை ஒவ்வொருவரும் அறிந்து கொண்டு தன்வாழ்நாளில் இந்த ஆத்ம ஸ்படிக லிங்க பூஜையை ஒரு முறையேனும் கண்டு தரிசித்திட வேண்டும். இந்தப் புத்தாண்டு தினத்தில் நம்முடைய ஆத்மலிங்க பூஜையாக நம்மை நாமே ஆத்ம பிரதட்சிணம் செய்வது போல பாவித்து நம்மை நாமே சுற்றி இறைவனை வணங்குதல் வேண்டும்.

கீழ்க்கண்ட துதிகளை மூன்று முறை ஓதி வழிபடவும்

ஓம் ஸ்ரீவல்லப கணபதி போற்றி
ஓம் ஸ்ரீபரமேஸ்வர மூர்த்தி போற்றி
ஓம் ஸ்ரீமகாவிஷ்ணு மூர்த்தி போற்றி
ஓம் ஸ்ரீபிரம்ம மூர்த்தி போற்றி
ஓம் ஸ்ரீசுப்ரமண்ய மூர்த்தி போற்றி
ஓம் ஸ்ரீவாஸ்து மூர்த்தி போற்றி
ஓம் ஸ்ரீபராசக்தி தேவியே போற்றி
ஓம் ஸ்ரீமகாலெக்ஷ்மி தேவியே போற்றி
ஓம் ஸ்ரீசரஸ்வதி தேவியே போற்றி
ஓம் ஸ்ரீபஞ்சாங்க தேவதா மூர்த்திகளே போற்றி
ஓம் ஸ்ரீவிக்ரம வருடப் புத்தாண்டிற்கான ஸ்ரீவியாழ பகவானே போற்றி
ஓம் ஸ்ரீதசமிதிதி தேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீஏகாதசி தேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீ ஆயில்ய நட்சத்திர மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீசூலயோக மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீகண்டயோக மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீகன்னியோக தேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீதைதுல கரண தேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீகரசை கரண தேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீநேத்ர தேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீஜீவ தேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீசித்தயோக தேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீஅமிர்த யோக தேவதா மூர்த்தியே போற்றி

ராசி மூர்த்திகள் வழிபாடு

ஓம் ஸ்ரீமேஷ மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீரிஷப மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீமிதுன தேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீகடக தேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீசிம்ம தேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீகன்னி தேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீதுலா தேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீவிருச்சிக தேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீதனுசு தேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீமகர தேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீகும்ப தேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீமீன தேவதா மூர்த்தியே போற்றி

லக்னமூர்த்தி வழிபாடு

ஓம் ஸ்ரீகன்யா லக்னதேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீதுலா லக்னதேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீவிருச்சிக லக்னதேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீதனுசு லக்னதேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீமகர லக்னதேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீகும்ப லக்னதேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீமீன லக்னதேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீமேஷ லக்னதேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீரிஷப லக்னதேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீமிதுன லக்னதேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீகடக லக்னதேவதா மூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீசிம்ம லக்னதேவதா மூர்த்தியே போற்றி

இதன் பிறகு, மரண பயத்தை தீர்த்து, மரண தோஷங்களை நிவர்த்தி செய்து தந்து அருளுமாறு ஸ்ரீமரண யோக தேவதா மூர்த்தியைப் பிரார்த்தித்துக் கொள்ளவும்.. “ராகு கால தோஷங்களிலிருந்து எம்மை காத்து அருள்வாயாக”, என்று ராகுகால தேவதா மூர்த்தியைப் பிரார்த்தித்துக் கொள்ளவும்..

பகல் நேர குளிகை தேவதா மூர்த்தியே போற்றி
இரவு நேர குளிகை தேவதா மூர்த்தியே போற்றி

எம பயத்திலிருந்து நம்மை மீட்டு அருளுமாறு வேண்டி

பகல் நேர குளிகை தேவதா மூர்த்தியே போற்றி
இரவு நேர குளிகை தேவதா மூர்த்தியே போற்றி

என்று ப்ரார்த்தித்துக் கொள்ளவும்.. அதர்ம எண்ணங்களிலிருந்து தீவினை சக்திகளிடமிருந்து நம்மைக் காக்க வேண்டி, ஸ்ரீஅர்த்த பிரகரண தேவதா மூர்த்தியை தியானித்து கொள்ளவும். கால தோஷங்களிலிருந்து நம்மைக் காக்குமாறு வேண்டி ஸ்ரீகாலம் தேவதா மூர்த்தியை பிரார்த்தித்துக் கொள்ளவும்...

பிறகு அயன தேவமூர்த்திகளான ஓம் உத்தராயண தேவதா மூர்த்தியே போற்றி.! ஸ்ரீதட்சிணாய காலதேவதா மூர்த்தியே போற்றி! உத்தராயண புண்ய கால நல்வரங்களை நமக்குப் பெற்றுத் தந்த ஸ்ரீஉத்தரகண்ட சித்த மகரிஷியே போற்றி!

வருட ருது தேவதா மூர்த்தி வழிபாடு!

ஸ்ரீவசந்த ருது தேவதா மூர்த்தியே போற்றி!
ஸ்ரீக்ரீஷ்ம ருது தேவதா மூர்த்தியே போற்றி!
ஸ்ரீவர்ஷ ருது தேவதா மூர்த்தியே போற்றி!
ஸ்ரீசரத் ருது தேவதா மூர்த்தியே போற்றி!
ஸ்ரீஹேமந்த ருது தேவதா மூர்த்தியே போற்றி!
ஸ்ரீசிசிர ருது தேவதா மூர்த்தியே போற்றி!

யுகாதி தேவதா வழிபாடு

ஸ்ரீகிருதயுக தேவதா மூர்த்தியே போற்றி!
ஸ்ரீதிரேதாயுக தேவதா மூர்த்தியே போற்றி!
ஸ்ரீதுவாபரயுக தேவதா மூர்த்தியே போற்றி!
ஸ்ரீகலியுக தேவதா மூர்த்தியே போற்றி!
சுபமுகூர்த்த தேவதையே போற்றி!
சூன்ய திதி தேவதா மூர்த்தியே போற்றி!

இதன் பிறகு சித்திரை முதல் பங்குனி வரை உள்ள ஒவ்வொரு மாத மூர்த்தியின் பெயரைச் சொல்லி ஸ்ரீசித்திரை மாத தேவதா மூர்த்தியே போற்றி!
ஸ்ரீவைகாசி மாத தேவதா மூர்த்தியே போற்றி!

என்றவாறாக 12 மாத தேவதா மூர்த்திகளின் பெயரைச் சொல்லி வழிபடவும்.

திதி வழிபாடு :- பிறகு பிரதமை திதி தேவதையே போற்றி! துவிதியை திதி தேவதா மூர்த்தியே போற்றி என்று ப்ரதமை, துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை, பௌர்ணமி ஆகிய 16 திதி தேவதா மூர்த்திகளின் பெயரைச் சொல்லி வழிபடவும்.

வார வழிபாடு – பிறகு ஞாயிறு முதல் சனி வரை உள்ள ஒவ்வொரு கிழமைக்கும் ஞாயிறு மூர்த்தியே போற்றி, திங்கள் மூர்த்தியே போற்றி என்று ஏழு வார தினங்களின் பெயரைச் சொல்லி வழிபடவும்.

நட்சத்திர வழிபாடு – பிறகு அஸ்வினி முதல் பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம்,  ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி , உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 27 நட்சத்திர தேவதா மூர்த்திகளின் பெயரைச் சொல்லி வழிபடவும்.

அறிவீர் ஆண்டு மூர்த்திகளை!
அனைவரும் புத்தாண்டு பூஜையன்று ஏனைய 59 வருட நாமங்களையும் மறந்து விடுகின்றார்கள். அதாவது புத்தாண்டுப் பூஜை என்பது 60 வருட தேவதா மூர்த்திகளின் நாமங்களை உச்சரித்து, துதித்து, ஓதி வழிபடுவதாகும். நீங்கள் அனைவரும் கட்டாயமாக ஒரு பஞ்சாங்கத்தை வாங்கி, புத்தாண்டு நாளன்றேனும் 60 வருட நாமங்களின் பெயரைச் சொல்லி ஓதி வழிபடுங்கள்.... தினந்தோறும் “ பிரபவ மூர்த்தியே போற்றி, விபவ மூர்த்தியே போற்றி! என 60 ஆண்டு காலதேவதா மூர்த்திகளின் பெயர்களை ஓதி வந்திடில் பல தோஷங்களை எளிதில் வென்றிடலாம். எவருக்கேனும் தமிழ் ஆண்டின் 60 நாமங்களையும் சொல்லிடத் தெரியுமா? இது மட்டுமல்லாது ஒவ்வொருவரும் தனக்கு என்ன தசை, புத்தி நடக்கிறது என்பதை அறிந்து கொண்டிடுக! ஒவ்வொரு மகா தசைக்கும், போதக மூர்த்தி, தேவக மூர்த்தி, பாசக மூர்த்தி, பராச மூர்த்தி, என்ற நான்கு வகை கிரஹ மூர்த்திகள் உண்டு. உதாரணமாக குரு மகாதசைக்கு செவ்வாய் போதகராகவும், சூரிய பகவான் தேவகராகவும், சனி பகவான் பாசகராகவும், சந்திர பகவான் பராச தேவகராகவும் விளங்குகின்றார்கள்.. எனவே புத்தாண்டு தினம் மட்டுமின்றி தினந்தோறும் தன்னுடைய தசா புக்திக்குரிய போதக மூர்த்திகளை அறிந்து வழிபடுதல் சிறப்புடையதாகும். மகாதசை போதக மூர்த்தியைப் பற்றி நீங்கள் அறிவதற்கான அட்டவணையை நாம் இங்கு அளிக்கின்றோம்..

விக்ரமப் புத்தாண்டு நவகிரக சதுர்பார்ய தேவதா மூர்த்திகள் (ஒவ்வொரு கிரக தசைக்குமுரிய நான்குவித தேவதா மூர்த்திகளை அறிந்து வழிபடுங்கள்)

கிரக
மகா திசை

போதக மூர்த்தி

தேவக மூர்த்தி

பாசக மூர்த்தி

பாரச மூர்த்தி

சூரியன்

செவ்வாய்

சுக்கிரன்

சனி

குரு

சந்திரன்

செவ்வாய்

சூரியன்

சுக்கிரன்

சனி

செவ்வாய்

சந்திரன்

புதன்

சூரியன்

சனி

புதன்

குரு

செவ்வாய்

சந்திரன்

சுக்கிரன்

குரு

செவ்வாய்

சூரியன்

சனி

சந்திரன்

சுக்கிரன்

குரு

சனி

புதன்

சூரியன்

சனி

சந்திரன்

செவ்வாய்

சுக்கிரன்

குரு

இவ்வாறாகப் புத்தாண்டு தினத்தன்று பஞ்ச அங்க கால தேவதா வழிபாடுகள் மட்டுமல்லாது காலகணிதத்தை நமக்குப் பகுத்துத் தருகின்ற அனைத்து தேவதா மூர்த்திகளின் நாமத்தைச் சொல்லி வழிபட வேண்டும், ஒன்றைச் சொன்னால் நம்பமாட்டீர்கள். இதுவரையில் உங்களையும் அறியாமல், இப்புத்தாண்டு தினத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட காலதேவதா மூர்த்திகளின் பெயர்களை ஓதி வழிபட்டிருக்கின்றீர்கள்! இதனை இவ்வாறாக எந்நாளேனும் செய்திருக்கின்றீர்களா! இதுவே சித்தர்களின் அருளாகும். உண்மையில் தினந்தோறும் இத்தகைய வழிபாட்டை மேற்கொண்டால் தான் நமக்கு எதிர்வருகின்ற நன்மைகளையும், தீமைகளையும், துன்பங்களையும், அறிந்து உணர்கின்ற மனப் பக்குவம் கிடைக்கும். இதனையே சகுன சாஸ்திரமாக இறைவன் நமக்குத் தந்து இந்த நித்ய வழிபாடுகள் மூலமாக பல்லி சொல், துளசி சகுனம், எண்ணெய்க் குடம், தும்மல், இரு பறவைகள் பேசுதல் போன்ற பலவிதமான இயற்கை சகுன நிகழ்ச்சிகளைத் தந்துள்ளான். அவற்றின் மூலமாக நமக்கு ஏற்பட இருக்கின்ற நன்மை, தீமைகள், பிரயாணம், கடன் தொல்லைகள் போன்ற பலவற்றையும் முன்னரே அறியுமாறு அவற்றை எதிர்நோக்குகின்ற மன வைராக்யத்தையும் நமக்குத் தருவதற்காகத்தான் இந்த காலதேவதா மூர்த்திகளின் வழிபாடு பெரிதும் உதவுகின்றது...

நட்சத்திர விரிவு பூஜை
இன்னும் புத்தாண்டு பூஜையை விரிவாகச் செய்ய விரும்புவர்கள் அவரவர் நட்சத்திரத்திற்குரித்தான பறவை, மரம், ரஜ்ஜு, நாடி, கணம், மிருக அம்சங்களை அறிந்து கொண்டு வழிபடலாம்.. உதாரணமாக உங்களுக்கு ரோகிணி நட்சத்திரம் என்றால் உங்களுக்குரிய பட்சியாக ஆந்தையும், மரமாக நாவல் மரமும், கழுத்து ரஜ்ஜுவும், நாடியாக சமான நாடியும், மானுஷ கணமும், மிருகமாக ஆண் நாகமும் அமைகின்றன.. இவை ஒவ்வொன்றுக்கும் எத்தனையோ அர்த்தங்கள் உண்டு. இவையெல்லாம் பஞ்சாங்கம் தரும் பகுத்தறிவுப் பண்டித அம்சங்கள். எனவே உங்களுடைய நட்சத்திரத்திற்கு உரிய நாளில், குறிப்பாகப் பிறந்த நட்சத்திர நாளில் ரோகிணி என்றால் நாவல் மரத்தை தலவிருட்சமாக உடைய திருவானைக்காவல் போன்ற இடங்களில் உங்களுக்கு ஏற்ற ரஜ்ஜுவுக்கு ஏற்றபடி சுவாமிக்கு ஆபரணங்களை அணிவித்தும், நாகமூர்த்திகளுக்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு பால் வார்த்து அபிஷேகம் செய்தலும் சிறப்புடையதாகும்.
இவ்வாறு நாம, நட்சத்திர, கண பூஜைகள்தாம் நமக்கு நல்ல ஆயுள் விருத்தியையும், வியாதி நிவாரணத்தையும் தருகின்றன. இவையெல்லாம் நாம் மறந்துவிட்ட புத்தாண்டு நட்சத்திர பூஜை முறையாகும்.. இதற்காகத்தான் நாம் ஆலயத்திற்கு தரிசனத்திற்காகச் சென்றால் சமுதாயத்தின் சார்பாக ஆலயத்தில் நடைபெறுகின்ற அனைத்து பூஜைகளின் புண்ய சக்தியும் நாம் பெற்றிடலாம்... ஆனால் ஆலய பூஜை நடப்பதற்கான உதவியை நீங்கள் சிறிதேனும் செய்தாக வேண்டுமல்லவா! ஆலயத் திருப்பணி என்பது சமுதாயத்தால் சமுதாய நன்மைக்காக, நலனுக்காகப் பராமரிக்கப்பட வேண்டிய தெய்வீகப் பணித் திட்டங்களில் ஒன்றாகும். இன்றைக்கும் எத்தனையோ கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும், பல பழைய கோயில்கள் இடிபாடுகளுடன் காணப்படுகின்றன.. இதை விடுத்து உங்களுடைய வசதியைக் கருதி உங்களுடைய தெருக்களிலும், காலணிகளிலும், பிளாட் அமைப்புகளிலும், புதுப்புது விநாயகர் ஆலயங்களையும், முருகர் ஆலயங்களையும் எழுப்புவதை விட பழைய ஆலய பராமரிப்பிற்கு உதவ நல்முயற்சிகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறாக ஸ்ரீவிக்ரம ஆண்டிற்கான புத்தாண்டு பூஜைதனை சித்புருஷர்கள் அருளியுள்ள எளிய முறையிலே ஜாதி, மத, இன, குல பேதமின்றி யாவரும் கடைபிடிக்கின்ற எளிதான வழியில், சற்குருவின் திருஅருளால் இங்குத் திரட்டித் தரப்பட்டுள்ளது. நன்முறையில் நீங்கள் இதனைக் கடைபிடித்து பலருக்கும் இதன் பலா பலன்கள் சென்று அடையும்படி நல்ல சமுதாய இறைப்பணிகளை  ஆற்றிடுவீர்களாக! இத்தகைய அரிய பஞ்சாங்க பூஜை முறையை நமக்கு எடுத்துரைத்த சற்குருவின் மஹிமையை உணர்ந்திடுங்கள். உங்களுக்குரிய சற்குரு எங்(இ)ங்கிருந்து கொண்டோ அருள்பாலிப்பதால் தான் அவருடைய அனுகிரக சக்திகளால் இன்று நீங்கள் இந்த புத்தாண்டு பூஜையைச் செய்ய முடிந்தது என்பதை உணர்ந்திடுங்கள்! ஓம் ஸ்ரீவிக்ரம வருஷ தேவதா மூர்த்தியே போற்றி!
விக்ரம வருட ஷோடச கணபதி பூஜை

பதினாறு வகையான திதிகளுக்கான ஷோடச கணபதி மூர்த்திகளின் பூஜைக்கு ஏற்ற ஆண்டாக விக்ரமத் தமிழ்ப் புத்தாண்டு விளங்குகின்றது. பதினாறு வகையான பூஜை முறைகளுடன், நைவேத்திய படைப்புகளுடன் இவ்வாண்டில் ஸ்ரீவிநாயகப் பெருமானை வழிபடுதல் சிறப்புடையது. விக்ரமாதித்ய மஹாராஜா மிகச்சிறந்த அறிவாளியாக விளங்கியதற்குக் காரணமே விக்ரம ஆண்டில் ஷோடச கணபதி பூஜையை மேற்கொண்டு அரிய பலாபலன்களைப் பெற்றதாகும்.. தமிழ்ப் புத்தாண்டின் 60 ஆண்டுகளுக்கும் அந்தந்த கலியுக நியதிற்கேற்ப குருவாய் மொழியாகத் தக்க அறவழி முறைகளையும், பரிகாரங்களையும் தந்தருள்வதாக அமைவதே சித்தர்களுடைய ஞான பத்ரகிரந்தங்களாகும்.. இவை ஜோதிடக் கணிப்புகளல்ல... மாறாக எத்தகைய கர்மவினைகள் எந்த ஆண்டில் எவ்வாறு நடைமுறைக்கு வரும் என்பதோடு அவற்றை வெல்வதற்கான சாத்தியக்கூறுகளை எந்த அறவழி முறைகள் தந்தருள்கின்றன என்பதை விளக்குவதும் ஞானபத்ர குருவாய் மொழியின் தாத்பர்யமாகும்.
இவ்வகையில் வருகின்ற விக்ரமத் தமிழ்ப் புத்தாண்டில் ஷோடச கணபதி வழிபாடு என்று சொல்லப்படுகின்ற, 16 திதிகளுக்குரித்தான ஸ்ரீகணபதி வழிபாடு சிறப்பைப் பெறுகிறது. இந்த ஆண்டு முழுவதும் இந்த ஷோடச கணபதிக்குரித்தான பூஜைகள், வழிபாடுகள் போன்றவற்றைக் கடைபிடித்திடுங்கள்! ஷோடச கணபதிக்குரித்தான தலமாக விளங்குகின்ற திருமக்கோட்டையில், இவ்வாண்டு முழுவதும் இவ்வழிபாட்டை சிறப்புறக் கடைபிடித்தலின் மூலம் சொல்லிடங்கா இறையருள் கிட்டும். மன்னார்குடி அருகிலுள்ள திருமக்கோட்டை ஸ்ரீஞானபுரீஸ்வர சிவாலயத்தில் சிறப்புடன் 16 பகுதிகளில் விளங்குகின்ற ஷோடச கணபதி மூர்த்திகளை நாம் வாழ்வில் ஒரு முறையேனும் சென்று தரிசித்து, வழிபட்டுப் பயன்பெறுதல் வேண்டும். அதிலும் இக்கோயிலின் ஷோடச கணபதி மூர்த்திகளை விக்கிரம ஆண்டில் வழிபடுதல் சிறப்பான பலன்களைப் பெற்றுத் தருவதாகும்.
ஸ்ரீகணபதி உபாசகர்களுக்கு விக்ரம புத்தாண்டு காணக் கிடைக்காப் பெருவரமாய் விளங்குகிறது. தினந்தோறும் 16 முறை அடிப்பிரதட்சணம், 16 முறை அங்கப்பிரதட்சணம் செய்தலும், 16 சமித்துகள், 16 காய்கறிகள், 16 பட்சணங்கள், 16 இனிப்புகள், 16 சித்ரான்னங்கள் (புளியோதரை, எலுமிச்சை சாதம்.. etc….) 16 மாங்கல்யச் சரடுகள், 32 மஞ்சள் திரவியங்கள், 16 வெற்றிலைகள்., 9 பாக்குகள்.., 16 வாழைப்பழங்கள்., 16 தேங்காய் கொண்டு ஜாதி, மத, இன பேதமின்றி பழுத்த சுமங்கலிப் பெண்களுக்குத் தானமளித்தலால் இந்த விக்ரம ஆண்டில் ஷோடச கணபதி வழிபாட்டின் மிகச் சிறப்பான பலன்களை எளிதில் பெற்றுத் தருகின்றது.. எத்துணையோ ஆண்டுகளாகத் தடைபட்டு வரும் பல நற்காரியங்களின் தடங்கல்கள் நீங்கி நன்முறையில் அவை நடைபெற இவ்வாண்டின் ஷோடச கணபதி பூஜை பெரிதும் உதவுகிறது.
இந்த விக்ரம ஆண்டில் காரிய சித்திக்கான ஷோடச கணபதி வழிபாட்டின் முக்கியத்துவத்தை நமக்கு அளித்தவர்களுள் ஒருவரே விக்ரமாதித்ய மஹாராஜா ஆவார். இவ்வாண்டில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 16 ஏழைச் சுமங்கலிகட்கு நல்ல குங்குமத்துடன் குங்குமச்சிமிழ் அல்லது சங்கு அளித்தல் மிகச் சிறந்த தானமாக விளங்குகிறது. குங்குமச் சிமிழில் பலவகை உண்டு. மரத்தால் கடைந்த/கடற்சிப்பிகளால் ஆன கடற்சிமிழ், கடக்காட்டுச் சிமிழ், தேவ வட்டச் சிற்பச் சங்கு, வாழைப்பூ நெடுவாள் குங்குமச் சிமிழ், தோட்டக்குறிஞ்சி பல வண்ண குங்குமச் சிமிழ் என்றவாறாக குங்குமச் சிமிழ்களிலும் பலவகை உண்டு. இவற்றுள் நன்கு பூஜிக்கப்பட்ட சில சங்கு வகைகளை சென்னை ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயாவில் பெறலாம்.. சுமங்கலிகட்கு ஜாதி, மத, பேதமின்றி குறிப்பாக 16 ஏழைச் சுமங்கலிகட்கு நல்ல குங்குமத்துடன் இவ்வழிபாட்டி நிறைவாக குங்கும தானம் அளித்தலால், எத்துணையோ ஆண்டுகளாக நிறைவு பெறாது தேங்கிக் கிடக்கும் நற்காரியங்களுக்கு (வீடு, கட்டடம், பாக்டரி, etc….திருமணம் பதவி உயர்வு) நன்முறையில் தீர்வு கிட்டி நற்காரிய சித்தி ஏற்படும்.
விக்ரம ஆண்டில் பொதுவாக பணவிரயங்கள், பணவீக்கத் துன்பங்கள், பணத்தால் உற்றம், சுற்றம், நட்பில் மனஸ்தாபங்கள், பணத்தால் உறவு முறையில் விரிசல் போன்றவை ஏற்படுமாதலின், ஷோடச கணபதி பூஜையைத் தினந்தோறும் செய்து வருதலால், பணத்தால் ஏற்படுகின்ற குறைகளும், தடங்கல்களும் பங்காளிச் சண்டைகளும் இவ்வாண்டில் நீங்கும்.  கொடுக்கல், வாங்கலில் நிதானமாக இருத்தல் வேண்டும். முன்பின் தெரியாதவர்களுக்கு ஒரு போதும் கடன் அளிக்காதீர்கள்.. வங்கி, நிதித்துறையில் இருப்போர் இவ்வாண்டில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஏனெனில், முறையற்ற பல வேலை நிறுத்தங்களால் கர்மவினைகள் பெருகி வாழ்வில் துன்பம் பெருகிவரும். எனவே நிதி, சிட்பண்டு போன்ற வற்றிலிருப்போர் நிதானமாகத் தொழிலில் ஈடுபட வேண்டும். சிறிய அளவில் சிட்பண்டில் முதலீடு செய்யுங்கள். பெரிய அளவில் அகலக்கால் வைத்து விடாதீர்கள். ஏனெனில் பணத்தால் ஏற்படும் சண்டைகள் இவ்வாண்டு மிகவும் அதிகமாக இருக்கும். வேதம் படித்தவர்கள், பட்டாச்சாரியார்கள், சிவாச்சாரியார்கள், அர்ச்சகர்கள், பூசாரிகள், குருக்கள், பண்டாரகர்கள், பண்டாக்கள் போன்ற இறை வழிபாட்டு இறைப்பணியில் திகழ்வோர் தங்களுடைய பணப் புழக்கத்தில் கவனமாக இருத்தல் வேண்டும். ஏனென்றால் பணம் சம்பந்தமாக இவர்களிடையே பிணக்குகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உண்டு தட்டுக் காசைக் கேட்டு எவரையும் மனவருத்தத்திற்கு ஆளாக்கக் கூடாது.
வாகனங்கள் வாங்குவதற்கு மிகவும் சிறப்பான ஆண்டு. ஆனால் அதே சமயத்தில் தாங்கள் வைத்துள்ள பழைய வண்டிகளை நியாயமான முறையில் நல்ல விலைக்கு விற்றல் சிறப்பானது. வாகனங்களை வாங்கும் போது நாள், நட்சத்திரம் கண்டு நல்ல ஹோரையில் வாங்கி குறித்தப் பூஜைகளுடன் வாங்கிட வேண்டும். பழைய வாகனங்களை நன்முறையில் பழுது பார்த்து ஏழைகளுக்குத் தானமாக அளித்தலால் இவ்வாண்டில் செவ்வாய் பகவானின் அனுகிரகம் கிட்டும். இதனால் வாகன வசதி பெரு(கு)ம்.. ஷோடச பூஜைகளுடன் புது வாகனத்தை ஓட்டத் தொடங்குவது மிகவும் சிறப்பானதாகும்... மருத்துவர்கள் இவ்வாண்டில் புதிய மருத்துவத் தொழிலையோ, மருத்துவ தொழிற் பெருக்கத்திலோ ஈடுபடாமல் இருப்பது நல்லது. இருக்கும் அளவிலேயே திருப்தியுடன் வாழ்ந்திடுங்கள்..
வக்கீல்களும், நீதிபதிகளும் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ஆண்டு. சிறுவாக்குத் தவறுகளால் பெரும் பிரச்னைகள் ஏற்படக் கூடும், இவ்வாண்டில் இவர்கள் ஷோடச கணபதி மூர்த்திகளை மனதார வணங்கி வாக்சுத்தி பெறுதல் நலம் வாக்கினால் ஏற்படும்.துன்பங்கள் நிறைய வரும். போக்குவரத்துத் துறையிலும், ஏற்றுமதி, இறக்குமதி துறையிலும், எதிர்பாராத பிரச்சினைகள் அதிகம் ஏற்படும். மேலும், கட்டிடத் தொழிலில் இருப்பவர்களுக்கும் அதிகம் பிரச்னைகள் ஏற்படக்கூடிய ஆண்டு விவசாயத் துறையில், புதிய விஞ்ஞான முறையில் ஈடுபடாது, பழமையான முறையில் மேற்கொள்வதே சிறப்பு, பயிர் பாதிப்புகள் ஏற்பட்டுத் தீமை ஏற்படக்கூடிய ஆண்டு. ஹோட்டல் துறையில் இருப்போர் தொழிலாளிகளுடன் நல்மதிப்புடன் பெருங்குணத்துடன் நடத்தல் நலமாகும்.
ஷோடச கணபதி வழிபாடு ஒன்றே இவர்கள் அனைவருக்கும் தீர்வுகளைப் பெற்றுத் தரும். இவ்வாறாக மேற்கண்ட அனைவரும் சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளில் குறிப்பாக வளர்பிறைச் சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளில் இந்த ஷோடச கணபதிக்குரித்தான அனைத்து வழிபாடுகளையும் ஏற்று நடத்துதல் மிகவும் சிறப்பாகும்.. எளிய தீர்க்க தரிசனமான முடிவுகளைப் பெறவும் நற்காரிய சித்தியும், நாட்டுக்கு நன்மையும், மக்களுக்கு சுபிட்சமும் பெற்றுத் தருவதற்கு விக்ரம ஆண்டில் ஸ்ரீஷோடச கணபதி வழிபாடே உத்தமமானதாக விளங்குகிறது என்பதை அனைவரும் அறிந்து சத்சங்கமாக பலரும் ஒன்றாக ஷோடச கணபதி வழிபாடு செய்தல் சிறப்பானதாகும்..!

விக்ரம ஆண்டில், விசேஷ ஷோடச கணபதி பூஜை :- காடாறு மாதம், நாடாறு மாதம் ஆண்டு மிகச் சிறந்த வேந்தர்களுள் ஒருவராக விளங்கிய விக்ரமாதித்ய மகாராஜா பற்றி கேள்வியுற்றிருப்பீர்கள். பல விலங்குகளின், பறவைகள், பூச்சி, புழுக்களின் மொழிகளை அறிந்தவனாய்ப் பிரபஞ்சத்தின் அனைத்து ஜீவன்களிடமும் பேசுகின்ற தெய்வீக வரம் பெற்றவன். மனிதர்கள், தேவர்கள், வேதாளங்கள் என அனைத்து ஜீவன்களின், ஆவிகளின் ஆத்ம விசார வினாக்களுக்குத் தக்க விடை அளிக்க கூடியவனாய் பிரபஞ்சத்தின் மிகச் சிறந்த அறிவாளிகளுள் ஒருவனாக விளங்கியவன். இவ்வளவு புகழும் அவன் பெறக் காரணம் என்னவெனில், இடைவிடாது 16 ஆண்டுகள் ஷோடச கணபதி பூஜையை மேற்கொண்டதாகும். நாட்டில் செய்யும் பூஜையை விட, இயற்கை சக்திகள் வளங்கள் நிறைந்த காட்டில் செய்யும் பூஜைகள் மிகுந்த பலாபலன்கள் அளிக்குமன்றோ!
அதிலும் உத்தமத் தியான நிலையில் திகழ்ந்த விக்கிரமாதித்தனுக்கு வனத்திலும், தான் வாழ்ந்த நாட்டிலும் 16 ஆண்டுகள் இடைவிடாது ஸ்ரீஷோடச கணபதி பூஜை செய்கின்ற பாக்கியம் கிட்டியது என்றால் என்னே தவம்! விக்ரம ஆண்டிற்கு இப்பெயர் வர எத்துணையோ காரணங்கள் இருந்தாலும், வழிவாக்கில் இதற்கு வேறும் பல பெயர்கள் சூட்டப்பட்டிருப்பினும். விக்ரம ஆண்டில் நடைபெற்ற சம்பவங்களையும், கிடைக்கக் கூடிய நல்வரங்களையும், பலாபலன்களையும், ஏற்படக்கூடிய துன்பங்களையும் முன்னோடியாகக் குறிக்கும் வகையில் விக்கிரமாதித்யன் பல மிருகங்கள், விலங்குகளின் மொழிவகை சகுனங்களைக் கொண்டு, சாதுர்யத்தால் விக்ரம சகாப்த கிரந்தங்களைப் படைத்துள்ளான். 16 பிள்ளையாரின் திருவுருங்களின் பிரதிமைகளை மஹரிஷிகளிடமிருந்து உருவாக்கிப் பெற்று, அவற்றிற்குச் சிறந்த வகையில் முறையான பூஜைகளைச் செய்த, பக்தியாளனே இந்த மகாராஜா, இத்தகைய நல்தெய்வீக குணத்தைப் பெறக் காரணமே அவனது சிறப்பான ஷோடச கணபதி வழிபாடாகும் .இவ்வாண்டில் 16க்கும் மேற்பட்ட கணபதி நிறைந்திருக்கின்ற இடங்களில் பூஜைகளையும், தீர்த்த நீராடல்களையும், ஹோமங்களையும், வேள்விகளையும், யாகங்களையும், தெய்வ ஆராதனைகளையும், அடிப்பிரதட்சிண, அங்கப் பிரதட்சிண நேர்த்திகளையும் செய்தலால் காரிய சித்தி மேம்படும். எத்துனையோ ஆண்டுகளாக நிறைவேறாத நல்ல ஏக்கங்கள் நன்முறையில் நிறைவுறுதற்கான நல்ல ஆண்டே விக்ரம ஆண்டாகும். மன்னார்குடி அருகே திருமக்கோட்டை, சென்னை அருகில் திருப்பாசூர் போன்ற சிவத்தலங்களில் 16க்கும் மேற்பட்ட ஷோடச கணபதி மூர்த்தங்களை நீங்கள் கண்டு வழிபட்டு ஆனந்திக்கலாம். விநாயகர் சபை என்ற தேவசபை ஒன்று திருப்பாசூர் சிவாலயத்தில் காணப்படுகிறது. சுற்றிலும் பிள்ளையார் மூர்த்தங்கள் நிறைந்திருக்க நடுப்பிள்ளையார் கம்பீரமாக வீற்றிருக்க கணபதி லோகத்திற்கே வந்து விட்டோமோ என்று வியக்கும் அளவிற்கு மிகச்சிறந்த விநாயக சபை கொண்டதாக திருப்பாசூர் ஆலயம் விளங்குகிறது. இவ்வருடத்தில் அடிக்கடி இத்திருத்தலங்கட்குச் சென்று ஷோடச கணபதி மூர்த்தங்களை முறையாக வழிபட்டு வாருங்கள்.

குழந்தைகள் படிப்பில் மேன்மை பெற..... பொதுவாக படிப்பில் மந்தமாக உள்ள பிள்ளைகளும், எவ்வளவோ செலவழித்தும், டியூஷன் வைத்தும், புத்தகங்கள், ஏடுகள் வாங்கி கொடுத்தும், நன்முறையில் படிப்பில் முன்னேறாத பிள்ளைகளுக்கும் இவ்வாண்டில் ஷோடச கணபதி பூஜைதனை மேற்கொள்ளச் சொல்லுங்கள். 16 திதிப் பிள்ளையார் மூர்த்தங்களுக்காக நாம் எங்கு செல்ல முடியும் என்று மலைக்காதீர்கள்! நம் ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தில் அபூர்வ 16 திதிப் பிள்ளையார் மூர்த்திகளுக்கான  ஷோடச கணபதி தெய்வீகப் படமுள்ளது. தினந்தோறும் உங்கள் பிள்ளைகளைத் தாமே சந்தனம் அரைக்கச் செய்து, இந்த 16 பிள்ளையார் மூர்த்தங்களுக்கும் இட்டு வரச் செய்யுங்கள். இதுவே அவர்களது காலை, மாலை தினசரி வழிபாடாக அமையட்டும். அந்தந்த திதிக்குரிய கணபதியின் பெயரைச் சொல்லி வணங்குதல் மிகவும் விசேடமானதாகும். பிரதமை முதல் பௌர்ணமி, அமாவாசை திதிக்குரித்தான ஒவ்வொரு திதிக்குமான பிள்ளையாரின் பெயருள்ளதாக இவ்வரிய படம் விளங்குகின்றது. அமாவாசைக்கும், பௌர்ணமிக்கும் ஒரே திதிப் பிள்ளையார் நாமமாதலின் ஒன்றில் இரண்டாக 15 திருவுருவங்களுடன் பதினாறு அற்புத ஷோடச கணபதி உருவ வழிபாடாக இது மலர்கின்றது,

திதிப் பிள்ளையார் வழிபாடு
உதாரணமாக இன்று பிரதமைத் திதியெனில் இன்று உலகில் எங்குமே விநாயகர் பால கணபதியாக தான் அருள்பாலிக்கின்றார்.. அரசமரத்துப் பிள்ளையார் ஆனாலும் சரி, ஆலமரத்து பிள்ளையார் ஆனாலும் சரி, தெருவோரத்திலும், திருக்கோயில்களிலும் காட்சி தருபவரானாலும் சரி இன்று அனைவருமே பிரதமை திதிக்குரித்தான பால கணபதியாகவே அருள்பாலிக்கின்றனர். பக்தி கணபதி, ஸ்ரீவீர கணபதி, ஸ்ரீசெல்வகணபதி எனப் பல பெயர் கொண்டிருந்தாலும் கூட பிரதமை அன்று அனைத்து விநாயக மூர்த்தங்களும் ஸ்ரீபால கணபதி அம்சங்களுடன் பிரதமையன்று பிரபஞ்சமெங்கும் அருள் பாலிக்க வேண்டுமென்பது ஸ்ரீகணபதி லோக நியதியாகும். இவ்வாறாக ஒவ்வொரு திதிக்கும் உரித்தான பிள்ளையாரின் பெயரை அறிந்து கொண்டு உங்கள் குழந்தைகளை தினந்தோறும் துதிக்கச் செய்யுங்கள். தினந்தோறும் இந்த 16 விநாயக மூர்த்திகளுக்கும், இவ்வாண்டு முழுவதும், சந்தனம், குங்குமம் இட்டு வழிபட்டு வர வேண்டும். இது பிள்ளைகட்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய பூஜைதானே! எளிமையான வழிபாடும் தானே! உடனே முயற்சி செய்யுங்கள்! முயற்சி திருவினையாக்கும்! விக்ரமாதித்ய மஹாராஜா போல் சிறந்த அறிவாளியாக விளங்க வேண்டுமெனில் இவ்வாண்டில் அவ்வரசனைப் போல் செய்யக் கூடிய உத்தம பக்தி நிறைந்த இப்பிள்ளையார் வழிபாடு ஒன்றே நல்லறிவு தரும்... அறிவு நிறைந்தவராக இருப்பது பெரிய விஷயமன்று! அவ்வறிவுடன் நல்லொழுக்கமும், பக்தியும் நிறைந்த தெய்வீக நல்வாழ்க்கை வாழ்தல் வேண்டும். இதற்கென நமக்கு அருளப்பட்டுள்ளதே ஸ்ரீஷோடச கணபதி வழிபாடு.

ஸ்ரீஐயப்ப விரதம்

கடந்த பல இதழ்களாக தற்போதைய நடைமுறையிலுள்ள ஸ்ரீஐயப்ப விரத நெறிமுறைகளிலுள்ள குறைபாடுகளையும் அவற்றை நிவர்த்தி செய்யும் முறைகளையும் சித்புருஷர்களுடைய அருள்வழி முறைகளாக எடுத்துரைத்து வருகின்றோம் அல்லவா! இப்பகுதிக்கு அன்பர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கின்றது. மேலும் ஐயப்ப விரதத்தின் பல சிறப்பு அம்சங்களைப் பற்றியும் விளக்கங்களையும் கேட்டு நமக்கு நிறைய கடிதங்கள் வந்துள்ளன. பல குருசாமிமார்களும் தங்களுடைய விரத நெறிமுறைகளை மேம்படுத்துவதற்கான மேலும் பல விளக்கங்களைக் கேட்டு எங்களுக்குப் பல கடிதங்களை எழுதியுள்ளார்கள். ஸ்ரீஐயப்ப விரதத்தின் பரிபூர்ணமான விரத பலன்களைப் பெறுவதற்காகப் பலரும் ஆர்வம் கொண்டிருப்பது கண்டு ஆனந்தம் கொண்டு ஸ்ரீஐயப்பனுக்கு நன்றிப் பிரார்த்தனை செலுத்துகின்றோம். விரத காலத்தின் போது உறவினர்களின் திடீர் மரணம் மற்றும் எதிர்பாராத துக்க சம்பவம் ஏற்படும் போதும் தற்காலிகமாக விரதத்தை முடித்து விட்ட , மீண்டும் மாலையணிந்து விரதத்தைத் தொடரலாமா – இவ்வகையிலான பல விளக்கங்களைக் கேட்டு நமக்குப் பல கடிதங்கள் வந்துள்ளன.!

தீட்டும் தீண்டா திருவிரதம்!
 மரணம் என்பது நாம் நினைப்பது போல அஞ்சக் கூடிய பொருள் அல்ல.. அது தருகின்ற துக்கமும் நிரந்தரமானது அல்ல. இயற்கையான மரணம் என்பது எந்த ஜீவனுக்கும் உரித்தானதுதான்... விரத காலத்தின் போது இயற்கை எய்தினால் தீட்டு சம்பந்தமாக விரத மாலையைக் கழற்றி விடலாமா? எந்த சமயத்தில் எவருக்கு எவ்வகையில் மரணம் ஏற்பட வேண்டும் என்பது விதித்துள்ளடித்தானே நிகழும். உண்மையான தீர்க மனோவைராக்யத்தைப் பூண்டவர்கள் ஸ்ரீசபரிமலை விரதத்தைப் பரிபூர்ணமாக முழுநம்பிக்கையுடன் சற்றும் மனம் கலங்காது, விரதத்தைத் தொடர்தல்தான் சிறப்புடையது. இந்த பரிசுத்தமான மன வைராக்யத்தைப் புனிதமான விரத நிர்ணயத்தை எந்த இறப்புத் தீட்டும் தீண்டிட முடியாது. எனவே எதுவாயினும் சரி, விரதத்தைத் தொடர்தல் தான் சிறப்புடையது! அதற்காகத்தான் அந்தக் காலத்தில் சபரிமலைக்கு விரதம் பூணுதல் என்றால், முதல்நாளே விரதத்தைப் பூண்டு நடைப் பயணத்தைத் தொடர்ந்து விடுவார்கள். மாலை அணிந்து நடைப்பயணம் தொடங்கியவர்களுக்கு எவ்விதத் தீட்டு தோஷம் கிடையாது. எனவே 48 நாட்களுமே நடை யாத்திரையில் இருப்பதால் விரதத்திற்கு எந்தத் தடங்கலும் இடம் கொடுக்க முடியாது அல்லவா! எனவே விரதத்தின் போது மனபலத்துடன், மன உறுதியுடன் இருந்தால் இறந்தது சொந்தத் தாய், தந்தையாக இருந்தாலும் கூட விரதத்தின் பரிசுத்தத் தன்மையால் எவ்விதத்திலும் அத்தீட்டானது விரதம் மேற்கொண்டவரைப் பாதிக்காது. எனவே அவர் தம் விரதத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம். இறுதிச் சடங்குகளைப் பிறரிடம் ஒப்படைத்து விடலாம்.. இறந்தவரின் ஆவியும் எந்த இறை விரதமும் தடங்கலின்றித் தொடர்வதையே விரும்பும்.. அடுத்தபடியாக கடும் நோய், விபத்து காரணமாக விரதத்தைத் தொடர முடியாமல் போகலாம்., உதாரணமாக விரதத்தை மேற்கொண்ட பின்னர், மஞ்சள் காமாலை, டைபாய்டு, வயிற்று நோய்கள் போன்ற கடும் நோய்கள் ஏற்பட்டு விட்டால், இவற்றோடு விரதத்தைத் தொடர்வது என்பது கடினமானது தானே! மேலும் விரதக்காலத்தின் போது நோய்கள் ஏற்படுவது சரியா என்பது ஒரு புறத்தில் இருக்க, விரதம் மேற்கொண்டவருடைய அரைகுறை மனத்திண்மையையோ அல்லது அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அவர் விரதம் மேற்கொள்வதில் பரிபூர்ணமாக சம்மதிக்கவில்லை என்பதையும் தான் மற்றும் பல விரத தோஷங்களையும் இது சுட்டிக் காட்டுவதாகும்.

எனவேதான் குடும்பத்தினருடைய பரிபூர்ண சம்மதத்தைப் பெறுதல் என்பது ஸ்ரீஐயப்ப விரதத்திற்கு மிகவும் இன்றியமையாததாகும். இவ்வாறு உடல் இயலாமையால் விரதத்தை மேற்கொள்ள முடியாது என்ற நிலையில்தான் விரத மாலையைக் கழற்றி வைத்துவிட்டு ஸ்ரீஐயப்பனிடம் தன்னுடைய இயலாமையைச் சொல்லி விரதத்தை மீண்டும் நிறைவேற்றுவதாகச் சங்கல்பம் செய்து கொண்டு, தன்னுடைய சாதாரண வாழ்க்கை நிலையைத் தொடரலாம். ஆனால் மீண்டும் விரதத்தைத் தொடங்கும் போது 48 நாட்களுக்குத் தான் மீண்டும் விரதத்தை மேற்கொள்ள வேண்டுமே தவிர ஏற்கனவே “நான் விரதத்தில் 25 நாட்கள் கழித்து விட்டேன், மீதமுள்ள 23 நாட்களுக்கு மட்டும் விரதம் மேற்கொள்வேன்.”, என்றெல்லாம் அரைகுறையான விரதக் கால கணிப்பினை மேற்கொள்ளாதீர்கள் மீண்டும், மீண்டும் இறைவனிடமே ஏன் இந்த கணக்கு வழக்கு?

சவர நியதி முறைகள்!
ஸ்ரீஐயப்ப விரதத்தைப் பரிபூர்ணமாக முடித்து மகரஜோதி தரிசனம் கண்டு ஸ்ரீஐயப்ப தரிசனத்தை முடித்தபின் மீசையை மட்டும் வைத்துக் கொண்டு பலரும் shave (முகச் சவரம்) செய்து கொள்வார்கள். இதெல்லாம் அரைகுறையாக கடைபிடிக்கும் விரத பங்கக் காரியங்களாகும். தலைமுடி, மீசை, தாடி எல்லாவற்றையும் மழித்தலே சிறப்புடையதாகும். இதுதான் அகங்காரம், ஆணவம்தனை அழித்துப் பணிவு, அடக்கம் என்ற தெய்வீகப் பண்புகளை உருவாக்குவதாகும். வெறும் தாடியை மட்டும் எடுத்துவிட்டு மீசையை Trim செய்து கொண்டு வருவதென்றால் அது விரதத்தின் பாங்காகாது.. விரதம் முடிந்த பின்னர் முடிமழிப்பு என்று ஒன்றை நிர்ணயித்திருப்பது ஏன்? அகங்காரம் முழுமழியத்தானே!

முடிப் பிரார்த்தனை

வேலை கிடைக்க வேண்டும். திருமணம் ஆக வேண்டும். நோய்களிலிருந்து நிவாரணம் பெற வேண்டும் போன்ற பலவித பிரார்த்தனைகளுடன் முடி நேர்த்தியுடன் விரதத்தை மேற்கொள்கின்ற பொழுது இந்தக் குறைகளுக்குக் காரணமான தீவினைக் கருமவினைகள் தீர்வு பெற்றால்தான் அந்தப் பிரார்த்தனையின் பலன்களும் பலிதமாகும். எனவே விரதம் என்பது எளிமையான, புனிதமான முறையில், கர்மவினைக் கழிப்பிற்கான நிவாரண யுக்தியாகவே விளங்குகின்றது. தீவினைக் கருமவினைகள் எல்லாம் எவ்வாறு நம் உடலிலிருந்து விலகும்? இந்தத் தீவினைச் சக்திகள் எல்லாம் விரத கால முடிவில் நம்முடைய உடலிலுள்ள ரோமங்களின் நுனியிலும், அடியிலும் தொக்கி நிற்கின்றன. எனவே, இந்த ரோமங்களை உதிர்த்தால்தான் நம் உடலிலிருந்து தீவினைக் கருமங்கள் நீங்கும். இதை விடுத்து மீசையை trim செய்வது, அலங்கோலம் செய்து கொள்வது, தாடியை நன்றாக bush, jinnet, French beard  என்ற வகையில் வடிவு செய்து கொள்வதெல்லாம் ஏற்புடையதல்ல.. எனவே விரத பூஜாபலன்களாக தீவினைக் கழிப்பின் ஒரு அம்சமாக உடலிலுள்ள ரோமங்களில் தீவினைச் சக்திகள் தொக்கி நிற்கின்ற பொழுது அவற்றை முழுமையாக கழிப்பதுதான் விரத நேர்த்திகளின் காரியசித்திகளைத் துரிதப் படுத்தும், மேம்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே எந்தவித அகங்காரம், ஆணவம் கொள்ளாது வெட்கம் பாராது ஸ்ரீஐயப்ப விரதத்தின் முடிவில் தலைமுடி, தாடி, மீசை முழுமையாகக் கழிப்பதுதான் சிறப்புடையதாகும் சர்வாங்க சவரம் என்ற வகையிலான நம்முடைய மூதாதையர்கள் காட்டிய வழியில் உடலில் உள்ள ரோமங்கள் முழுவதையும் விரத முடிவில் கழிப்பதுதான் சிறப்புடையதாகும்.. தீயவினைக் கழிப்பையும் இதுவே முழுமையாக்கும்.

ஆடை விதிகள்!

விரதம் முடிந்தபின் ஆடைகளை என்ன செய்தல் வேண்டும்? இல்லறவாசிகளாக இருந்தால் காவி உடைகளை ஒருபோதும் அணிதல் கூடாது என்பதை நாம் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளோம். 18, 21, 27, 48, 93 என எத்தனை முறை மகர ஜோதி தரிசனம் பெற்றவர்களாக இருந்தாலும் சரி, இல்லறவாசிகளாய் இருந்தால் எத்தகைய பெரிய குருசாமிகளாக இருந்தாலும் சரி, காவி கட்டுதல் கூடவே கூடாது. இதில் இந்த இறைநியதியில் எவருக்கும் தளர்ச்சியும் கிடையாது. இல்லறவாசிகள் காவியைக் கட்டுதலே கூடாது என்ற போது காவியைத் தானமாக அளித்தல் என்பது எவ்வாறு முடியும்? மிகவும் உண்மையான, புனிதமான துறவிகளுக்கு மட்டுமே காவியை நாம் தானமாக அளித்திடலாம். முறையற்ற வாழ்க்கை நடத்துவோரும், பிச்சை எடுப்பவர்களுக்கும், ஒருபோதும் காவியைத் தானமாக அளித்திடாதீர்கள். ஸ்ரீஐயப்ப விரதம் முடிந்த பின்னர், நீங்கள் அணிந்திருந்த கருமை, நீலநிற ஆடைகளை நன்கு துவைத்து, நன்முறையில் அவை இருக்கும் போதே அவற்றைத் தானமாக அளித்திடலாம் அல்லது அவற்றை பத்திரமாக வைத்திருந்து அடுத்த விரதத்திற்கும் பயன்படுத்தலாம். பொதுவாக ஸ்ரீஐயப்ப விரதத்திற்கு ஒருவர் அணிந்திருந்த உடைகளை மற்றொருவர் விரத காலத்தில் பயன்படுத்துதல் கூடாது. விரத ஆடைகளை தானமாக அளிக்கும் போது உணவு, ஆடைகள் இல்லாத மிகமிக ஏழ்மையான நிலையில் இருப்பவர்களுக்கு  அந்த ஆடைகளை அளித்திடல் வேண்டும். இதன் விரத புண்ணிய சக்தியால் அவர்களுக்கு பல நன்மைகள் ஏற்படும் அல்லது காடுகள் கடல், பூமியின் அடிப்பகுதியில் விரத உடைகளைக் கரைத்திடல் வேண்டும்/சேர்த்திடல் வேண்டும்.

சவர நாட்களுக்கான நியதி
விரதம் முடிந்த பின்னர், தாடி, மீசையை மழிக்கும் போது அதற்குரித்தான நாட்களில் மட்டும் தான் சவரம் செய்து கொள்தல் வேண்டும். வெள்ளி, செவ்வாய் போன்ற நாட்களும் மேலும் குறிப்பிட்ட நட்சத்திர நாட்களிலும் முடி மழித்தலுக்கு உரித்தான நாட்கள் அல்ல. எனவே கீழ்க்குறித்த நட்சத்திரம் வரும் நாட்களிலும், கிழமைகளிலும், ஸ்ரீஐயப்ப விரதத்திற்கான முடி மழித்தலைக் கொள்ளாதீர்கள். சாதாரண நாட்களிலும் கூட சவர நியதியாக இந்த நட்சத்திர தின விதிகளைக் கடைபிடிப்பது நல்லது. ஏனென்றால், கீழ்க்கண்ட நட்சத்திர நாட்களிலும், முடி மழித்தலை மேற்கொண்டால் பலவித தோஷங்கள், காரியத் தடங்கல்கள் உண்டாகும். ஏனெனில் தீவினைக் கழிப்பதற்கு உகந்த நாட்களாக இவை விளங்கவில்லை. மாறாக, இந்நாட்களில் சில ஹோரை நேரங்களில் தீவினைச் சக்திகள் பெருக்கம் அதிகமாதலின் தீவினைக் கழிப்பிற்கு உரித்தான நாட்களில் சவரம் செய்து கொள்தல்தான் சிறப்புடையதாகும்... ஆனால் கலியுகத்தில் இயந்திர கதியான வாழ்க்கையில் யார் இதை கடைபிடிக்கின்றார்கள்? அதனால்தான், நாள்தோறும், மணிதோறும், நிமிடங்கள் தோறுமாக மனிதனுக்கு மனக்கவலைகளும், துன்பங்களும் பெருகிக் கொண்டே இருக்கின்றன. ஸ்ரீஐயப்ப விரதம் முடிந்தவுடன் முழு முடிக் கழிப்புதான் சிறப்புடையது., இம்மழித்தலையும், அவரவர் ராசிக்குரித்தான சூன்ய திதிகளிலும், மற்றும் பரணி, கார்த்திகை, திருவாதிரை, கேட்டை மூலம், பூராடம், பூரட்டாதி , ஆயில்யம், மகம், விசாகம், பூரம் ஆகிய நட்சத்திர தினங்களிலும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் செய்தல் கூடாது.

சிகையின் தத்துவங்கள்
தலைமுடியைப் பற்றிப் பல ஆன்மீக ரகசியங்கள் உண்டு. சிகையை அடிக்கடி வெட்டுவதால், உடல் சக்தியோடு, ஆன்மீக சக்தியும் குறைகிறது என்பது உண்மையே. இதற்காகவே “சவுண ரகசியங்கள்” என்று ஒரு தனி தத்துவமே உண்டு. இது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமானதொன்றாகும்.

தலைமுடி வெட்டுதல் கூடாத மாதங்கள் : ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி
தலைமுடி, நகம் வெட்டுதல், முகம் மழித்தல் செய்யக் கூடாத தினங்கள், கிழமை : செவ்வாய், வெள்ளிக்கிழமை
நட்சத்திரங்கள் : பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், கேட்டை, மூலம், பூராடம், பூரட்டாதி மற்றும் சூன்ய திதிகள்.
அவரவர் ராசிக்கான சூன்ய திதிகள் : -  மேஷம் – சஷ்டி ; ரிஷபம் – சதுர்த்தி, திரயோதசி ; மிதுனம் – பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி ; கடகம் – சப்தமி ; சிம்மம் – த்ரிதியை, சஷ்டி, நவமி, திரயோதசி ; கன்னி – பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தசி ; துலாம் – பிரதமை, துவாதசி ; விருச்சிகம் – தசமி ; தனுசு – துவிதியை, சப்தமி, ஏகாதசி, சதுர்த்தசி ; மகரம் – பிரதமை, த்ரிதியை, துவாதசி ; கும்பம் – சதுர்த்தி ; மீனம் – த்விதியை, ஏகாதசி, சதுர்த்தசி .

இதைப் பின்பற்றினாலே போதும், மனிதன் தன்னைப் பலவித பெரிய துன்பங்களிலிருந்து காத்துக் கொள்ளலாம்.

நீர் தரும் சீர்(மை)!
ஸ்ரீஐயப்ப விரதத்தின் போது செப்புத் தம்பளர்களிலும், குறித்த சில மரத் தம்ளர்களிலும், சுரைக் குடுவையிலும், நீரை வைத்திருந்து அருந்துதல் சிறப்புடையதாகும். தாமிரத் தம்ளர்களில் எப்போதும் தண்ணீரை வைத்திருத்தல் கூடாது. ஆனால் நீரை அருந்தும் போது மட்டும் நீரைத் தாமிர தம்ளரில் ஊற்றிக் குடிக்கலாம். மரத் தம்ளரில் எப்போதும் தண்ணீரை வைத்திருக்கலாம். மூங்கில் தம்ளர்களிலும், சுரைக் குடுவையிலும் எப்போதும் நீரை வைத்திருந்து அருந்திடலாம். சந்தன, வில்வ மர தம்ளர் என மரத் தம்ளர்களிலும் பலவகைகள் உண்டு இவற்றில் நீரை வைத்து அருந்த வேண்டிய முறைகளைப் பற்றி தக்க சற்குருவை நாடி அறிந்திடவும். இதே போல விபூதியை வைத்திருக்க வேண்டிய மரவையையும் எந்த மரத்தினால் ஆனவற்றால் வைக்க வேண்டும் என்ற இறைநியதியும் உண்டு. சந்தன, வில்வம், தேக்கு, மா, பலா போன்ற மரங்கள் விபூதி வைத்திட ஏற்றவையாகும். குங்குமச் சிமிழ், மரத்தால் அல்லது கடல் சிப்பி, சங்கு கண்ணாடியினால் ஆகியிருப்பது சிறப்புடையதாகும். சந்தனத்தை எப்போதுமே அரைத்து இட்டுக் கொள்தல் வேண்டும்... அரைக்கப்பட்ட ஆறு மணி நேரத்திற்கு மேலான சந்தனத்தை ஒரு போதும் இட்டுக் கொள்ளாதீர்கள்... கடையில் சந்தனப் பவுடரை வாங்கிக் கரைத்துப் பூசுதல் கூட ஏற்புடையதும் கிடையாது.
ஸ்ரீஐயப்ப விரதத்தின் போது தினந்தோறும் நெற்றிக்கு பூசக் கூடிய சந்தனமானது தினமும் அரைத்துத் தான் இடப்பட்ட வேண்டும்... தற்காலத்தில் பலரும் செய்வது போல சந்தனப் பொடியை வாங்கு குழைத்து இட்டுக் கொள்தலால் எவ்விதப் பயனும் கிடையாது. இதற்காகவே ஒவ்வொரு ஐயப்ப விரத அடியாரும் தன்னுடன் எப்போதும் ஒரு சந்தனக் கட்டையும், கல்லையும் வைத்து இருத்தல் வேண்டும். அல்லது குழுவாகச் செல்லும் போது ஒருவர் மாற்றி ஒருவர் இட்டுக் கொள்வதுதான் விரத பலன்களை மேம்படுத்தும். நீர்த்தன்மை உடையதால் 6 மணி நேரங்களுக்கு மேல் ஆன அரைத்த சந்தனத்திற்கு சக்திகள் குறைந்து விடும். மேலும் 108 முறை அடிப்பிரதட்சிண வழிபாடு, ஆலய கலச வழிபாடு, நித்ய கிரிவலம், ஆலய தீர்த்த நீராடல், பசு பூஜை போன்றவை ஒவ்வொரு அடியார்க்கும் உரித்தான நித்ய விரத வழிபாட்டு முறைகளாகும். இவை விரத பலன்களை மேம்படுத்தும்.

வீட்டில் ஸ்ரீஐயப்ப விக்ரகம்
ஸ்ரீஐயப்ப விக்ரகத்தை வீட்டில் வைத்து வழிபடாலாமா என்று பலரும் கேட்டு இருக்கின்றார்கள். கட்டைவிரல் உயரத்திற்கு குறைவான சிறு தெய்வ விக்ரகங்களை வீட்டில் வைத்து வழிபடுவதில் எவ்விதத் தவறும் கிடையாது. ஆனால் கட்டைவிரல் உயரத்திற்கு மேலாக விக்ரக வடிவு அமையுமேயானால் அதனை மூன்று வேளையும் முறைப்படி பூஜை செய்து நைவேத்யம் படைக்கின்ற வழிபாடுகள் இருந்தால்தான் எந்த தெய்வ விக்ரகத்தையும் இல்லத்தில் வைத்துக் கொள்ளலாம். எந்தவித பூஜையும் செய்யாமல் இல்லத்தில் விக்ரகத்தை வைத்துக் கொள்தலால் எவ்விதப் பயனும் கிடையாது. எனவே கட்டைவிரல் உயரத்திற்குக் குறைவான ஸ்ரீஐயப்ப விக்ரகத்தை நியம நிஷ்டைகளுடன் இல்ல(ற)த்தில் வைத்து வழிபடுதலால் எவ்விதத் தவறும் இல்லை. ஆனால் தீட்டு சம்பந்தமான எவ்வித விவகாரங்களும், ஸ்ரீஐயப்பனிடம் அணுகுதல் கூடாது என்பது முக்கியமானதாகும் ஆறு அங்குலம் முதல் ஒரு அடி விக்ரகம் இருந்தால் தனிபூஜை அறையில் வைத்துப் பூஜித்திடல் வேண்டும் ஓர் அடிக்கு மேல் மூன்று அடி உயரம் வரை இருந்தால் தக்க முறையில் பிரதிஷ்டை செய்து வணங்குதல் வேண்டும். இதற்காக தக்க சற்குருவை நாடி பூஜை முறை விளக்கங்களை அறிதல் நலம்.

தமிழ் வருட முறையின் சிறப்பு

அறுபது வருடங்களை நிறைவு செய்வது என்பது ஒரு மனிதனுடைய ஜீவ வாழ்க்கையிலே ஒரு முக்கியமான மைல் கல்லாகச் சிறப்பிக்கப்படுகின்றது. அதன் பிறகு ஒவ்வொரு பத்து வருட தெய்வீகா மைல் கல்லும் 70, 80, 90, 100, 110, 120 என சஷ்டிஅப்த பூர்த்தி, சதாபிஷேகம் என்று பலவிதங்களில் சிறப்பிக்கப்படுகின்றது. 120 வருடங்கள் நிறைந்த ஒரு பரிபூரண முழுமையான ஜீவ வாழ்க்கைதான் ஜோதிட ரீதியாகவும் மிகவும் பரிபூரணமான ஜீவிதகளையுடன் உள்ளதாக விளக்குகின்றார்கள். இந்தப் பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாட்டிலும் எத்தனையோ விதமான வருடப் பிறப்பு வகைகளைக் கையாண்ட போதிலும், ஆதி, அனாதித் தொட்டு விளங்குகின்ற தமிழ் வருட முறைதான் மிகவும் சிறப்பானது.

ஏனென்றால் ஒவ்வொரு வருடத்திற்கும் உரித்தான ஆட்சி தேவதாமூர்த்திகளை ஜோதிட விஞ்ஞான ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் சிறப்பான விளக்கங்களுடன் எடுத்துத் தருவது தமிழ் வருட முறை ஒன்றேதான். ஒவ்வொரு நாளுக்கும் உரித்தான திதி, கிழமை, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்க பகுதிகளையும் விளக்குவதால்தான் அதற்கு பஞ்சஅங்கக் காலக் கையேடு, அதாவது பஞ்சாங்கக் காலக் கையேடு என்று பெயர் வந்தது. தினந்தோறும் ஒவ்வொருவரும் பஞ்சாங்கத்தின் இந்த ஐந்து அங்கங்களையேனும் நிச்சயமாகப் படித்தாக வேண்டும். இதற்காகத்தான் பூஜையின் போது சங்கல்பம் என்று ஒன்றைச் சொல்லி அதிலே அந்த நாளுக்கு உரித்தான இந்த ஐந்துவிதமான காலப்பகுதிகளின் பெயர்களையும் விளித்து வழிபடுகின்ற உத்தமமான முறை ஒன்று உண்டு. ஆனால் தற்காலத்தில் இதைக் கடைபிடிப்பவர்கள் ஒரு சிலரே. திதி வழிபாட்டால் ஐஸ்வர்யமும், வார வழிபாட்டால் ஆயுள் விருத்தியும், நட்சத்திர வழிபாட்டால் பாபங்கள் நீங்குதலும் யோகம் வழிபாட்டால் வியாதி நிவாரணமும், கரண வழிபாட்டால்  காரிய சித்தியும் கிட்டுவதால் தான் நம் பெரியோர்கள் இந்தப் பஞ்சாங்க வழிபாட்டினைத் தினந்தோறும் செய்து வந்தனர்.. குறைந்த வருமானமோ, மிகுந்த செல்வமோ எதுவாயினும் சரி, சாந்தமுடனும், பேரமைதியுடனும் சிறப்பான ஒழுக்க நெறியுடன் தம் வாழ்க்கையை நடத்தி வந்தார்கள் நம் மூதாதையர்கள். எத்தகைய பெருந் துன்பங்கள் வந்தாலும் இறை நம்பிக்கையுடன் அவற்றைத் தாங்கி நின்று சமாளிக்கின்ற மனோதைரியத்தையும் பெற்று இருந்தார்கள். இவற்றையெல்லாம் தரவல்லதே புத்தாண்டு தின பூஜை பலன்களாகும்.

மக்களால் மறக்கப்பட்டு வருகின்ற இந்தப் புத்தாண்டு தின பூஜையை மீண்டும் நடைமுறைக்குக் கொணர நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் சித்தர்களுடைய பாரம்பரிய முறைப்படி புத்தாண்டு தின பூஜையை, ஜாதி, மத, இன, குல பேதமின்றி யாவரும் எளிமையான முறையில் கடைபிடித்துக் காலதேவதா மூர்த்திகளின் அருட்கடாட்சத்தைப் பெறுவதற்காக வருடந்தோறும் ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் விளக்கி வருகின்றார்கள். இவ்வகையில் வருகின்ற விக்கிரம வருடப் புத்தாண்டுத் தினத்தன்று யாவரும் கைக்கொள்ள வேண்டிய எளிய புத்தாண்டு தினவழிபாட்டினை இங்கு நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் அருளியபடி இவ்விதழில் அளித்துள்ளோம்.

திருஷ்டி விளக்கு

சகல திருஷ்டிகளையும் நீக்குகின்ற அட்சர திருஷ்டி தோஷ நிவாரண தூபதீபகண்டி

பலவிதமான தோஷ நிவர்த்திகள் இருந்தாலும் பெரும்பாலானவை தோஷங்களை நிவர்த்தி செய்வதோடு நின்று விடுகின்றன. தோஷம் வராமல் காக்க என் செய்வது? இதற்கான சக்கர பூஜை முறைகளையும் மந்திரப் பாடங்களையும் முறையாகச் சொல்லித் தருவோர் அருகிவிட்டனர். நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் கலியுக மக்களுடைய தோஷத் துன்பங்களுக்கானத் தீர்வுகளோடு காப்பு பூஜை முறைகளையும் சித்புருஷர்கள் அருளியுள்ளபடி ஜாதி, மத, குல இன பேதமின்றி பலருக்கும் பயன்படும்படியான எளிய முறையில் அளித்து வருகின்றார்கள். இவ்வகையில் திருஷ்டி தோஷ நிவாரண கண்டி என்பது நம் தினசரி வாழ்க்கையில் பலமுறையில் வந்து சேருகின்ற தீய தோஷங்களை நீக்குகின்ற தீபவழிபாடாகும்.
தீப கண்டியில் பொலியும் அக்னி சக்தி :- இந்த மண்விளக்கில் எழுகின்ற ஜோதியானது தோஷங்களான தீவினைச் சக்திகளை மாய்ப்பதோடு மட்டுமின்றி அவை நம் இல்லத்திலும், தொழிற்சாலைகளிலும், அலுவலகத்திலும் புகாவண்ணம் ஆங்காங்கே புண்யக் கதிர்களை நிரவச் செய்து நமக்கு இரட்சையாகக் காப்பளிக்கின்றது. ஆமாம், எப்படி இதற்கு இப்படி அபூர்வ சக்தி ஏற்பட்டது? திருஅண்ணாமலையில் ஒரு மண்டலத்திற்கு மேலாக வைத்துப் பூஜிக்கப்பட்டு பிரபஞ்சத்தின் அக்னித் தலைமைத் திருத்தலமாக விளங்குகின்ற அருணாசலமலைக் கிரணங்களின் தீர்க்கமான நோக்கில் வைக்கப்பட்டு ஸ்ரீஅக்னி பகவானுக்கு உரித்தான வேள்வி முறைகளுடன் வழிபடப்பட்ட திருஷ்டி, தோஷ நிவாரண தூப தீப கண்டியானதினால் இதற்குத் தீவினைகளை பஸ்பம் செய்கின்ற சக்தி நிறைய உண்டு.

பலகணியிற் பரவும் அக்னி பரஞ்சோதி :- சாளர நேத்ர பூஜை என்ற முக்கியமான விசேஷமான வழிபாடு ஒன்று உண்டு. அபூர்வமாக சில கோவில்களில் சாளரம் மற்றும் பல கணிகள் மூலமாக மூலவரைத் தரிசிக்கின்ற அமைப்பைப் பார்த்திருப்பீர்கள். இங்கு அருளாட்சி புரிகின்ற இறைமூர்த்திகள் அதிக அக்னி சக்தி நிறைந்த சுயம்புத் திருமேனியைப் பூண்டிருப்பதால் நேரடி தரிசனமின்றி சாளரங்கள் மூலமாக பாஸ்கர சந்த்ர கோணங்களின் சக்தியால் இந்த அக்னி சக்திகள் முறைப்படுத்தப்பட்டு ஜீவனுக்குப் பயன்படும் வகையில் மாற்றித் தருகின்ற தெய்வ யந்திரங்களைப் படைத்து அரிய பூஜை முறைகளை சித்புருஷர்களும், மஹரிஷிகளும், யோகியர்களும் இவ்வாலயங்களில் மகத்தான இறைச்சேவையாகச் செய்து வருகின்றார்கள். இவ்வாறு நிகழ்கின்ற சாளரப் பலகணிகள் மூலஸ்தானங்கள் நிறைந்த ஆலயங்களில் ஒரு சில திருவலஞ்சுழி (சுவேத விநாயகர் சந்நதி), சென்னையில் வியாசர்பாடி ஸ்ரீரவீஸ்வரர் ஆலயம், திருவேற்காடு சிவாலயம், காஞ்சிபுரம் அருகே பெருநகர் சிவஆலயம், திருஆனைக்காவல் ஸ்ரீஜம்புகேஸ்வரர் ஆலயம் போன்றவையாம். மூலவருக்கு முன் உள்ள இந்தச் சாளர பலகணி வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததே இந்த திருஷ்டி தோஷ நிவாரண தீப கண்டி வழிபாடாகும். சாதாரண பூஜை விளக்கில் எழுகின்ற ஜோதியைப் போல நேரடிச் சுடராழியைப் பகுத்து இந்த திருஷ்டி, தோஷ, தூப நிவாரணக் கண்டியில் எழுகின்ற ஜோதியை நாம் ஒன்பது சாளரத் துவாரங்கள் வழியாகத் தரிசிக்கின்றோம் அல்லவா! இதன் மூலம் பிருதிவி சக்தியினுடைய சுயம்பாக்னி அக்னி சக்திகள் பெருகித் தீவினைகளையும், தோஷங்களையும் பஸ்பம் செய்கின்றன. இந்த திருஷ்டி, தோஷ நிவாரண தூப தீப கண்டி வழிபாட்டினை தினந்தோறும் குறிப்பாக செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் காலையிலும், மாலையிலும் கடைபிடித்து வருவோமேயானால் சகலவிதமான தோஷங்களுக்கும் நிவர்த்தி கிட்டும். சித்தருடைய அரிய அக்னி வழிபாட்டு முறைகளில் இதுவும் ஒன்றாகும்.

சித்திரை சதயம்

சித்திரை சதயம் தரும் சத்திய லிங்க தரிசனம்

எப்போதும் சந்தனக் காப்பில் திளைக்கும் எழிலார்ந்த ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் தாம் சென்னை அம்பத்தூர் திருமுல்லைவாயில் சிவத்தலத்தில் அருள்பாலிக்கின்ற ஸ்ரீபரம்பொருட்சிவமூர்த்தி ஆவார். எப்போதும் சந்தனக் காப்பில் திளைக்கும் எம்பெருமான். ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் ஒளிர்கின்ற அற்புதமான சுயம்பு லிங்க்ச் சிவபெருமான்! சித்திரை மாத சதய நட்சத்திர தினத்தன்று (29.4.2000) மட்டும் சந்தனக் காப்பு களையப் பெற்று சத்திய ஒளிதரிசனம் தந்து யுக யுகமாய்ச் சந்தனக் காப்பில் திளைக்கின்ற உத்தம சிவலிங்க மூர்த்தி! ஆண்டு முழுவதும் சுயம்பு லிங்கத் திருமேனியில் உறைகின்ற சந்தனத்தைப் பிரசாதமாகப் பெற்று நோய் நொடிகளுக்கும், துன்பங்களுக்கும், தீவினைக் கர்மங்களுக்கும் தக்கத் தீர்வைப் பெற்றிடுங்களேன்!  நல்ல கம்பீரமான லிங்கம்! கலியுகத்தின் துன்பங்களுக்கெல்லாம் பிரத்யட்சமான மூர்த்தியாக நின்று நல்ல தீர்வை அளிக்கின்ற பிரசித்தி பெற்ற லிங்கம்!
சித்திரை மாதம் சதய நட்சத்திர நாளன்று மட்டும்தான் இந்தச் சிவலிங்க மூர்த்திக்கான பழைய சந்தனக் காப்புக் களையப் பெற்று சத்திய ஒளி தரிசனத்தைப் பெற்றுத் தந்தவுடன் அதே நாளில் மீண்டும் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் சுயம்பு லிங்க மூர்த்திக்குச் சந்தன காப்பைச் சார்த்துகின்றார்கள். சித்திரை மாதச் சதயத் திருநாளன்று காப்பின்றி அக்னிப் பொலிவுடன் அருள்புரியும் இந்த சுயம்புலிங்கத் திருமேனியைக் காண்பதற்குக் கோடானு கோடி கண்கள் வேண்டும். ஏனென்றால் முப்பத்து முக்கோடி தேவர்களோடு தேவாதி தேவ மூர்த்திகளும் அண்ட சராசரத்தில் உள்ள அனைத்து மஹரிஷிகளும், சித்புருஷர்களும், யோகியரும் ஓடோடி வந்து ஸ்ரீமாசிலாமணீஸ்வரருடைய புனிதமான சத்திய ஒளி தரிசனத்தைப் பெறுகின்ற தினமென்றால் நம் வாழ்வில் பெறுதற்கரிய சிவலிங்க தரிசனத் திருநாள் தானே! சித்திரைச் சதயச் சிவலிங்க நாள்! வருகின்ற 29.4.2000 (சித்திரை – தமிழ் மாதம் 17ஆம் நாள்) சனிக்கிழமை சித்திரை சதய நட்சத்திர நன்னாளாக விளங்குவதால், இத்திருநாளில்தான் சென்னை அருகில் உள்ள திருமுல்லைவாயில் திருத்தலத்தில் உள்ள ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் சுயம்பு லிங்க மூர்த்திக்குத் தேவ சந்தனக் காப்புக் களையப் பெற்று, அபிஷேகம் செய்விக்கப்பட்டு புதிய தேவ சுந்தர சந்தனக் காப்பு சார்த்தப்படுகிறது. இதனைக் கண்டு களித்து, ஆனந்தித்து வணங்கி, சிவப் பேரானந்தம் பெற்றிட ஓடோடி வந்திடுங்களேன். ஏனென்றால் வேறு எந்நாளிலும் சந்தனக் காப்பின்றி இந்த சுயம்புலிங்கத் திருமேனியை தரிசிக்க இயலாது. மேலும் எப்போதும் இறைவனுடைய திருமேனியில் உறைந்துள்ள சந்தனத்தையே பிரசாதமாகப் பெறுதல் என்றால் என்னே பெரும்பாக்கியம்! இறைத் திருமேனியில் திளைக்கின்ற இந்தச் சந்தனப் பிரசாதத்தைத் தினந்தோறும் நெற்றியிலும் உடலெங்கும் சிவச்சின்னமாய் அணிந்து வந்தால் எத்தகைய கொடிய நோய்களுக்கும் கடுமையான துன்பங்களுக்கும் தீர்க்க முடியாதத் தீவினைகளுக்கும், பெரும்பாவங்களுக்கும், தக்கதொரு பிராயச்சித்தத்தைப் பெற்றிடலாம் அல்லவா!

சந்தன இறைப்பணி ஆற்றுங்கள்!

இந்தச் சித்திரை சதயத் திருநாளில் நீங்கள் ஆற்ற வேண்டிய இறைப்பணிதான் என்னே! இங்கு இன்று ஆலயத்திற்கு வரும் போது சந்தனக் கட்டையையும், சந்தனக் கல்லையும் எடுத்து வாருங்கள்! இங்கு ஆலயத்திலேயே அமர்ந்து உங்கள் கரங்களாலேயே புனிதான சந்தனத்தை அரைத்திடுங்கள்! கங்கை, காவிரி போன்ற புனித தீர்த்தங்கள், இராமேஸ்வர அக்னி தீர்த்தம், போன்ற பல முக்கியமானத் திருத்தலத் தீர்த்தத்தை வைத்தும், தக்க அனுமதியுடன் இத்திருக்கோயிலின் கிணற்று நீரைக் கொண்டும் சந்தனம் அரைத்து நல்ல பெரிய உருண்டையாக 1/2 கிலோ, 1கிலோ என்று வரும்படியாக சுவாமிக்குச் சார்த்தி வாழ்நாளில் கிடைத்தற்கரிய சந்தன இறைப் பணியைச் செய்திடலாமே! நீங்களும் உங்கள் குடும்பத்தினர், உறவினர், நண்பர் மட்டுமல்லாது, இதைய அறியா மக்கள் அனைவருக்கும் ஸ்ரீமாசிலாமணீஸ்வரருடைய அருட்பிரவாகத்தை எடுத்துரைத்து அவர்களும் இத்திருப்பணியில் பங்குபெற நல்லதோர் இறைவாய்ப்பைப் பெற்றுத் தாருங்களேன்! மேலும் நீங்கள் ஆலயத்திற்குச் சந்தனக் கல்லையும், சந்தனக் கட்டையையும் கொண்டு வந்தால் எத்தனையோ ஆயிரம் பக்த கோடிகளுக்கு ஆலயத்திலேயே சந்தனத்தை அரைக்கின்ற நல்ல இறைத் திருவாய்ப்பையும் அளித்திடலாம் அல்லவா! ஏதோ வந்தோம், தரிசித்தோம் என்று மட்டுமல்லாது நம்மால் இயன்ற அளவு உடல் திருப்பணியாக, ஸ்ரீமாசிலாமணீஸ்வரருக்கும் சந்தனத்தை அரைத்துத் தந்தோம் என்ற மனத்திருப்தியையும் பலருக்கும் நல்லதோர் ஆனந்தப் பிரவாகமாகப் பெற்றுத் தரலாம் அல்லவா! இதுதானே இன்று நீங்கள் ஆற்ற வேண்டிய எளிய மாபெரும் இறைத் திருப்பணி!

கடந்த பல ஆண்டுகளாக ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் சித்திரை சதயம் திருநாளன்று சென்னை திருமுல்லைவாயில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரருடைய சந்தனக் காப்புத் திருப்பணி விளக்கங்களை எடுத்துரைத்து வருவதுடன் தமிழகத்தின் பல இடங்களிலிருந்து சந்தனத்தைச் சேகரித்து ஆலயத்திலும் அளித்து வருகின்றோம். கடந்த ஆண்டில் பலரும் அரைத்த சந்தனத்தைத் தபாலில் அனுப்பியிருந்தார்கள். கோடானு கோடி, யுகங்களைங் கடந்து காலங் கடந்த சுயம்பு மூர்த்தியாக ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் விளங்குகின்றார்! கிருத யுகம், திரேதாயுகம், துவாபார யுகம் முதலாக எத்தனையோ கோடி சதுர் யுகங்களிலும் தேவ மூர்த்திகளாலும், தேவாதி தெய்வ மூர்த்திகளாலும் வழிபடப்பட்டு வரும் சிவமூர்த்தி என்றால் இதன் மகிமையைச் சொல்லவும் கூடுமோ! மேலும் இங்கு கர்ப்ப கிரகத்தின் அடுத்த அர்த்தமண்டபத்தில் உள்ள திருவருள் நிறைந்த இருபெரிய எருக்குத் தூண்கள் உலகத்தில் வேறு எங்கும் காணுதற்கரியதாக விளங்குகின்றது. நல்ல மருத்துவ சக்திகளைக் கொண்ட இந்த எருக்குத் தூண்களில் அர்க்க மருத்துவ தேவாதி மூர்த்திகள் எப்போதும் உறைந்திருப்பதால் இதனைச் சுற்றி வலம் வருபவர்களுக்குத் தீராத உடல் பிணிகள் எல்லாம் தீருகின்றன. குறிப்பாக கர்ப்பப் பை நோய்கள், அடிவயிற்று நோய்கள், தோல் வியாதிகளுடன் பல வருடங்களாக வாடுவோர் இத்திருத்தலத்திற்கு வந்து வெள்ளெருக்குத் தூண்கள் வலம் வந்து ஏழைகளுக்குத் தானமாக நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், சீயக்காய் போன்றவற்றை தானமாக அளிப்பதுடன் வெண்பொங்கலையும் படைத்துத் தானமாக அளித்து வந்தால், நரம்பு நோய்கள், தோல் நோய்கள், மற்றும் வயிற்று நோய்களுக்கு நல்ல நிவாரணம் கிட்டும். ஸ்ரீஇந்திர மூர்த்தியே தன்னுடைய அகந்தையால் தேவ நடனத்தை அலட்சியமாக ஒதுக்கிய போது ஏற்பட்ட கழுத்து நரம்பு வியாதிகளுக்கு தீர்வைப் பெற்றுத் தந்த திருத்தலமாக இத்தலம் விளங்குகின்றது. ஸ்ரீஅகஸ்தியப் பெருமான் தன்னுடைய நித்ய வழிபாட்டுத் திருத்தலமாக இதனைக் கொண்டிருக்கிறார் என்பது விமானத்தில் அவருடைய தரிசனத் திருக்காட்சியைக் காண்பதிலிருந்து நன்கு புலனாகும்.

திருச்சி, தஞ்சாவூர், திருஅண்ணாமலை, சென்னை போன்ற இடங்களில் பக்தர்களிடமிருந்து சந்தனத்தைப் பெற்றுச் சித்திரை சதயத் திருநாளன்று இவ்வாலயத்தில் சந்தனத்தை அளிக்கின்ற கைங்கர்யத்தை நாம் கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீஅகஸ்திய விஜயம் வாயிலாக மேற்கொண்டு வருகின்றோம். இவ்வாண்டும் இறையருளால் இது தொடர்கின்றது. சந்தனத்தை அரைக்கும் போது கடைபிடிக்க வேண்டிய முக்கியமான நியதிகளாவன

சப்தரிஷிகள்தாம், பூலோகத்திற்குச் சந்தனக் காப்பு முறையை அளித்தவர்களாதலின் –

ஓம் அத்ரி மஹரிஷியே போற்றி
ஓம் பிருகு மஹரிஷியே போற்றி
ஓம் குத்ஸ மஹரிஷியே போற்றி
ஓம் வஸிஷ்ட மஹரிஷியே போற்றி
ஓம் காஸ்யபர் மஹரிஷியே போற்றி
ஓம் ஆங்கீரஸ மஹரிஷியே போற்றி
ஓம் கௌதம மஹரிஷியே போற்றி

என்ற சப்தரிஷிகளின் தியானத்தோடு சந்தனத்தை அரைத்திடுக!

“ஏழு முனி ஏற்றருள வேண்டும் எம் சற்குரு தேவா” – என்ற தமிழ் மந்திரத்தை ஓதியும் அரைத்திடலாம். இயன்றவரை அதிகமாக நீர் விட்டு அரைக்காமல் சற்றுக் கெட்டியாக அரைத்திடுதலே சிறப்புடையதாகும்.

ஸ்ரீஅசாத்ய சாதக சரபேஸ்வரர்

மதுரை ஸ்ரீஅசாத்ய சாதக சரபேஸ்வரர்

கடந்த பல இதழ்களாக சரபேஸ்வரர் வழிபாட்டின் மகத்துவத்தையும், அதன் பலாபலன்களையும் பற்றி சித்புருஷர்கள் அருள்கின்ற வழிவகைகளில் நாம் அளித்து வருகின்றோமல்லவா., இவ்வரிசையில் மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தெப்பக் குளம் அருகே தூணில் அருள்பாலிக்கின்ற ஸ்ரீஅசாத்ய சாதக சரபேஸ்வர மூர்த்தியின் மகத்துவத்தைப் பற்றிப் பல அரிய விளக்கங்களைச் சித்தர்களுடைய ஞானபத்ர கிரந்தங்களிலிருந்து தொகுத்து இங்கு தொடர்கின்றோம்!

சரபர் இருக்க ஏன் முடியாது?

ஸ்ரீஅசாத்ய சாதகர் என்று சொல்கின்ற போது வாழ்க்கையில் நாம் சாதிக்க முடியாது என்று நினைக்கின்ற நற்காரியங்களை எல்லாம் இறையருளால் மகத்தான பக்தியுடன், உள்ள திடத்துடன், உடல் ஊக்கத்துடன் சாதிக்க வைத்திடுபவர் என்பது தானே மறைபொருள்! ஏதோ நமக்காகக் கோயிலுக்குப் போனோம், தரிசனம் செய்தோம் என்று மட்டுமா இருப்பது? இதைத் தவிர உங்கள் உடலால் பிறருக்குப் பயன்படுகின்ற வகையிலே எத்தனை நற்காரியங்களை, இறைப் பணிகளைச் சாதித்துள்ளீர்கள் என்று உங்களையே கேட்டுப் பாருங்கள்! உதாரணமாக உங்களால் ஒவ்வொரு மாதப் பிறப்பு, அமாவாசை தினங்களில் தர்ப்பணம் செய்வதற்காக ஆயிரம் ஏழை எளியோர்க்கேனும் உதவி செய்ய முடியுமோ என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள். முதலில் உங்களுக்கு இதைக் கேட்பதற்கு மலைப்பாக இருக்கும். ஆனால் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மாதாந்திர அமாவாசை திதிகள் மற்றும் வருடப் பிறப்பு நாட்களில், இராமேஸ்வரம், சென்னை திருவள்ளூர், திருவிடைமருதூர், கோடிக்கரை போன்ற இடங்களில் தர்ப்பணத்தைப் பற்றி அறியாத எத்தனையோ சில ஏழைக் குடும்பங்களுக்கும், நடுத்தரக் குடும்பங்களுக்கும் ஜாதி, மதபேதமின்றி அவர்களுக்குத் தேவையான தர்ப்பை, எள், புனித தீர்த்தம் போன்றவற்றை அளித்து அமாவாசைத் தர்ப்பணத்திற்கான மந்திரங்களையும் எடுத்துரைத்து பலரையும் தர்ப்பண பூஜைகளைச் செய்ய வைத்து அவர்களுக்குப் பிதுர் தேவர்களின் ஆசியைப் பெற்று தரலாமல்லவா!

ஸ்ரீஅசாத்யசாதக சரபேஸ்வரர்
மதுரை

இந்த அற்புதமான இறைப்பணி முதலில் உங்களுக்கு சாத்யம் இல்லாதது போல்தான் தோன்றும். ஆனால் மதுரை ஸ்ரீஅசாத்ய சாதக சரபேஸ்வரரை வலம் வந்து அடிப்பிரதட்சிணம் செய்து, “என்னால் இந்த நற்காரியத்தைச் சாதிக்க முடியாதது போல் தோன்றுகிறது சர்வேஸ்வரா! சரபேஸ்வரா! மகத்தான சமுதாயப் பணியாக விளங்குகின்ற இவ்விறைப் பணியைச் சாதித்துத் தந்து இறைவன் அளித்த இந்த உடலால் ஏதோ ஒரு துளியேனும் சமுதாயத்திற்குப் பயன்படும் வகையில் இறைப்பணி ஆற்ற விரும்புகின்றேன்”, என மனதார வேண்டி பிறகு காரியத்தில் ஈடுபட்டுப் பாருங்கள் அப்போதுதான் தெரியும் மதுரை ஸ்ரீஅசாத்ய சாதக சரபேஸ்வரரின் மகத்துவம்! இவ்வாறு வேண்டிப் பல அற்புதச் செயல்களை ஆற்றுவோர் பலருண்டு.! வர்த்தகர்களும் தங்களுடைய தொழில்களில் தினந்தோறும் பலவிதமான சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக, பகைமை என்ற ஒன்று வியாபாரத்தில் ஏற்பட்டு விட்டால் உற்றம், சுற்றம் என எதையும் பாராது அண்ணன், தம்பிகளுக்குள் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு, சண்டைச் சச்சரவுகளுடன் தான் வாழ்க்கை நடத்த வேண்டியுள்ளது. மேலும் அடுத்தடுத்த கடைகளில் உள்ளோர் பகைமையைக் கொண்டால் தினசரி வாழ்வே பெரும் பிரச்னையாகின்றது. இத்தகையோர்க்குப் பகைமைத் தீரவேண்டுமென்றால் என்ன செய்வது? அவர்கள் ஸ்ரீஅசாத்ய சாதக சரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமை தோறும் இராகு கால நேரத்தில் பூஜித்து சந்தனக் காப்பிட்டு அதில் பன்னீர் திராட்சைகளைப் பதித்து பன்னீர் திராட்சைகளை நைவேத்யமாகப் படைத்து ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால் எத்தகைய பகைமையும் நீங்கி வியாபாரம் அபிவிருத்தி ஆவதோடு பகைமையால் ஏற்பட்ட பிணக்குகளும், துன்பங்களும் விரைவில் நீங்கும். இவ்வாறு தீர்க்க முடியாத பகைமையை அசாத்யமான செயலாக நன்முறையில் நிறைவேற்றித் தருபவரே ஸ்ரீஅசாத்ய சாதகர்! ஞாயிற்றுக்கிழமை என்பது சூரியபகவானுக்குரிய நாளாகும். ராகுகாலம் என்பது துர்வினைச் சக்திகள் தங்கள் தீவினைகளைப் பெருக்குகின்ற நேரமாக அமைவதால்தான் நாம் ராகுகாலம் முழுவதும் மிகவும் முக்கியமான தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு அத்தீவினைச் சக்திகளின் ஆக்கத்தைக் கட்டுபடுத்துகின்றோம். பகைமையான தீவினைச் சக்திகள் ராகுகாலத்தில் தான் பெருகும். நீங்கள் சற்று சிந்தித்துப் பார்த்தீர்களேயானால் அந்தந்த நாளுக்குரித்தான ராகுகால நேரங்களில் தான் உங்களுடைய பகைவர்கள் பலவிதமான தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள், கலகமும் விளையும். எனவே இராகு கால தேவதா மூர்த்திகளை வேண்டி இராகு கால நேரத்தில் தனக்கு தீவினைச் சக்திகளால் எந்தவிதத் துன்பமும் நிகழக்கூடாது என்பதற்காகவே ஸ்ரீசரப வழிபாடு ஞாயிறு இராகு காலத்தில் சிறப்புடையதாகிறது. இராகு கால தேவதா மூர்த்திகளே வழிபடுகின்ற ஸ்ரீஅசாத்ய சாதக சரபேச மூர்த்தியை நாமும் இந்நேரங்களில் பூஜித்துச் சந்தனக் காப்பிட்டு வழிபடுகின்றோம். எதற்காகப் பன்னீர் திராட்சைகளை சந்தனக் காப்பில் பதிக்கின்றோம்? உள்ளத்தில் பகைமை உணர்ச்சி படிந்துவிட்டால், அதனைக் களைதல் மிகவும் கடினம், அதுவும் நெஞ்சத்தில் பகையுணர்ச்சி ஆழமாகப் படிந்து விட்டால் அந்தப் பகைமையானது எத்தனையோ கலவரங்களுக்குக் காரணமாக அமைந்து விடுகிறது. இதனால் தான் இன்றைக்கும் பல உறவு முறைகளில் சந்ததி சந்ததியாகப் பகைமை வளர்ந்து வருகிறது. இவ்வாறாக எத்தனையோ தலைமுறைகள் தொடர்ந்து வருகின்ற பகைமை தீர்ந்து, உறவுமுறை சுமூகமாக ஆவதற்கு என்ன வழியோ? இத்தகைய பகைமைத் துன்பங்களால் வாடுவோர், குறிப்பாக பிரிந்த தம்பதியினர், சகோதரர்கள், தந்தை பிள்ளைகள், வியாபாரக் கூட்டாளிகள் ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கண்டவாறு மதுரை ஸ்ரீஅசாத்ய சாதக சரபேச மூர்த்தியை வழிபட்டு வருவார்களேயானால் நிச்சயமாகப் பகைமை உணர்வுகள் நீங்கி அமைதி நிலவத் தொடங்கும். சாந்தமான உறவு தொடரும்.
பன்னீர் திராட்சை என்பது எவ்வாறு உருவெடுத்தது தெரியுமா? சிருஷ்டியின் போது தாவரங்களைப் படைப்பதற்காக ஸ்ரீகிராத மூர்த்தி, ஸ்ரீசாகம்பரி தேவியை உத்பவிக்கச் செய்த போது, ஸ்ரீசாகம்பரி தேவி எத்தனையோ கோடிக்கணக்கான தாவரங்களையும், கனி வகைகளையும், கொடி வகைகளையும் படைத்தனள். பிரபஞ்சமெங்கும் ஆங்காங்கே அந்தந்த நிலத் தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப ஜீவசக்தியை அளிப்பதற்காக அவை பரிமளிக்கத் தொடங்கின.. காலப்போக்கில் பலகோடி யுகங்கள் கடந்து பல அசுர சக்திகள் தோன்றிய போது, அரக்கர்கள் ஏனைய உயிரினங்களுக்கான கனி, கிழங்கு, தாவர வகைகளை கபளீகரம் செய்யத் தொடங்கினார்கள். ஓராயிரம் பேருக்கான ஒரு வருட உணவை ஓர் அரக்கன் ஒரு வேளையில் உண்டால் பூலோகம் என்ன ஆகும்? இதனால்தாம் பல லோகங்களில் உயிரினங்கள் தக்க உணவின்றி வாடின.
தாம் படைத்த தாவரங்கள் உயிரினங்களுக்கு இல்லாமல் போவதைக் கண்டு கண்ணீர் சிந்திய ஸ்ரீசாகம்பரி தேவி சிருஷ்டி கர்த்தவ்வான பசுபதி மூர்த்தியைத் தஞ்சமடைந்து கதறி அழுது வணங்கி உயிரினங்களுக்கு நல்வழி காட்டுமாறு வேண்டினாள். “சாகம்பரி தேவி, உன் படைப்புதானே தாவர ஜங்கமங்கள்! அவைதானே பிரபஞ்சத்தின் அனைத்து உயிரினங்களும் உரிய ஜீவசக்தியைத் தந்து கொண்டிருக்கிறது. நீயே மனம் கலங்கிடலாமா?” என்று ஆறுதல் அளித்து, ஸ்ரீசாகம்பரி தேவியின் கண்களில் திரண்ட கண்ணீர்த் துளிகளைச் சற்றேத் துடைத்திட இறைவன், இறைவியின் ஸ்பரிச ஒளிச் சங்கமத்தில் உருவானத் தீர்த்தத் துளிகள் தாம் பலகோடி கனிகளாகப் பெருகிட அவற்றுள் ஒன்றுதான் பன்னீர் திராட்சைக் கனி. ஆமாம். பஞ்சந் துடைக்கும் பன்னீர் திராட்சை! இவற்றுக்குப் பகைமையை தீர்க்கின்ற மகத்தான தெய்வ்வீக சக்தி உண்டு. இறைவியின் கண்களில் திரண்டமையால்தான் இறைத் திருவிழிகள் போல் ஒளித் திரட்சியுடன் இவை இன்றும் விளங்குகின்றன. இதனால்தான் இன்றைக்கும் பல இடங்களில் புதுக்கடையைத் திறக்கும் போது கடைமுழுவதும் திராட்சைக் கொத்துகளைத் தொங்க விடுவார்கள். ஏனென்றால் பகைமை உணர்ச்சிகளை முற்றிலும் போக்குகின்ற கனிகளாக திராட்சைப் பழம் விளங்குவதால் இவை திருஷ்டி, தோஷ நிவாரண சக்தி கொண்டவையாகவும் விளங்குகின்றன..
சந்தனக் காப்பு என்பது இறைவனுக்குக் குளுமை தருவதாகும். அதுவும் இறைவனுடைய திருமேனியில் தோன்றியதாகும். இறைவியின் திருமேனியில் தோன்றியதால் தான் சந்தனக் காப்பில் பதிக்கப்பட்ட பன்னீர் திராட்சைகளுக்கு பகைமையைப் போக்குகின்ற மகத்தான சக்திகள் உண்டு. இதனை உலகுக்கு உணர்த்தியவர்தான் ஸ்ரீஅசாத்ய சாதக சரபேஸ்வர மூர்த்தியாவார். பஞ்சத்தால், நீரின்றி வாடும் போது ஸ்ரீஅசாத்ய சாதகருக்குத் தொடர்ந்து சந்தனக் காப்பில் பன்னீர் திராட்சைப் பதித்து ஆராதித்து வந்தால் நன்மழை வர்ஷிக்கும். எத்தனையோ வழிபாடுகள் நிறைந்திருக்கின்ற போது ஸ்ரீசரபேஸ்வரர் வழிபாடு போன்ற விசேஷமான வழிபாடு உருவாவது ஏன்? என்ற கேள்வி பலருக்கும் எழுவதுண்டு. மனிதன் பலவிதமான துன்பங்களில் தன்னைச் சிக்க வைத்துக் கொண்டிருப்பதால்தான் ஏகப்பரப்பிரம்மமாம் இறைவன் தன்னைப் பலவித உருவங்களில் வடிவமைத்துக் கொண்டு ஒவ்வொரு உருவத்திலும் மனிதனுக்கு வேண்டிய நல்வரங்களைத் தந்து அருள்கின்றான்.
பகைமையால் வாடுபவர்கள் பலர் உண்டு. பணக் கஷ்டத்தால் வருந்துவோர் சிலருண்டு. நோய், நொடிகளால் நொடித்திருப்போர் எத்தனையோ பேர்கள் உண்டு. குழந்தையின்றி, குதூகலம் இன்றி வருந்துவோர்களுமுண்டு. வயிற்றுக்கு உணவின்றி வாடுவோரும் உண்டு.. இவ்வாறாக கலியுகத் துன்பங்கள் எவ்வளவோ இருப்பதால் தான் இறைவன் தன்னைப் பலவித ரூபத்தில் வடிவமைத்துக் கொண்டு, “மனிதன் துன்பங்களின் நெருக்கடியினால் ஒரு தெய்வத்தை இகழ்ந்தாலும் இன்னொரு தெய்வமாவது நம்மைக் காப்பாற்றாதா”, என்று ஏங்கி மனந்திருந்தி, அதே தெய்வத்தின் மறு உருவத்தை வணங்கிக் கொண்டு இருக்கின்றான். எனவே வன்முறைகளும், கலகங்களும், தீயசக்திகளும், தீவினைகளும் பெருகிவிடும் இக்கலியுகத்தில் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி வழிபாடு மூலமாகத்தான் மனிதன் தன்னை தாக்குகின்ற தீவினைச் சக்திகளுக்குத் தக்கத் தீர்வைப் பெற்றிட முடியும்.. கட்டிட வேலை செய்வோர், ஆலய கட்டிடங்களுக்குத் திருப்பணி செய்வோர் பொதுவாக  Construction தொழிலில் இருப்பவர்களுக்குத் தற்காலத்தில் எத்தனையோ துன்பங்கள் ஏற்படுகின்றன.
குறிப்பாக ஆலய வடிவமைப்புகளில் ஈடுபட்டு இருப்போர் தங்களையும் அறியாமல் பலவிதமான துன்பங்களுக்கு ஆளாகின்றார்கள். காரணம் எந்த இடத்தில் எவ்வித தோஷங்கள் நிறைந்திருக்கின்றன என்பதை அறியாது குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்பதற்காக அரைகுறையாகப் பணிகளை முடிப்பதும் தரமில்லாப் பொருடளைப் பயன்படுத்தி வாஸ்து நியதிகளை மீறிக் கட்டிடங்களை அமைப்பதும் உண்டு. இவையெல்லாம் ஒன்று திரண்டு நரசூல தோஷமாக மாறி அவர்களைக் கடுமையாக பாதிக்கும். குறிப்பாக Sand Blasting என்ற வகையில் ஆலயத் திருப்பணிகளை மேற்கொண்டு ஆலயத்தின் புனிதத்தை பாதிக்கும் வகையிலான செயல்களுக்குத் தக்க நிவர்த்தியைப் பெறுவதற்குத் தக்க சற்குருவை நாடிடுக! நிலபுல சொத்துகளுக்கு உரித்தானவராக விளங்குகின்ற செவ்வாய் பகவானுக்கு உரித்தான செவ்வாய்க்கிழமை அன்று ராகுகால நேரத்திலும், செவ்வாய் ஹோரை நேரத்திலும் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்திக்கு, ஸ்ரீவாஸ்து தேவ மூர்த்திக்கு ப்ரீதியான கிழங்கு வகைகளால் காப்பிட்டு கிழங்கு வகை உணவுகளை ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால் கட்டிட சம்பந்தமான தோஷங்களுக்கு நிவர்த்தி கிட்டும்.. ஏனென்றால், “ஏதோ கட்டிடத் துறையில் இறங்கி விட்டோம். இதில் எத்தனையோ தவறுகளைச் செய்ய வேண்டியதாகி விட்டது. நமக்கு வேறு தொழில் தெரியாது. இத்துறையில் நாம் எத்தனை நாள்தான் தீவினைகளைச் சேர்த்துக் கொள்வது”, என்று மனமுடைந்து இத்தொழிலில் தொடர்ந்து இருப்பவர்கள் நிறைய உண்டு. இவர்களுக்குத் தக்கப் பிராயச்சித்தம் கிட்ட வேண்டுமல்லவா! ஆனால் இவர்கள் முறையாக ஆழ்ந்த நம்பிக்கையோடு செவ்வாய்க்கிழமைக்கு உரித்தான ஸ்ரீசரபேஸ்வர பூஜைகளைச் செய்து வந்தால் இறையருளால் தக்க பரிகாரங்களுக்கான நல்வழிகள் காட்டப்பெறும் என்பதை உணர்தல் வேண்டும். இவ்வாறாக மதுரை ஸ்ரீஅசாத்ய சாதக சரபேஸ்வர மூர்த்தியின் மகிமை சொல்லவும் பெரிதாக விளங்குகின்றது. ஏனைய விளக்கங்களைத் தக்க சற்குருவை நாடிப் பெற்றிடவும்.

நித்ய கர்ம நிவாரணம்

நித்ய கர்ம நிவாரண சாந்தி

அந்தந்த நாளில் வலுவான ஆட்சியைப் பெற்றிருக்கும் தீர்க்கமான பார்வையை உடைய திதி, நட்சத்திரம், யோகம், கரணம், கிரகங்களின் தன்மைக்கேற்ப அந்நாளுக்குரிய விசேஷ பூஜை / வழிபாடு முறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைபிடித்திடில், குருவருளால் ஒவ்வொரு நாளையும் தீய கர்ம வினைகளின் கழிப்போடு மேலும் எவ்விதமான புதிய தீவினைகளும் சேரா வண்ணந் தடுத்து சாந்தமான நித்ய வாழ்வைப் பெற்றிடலாம்.

1.4.2000 – இன்று அணில்களுக்கு உணவிடுவதால் நின்று போன கட்டிட வேலைகள் நிறைவேறுவதற்கு நல்ல சந்தர்ப்பம் ஏற்படும்.

2.4.2000 – காமதேனுவின் குளம்படி பட்ட சிவலிங்கத்திற்குக் கன்றோடு கூடிய பசுவின் பாலைக் கறந்து அபிஷேகம் செய்து அந்த பாலை தானம் செய்திடில் – உங்களுடன் பகைமை கொண்டுள்ள அல்லது உங்களைப் பிடிக்காத – கால்களை இழந்தவர்களிடமிருந்து – வருகின்ற துன்பங்கள் தீர்வு பெறும்.

3.4.2000 – வாழைப்பூ கலசம் வைத்து சிவ அர்ச்சனை செய்து சிவ சகஸ்ரநாமம்/ சிவன் போற்றித் துதிகளால் அர்ச்சித்து நறுமண மலர்களால் அலங்கரித்து வணங்கி அந்த வாழைப் பூவுடன் தேங்காய், மஞ்சள், குங்குமம், மலர்களை (70/80 வயதுக்கு மேல் உள்ள) பழுத்த சுமங்கலிகளுக்குத் தானமாய் அளித்திடில் – புதிய கடன்கள் ஏற்படாது.

4.4.2000 – விளக்கு இல்லாக் கோயில்களில் ஐந்து பல்புகளுக்குக் குறையாமல் அளித்து கோயிலில் மின் 2000 – ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெண்களாய் இருப்பின் ரெட்டைப் பின்னல் போட்டு மல்லிகை புஷ்பம் சூடி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கும் ரெட்டைப் பின்னல் போட்டு மல்லிகை பூவைச் சூட்டி புது ஆடைகளை அளித்து வயிறார உணவளித்து மகிழ்வித்திடில் – மீன் வளர்ப்புத் துறையில் இருக்கின்றவர்களுக்கு வருகின்ற நட்டுமுள் என்ற் தோஷம் விலகும்.

6.4.2000 – மூன்று முகங்களை உடைய கணபதியை வணங்கி மூன்று புத்திரர்களாய்ப் பிறந்தவர்களுக்கு (Triplet – மூன்று குழந்தைகளாய்) இனிப்பு, காரம், புளிப்பு சுவை கூடிய உணவினை மூவருக்கும் படைத்து மூவருக்கும் வஸ்திர தானம் செய்திடில் – பெற்றோர்களுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு ஓடிப் போனவர்களின் கஷ்டங்கள் குறைந்து நலமுடன் வாழ்வர்.

7.4.2000 – முன்வினைகளின் விளைவால் மது பழக்கத்திற்கு அடிமையாகி தாயையோ, தந்தையையோ காலால் உதைத்தவர்கள் இன்று முழுவதும் விரதம் இருந்து 300 வயதான தம்பதியர்களுக்குப் பாத அபிஷேகம், பாத பூஜை செய்து அன்னதானம், வஸ்திர தானம் செய்திடில் ஓரளவு பிராயசித்தம் கிடைக்கும்.

8.4.2000 – அண்ணன் வயிற்றில் பிறந்த வயது வந்த பெண்கள், தங்கை வயிற்றில் பிறந்த வயது வந்த பெண்கள், அக்கா வயிற்றில் பிறந்த பெண்கள் மூன்று மூன்று பேராய் மொத்தம் ஒன்பது கன்னிப் பெண்கள் ஒன்றாய்க் கூடித் தாங்களே மஞ்சள் அரைத்து வேம்பும், அரச மரமும் ஒன்றாய்ப் பிணைந்து இருக்கும் மரத்தடியில் உள்ள பிள்ளையாருக்கு மண் குட நீரால் மஞ்சள் அபிஷேகம் செய்து ஒன்பது தம்பதியருக்குப் பாதபூஜை செய்து அவர்களுக்கு பூ, மஞ்சள், குங்குமம், தேங்காய், கண்ணாடி, வளையல், மாங்கல்ய சரடு, சீப்பு போன்ற மங்கலப் பொருட்களைத் தானமாய் அளித்து வணங்கினால் – உணவேற்கும் போது பிச்சை எடுக்க வந்த பிச்சைக்காரர்களை அடித்து விரட்டுவதால் ஏற்படும் விலாப்புற மத்து தோஷம் என்ற தோஷத்தால் குடும்பத்தில் தடைப்பட்ட திருமணங்கள் நல்ல முறையில் நிறைவேறும்.

9.4.2000 – வீட்டுக்குக் காவலாக இருந்து எதிரிகள் வந்த போது குரைத்துக் குரல் கொடுத்து எஜமானரைக் காப்பாற்ற முயற்சி செய்த போது எதிரிகளால் அடிபட்டு இறந்த நாயினுடைய நினைவு கூறும் நாள். இன்று குறைந்தது 51 நாய்களுக்கு பிஸ்கட், பொரை, பன் அளித்து அந்தப் புண்ணியத்தை எஜமானர் தான் வைத்திருந்த நாயின் பெயருக்குத் தர்ப்பணம் எல்லாம் அளித்து புண்ணியத்தைத் தாரை வார்த்துத் தரவேண்டிய நாளிது. கேளிக்கைகளில் காலத்தை விரயம் செய்யும் தோஷங்களையும் நீக்கவல்ல நாளிது.!

10.4.2000 – எந்த நேரமும் சென்று பால் கறந்தாலும் பால் தருகின்ற பசுமாட்டை வைத்திருக்கும் இல்லத்தார் மிகவும் அதிருஷ்டசாலிகள். இவ்வாறு எந்த நேரமும் பால் கறக்கும் பசுவை வைத்திருப்பவர்கள் எக்காரணம் முன்னிட்டும் அப்பசுவை விற்கக் கூடாது. இந்த பசுவே வீட்டைக் காக்கும் காமதேனு தெய்வமாகும். ஒரு நாளைக்கு மூன்று, ஐந்து, ஏழு, பத்து முறைக்கு மேல் பால் தரும் பசுவை தினமும், மஞ்சள், குங்குமம், இட்டுப் பசுவை வலம் வந்து வணங்கி வர வேண்டும். இந்த பசு தெய்வம் இறுதியில் இறைவனடி சேரும் போது அதை வெளியே எங்கும் அனுப்பாமல் வீட்டுத் தோட்டத்திலேயே புதைத்து அந்த இடத்தில் துளசி மாடம் வைத்துத் தினமும் விளக்கேற்றி வணங்கி வந்தால் அந்த வீட்டில் கடன் தொல்லை  என்றுமே வராது. சந்ததி சந்ததியாக தனலட்சுமி ஆசியைத் தருமிது.

11.4.2000 – பிரசவ வலியில் ஒருவர் துடிக்கும் போது பணம் கொடுத்தால்தான் வைத்தியம் செய்வேன் என்று அடம்பிடித்த வைத்தியர்களுக்கு / சச்சன சிசு தோஷம் தங்கி வாட்டும் இத் தோஷத்திற்கான பரிகார நாளிது! பெருமாள் எங்கு பால சயனம் கொண்டிருக்கிறாரோ அந்த இடத்தில் குழந்தைகளுக்கு இலவசமாக மருத்துவ உதவியும், அன்னதானமும், ஆடைதானமும், குறைந்தது 21 பேர்களுக்கு குறையாமல் அளித்து அவர்களை மகிழ்ச்சிக் கடலில் வைப்பதே இதற்கான ஓரளவு பரிகாரமாகும்.

12.4.2000 – இன்று தோலால் செய்யப்படாத பாதணிகளைத் தானம் செய்திடில் – கை, கால்களில் வரும் நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.

13.4.2000 – இன்று ஏழை இஸ்திரித் தொழிலாளர்களுக்கு இலவசமாக அயன் பாக்ஸ் (இஸ்திரிப் பெட்டி) வாங்கித் தருதலால் Interior Decorators நலம் பெறுவர்.

14.4.2000 – எலக்ட்ரிகல் தொழில் செய்கின்றவர்கள் இன்று கோயில்களுக்கு இலவசமாக மின் பணிகள் செய்திடில் வாகனத்தால் வருகின்ற ஆபத்துகள் விலகும்.

15.4.2000 – வக்கீல்கள் இன்று புது வழக்குகள் ஆரம்பிக்க வேண்டாம். இன்று ஆரம்பிக்கும் புது வழக்குகள் பலவித சிக்கல்களைத் தரும்.

16.4.2000 – பெண்கள் இன்று ஜவுளி சம்மந்தமான கொடுக்கல் வாங்கலில் இறங்க வேண்டாம். தரம் மாற்றும் சம்பவங்களால் துன்பம் விளையும். கவனம் தேவை.

17.4.2000 – வெண்ணெய், நெய் வியாபாரிகள் வீட்டில் இன்று மனஸ்தாபங்கள் ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் உண்டு, கவனம் தேவை.

18.4.2000 – ஆட்டோ ஓட்டுநர் நண்பர்களுக்குள் சண்டை வரும் நாள் இன்று – கவனம் தேவை.

19.4.2000 – டயர் தொழிற்சலைக்குள் பிரச்னைகள் உருவாகும் நாள் இன்று – கவனம் தேவை.

20.4.2000 – இனிப்பு விற்கின்றவர்கள் இன்று பத்து கிலோவுக்கு குறையாமல் இனிப்புகள் தானம் செய்திடல் வேண்டும். இதனால் எதிர்காலத்தில் வருகின்ற கடன் தொல்லை குறையும்.
21.4.2000 – சைக்கிள் இல்லாத ஏழைக்கு சைக்கிள் தானம் – நல்ல செய்தி வரும்.

22.4.2000 – வெல்டிங் வேலை செய்கின்றவர்களுக்குக் கண் பரிசோதனை செய்ய வேண்டிய நாளிது. இலவசமாகக் கண் பரிசோதனை செய்து மருந்து கொடுத்திடில் காய்கறி வியாபாரிகள் நலம் பெறுவர்.

23.4.2000 – இன்று தாய், தந்தையர்களுடைய வஸ்திரங்களைத் துவைத்து, காய வைத்து பத்திரமாக மடித்து அளித்துப் பணி ஆற்ற வேண்டிய நாளிது. இவ்வாறு செய்திடில் நீண்ட தூரம் பயணம் செய்து வேலை செய்கின்றவர்களுக்கு வரும் துன்பம் விலகும்.

24.4.2000 – பசுத் தொழுவத்தை நன்றாகக்  கழுவித் தூய்மைப்படுத்தி வைக்க வேண்டிய நாளிது – இவ்வாறு செய்திடில் கெட்ட கனவுகள் பலிக்காமல் இருக்கும். துர்கனவுத் தொந்திரவுகளும் நீங்கும்.

25.4.2000 – இன்று முருகன் கோயிலில் சுண்டல் தானம் – காதல் சோகத்தை ஓரளவு மட்டுப் படுத்தும்.

26.4.2000 – இன்று தாடி வைத்திருப்பவர்களுடன் மிகுந்த கவனம் தேவை.
27.4.2000 – இன்று பிற மொழி பேசுபவர்களிடம் கவனத்துடன் பழகுதல் நலம்.
28.4.2000 – முறையற்ற தொடர்புகளை உடைய – துணி வியாபாரம் செய்பவர்கள் – அவதியுறும் நாள் இன்று – முடிந்த மட்டும் நேர்மையாக இருக்கவும்.
29.4.2000 – யானைகள் கோபப்படும் நாள் இது. ஆகவே கோயிலில் இருக்கின்ற யானைப் பாகர்களும், காட்டிலாகாவில் வேலை செய்கின்றவர்களும் எக்காரணத்தாலும் யானைகளை அடித்தோ, அங்குசத்தால் குத்தியோ துன்புறுத்தக் கூடாது. மிகவும் கவனமாக இருக்கவும்.
30.4.2000 – அனைத்துத் துறையிலும் இருக்கின்ற உயர் அதிகாரிகள் அவசரப்பட்டுத் தவறான முடிவை எடுக்கின்ற நாளிது. ஆகவே அவர்கள் கீழ் இருக்கின்ற பணியாளர்களும், உதவியாளர்களும் கவனமாய் இருத்தல் நலம்.

அமாவாசை மாதப்பிறப்பு கிரகண நாட்கள் போன்று முக்கியமான நாட்களில் மட்டும்தான் தர்ப்பணம் இடுகின்றார்கள். நம் மூதாதையர்கள் தினந்தோறும் தர்ப்பணம் இட்டு வந்தார்கள்., நித்ய தர்ப்பணம் சிறப்புடையது. மேலும் நம்முடைய மூதாதையர்களுக்கு மட்டும் என்றில்லாது ஜாதி, மத, இ , குல பேதமின்றி நீங்கள் அறிந்த அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்தமான எவருக்கும் (நண்பர்கள் / தலைவர் / பணியாள் / அநாதைகள்..) தர்ப்பணமிட்டிடலாம்... ஏப்ரல் 2000 மாதத்திற்கான விசேஷமான தர்ப்பண நாட்கள் .. 4.4.2000 அமாவாசை/ ருத்ர சாவர்ணி மனுவிற்கு அர்க்யம் அளித்து பித்ரு தர்ப்பணம் அளிக்க வேண்டும்., 5.4.2000 தெலுங்கு வருடப் பிறப்பு தர்ப்பண நாள்  13.4.2000 தமிழ் வருடப்பிறப்பு தர்ப்பண நாள்., திருக்கழிப்பாலை (சிதம்பரம்) திருத்தலமானது மகா சிவராத்திரிக்கு மட்டுமல்லாமல் மாதந்தோறும் வருகின்ற சிவராத்திரியையும் இத்திருத்தலத்தில் கொண்டாடிட வேண்டுகின்றோம்.

ஏப்ரல் மாதப் பௌர்ணமி திதிநேரம்  17.4.2000 இரவு 11.11முதல் 18.4.2000 இரவு 11.12வரை.,  17.4.2000 இரவு பௌர்ணமி கிரிவல நாள்.

அமுத தாரைகள்

1. மூலிகைக் கொடி தரும் சுகப் பிரசவம் – இன்றைக்கும் பல கிராமப்புறங்களில் நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்முறையில் சுகப்பிரசவம் ஏற்படுவதற்காக அவர்களுடைய கால் கட்டை விரலில் கண்ணிச் சீலை எனும் அற்புதமான மூலிகைக் கொடியைச் சுற்றி, “திருஷ்டி இல்லை, சிருஷ்டி உண்டு, கிருஷ்ணப் பிள்ளை”, என்று பரிபாஷையாக சித்த மகாவேத மாமந்திரத்தை ஓதி சுகப் பிரசவத்திற்காக வேண்டுவார்கள், எனவேதான் கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி ஆலிலைக் கிருஷ்ணருடைய தரிசனத்தைப் பெற வேண்டும் என்பதற்காகவே, அவர்களுடைய கண்களில் எப்போதும் படுமாறு ஆலிலைக் கிருஷ்ணனுடைய திருவுருவப் படத்தை இல்லத்தில் வைத்திருப்பார்கள். இதன் மகத்துவத்தை இனிமேலேனும் உணர்ந்து டாக்டர்களும் தங்களுடைய மகப்பேறு மருத்துவமனைகளில் நோயாளிகளின் அறைகளில் ஆலிலைக் கிருஷ்ணனின் படத்தினை தரிசனத்திற்காக வைத்திடலாமன்றோ!

2.  தெய்வமூர்த்திகளே புகட்டும் திருப்பாடம் – சற்குருவைச் சரணடை!

பூஜைகளின் புண்யவதி மூர்த்தியாய் விளங்கும் திருமகள் கடைபிடிக்காத நித்திய பாத சேவை முறைகள் உண்டா என்ன? எனினும் பிரபஞ்சத்திலிருந்து ஒவ்வொரு பூஜா முறைக்கும் உரித்தான பீஜாட்சர மந்திரங்களைத் தங்களுடைய தபோ பலன்களால் கிரஹித்துப் பெற்று அவற்றை உலகுக்கு அளிக்கின்ர சித்புருஷர், மஹரிஷி / யோகியரிடமிருந்து தானே எந்த ஒரு மந்திர சக்தியையும் உபதேசமாகப் பெறுதல் வேண்டும்! இந்த இறைநியதியை ஒட்டியே ஸ்ரீமஹாலக்ஷ்மி தேவியும் ஸ்ரீபாத சேவைக்கான பல அற்புதமான பீஜாட்சர மந்திரங்களை குருமந்திரமாகப் பெற்று அவற்றைத் தம்முடைய நித்தியத் திருவடிச் சேவையில் கூட்டிச் சேர்த்துப் பூஜைகளைப் பெருக்கி வழிபட்டு கலியுக ஜீவன்களின் நல்வாழ்விற்காக பலாபலன்களை அர்ப்பணிக்கின்றாள்.


ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam